Thursday, August 11, 2011

வெள்ளாட்டுப் பால்!

வெள்ளாட்டுப் பால் இரத்தச்சோகை நோயையும், போன் டிமினரைசேசன் என்னும் எலும்பு வலுவிலத்து போகும் நோயையும் குணப்படுத்தக் கூடியது.

வெள்ளாட்டுப் பாலில் உள்ள இரும்புச் சத்து, சுண்ணாம்புச் சத்து, பொட்டாசியம், மக்னீசியம் போன்ற தாது உப்புக்கள் உடலில் எளிதில் பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக பாரா தைராய்டு ஹார்மோன் நன்றாக வேலை செய்து உடலில் சுண்ணாம் புச்சத்து, பாஸ்பரஸ் தேவையை சரியாக வைத்திருக்க உதவு கிறது.

வெள்ளாட்டுப் பாலில் வைட்டமின்கள் தயாமின், ரிபோஃப் பிளேவின், நியாசின், பான்டோதீனிக் ஆசிட் மற்றும் ஏ.பி.ஈ.சி. விட்டமின்களும் அதிக அளவில் உள்ளன. வெள்ளாட்டுப் பாலில் தாய்ப்பாலைவிட புரதச்சத்து அதிகமாகவும் லாக்டோஸ் சத்து, குறைவாகவும் உள்ளது.

மனிதர்களுக்கு மிக முக்கியமாகத் தேவைப்படும் கந்தகசத்தைக் கொண்ட (Methionine) மிதியோனைன் என்னும் அமினோ அமிலம், தாய்ப்பாலைவிட வெள்ளாட்டுப் பாலில் அதிகமாக உள்ளது.

தற்போது பெரும்பாலான பெண்களுக்கு அயோடின் சத்துக் குறைவால் ஹைப்போ தெராமிசம் என்னும் நோய் ஏற்படுகிறது. இதன் காரணமாக ஒபிசிடி என்னும் உடல் பருமனாதல், மாத விடாய் சீராக இல்லாத நிலைமை, குழந் தைச் செல்வம் பெற முடியாத நிலை போன்றவை ஏற்பட்டு, பெரும்பாலான பெண்கள் வேதனைப் படுகிறார் கள். இவற்றைப் போக்குவதற்கு வெள்ளாட்டுப்பால் சிறந்த அருமருந்தாகும்.

வெள்ளாட்டுப் பாலை பருகுவதால் மால் அப்சார்ப்சன் சின்ட்ரோம் நோய், உடல் பருமனாதல் நோய், குழந்தைகளுக்கு ஏற்படும் வலிப்பு நோய் போன்றவை தடுக்கப்படுகின்றன.

நெடுந்தொடர் கொழுப்பு அமிலங்கள் ஆட்டுப்பாலில் உள்ளதால், இரத்தக் குழாய் களில் கொலஸ்டிரால் படிவதைத் தவிர்க் கிறது. இதன் காரணமாக ஆர்டிரியோ ஸ்லீரோசிஸ் என்னும் இரத்தக் குழாய்கள் சுருங்குவது தவிர்க்கப்படுவதால், இரத்த அழுத்த நோய் வராமல் வெள்ளாட்டுப்பால் உதவுகிறது. பித்தப்பையில் கற்கள் ஏற்படு வதையும் வெள்ளாட்டுப்பால் தடுக்கிறது.

வெள்ளாட்டுப் பாலில் உள்ள சில சத்துக்கள், புற்றுநோய் மற்றும் குடல் புண்கள் ஏற்படுவதையும் தடுக்கிறது. வெள்ளாட்டுப் பாலில் பசும்பாலைவிடசோடியம் சத்து குறைவாக உள்ளதால் இதய நோய் உள்ளவர்களுக்கு, வெள் ளாட்டுப் பால் சிறந்த உணவாகும்.

இன்றைய நவநாகரிக உலகில் பெரும் பாலானவர்கள், இதய நோயால் அவ திப்படுகிறார்கள். பெண்களும் குழந்தைச் செல்வம் பெற முடியாமல் கஷ்டப்படு கிறார்கள். உடல் உழைப்பின்றி உட்கார்ந்தே பணிபுரியும் தகவல் தொழிலுநுட்பத் துறைப் பொறியாளர்கள், அரசு அலுவலர்கள், மன இறுக்கம் மற்றும் உடல் பருமனாதல் போன்றவற்றால் பாதிக்கப்படு கின்றனர். இவற்றைத் தவிர்க்க நாம் வெள்ளாட்டுப் பாலை அதிக அளவில் உட்கொள்ள வேண்டும்.

வெள்ளாட்டுப் பாலை உற்பத்தி செய்வதற்கு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகமும், கால்நடை பராமரிப்புத் துறையும் தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

No comments: