Thursday, June 23, 2011

ஒரு மருத்துவ அதிசயம்! எய்ட்ஸ் நோய்க்கு தீர்வு ?


“பெர்லின் பேஷன்ட்” என்றழைக்கப்படும் டைமொதி ரே ப்ரௌன் என்பவருக்கும் கடந்த 2007 ஆம் ஆண்டு, லியூக்கீமியா புற்று நோயை குணப்படுத்த நவீன ஸ்டெம் செல் சிகிச்சையளிக்கப்பட்டது. அவரது மருத்துவர்கள், பிரபல மருத்துவ வார இதழான ப்ளட் (ரத்தம்)-ல் அந்த நவீன ஸ்டெம் செல் சிகிச்சை குறித்து சமீபத்தில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், ‘இந்த சிகிச்சையின்மூலம் எய்ட்ஸ் நோய்க்கு தீர்வு கிடைத்துவிட்டது/எய்ட்ஸ் நோயை குணப்படுத்திவிட முடியும்” என்று ஆதாரத்துடன் தெரிவித்துள்ளார்கள்!
கூடுதல் சுவாரசியம்: கடந்த மாதம் பிரபல டைம் இதழின், 2010-க்கான டாப் 10 மருத்துவ சாதனைகளில் “எய்ட்ஸ் வைரஸ் கிருமிக்கு எதிரான மருந்துகளை எடுத்துக்கொண்ட ஆரோக்கியமானவர்களுக்கு எய்ட்ஸ் நோய் ஏற்படும் ஆபத்தானது சுமார் 73% குறைவு” என்னும் ஒரு எய்ட்ஸ் ஆய்வையும் (கண்டுபிடிப்பை) சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது!
“மரபனுமாற்ற ஸ்டெம் செல்”லும் எய்ட்ஸ் நோய்க்கான சிகிச்சையும்!
சிகிச்சை முறை: சி.டி 4 டி செல்கள் (CD4 T cells) என்னும், ஒருவகை நோய் எதிர்ப்பு அனுக்களின் படலங்களிலுள்ள சி.சி.ஆர் 5 (CCR5) என்னும் புரதத்தின் வழியாகவே எய்ட்ஸ் கிருமிகளான HIV நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை முற்றிலுமாக அழித்து இறுதியில் நோயாளிகளைக் கொன்றுவிடுகிறது. எய்ட்ஸ் நோய்க்கான நவீன ஸ்டெம் செல் சிகிச்சையில், இந்த புரதம் இல்லாத/நீக்கப்பட்ட (டெல்டா 32, Delta 32) ஸ்டெம் செல்களை டைமொதி ரே ப்ரௌன் என்னும் எய்ட்ஸ் நோயாளிக்கு செலுத்தி, எய்ட்ஸ் நோய் கிருமிகள் பெருகுவதை தடுத்து, எய்ட்ஸ் நோய் குணமாக்கப்பட்டது.
சிகிச்சை முடிந்தபின் இரண்டு வருடம் கழித்த பிறகும் எய்ட்ஸ் நோய் கிருமிகள் மீண்டும் வளராமல் இருப்பதற்கான காரணம், நோயாளியின் உடலில் செலுத்தப்பட்ட ஸ்டெம் செல்கள் தொடர்ந்து வளர்ந்து மேலும் லட்சக்கணக்கான HIV எதிர்ப்பு டி செல்களை உருவாக்கி, எய்ட்ஸ் நோயிலிருந்து பூரண குணமடையச் செய்திருக்கிறது என்பது சமீபத்திய ஆய்வறிக்கையில் நிரூபிக்கப்பட்டுள்ளதால், எய்ட்ஸ் நோய்க்கான சிகிச்சை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மீண்டும் ஊர்ஜிதப்பட்டுள்ளது!!
டைமொதி ப்ரௌனுக்கு செய்யப்பட்ட இந்த சிகிச்சையின் வெற்றியானது, இன்னும் பாதுகாப்பாகவும், தரமானதாகவும் மெறுகேற்றப்பட்டு, எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட உலகின் சுமார் 33 மில்லியன் மக்களின் வாழ்க்கையில் நம்பிக்கை ஒளியை ஏற்றி வைக்க உதவக்கூடும் என்னும் நம்பிக்கை பிறந்திருப்பது மறுக்க முடியாத உண்மையே!!

'பச்சைப் புரட்சி'க்கு விதை போட்ட விக்ரம்


நடிகர் விக்ரம் சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் 'ஹபிடேட்' என்ற அமைப்பின் இளைஞர் பிரிவு தூதராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் 23-வது நிர்வாகக்குழு கூட்டம் கென்யா நாட்டின் தலைநகரான நைரோபியில் நடந்தது. அதில் கலந்து கொண்டு விட்டு சென்னை திரும்பிய விக்ரம் நேற்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அதில் அவர் பேசியது :

" ஐக்கிய நாடுகள் சபையின் 'ஹபிடேட்' தூதராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டதை மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறேன். இந்த சமுதாயம் எனக்கு நிறைய தந்திருக்கிறது. எனக்கு ஒரு பொறுப்பு வந்திருக்கிறது. சமுதாயத்திற்கு நான் ஏதாவது செய்தாக வேண்டும்.

இதற்காக 'பச்சைப் புரட்சி' என்ற அமைப்பை நான் தொடங்கி இருக்கிறேன். இந்த அமைப்பின் மூலம் என் ரசிகர்களை பயன்படுத்தி தமிழ்நாடு முழுவதும் 1 லட்சம் மரங்களை நடுவதற்கு திட்டமிட்டிருக்கிறேன். சென்னை நந்தனத்தில் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் முதல் கட்டமாக 100 செடிகள் நடப்பட்டு இருக்கிறது.

இதற்காக ஒரு கமிட்டியை உருவாக்கியிருக்கிறோம். அதில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளும், நண்பர்களும் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

இதையடுத்து 'கற்க கசடற' என்ற அமைப்பையும் தொடங்க இருக்கிறேன். இதன் மூலம் குடிசைப்பகுதி குழந்தைகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு கல்வி அறிவை வளர்க்க விரும்புகிறேன்.

எனவே 'பச்சைப்புரட்சி' இயக்கத்தில் என் ரசிகர்களை ஈடுபடுத்த விரும்புகிறேன். தமிழ்நாடு மட்டுமல்லாமல் ஆந்திரா, கேரளாவிலும் இந்த திட்டத்தை விரிவுபடுத்த முடிவு செய்திருக்கிறேன்.

இத்திட்டத்திற்காக எனது நண்பர்களான விஜய், அஜீத் என பலரிடம் பேச இருக்கிறேன். அது மட்டுமல்லாது இனி எனது படங்களில்  இது சம்பந்தமான விளம்பரங்களும் இடம்பெறும்.

விஜய், அஜீத்துடன் இணைந்து இது சம்பந்தமாக ஒரு வீடியோ ஒன்றை தயார் செய்ய திட்டமும் இருக்கிறது."

சமூக நலப்பணிகளில் எல்லாம் ஈடுபடுகீறர்களே அரசியலுக்கு அஸ்திவாராமா என்ற கேள்விக்கு " எதுவும் நடக்கலாம். ஆனால் நான் அரசியலுக்கு வருவது கஷ்டம்.. ஏனென்றால் எனக்கு பேச வராது "  என்ற பதிலளித்தார்.

நான் படங்களில் மொட்டை போட்டால் என் ரசிகர்களும் அதே போல் மொட்டை அடித்துக் கொள்கிறார்கள். நான் 'பிரென்ச்' தாடி வைத்தால் அவர்களும் 'பிரென்ச்' தாடி வைத்துக் கொள்கிறார்கள். காசி படத்தில் நான் கண் பார்வையற்றவனாக நடித்த போது கண் தானம் செய்வதாக அறிவித்தேன். என்னுடன் ஆயிரம் ரசிகர்களும் கண் தானம் செய்தார்கள். அந்த நிகழ்ச்சி என்னை பிரமிக்க வைத்தது.