Showing posts with label kitchen room tips. Show all posts
Showing posts with label kitchen room tips. Show all posts

Sunday, September 25, 2011

சமையலறையை, சந்தோஷமான இடமாக மாற்ற...!


சமையலறை என்றாலே நமக்கெல்லாம் நினைவுக்கு வருவது... அழுக்கடைந்த சுவரும்... ஆங்காங்கே பாத்திரங்களும்... அப்படிப்பட்ட சமையலறையை, சந்தோஷமான இடமாக மாற்ற... சில டிப்ஸ் இதோ...

சுத்தமான சுவர் அவசியம். புகை, சமையல் துகள்கள் என்று அனைத்தும் சேர்ந்து அடுக்களை சுவர் மேலும் அழுக்காகிறது. இதைப் பார்க்க அருவருப்பாக இருக்கும். அடிக்கடி சுவரை சுத்தப்படுத்தினால் சமையல் செய்யும் உணவுகளுக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் பாதுகாப்பு. சுத்தமான சுவர் இருப்பது அழகுக்கு மட்டுமல்ல... ஆரோக்கியத்துக்கும் மிகவும் நல்லது தானே. மேலும் உங்களுக்கு பிடித்தமான நிறத்தில் பெயிண்ட் அடித்துக் கொள்ளவும். குறிப்பாக இளநிறத்தில் பெயிண்ட் அடித்துக் கொண்டால் சின்ன அறையும் பெரியதாகத் தெரியும்.

அடுத்து நல்ல அடுப்பு...! அடுப்பு வாங்கும்போது விலை குறைவாக இருக்கிறது என்று வாங்காமல்... விலை அதிகமாக இருந்தாலும், நவீன தொழில்நுட்பத்தில் வசதி நிறைந்த அடுப்புகளை வாங்கவும். அடுப்பு நன்றாக இருந்தால், சமையல் செய்யும் சூழலில் ஆர்வம் அதிகமாகும். 

சமையலறைக்கு முகம் போல அடுப்பு இருப்பதால் அது அழகாக இருந்தால்... சமையலறையே மிகவும் அழகாக இருக்கும். தரமான அடுப்பாக இருக்கும் பட்சத்தில் 50 சதவீதம் நேரமும், 50 சதவீதம் எரிசக்தியும் மிச்சமாகும். மேலும் 80 சதவீதம் புகையில்லா சுற்றுச்சூழலும் உருவாகும்.

பல நேரங்களில் சமையலுக்குத் தேவையான பொருட்கள் முழுவதும் தீர்த்த பின்னரே... அதை நாம் கவனிப்போம். இதனால் அடிக்கடி பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும். இதற்கு சமையலறையில் நோட்டு மற்றும் பேனா வைத்து, அவ்வப்போது குறிப்பெடுத்துக் கொண்டால் அந்தப் பொருட்களை வாங்கி தயார் நிலையில் வைத்துக் கொள்ளலாம்.

வேலைக்கு செல்லும் பெண்கள், வேகமாக... சுவையாக... சத்தான உணவாக தயாரிக்க வேண்டும். சமையலறையில் ஒரு மணி நேரத்தில் எல்லா வேலைகளையும் முடிக்க முடியாது. அதனால் ஓரளவு விவரம் தெரிந்த குழந்தைகளை உங்களுக்கு உதவியாக வைத்துக் கொள்ளலாம். இதனால் குழந்தைகள் வேலையில் ஈடுபடும். குழந்தைகளுக்குள் சண்டை போடும் வாய்ப்பும் குறையும்.

அப்படி சமையல் வேலைகளை சொல்லும்போது சிறுமிகளுக்கு மட்டுமே சமையல் வேலைகள் என்று கொடுக்காமல் இருவருக்குமே அனைத்து வேலைகளையும் கொடுக்கலாம்.

இப்படி கொடுக்கப்படும் வேலைகளை குழந்தைகள் செய்ய யோசித்தால், உடனே உங்களுடைய கணவரை அழைத்து அந்த வேலைகளை செய்யச் சொல்லலாம். அப்படி அவர் செய்யும்போது, "அப்பாவே செய்யும்போது, நாமும் செய்தால் என்ன?" என்ற நினைப்பு, அவைகளுக்கு தோன்றும். சமையல் மட்டுமின்றி தோட்ட வேலை மற்றும் வீட்டு வேலைகளிலும் குழந்தைகளை ஈடுபடுத்தலாம். சமையலில் பருப்பை வேக வைக்கும்போது, அதிக நேரம் வேகிற காய்கறிகளை குக்கரில் வைத்து வேக வைக்கலாம். இட்லி வேக வைக்கும்போது, முட்டையையும் சேர்த்து வெக வைத்தால் எரிசக்தி, நேரம் எல்லாமே மிச்சமாகும்.