Showing posts with label tamil nadu. Show all posts
Showing posts with label tamil nadu. Show all posts

Monday, March 12, 2012

உலகின் பெரிய வழிபாட்டுத்தளம் எது என்பது உங்களுக்கு தெரியுமா ? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ?

உலகின் பெரிய வழிபாட்டுத்தளம் எது என்பது உங்களுக்கு தெரியுமா ? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ?

இது வரை நம் தமிழர்களின் சாதனைகள் பற்றி நான் தெரிவித்திருந்த தகவல்களிலேயே மிக சிறந்த ஒன்றாக நானே இதை கூறுவேன் !. இந்த அதிசயத்தைப் பற்றி எழுதவே நான் பெருமையடைகிறேன்.இந்த இடத்திற்கு சென்று பார்ப்பதையே என் வாழ்நாள் ஆசையாக கொண்டுள்ளேன்.தினமும் என் கணினியை தொடங்கியவுடன் இதன் படங்களை பார்த்த மகிழ்ச்சியில் தான் அன்றைய வேலைகளே தொடங்குவேன். நானும் இந்த தொகுப்பபை எவ்வளவோ சுருக்கி சிறியதாக எழுதலாம் என்று தான் நினைதேன்.அனால் குறைக்கப்படும் ஒவ்வொரு வரியும், இதன் ஒரு வருட உழைப்பை குறைத்து விடும் !! நீங்கள் உங்கள் நேரத்தை நிச்சயம் ஒதுக்கி இதை படிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் வெளியிடுகிறேன் .ஆம் அது தான் "கம்போடியா" நாட்டில் நம் கலைத்திறமையை உலகிற்கே காட்டிய "அங்கோர் வாட்" கோயில். 

இரண்டாம் "சூர்யவர்மன்" இந்த இடத்தை கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினான்.இந்த இடம் தான் அவனின் தலை நகரமாக செயப்பட்டது .ஒரு பெருமையான விஷயம் சொல்லாட்டுமா ?, "விஷ்ணு" கடவுளுக்காக கட்டப்பட்ட இந்த கோயிலானது தான் இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்களிலேயே " பெரியது "! !.இந்த கோயிலை ஒரு கலை பொக்கிஷம் என்றே கூறலாம்,திரும்பிய திசை எல்லாம் சிற்பங்களை வடித்துள்ளனர் . இந்த கோயிலின் ஒரு பக்க சுற்று சுவரே 3.6 கிலோமீட்டர்கள் !!! அப்படி என்றால் இந்த கோயில் எவ்வளவு பிரம்மாண்டமாக கட்டபட்டிருக்கும் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.( மீண்டும் ஒரு முறை ), இதன் சுற்றி சுவர் மட்டுமே 3.6 கிலோமீட்டர்கள் !!! இந்த கோயிலின் ஆரம்பக்கட்ட வடிவமைக்கும் பணிகளானது பனிரெண்டாம் நூற்றாண்டின் முதலாம் பாதியில் தொடங்கியது. இருபத்தி ஏழு வருடங்கள் இந்த இடத்தை ஆண்ட "சூர்யவர்மன்" இறக்கும் சில ஆண்டுகள் முன்பு இதன் வேலைகள் நிறைவடைந்தது .இதன் பின்னர் ஆறாம் "ஜெயவர்மன்" கைக்கு மாறியது .பின்னர் இந்த கோயில் கொஞ்சம் கொஞ்சமாக "புத்த" வழிபாடு தளமாக மாற்றப்பட்டு.இன்று வரை இது புத்த வழிபாட்டுதளமாகவே செயல் பட்டு வருகின்றது !.பதினாறாம் நூறாண்டிற்கு பிறகு இந்த கட்டிடம் சிறிது சிறிதாக புறக்கணிக்கப்பட்டது , அடர்ந்த காட்டுக்குள் இது கட்டப்படதனால் இது யார் கண்ணிற்கும் படாமல் சிதலமடயத்தொடங்கியது.பின்னர் 1586 ஆம் ஆண்டு " António da Madalena " என்ற போர்சுகீசிய துறவியின் கண்ணில் பட்டது ,அதை அவர் " is of such extraordinary construction that it is not possible to describe it with a pen, particularly since it is like no other building in the world. It has towers and decoration and all the refinements which the human genius can conceive of." என்று கூறியுள்ளார்.பின்னர் Henri Mouhot' என்ற பிரெஞ்சு எழுத்தாளர் தன் புத்கத்தில் இந்த கோயிலின் சிறப்பை வெயிட்டவுடன் தான் இதன் புகழ் உலகம் முழுக்கும் பரவத்தொடங்கியது .அவர் அந்த புத்தகத்தில் One of these temples—a rival to that of Solomon, and erected by some ancient Michelangelo—might take an honourable place beside our most beautiful buildings. It is grander than anything left to us by Greece or Rome, and presents a sad contrast to the state of barbarism in which the nation is now plunged." என்று குறிப்பிட்டுள்ளார் !! .பின்னர் இங்கு ஆய்வு பணிகளை மேற்கொண்ட பிறகு தான் இது நாம் கட்டியது என்று தெரியவந்தது!!.இன்றைக்கு இருக்ககூடிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட, இப்போதைக்கு இது போன்ற ஒரு கட்டிடம் கட்ட 300 ஆண்டுகள் ஆகும் என ஒரு பொறியாளர் கூறி உள்ளார்.ஆனால் எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் வெறும் 40 ஆண்டுகளில் இது கட்டிமுடிக்கப்பட்டுள்ளது இதில் இன்னொரு சிறப்பு "கம்போடிய நாட்டு தேசியக்கொடியில் நம் தமிழர்கள் கட்டிய இந்த கோயில் தான் "தேசிய சின்னமாக" பொறிக்கப்பட்டுள்ளது !.இதை பற்றி எழுத சொன்னால் இந்த நாள் முழுவதும் இதன் சிறப்புகளை வரிசை படுத்திக்கொண்டே இருக்கலாம்,ஆனால் இப்போதைய கால சூழ்நிலையில் இதை படிப்பதற்கே சிரமம் என்பதால், இதை இதோடு முடித்துக்கொள்கிறேன். கடைசியாக ஒன்று இந்த 2012 வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் வாய்ந்த ஒரு கேமராவில் கூட இன்று வரை இதன் முழு கட்டிடத்தையும் படம் பிடிக்க முடியவில்லை !! வானத்தில் 1000 அடிக்கு மேல் விமானத்த்ல் இருந்து எடுத்தால் மட்டுமே இதன் முழு கட்டிடமும் பதிவாகின்றது !! இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த இடத்தை பற்றி எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை ! குறிப்பாக இது நம் தமிழ் மன்னன் கட்டினான் என்பது எத்தனை தமிழர்களுக்கு தெரியும் என்பதும் கேள்விக்குறியே !!தேடல் தொடரும்..! PLS SHARE !! 

Saturday, June 18, 2011


விடுதலை பெற்ற இந்தியாவின் 60 ஆண்டுக் காலத்தில் நாடாளுமன்றத்தையும், நாட்டையும் உலுக்கிய ஊழல் விவகாரங்கள் ஏராளம். சுதந்திர இந்தியாவில் முதன் முதலாக அம்பலத்திற்கு வந்த மிகப்பெரிய ஊழல், 1948இல் காஷ்மீர் யுத்தம் நடைபெற்றபோது, இராணுவத்திற்கு பிரிட்டனில் இருந்து ஜீப் வாங்கப்பட்டதில் நடைபெற்ற ஊழல்தான். பிரிட்டனில் இந்தியத் தூதுவராகவும் பின்னர் மத்திய இராணுவ அமைச்சராகவும் பதவி வகித்த வி.கே.கிருஷ்ணமேனன் ‘ஜீப்’ ஊழலில் சம்பந்தப் பட்டவர் என்று குற்றம் சாட்டப்பட்டது.
1957இல் நேரு அமைச்சரவையில் நிதி அமைச்சராகப் பதவி வகித்தவர் டி.டி.கிருஷ்ணமாச்சாரி. இவர் ஹரிதாஸ் முந்த்ரா என்ற பெரிய வர்த்தகர், தனி நிறுவனங்களின் பங்குகளை ஆயுள் காப்பீட்டுக் கழகத்திடம் ( LIC ) விற்பனை செய்ததில் நடந்த ஊழலுக்குத் துணை போனார் என்று நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்று, பின்னர் டி.டி.கே. மீது விசாரணை நடத்திட நீதிபதி எம்.சி.சாக்ளா கமிஷன் அமைக்கப்பட்டது. விசாரணை முடிவில் டி.டி.கே. அமைச்சர் பதவியிலிருந்து விலக நேரிட்டது.
பஞ்சாப் முதல்வராக காங்கிரஸ் கட்சி சார்பில் பதவி வகித்த பிரதாப் சிங் கெய்ரோன் மீது ஊழல் புகார்கள் கூறப்பட்டு, குடியரசுத் தலைவரிடம் அவரை பதவி நீக்கம் செய்திடுமாறு எதிர்க்கட்சியினர் ஊழல் புகார்ப் பட்டியலை அளித்தனர். பிரதமர் நேரு நடவடிக்கை எடுக்கத் தயங்கியபோது உச்சநீதிமன்றத்தில் டாக்டர் பிரதாப் சிங் என்பவர் தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் பஞ்சாப் மாநில அரசு மீது கண்டனம் தெரிவித்தது. அதன் பின்னர் கெய்ரோன் மீது விசாரணை நடத்திட 1963, ஜூலையில் நீதிபதி எஸ்.ஆர்.தாஸ் கமிஷன் அமைக்கப்பட்டது. அதன் அறிக்கையில் அவர் மீது கண்டனம் தெரிவிக்கப்பட்டதால் கெய்ரோன் முதல்வர் பதவியிலிருந்து விலகினார்.
இந்திரா காந்தி பிரதமர் பொறுப்பை வகித்த காலத்தில் 1980இல் மராட்டிய மாநில முதல்வராக அப்துல் ரகுமான் அந்துலே காங்கிரஸ் கட்சியின் சார்பில் முதல்வராக பொறுப்பு வகித்தார். ஏ.ஆர். அந்துலே தொடங்கிய ‘இந்திராகாந்தி பிரதிபா பிரதிஷ்டான்’ உட்பட பல அறக்கட்டளைகளுக்கு நிதி கொடுத்தவர்களுக்கு மட்டும் சிமெண்ட் ஒதுக்கீடு செய்து ஊழல் புரிந்தார் என்று புகார் எழுந்தது. அந்துலேவுக்கு எதிராக மும்பை உயர்நீதிமன்றத்தில் திருமதி மிருணாள் கோரே, திருமதி கே.தேசாய், பி.பி.சாமந்த் ஆகியோர் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.லென்டின், ‘அறக்கட்டளைக்கு நன்கொடை’ என்ற பெயரில் கட்டட நிறுவனங்களிடமிருந்து அந்துலே இலஞ்சம் பெற்றார் என்று, 1982ஆம் ஆண்டு ஜனவரி 12இல் தீர்ப்பளித்தார். இதனால், ஏ.ஆர்.அந்துலே முதல்வர் பதவியிலிருந்து வெளியேற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
ராஜீவ்காந்தி பிரதமர் பதவியிலிருந்த போது 1986ஆம் ஆண்டு மார்ச்சு 24இல், சுவீடன் நாட்டின் போபர்ஸ் நிறுவனத்திடமிருந்து 155 மி.மீட்டர் பீரங்கிகளை வாங்கிட ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் பின்னர் 1987ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி சுவீடன் வானொலி, மூலம் “இந்தியாவில் பீரங்கி விற்பனை செய்ய போடப்பட்ட ஒப்பந்தத்திற்காக போஃபர்ஸ் நிறுவனம் கமிஷன் வழங்கி உள்ளது” என்று பரபரப்பான செய்தி வெளியானது. ராஜீவ்காந்தி மீது போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழல் புகார் எழுந்து, நாடாளுமன்றத்தில் காரசாரமான விவாதங்கள் நடைபெற்றன. இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஒட்டாவியோ குவாத்ரோச்சி மூலம் பீரங்கிபேர கமிஷன் தொகை ராஜீவ்காந்தி குடும்பத்துக்கு வழங்கப்பட்டதாக பத்திரிகைகள் ‘உளவு அறிந்து’ செய்தி வெளியிட்டன.
இந்திய மக்களை அதிரவைத்த பீரங்கி பேர ஊழலால் 1989இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ராஜீவ்காந்தி பிரதமர் பதவியை இழக்க நேரிட்டது. பி.வி.நரசிம்மராவ் பிரதமர் பொறுப்புக்கு வந்த பின்னர் நடைபெற்ற ஊழல்கள், காங்கிரஸ் கட்சியின் பாரம்பரிய ஊழல் அத்தியாயங்களைத் தொடர்ந்ததற்கு சான்றுகளாகத் திகழ்ந்தன. இலண்டன் ஊறுகாய் தொழிலில் பிரசித்த பெற்ற லக்குபாய் பதக், இந்தியாவில் காகிதக் கூழ் காண்ட்ராக்ட் பெறுவதற்காக நரசிம்மராவுக்கு இலஞ்சம் கொடுத்தார் என்று புகார் கூறப்பட்டது. ஊறுகாய் வியாபாரி தனக்கு காண்ட்ராக்ட் கிடைக்கவில்லை என்பதால் நரசிம்மராவ், மோசடி சாமியார் சந்திராசாமி, அவரது உதவியாளர் அகர்வால் ஆகியோர் மீது மோசடி வழக்கு தொடர்ந்தார்.
நரசிம்மராவ் காலத்தில் இன்னொரு பேர் பெற்ற ஊழல் ‘யூரியா’ ஊழல்; இந்திய அரசின் தேசிய உர நிறுவனம் ( NFL ), துருக்கியில் கார்சன் டானிஸ் மான்லிக் டுரிகாம் சமாயி டிகார்கட் லிமிடெட்(!) என்ற நிறுவனத்திடமிருந்து இரண்டு இலட்சம் டன் யூரியா வாங்கிட 1995, அக்டோபரில் ஒப்பந்தம் போட்டது. ஒப்பந்தம் போடப்பட்ட உடனேயே, தேசிய உர நிறுவனம் சம்பந்தப்பட்ட அமைச்சர் ஒப்புதலுடன், கார்சன் கம்பெனிக்கு உரத்துக்கான முழுத் தொகையைக் கொடுத்து விட்டது. ஆனால், ‘யூரியா’ மட்டும் இறக்குமதி ஆகவில்லை. கார்சன் கம்பெனியின் ஏஜெண்ட், ‘சாய்கிருஷ்ண இம்பெக்ஸ்’ நிறுவனத்தின் பெயரில் ஹைதராபாத் ‘ஏ என் இசர்ட் கிரிண்ட்லேஸ்’ வங்கியில் கணக்கு இருந்தது. அந்தக் கணக்கில் ‘துருக்கி’ நாட்டு கார்சன் கம்பெனி மூலம் கமிஷன் பணம் ஹவலா மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. அதாவது, ‘யூரியா’ இறக்குமதி செய்யாமலேயே இறக்குமதி ஆனதாகக் காட்டி, கமிஷன் தொகை கறக்கப்பட்டது. இந்த யூரியா ஊழலை விசாரித்த சிபிஐ, கார்சன் நிறுவனம் ஒரு ‘உப்புமா’ கம்பெனி என்றும் கண்டு பிடித்தது. இதில் ஆதாயம் அடைந்த பிரதமர் நரசிம்மராவ் உறவினர் பி.சஞ்சீவராவ், மத்திய அமைச்சராக இருந்த ராம் லக்கன் சிங் யாதவ் மகன் பிரகாஷ்சந்திர யாதவ், தேசிய உர நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் சி.கே.இராமகிருஷ்ணன் ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்தியாவையே உலுக்கிய இன்னொரு புகழ் பெற்ற ஊழல், ஹர்சத் மேத்தாவின் பங்கு பத்திர ஊழலும் நரசிம்மராவ் ஆட்சிக் காலத்தில்தான் நிகழ்ந்தது.
இந்தியாவின் ‘ஊழல் புராணத்தை’ கிளறினால் அது நீண்டு கொண்டே போகும்.
அறுபது ஆண்டுகால ஊழல்களை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு, கருணாநிதி குடும்பம் தற்போது நடத்தி உள்ள ஊழல் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. இந்திய அரசாங்கத்திற்கு அறுபது ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தி இருக்கின்ற மத்திய தகவல் தொடர்புத் துறையில் - தி.மு.க.வைச் சார்ந்த ஆ.ராசா காபினேட் அமைச்சர் பொறுப்பை வகிக்கின்றார்.
பண்டித நேரு காலத்தில் இராணுவ அமைச்சர் வி.கே. கிருஷ்ணமேனன் மீது சுமத்தப்பட்ட ‘ஜீப்’ ஊழலில் சம்பந்தப்பட்ட தொகை சில இலட்சங்கள்தான்.
முந்த்ரா ஊழலில் சிக்கிய டி.டி.கிருஷ்ணமாச்சாரி, மீது குற்றம் சாட்டப்பட்டபோது தொகை ஒன்றரை கோடி ரூபாய்.
மராட்டியத்தில் ஏ.ஆர்.அந்துலே சம்பந்தப்பட்ட சிமெண்ட் ஊழலின் தொகை ரூ.26.6 இலட்சம் ஆகும்.
ராஜீவ்காந்தியின் போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழலில் கமிஷனாக கைமாறிய தொகை ரூ.64 கோடி என்று கூறப்பட்டது.
நரசிம்மராவ் காலத்தில் நடந்த யூரியா இறக்குமதி ஊழலில் சம்பந்தப்பட்ட தொகை ரூ. 133 கோடி.
ஹர்சத் மேத்தாவின் பங்கு பத்திர ஊழல் மோசடியில் சம்பந்தப்பட்ட தொகை ரூ.5,500 கோடி; அது போலவே இன்னொரு, பங்கு வர்த்தக மோசடியில் ஈடுபட்ட ‘கேத்தன் பரேக்’ சம்பந்தப்பட்ட தொகை ரூ.6,400 கோடி ஆகும்.
இவை எல்லாவற்றையும் விட கருணாநிதி குடும்பம், இந்தியாவை ஆட்சி செய்யும் அதிகாரம் கிடைக்கப் பெற்றவுடன் நடத்தி உள்ள ஊழலின் மதிப்பு ரூபாய் அறுபது ஆயிரம் (ரூ. 60,000 கோடி) கோடி.
மத்திய அமைச்சரவையில் தகவல் தொடர்புத் துறையைக் கேட்டுப் (மிரட்டி!) பெற்ற தி.மு.க. தலைவர் கருணாநிதியின் குடும்பம் இந்த மெகா ஊழலில் துணிகரமாக ஈடுபட்டுள்ளது. மத்திய மந்திரி ஆ.ராசாவை கைப் பிடிக்குள் வைத்துக் கொண்டு, கோபாலபுரம் கொள்ளைக் கும்பல் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் சுருட்டி உள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு நடைபெற்ற ஊழல்களிலேயே இந்த ‘மெகா’ ஊழல் எப்படி திட்டம் போட்டு கச்சிதமாக, திருடப்பட்டுள்ளது என்ற விபரங்களைப் பார்ப்போம்.
நவீன விஞ்ஞான தொழில்நுட்பப் புரட்சியால், வளர்ச்சி பெற்றுள்ள தொலைத் தொடர்புத் துறை மூலம் உலகமே ஒரு கிராமமாக சுருங்கி விட்டது. தொலைத்தொடர்பு தொழில் நுட்பம் வளர்ச்சி பெறுவதற்கு முன்பு தொலைபேசிகள், கட்டுப்பாட்டு அறையிலிருந்து நுகர்வோர் இடம் வரை கேபிள்கள் போடப்பட்டு, அதன் மூலம் இயக்கப்பட்டன. பிறகு கம்பி இல்லாத் தந்தி போல, கேபிள்கள் இல்லாமலே ( Wireless Telephony ) தொலைபேசி சேவை நடைமுறைக்கு வந்தது.
தற்போது தகவல் தொழில்நுட்பப் புரட்சி யுகத்தில் அலைபேசிகள் ( Mobile Phones ) வந்துவிட்டன. தகவல்கள், மின்காந்த அலைகளாக மாற்றப்பட்டு ( Electromagnetic Waves ) அவை கடத்திகள் ( Transmitter ) மூலம் அனுப்பப்படுகின்றன. மின்காந்த அலைகளை உள்வாங்கிக் கொள்ளும் கருவிகளை ( Receiver ) பயன்படுத்தி அலைபேசிகளுக்கு ( Cell Phones ) தகவல்கள் போய்ச் சேருகின்றன. இவ்வாறு தகவல் தொடர்புகளுக்குப் பயன்படும் மின்காந்த அலைகளின் தொகுப்புகளுக்கு அலைக் கற்றைகள் ( Spectrum ) என்று பெயர்.
செயற்கைக் கோள் உதவியுடன் தகவல் தொடர்புக்கு பயன்படும் இந்த “அலைக்கற்றைகள்’ (ஸ்பெக்ட்ரம்) இந்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ், மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சகத்தின் மூலம் நிர்வகிக்கப்படுகிறது.
செல்போன் சேவைக்காக ‘ஸ்பெக்ட்ரம்’ தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த ஒதுக்கீட்டுக்காக அந்நிறுவனங்கள் அரசுக்கு உரிமம் கட்டணம் ( License Fee ) செலுத்த வேண்டும். இவ்வாறு ‘ஸ்பெக்ட்ரம்’ ஒதுக்கீடு செய்ததில்தான் ‘பெரும் ஊழல்’ நடைபெற்று இருக்கின்றது.
இரண்டாவது தலைமுறை அலைவரிசையை ( 2G Second Generation Wireless Telephony ) தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ததில்தான் இந்திய அரசுக்கு ரூ. 60 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
மத்தியத் தொலைத் தொடர்புத் துறை, ‘2G ஸ்பெக்ட்ரம்’ ஒதுக்கீடு செய்வதற்கு பொது ஏல முறையைக் கடைப்பிடிக்காமல், முதலில் வருபவருக்கு முன் உரிமை என்ற ‘விசித்திரமான’ அடிப்படையில் வர்த்தகம் செய்துள்ளது.
மத்தியத் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக, கருணாநிதியால் நியமிக்கப்பட்ட (அய்யோ பாவம்! பிரதமர் மன்மோகன்சிங்! அரசியல் சட்டம் பிரதமருக்குத்தான் தன் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? என்று தீர்மானிக்கும் உரிமையைத் தந்திருக்கின்றது. கூட்டணி வியாபாரத்தைப் பயன்படுத்திக் கொண்டு கருணாநிதி குடும்பம், பிரதமரின் உரிமையையே தட்டிப் பறித்துவிட்டது) ஆ.ராசா, 2G அலைவரிசைகளை இரண்டு நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்தார்.
ஒன்று, ஸ்வான் ( Swan Telecom ) மற்றொரு நிறுவனம் யூனிடெக் ( Unitech ) இந்த இரு நிறுவனங் களுக்கும் ‘2G அலைவரிசைகள்’ முதலில் வந்தவர்களுக்கு முன் உரிமை என்ற அடிப்படையில், 2001ஆம் ஆண்டு நிர்ணயம் செய்யப்பட்ட விலையில் உரிமம் கட்டணம் பெற்றுக் கொண்டு ‘ஸ்பெக்ட்ரம்’ ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ஸ்வான் நிறுவனம் ‘2G ஸ்பெக்ட்ரம்’ உரிமத்தை ரூ.1,537 கோடிக்கு வாங்கியது. அதேபோல யூனிடெக் நிறுவனம் ரூ. 1,651 கோடிக்கு வாங்கி உள்ளது. ஸ்வான் நிறுவனம் நாடெங்கும் 13 பகுதிகளுக்கும் யூனிடெக் நிறுவனம் 23 பகுதிகளுக்கும் ‘செல்போன் சேவை’ வழங்குவதற்கான உரிமங்களைப் பெற்றன.
2G அலைவரிசை கட்டணமாக ரூ.1,537 கோடி அரசுக்கு செலுத்திய ஸ்வான் நிறுவனம், ஒரே ஒரு பைசா கூட செலவழித்து, மக்களுக்கு செல்போன் சேவையைத் தொடங்கவில்லை. மாறாக ஸ்வான், தனது 45% பங்குகளை, ஐக்கிய அரபு நாடுகளைச் சேர்ந்த ( UAE ) எடிசலாட் ( Etisalat ) என்ற நிறுவனத்திற்கு ரூ. 4,500 கோடிக்கு விற்பனை செய்து விட்டது.
இதுபோன்றே யூனிடெக் நிறுவனமும் ஒரு பைசா கூட செலவழிக்காமல், தனது 60% பங்குகளை நார்வே நாட்டைச் சேர்ந்த டெலிநார் ( Telenor ) என்ற நிறுவனத்துக்கு ரூ.6,120 கோடிக்கு விற்றுவிட்டது.
மத்தியத் தொலைத்தொடர்புத் துறையிடம் இருந்து ‘ஸ்பெக்ட்ரம்’ ஒதுக்கீடு உரிமம் பெற்ற ஸ்வான் நிறுவனம், அரசுக்கு செலுத்தியது வெறும் ரூ 1,537 கோடி; ஸ்வான் தனது பங்குகளை விற்பனை செய்ததன் மூலம் ரூ 2,963 கோடி லாபம் அடைந்து இருக்கின்றது.
யூனிடெக் நிறுவனம் செலுத்திய உரிமம் கட்டணம் ரூ 1,651 கோடி; தனது பங்குகளை வேறொரு நிறுவனத்திற்கு விற்பனை செய்ததன் மூலம் யூனிடெக் பெற்றுள்ள லாபம் ரூ 4,469 கோடி;
ஸ்வான், யூனிடெக் ஆகிய இரண்டு நிறுவனங்களுமே தொலைத் தொடர்புத்துறை சேவையில் அனுபவம் இல்லாதவை. இரண்டுமே ‘உப்புமா’ கம்பெனிகள்; ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு உள்ள கம்பெனிகள்; இவை எவ்வாறு அலைவரிசை உரிமம் பெற்றன? எந்த அனுபவத்தைக் கொண்டு தொலைத்தொடர்புத்துறை இந்த நிறுவனங்களுக்கு ‘அலைவரிசை’ ஒதுக்கீடு செய்தது? ஒரே ஒரு பைசாகூட செலவிடாமல், இரண்டு ‘உப்புமா’ கம்பெனிகளும் தொலைத் தொடர்புத் துறையைப் பயன்படுத்திக் கொண்டு ‘அலைவரிசை’ ஒதுக்கீட்டைப் பெற்றுள்ளன.
வெறும் ‘லெட்டர் பேடை’ மட்டும் வைத்துக்கொண்டு, உரிமம் பெற்றுக் கொண்டு, அதை மாற்றிக் கொடுத்துவிட்டு உட்கார்ந்த இடத்திலேயே ‘தாள் பரிமாற்றத்தின்’ மூலம் ஸ்வான் ரூ 2,963 கோடியும், யூனிடெக் ரூ 4,469 கோடியும் கொள்ளை அடித்து இருக்கின்றன.
இந்திய அரசுக்கு சொற்பத் தொகையினை உரிமம் கட்டணமாகச் செலுத்திவிட்டு,
கோடான கோடி ரூபாய் பகல் கொள்ளை அடிக்கும் துணிகர செயலில் இந்த நிறுவனங்கள் ஈடுபட முடிந்தது எனில் ஸ்வான், யூனிடெக் நிறுவனங்களை நடத்துவது யார்?
இந்த ‘உப்புமா’ கம்பெனிகளின் பங்குதாரர்கள் யார்?
பொது ஏல முறையில் ‘ஸ்பெக்ட்ரம்’ ஒதுக்கீடு செய்யாமல் முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்று வேண்டியவர்களுக்கு ஒதுக்கீடு செய்தது ஏன்?
2008 ஆம் ஆண்டு சந்தைவிலையைக் கணக்கில் கொள்ளாமல், 2001 ஆம் ஆண்டு விலையில் சொற்பத் தொகைக்கு 2G அலைவரிசை வர்த்தகம் செய்தது ஏன்?
உரிமம் பெற்ற நிறுவனங்கள், தொலைத் தொடர்புத் தொழிலில் ஈடுபடாத நிறுவனங்கள் என்று தெரிந்தே ‘அலைக்கற்றை’ ஒதுக்கீடு செய்தது ஏன்?
இவ்வாறு உரிமம் பெற்ற நிறுவனங்கள் செல்போன் சேவையைத் தொடங்காமலேயே, வெறும் தாள் மூலம், பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்து, கொள்ளை அடித்துள்ளதை மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா கண்டு கொள்ளாதது ஏன்?
ஏன்? ஏன்? ஏன்?
விசுவரூபம் எடுக்கும் வினாக்கணைகளுக்கு மத்திய அமைச்சர் ராசா என்ன பதில் அளிக்கிறார்?
முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்று தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், டிராய் ( Telecom Regulatory Authority of India -TRAI ) பரிந்துரையின் பேரில்தான், அலைவரிசை ஒதுக்கீடு நடைபெற்றதாக அமைச்சர் ராசா கூறி உள்ளார்.
ஆனால், இதனை ‘டிராய்’ தலைவர் என்.மிஸ்ரா திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் டைம்ஸ் ஆப் இந்தியா இதழுக்கு (15.11.2008) அளித்துள்ள பேட்டியில் தெரிவித்து உள்ள கருத்துகள் பின்வருமாறு;
“2007 இல் ‘டிராய்’ செய்த பரிந்துரையில் இன்றைய இந்தியாவின் சுறுசுறுப்பான செயலாக்கம் மற்றும் தொலைத்தொடர்புத் துறையில் இதுவரை இல்லாத வளர்ச்சியைக் கருத்தில் கொள்ளும் போது 2001 இல் நிர்ணயிக்கப்பட்ட நுழைவுக் கட்டணம் உரிமம் பெறுவதற்கு சரியானதாக இருக்காது. சந்தை நிலவரத்திற்கு ஏற்ப இந்தக் கட்டணம் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும்” என்று கூறப்பட்டு உள்ளது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்று சொல்லப்படவில்லை.
தொலைத் தொடர்பு அமைச்சகத்திற்கு 2007, அக்டோபர் 19 மற்றும் 2008, ஜனவரி 14 ஆகிய நாட்களில் இரு கடிதங்கள் எழுதி உள்ளேன். அமைச்சரவை எடுக்கும் முடிவு மற்றும் நடவடிக்கை களை இந்தப் பரிந்துரையில் இடம்பெறாதவற்றுடன் தொடர்பு படுத்துவது நியாயம் அல்ல. அது தவறாக வழிநடத்துவதாகும். டிராய் அமைப்பின் ஒட்டு மொத்த பரிந்துரை மீறப்படும்போது அதிகாரபூர்வமான முறையில் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்றும் தொலைத் தொடர்புத் துறைக்கு கடிதம் எழுதி இருக்கிறேன். அப்படி இருந்தும் டிராய் அமைப்பை கலந்து ஆலோசிக் காமல் அதனுடைய பரிந்துரைகளுக்கு புறம்பாக தொலைத்தொடர்புத்துறை பல தடவை செயல்பட்டு உள்ளது. நிறுவனங்கள் இணைப்பு மற்றும் பங்குகள் கையகப்படுத்தும் நடைமுறையிலும் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை;
மேலும் இந்த அலைவரிசை ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்கள் கட்டமைப்புப் பணிகளைத் தொடங்க வேண்டும் என்ற விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. இப்படித்தான் ஸ்வான், யூனிடெக் நிறுவனங்கள் தங்கள் பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்று உள்ளன”
தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் மிஸ்ரா தெரிவித்துள்ள தகவல்கள் மூலம் மத்திய அமைச்சர் ஆ.ராசா அளித்துள்ள முரண்பாடான பதில்கள் அம்பலம் ஆகி உள்ளன.
‘டிராய்’ தலைவர் மிஸ்ரா தக்க பதிலடி கொடுத்தவுடன், இப்பொழுது அமைச்சர் கூறுகிறார், “பிரதமர் அனுமதியுடன்தான் ‘அலைவரிசை’ ஒதுக்கீடு செய்யப் பட்டது” என்று. இவ்வளவு பெரிய மோசடிக்கு மெகா ஊழலுக்கு பிரதமர் அனுமதி அளித்துள்ளார் என்று, அமைச்சர் ராசா மன்மோகன் சிங்கை துணைக்கு அழைத்து உள்ளார்.
ஆனால், இதுவரை பிரதமர் இந்தப் பிரச்சனை குறித்து வாய்திறக்காதது ஏன்?
சம்பந்தப்பட்ட பிரதமர் இதுகுறித்து விளக்கம் அளிக்கவில்லை. ஆனால், தொலைத் தொடர்புத் துறையை, கேட்டுப் பெற்ற கருணாநிதி தனக்கே உரிய வஞ்சகமான முறையில் ராசாவுக்கு வக்காலத்து வாங்குகிறார்.
மத்திய தொலைத் தொடர்புத்துறை கேபினட் அமைச்சராக ஒரு தாழ்த்தப்பட்டவர் பதவியில் இருப்பதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் ராசா மீது குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன என்று, கருணாநிதி திசை திருப்புகிறார்.
அனைத்து எதிர்க்கட்சிகளுமே ராசா மீது இந்தக் குற்றச் சாட்டுகளைக் கூறி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் சீதாராம் யெச்சூரி இரு கடிதங்களைப் பிரதமருக்கு எழுதி உள்ளார். அதில், “ஸ்வான், யூனிடெக் நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டதைப்போன்று பல்வேறு கம்பெனிகளும் சொற்ப தொகையை அரசுக்கு செலுத்திவிட்டு உரிமம் பெற்று இருப்பதால், இந்திய அரசுக்கு ரூ 60,000 (அறுபது ஆயிரம்) கோடி நட்டம் ஏற்பட்டு உள்ளதாக” சுட்டிக் காட்டி இருக்கின்றார்.
இந்த ஊழல் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்; ஸ்வான், யூனிடெக் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட உரிமங்களை ரத்து செய்யவேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவையும் கோரி உள்ளன.

Monday, May 2, 2011

A.R's Semmozhi Manadu...


தமிழ்க்கு விளம்பரம்?




என்ன செய்ய எல்லாம் காலம் செய்த சதி.....

மானாட மயிலாட தமிழ்மானம் காத்தாட…

மானாட மயிலாட தமிழ்மானம் காத்தாட…
தமிழகத்திலிருந்து தமிழ் மறவன்...........

மானாட மயிலாட மேடையில் நீயாட தாயும் தந்தையும்
பாத்தாட பாக்கவந்த சனமெல்லாம் சேர்ந்தாட பிச்சைக்கு
வந்தபிச்சைக்காறன் பிரண்டுபிரண்டாட நான் வளர்த்த
-பச்சைக்கிளி பறந்து பறந்தாட வேலையற்றகூட்டங்கள்
வெளியிலிருந்தாட வெள்ளைக்காறனும் வந்தாட பந்தாட
என் தமிழ் திண்டுகிறதே சர்வேசா …………………………….!!

ஆணோடு பெண்ணாட பாவாடை பறந்தாட மேலாடை
தளர்ந்தாட கையோடுகைசேர்த்து கட்டிக்கொண்டாட
தீர்ப்பெழுதவந்ததுகள் தமிங்கிலம்பேசியாட
இடையிடையே விளம்பரங்கள் வந்தாட நமீதாவும்
வந்தாட விசிலடித்து விசர்க்கூட்டம் விழுந்தாட
காத்தாட கடலாட கட்டுமரமும் சேர்ந்தாட
செந்தமிழ் சிதைந்தாடுதே பரம்பொருளே!!!

கட்டாந்தரையில் படுத்தவன் படுத்திருந்தாட கிளட்டு
நரிகழும் கைதட்டியாட கருங்குரங்குக்கூட்டமும் வந்தாட
ஆணுருவம் கொண்ட ஆண்டியும் வந்தாட
என் சொல்வேன் என் தமிழே………………

வந்தவரை வண்க்கமெண்று கைகூப்பி நிண்ற பண்பாடே
பாழ்பட்டசமூகமுனை படுக்கவத்து மேலேறியாடுவது
எனக்குமட்டும் தெரிகிறது நெஞ்சு கனக்கிறது
கையேடு கைசேர்த்து காலோடு கால் பின்னியாடும் தன்
மகளை கைகொட்டி வேடிக்கைபாக்கும் கேவலத்தை
நான் என் செய்வேன் என் தாயே !!

எதிர்காலம் என்னாகும் ஆத்திரம் தாங்காமல் கருங்கடல்
பாய்ந்து வரும் சகிக்கமுடியாமல் சந்திரமண்டலம் கீழே விழும்
பொறுக்க முடியாமல் பூமித்தாய் புளந்திடுவாள்
பாழ்பட்ட நாகரீகம் நசுங்கிப்போகட்டும் சத்தியமாய்
நசுங்கட்டும் ……………….

Sunday, May 1, 2011

நுனிநாக்கில் ஆங்கிலம் பேசும் இளைஞர்களே....

நுனிநாக்கில் ஆங்கிலம் பேசும் இளைஞர்களே....!

படித்து புரிந்துகொள்ளுங்கள்
நம் தாய்மொழிதான் சிறந்தது என்று....!

தமிழ் இனி மெல்ல சாகும்




ஒவ்வொரு தமிழனும் பாக்க வேண்டிய வீடியோ

தமிழக அரசின் கடன் ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டியது: இலவசத்தால் வந்த பலன்


தமிழக அரசு தனது வரி வருவாயில் கிடைக்கும் தொகையை இலவச திட்டங்களுக்கு செலவிடுவதால், தொலைநோக்கு திட்டங்களுக்கு கடன் பெற்றே செலவிட வேண்டியுள்ளது. இதனால், இந்த ஆண்டு தமிழக அரசின் கடன் சுமை, ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.
தமிழக அரசின் கடன், 2009 மார்ச் 31 வரை, 74 ஆயிரத்து 858 கோடி ரூபாயாக இருந்தது. இது, கடந்த ஆண்டு, 89 ஆயிரத்து 149 கோடி ரூபாயாக உயர்ந்தது. இந்த நிதியாண்டில், மேலும், 12 ஆயிரத்து 479 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். எனவே, கடன் சுமை ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.மாநில அரசுகளின் மொத்த கடன் அளவு, அந்த மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில், 25 சதவீதத்துக்கு குறைவாக இருக்க வேண்டுமென மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளதால், தமிழக அரசு அதற்கு உட்பட்டே இருப்பதாக கூறிக் கொள்கிறது.ஆனால், தமிழக அரசுக்கு பல்வேறு விதங்களில் வரும் வரி வருவாயை, சமூக பாதுகாப்பு மற்றும் தொலைநோக்கு திட்டங்களுக்கு செலவிடாமல், இலவச திட்டங்களுக்கு செலவிடுவதாக, நிதித்துறை வல்லுனர்கள் கூறுகின்றனர்.

மதுவிலக்கு ஆயத்தீர்வை மூலம் வருவாய், 7,508 கோடி ரூபாய், பெட்ரோல் விற்பனை வரி மூலம், 6,000 கோடி ரூபாய் உள்பட வணிகவரி வசூல், 26 ஆயிரத்து 851 கோடி ரூபாய், முத்திரைத் தாள் மற்றும் பதிவுக் கட்டணம் மூலம் 4,096 கோடி ரூபாய், மோட்டார் வாகன வரிகள் மூலம், 2,400 கோடி ரூபாய் என, மாநிலத்தின் சொந்த வரி வருவாய், 41 ஆயிரத்து 438 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.இதுதவிர, வரி அல்லாத வருவாய் 4,101 கோடியாகும். மத்திய அரசு பகிர்ந்து அளிக்கும் வரி வருவாயில், தமிழக அரசின் பங்கை, 5.305 சதவீதத்தில் இருந்து, 4.969 சதவீதமாக குறைத்துள்ளது. இதன்படி, 10 ஆயிரத்து 401 கோடி ரூபாய் கிடைக்கும்.

இதுதவிர, மத்திய அரசிடம் இருந்து திட்டங்களுக்காக பெறும் மானியம் 7,150 கோடி ரூபாய்.மாநில அரசின் வரி வருவாயில் சம்பளங்கள் மற்றும் ஓய்வூதியம் போன்றவற்றுக்காக 78 சதவீதம் வழங்கப்படுகிறது. மாநிலத்தின் மொத்த வருவாயில், 51 சதவீதம் இதற்காக செலவிடப்படுகிறது. எனினும், வருவாயை பொறுத்தவரை அனைத்து வகையிலும் ஆண்டுக்கு, 15 சதவீதம் வளர்ச்சி இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இவ்வாறு வருவாய் இருந்தும், செலவுகள் போக மீதத் தொகையை இலவச காஸ், சைக்கிள், ஒரு ரூபாய்க்கு அரிசி, வேட்டி - சேலை, இலவச மின்சாரம், பொங்கல் பரிசுப் பொருள், "டிவி' என, அரசு செலவிடுகிறது. குறிப்பாக, உணவு மானியமாக மட்டும், 4,000 கோடி ரூபாயை அரசு செலவிடுகிறது.

இதன் காரணமாகவே, மெட்ரோ ரயில், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் உள்பட பெரும்பாலான திட்டங்களை கடன் பெற்றே அரசு செலவிடுகிறது. இதனால், கடன் சுமை மற்றும் நிதிச்சுமை அரசுக்கு ஆண்டுக்கு, ஆண்டு அதிகரித்து வருகிறது. திருப்பிச் செலுத்தும் அளவும் குறைந்து வருகிறது. நிதிப் பற்றாக்குறை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதால், அதை சமாளிக்க, மேலும், மேலும் கடன் பெற வேண்டியுள்ளது. மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதத்துக்கு உள்ளாகவே நிதிப் பற்றாக்குறை இருக்க வேண்டுமென மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில், கடந்த ஆண்டு பொருளாதார வீழ்ச்சி காரணமாக, நிதிப் பற்றாக்குறையை 4 சதவீதம் வரை வைத்துக் கொள்ளலாம் என, மத்திய அரசு அனுமதித்ததால், தமிழக அரசின் நிதிப் பற்றாக்குறை, 3.72 சதவீதமாக உயர்ந்தது.தமிழக அரசின் மாநில திட்டக்குழு வகுத்துள்ள, 11வது ஐந்தாண்டு திட்டத்தின் காலம், வரும் நிதியாண்டுடன் முடிகிறது. இந்த காலத்துக்குள் நிதிப் பற்றாக்குறையை குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதுவரை அந்த இலக்கை எட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.

மாநிலத்தின் ஐந்தாண்டு திட்டக் காலத்துக்குள், ஆண்டுக்கு 9 சதவீத, மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் வளர்ச்சி பெறுதல், வேளாண்மையிலும் அதன் துணை நடவடிக்கைகளிலும் ஆண்டுக்கு குறைந்தளவு, 4 சதவீத வளர்ச்சி பெறுதல், தொழில்துறையில் ஆண்டுக்கு, 9.2 சதவீத வளர்ச்சி பெறுதல், பணித் துறையில் ஆண்டுக்கு 10.1 சதவீத வளர்ச்சி பெறுதல், 20 லட்சம் கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் போன்ற இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டிருந்தன.இந்த இலக்குகள் ஐந்தாண்டு திட்டத்தின் நான்காவது ஆண்டான இந்த நிதியாண்டு வரை எட்டப்படவில்லை.

அறிவிக்கப்பட்ட திட்டங்கள் என்ன ஆச்சு?

கடந்தாண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் இன்னும் துவக்கப்படவே இல்லை. பல திட்டங்கள் ஆரம்ப நிலையில் உள்ளன.தமிழக அரசு, இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டை, கடந்த மார்ச் 19ம் தேதி தாக்கல் செய்தது. இதில் அறிவிக்கப்பட்டு, நிறைவேற்றப்படாமல் உள்ள முக்கிய திட்டங்கள் வருமாறு:
* நவீன முறையில் தூய்மையாகவும், துரிதமாகவும் பாலை பதப்படுத்தவும், மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்களை உற்பத்தி செய்யவும், கோவை ஆவின் நிறுவனம், 27 கோடி ரூபாயில், தேசிய கூட்டுறவு வளர்ச்சி நிறுவனத்தின் உதவியோடு நவீனப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை இதற்கான பணிகள் துவக்கப்படவில்லை.
* தஞ்சை, நாகை மற்றும் கடலூர் மாவட்டங்கள் பயனடையும் வகையில், கொள்ளிடம் வெள்ளத் தடுப்புத் திட்டம், 376 கோடியிலும், கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில், வெள்ளாறு வெள்ளத் தடுப்புத் திட்டம், 164 கோடியிலும், கடலூர் மாவட்டத்தில் பெண்ணையாறு வெள்ளத் தடுப்புத் திட்டம், 69 கோடி ரூபாயிலும் என, மொத்தம், 609 கோடி ரூபாயில் புதிய திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இதே போன்ற அறிவிப்பு, இந்த ஆண்டு கவர்னர் உரையிலும் இடம்பெற்றுள்ளது. பணிகள் துவக்கப்படவில்லை.
* இலங்கை தமிழர் அகதிகள் முகாம்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், வீடுகள் கட்டிக் கொடுக்கவும், 100 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டு, பணிகள் மந்த கதியில் நடந்து வருகின்றன.
* மாணவர்களின் ஆங்கில அறிவை மேம்படுத்த, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிளில் படிக்கும், 10 லட்சம் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு, இலவசமாக, "ஆங்கிலம் - ஆங்கிலம் - தமிழ் அகராதி', வரும் கல்வியாண்டில் இருந்து ஆண்டுக்கு, 10 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்து. ஆனால், இதுவரை ஒரு மாணவருக்கு கூட வழங்கவில்லை.
* மத்திய அரசின் நிதி உதவியுடன் நான்கு புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் புதுக்கோட்டை, தேனி, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் துவக்கப்படும். மத்திய அரசு நிதி உதவியுடன், ஏழு புதிய பாலிடெக்னிக் கல்லூரிகள் வரும் கல்வியாண்டில் துவக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், ஒரு பாலிடெக்னிக் கூட புதிதாக துவக்கப்படவில்லை.
* திருவண்ணாமலையில், ஒரு புதிய அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதுவரை இதற்கான கட்டுமானப் பணிகளை துவக்கவில்லை.
* வரும் நிதியாண்டில், தமிழக மின்வாரியம், மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் கூட்டு முயற்சி திட்டங்கள் மூலம், 1,400 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கூடுதலாக நிறுவப்படும் என வழக்கம் போல அறிவிக்கப்பட்டது. ஆனால், புதிதாக மின் உற்பத்தித் திட்டங்கள் ஏதும் செயல்பாட்டுக்கு வரவில்லை.
* வேலூர் மாவட்டத்தில் உள்ள நகர்ப் பகுதிகளுக்கு, குடிநீர் வழங்கும் திட்டம், 1,800 கோடி ரூபாயில், வரும் நிதியாண்டில் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக அடிக்கல் நாட்டியதோடு சரி. பணிகள் துவக்கப்படவில்லை.
* யானைக்கால் நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு, கால், கை போன்றவற்றை பயன்படுத்தவே முடியாத அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மாத உதவித் தொகையாக, 400 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அவ்வாறு வழங்கும் பணி ஏதும் துவக்கப்படவில்லை.இதேபோல, கடந்த இரண்டு ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து, தமிழக அரசு தான் தெளிவுபடுத்த வேண்டும்.

சோழியன் குடுமி சும்மா ஆடாது…


கிராமங்களில் சோழியன் குடுமி சும்மா ஆடுமா என்று ஒரு பழமொழி உண்டு. என்ன பொருள் என்றால், எதை எடுத்தாலும் ஒரு ஆதாயம் இல்லாமல் அந்தக் காரியத்தில் அவன் இறங்க மாட்டான் என்பது.

இன்று கருணாநிதியும், கழக உடன்பிறப்புகளும், திமுக அரசின் சாதனைகளைப் பாரீர்,பாரீர், என்று தெருவெங்கும் கூவிக்கொண்டு இருக்கிறார்கள். பின்னூட்டம் இடும் அன்பர்கள் சிலரும், கருணாநிதி ஆட்சியில் நல்ல திட்டங்களே கொண்டு வரப்படவில்லையா என்று கேட்கிறார்கள்.

இந்தச் சாதனைகளில் குறிப்பிடத் தக்கன இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி கலைஞர் வீட்டு வசதித் திட்டம், கலைஞர் காப்பீட்டுத் திட்டம், ஒரு ரூபாய் அரிசி போன்றவை.இதில் ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

முதலில் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டித் திட்டத்தை எடுத்துக் கொள்வோம்.

ஐந்து கட்டங்களாக, இது வரை ஒரு கோடியே 62 லட்சம் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் கொள்முதல் செய்யப் பட்டுள்ளன. அரசு காண்ட்ராக்டுகளைப் பொறுத்த வரை, குறைந்த டெண்டருக்கு ஒப்பந்தம் வழங்கினாலும், அதில் இரண்டு சதவிகித கமிஷன் கட்டாயம் உண்டு.
இது போல, கட்டாயம் கமிஷன் கொடுத்தே ஆக வேண்டும். இந்த இரண்டு சதவிகிதம்எவ்வித விதி மீறலும் இல்லாமல், நியாயமாக டெண்டர் வழங்கினால். விதி மீறல் இருந்தால்,இந்த இரண்டு சதவிகிதம் என்பது பத்து சதவிகிதம் வரை உயரும். ஒரு கலர் டிவி சராசரியாக 2300 ரூபாய் விலை வருகிறது. மொத்தம் 1,62,28,000 கலர் டிவிக்கள். 1,62,28,000 X2300 = 3732,44,00,000. இதில் இரண்டு சதவிகிதம் 74,64,88,000. எவ்வளவு சாதாரணமாக 74 கோடியை அடித்திருக்கிறார்கள் பாருங்கள்.

மேலும், டெண்டரில் தவறான தகவல் கொடுத்ததற்காக உலக வங்கியால் 2013 வரை தடை செய்யப்பட்டது வீடியோகான் நிறுவனம். இந்த நிறுவனத்துக்கும், கணிசமான அளவு கலர் டிவி சப்ளை
செய்வதற்கான ஆணைகள் வழங்கப் பட்டுள்ளன. வீடியோகானுக்கு வழங்கப் பட்ட ஆணைக்கான கமிஷன் நிச்சயமாக இரண்டு சதவிகிதத்திற்கு மேற்பட்டு தான் இருக்கும்.

இது தவிரவும், ஒரு வீட்டுக்கு கலர் டிவி வழங்கப் பட்டால், உடனடியான தேவை என்ன ?
கேபிள் இணைப்பு தானே ? தமிழகத்தில் மற்ற மாவட்டங்களில் இல்லாத அளவுக்கு, அதிகமாக கேபிள் இணைப்புகள் இருப்பது, சென்னை மாநகரில் தான். ஒரு வாதத்திற்காக, 1,62,28,000 கேபிள் இணைப்புகள் புதிதாக பெறப்படுகின்றன என்று வைத்துக் கொள்வோம்.ஒரு கேபிள் இணைப்புக்கு 100 ரூபாய் வாங்குகிறார்கள். இதில் கணிசமான தொகை, சன் குழுமத்தின் சுமங்கலி கேபிள் விஷனுக்குப் போகிறது. ஒரு உதாரணத்திற்கு 100 ரூபாயில்30 ரூபாய் சன் டிவிக்கு, அதாவது கருணாநிதியின் பேரன்களுக்குப் போகிறது என்று குறைந்த பட்ச அளவீட்டில் எடுத்துக் கொண்டாலும் கூட, 1,62,28,000 கலர் டிவிக்களில்
62 லட்சத்து சில்லரையை தவிர்த்து விட்டு, 1 கோடி என்று மட்டும் எடுத்துக் கொண்டால் கூட, சன் குழுமத்திற்கான மாதாந்திர வருமானம் மட்டும் 30 கோடி. எப்படி இருக்கிறது,
இந்த நூதன ஊழல் ? இதுதான் கருணாநிதி. அதனால் தான் அவர் பனங்காட்டு நரி என்று பாசத்தோடு அழைக்கப் படுகிறார்.

அடுத்தபடியாக கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை எடுத்துக் கொள்ளலாம். இந்தியாவில், ஏழை மக்கள் அதிகம் இருப்பதால், அவர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்று, மத்திய அரசு பல்வேறு திட்டங்களை இயற்றி வருகிறது. பொது
சுகாதாரத்துறை மற்றும் மருத்துவப் பணிகள் துறை என, தமிழ் நாட்டிலும் இலவச மருத்துவ சிகிச்சை வழங்கப் பட்டே வருகிறது. இந்த சுகாதாரத் துறையில் இன்னும் எத்தனை கோடிகளை முதலீடு
செய்தாலும், தகும். அத்தனை பற்றாக்குறைகள் இருக்கின்றன. போதுமான செவிலியர்கள் நியமிக்கப் படுவதில்லை. மருத்துவர்கள், கட்டாய பணிக்காலம் முடிந்தவுடன், தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று விடுகிறார்கள். பல மருத்துவமனைகளில் மருத்துவர்
பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. இந்தக் குறைகளை சீர் செய்து, அரசு மருத்துவமனைகளை செம்மையாக்குவது ஒவ்வொரு அரசின் கடமை. இது ஒன்றும் செய்ய முடியாத காரியமே அல்ல. மிக மிக எளிதாக, புதிய மருத்துவர்களை தேர்ந்தெடுப்பதன் மூலமும்,
புதிய தலைமைச் செயலக கட்டிடத்தைக் கட்டுவதில் காட்டும் முனைப்பை மருத்துவமனைகள் கட்டுவதில் காட்டுவதன் மூலமும், எளிதாகச் செய்ய முடியும். மேலும், நிதிப் பற்றாக்குறை இருந்தாலும், அதையும் சமாளிக்க முடியும். சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்கப் படுகையில், அங்கே தொழில் தொடங்கும், பல்வேறு நிறுவனங்களுக்கு ஐந்தாண்டுகளுக்கு டாக்ஸ் ஹாலிடே என்று அழைக்கப் படும், வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இதன் மூலம், பந்நாட்டு நிறுவனங்கள் கோடிக்கணக்கில் லாபம் சம்பாதிக்கின்றன. அந்த நிறுவனங்களை, அரசு மருத்துவமனை கட்டித் தரும் பொறுப்பை
ஏற்றுக் கொள்ளுமாறு கோரிக்கை வைத்தால், மனமுவந்து ஏற்றுக் கொள்ளும் என்பதில்எள்ளளவும் சந்தேகம் இல்லை. தேவைப்பட்டால், அந்த நிறுவனம் கட்டித் தரும் மருத்துவமனைக்கு அந்த நிறுவனத்தின் பெயரையே வைத்தாலும் தவறு இல்லை. ஆனால், இது எதையும் கருணாநிதி செய்யவில்லை. மாறாக, கலைஞர் காப்பீட்டுத் திட்டம் என்ற ஒரு கபோதித் திட்டத்தை இயற்றுகிறார். அதன் படி, ரேஷன் அட்டை வைத்திருப்பவர், இத்திட்டத்தில் ஒரு குறைந்த தொகை செலுத்தி உறுப்பினர் ஆனால், ஆண்டுதோறும், ஒரு லட்சம் வரை, இலவச அறுவை சிகிச்சையை எந்த தனியார் மருத்துவமனையிலும் மேற்கொள்ளலாம் என்பதே அந்தத் திட்டம். ரஷ்யாவிலும், ராமச்சந்திராவிலும், துட்டு கொடுத்து படித்த டாக்டர்களெல்லாம் தங்களிடம் உள்ள அளவில்லா பணத்தை வைத்து புற்றீசல் போல
மருத்துவமனைகளை திறந்து, போணியாகாமல் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அத்தனை பேருக்கும், அரசுப் பணத்தை சுரண்டிக் கொடுப்பதற்காக உருவாக்கப் பட்டதே இந்த கலைஞர் காப்பீட்டுத் திட்டம்.

அது என்னமோ தெர்ல… என்ன மாயமோ தெர்ல…. அரசு ஊழியர் இன்ஷுரன்சும் சரி, கலைஞர் காப்பீட்டுத் திட்ட இன்ஷுரன்சும் சரி. ஸ்டார் இன்ஷுரன்ஸ் நிறுவனத்திற்கே வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்டார் இன்ஷுரன்ஸ், துபாயில் உள்ள, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில்
சம்பந்தப்பட்டுள்ள எடிசலாட் நிறுவனத்தின் உரிமையாளருக்கு பெரும் பங்கு உள்ள நிறுவனம் என்பது கூடுதல் செய்தி. இந்த ஸ்டார் இன்ஷுரன்ஸ் ஊழலைப் பற்றி எழுதினால், தனிக் கட்டுரை எழுதும் அளவுக்கு ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. நீங்கள் ஒரு
தனியார் மருத்துவமனை வைத்திருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மருத்துவமனையை கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் படி அங்கீகரிக்கப் பட்ட மருத்துவமனையாக சேர்த்துக் கொள்வதற்கு, குறைந்த பட்சம் இரண்டு லட்ச ரூபாய் அளவுக்கு வசூல் செய்யப் பட்டுள்ளது. இப்படி லஞ்சம் கொடுத்து, உறுப்பினர் ஆகும் மருத்துவமனை பக்கம் ஏழை பாழைகள் தலைவலி என்று போனால், அவர்கள், படுக்க வைத்து, வயிற்றில் கத்தியை வைக்கிறார்கள். வைத்து விட்டு, ஸ்டார் இன்ஷுரன்ஸிடம் பணம் பெற்றுக் கொள்கிறார்கள். மிக மிக கொடுமையான ஊழல் மட்டுமல்ல இது. அயோக்கியத்தனமானதும் கூட.இந்த அயோக்கியத்தனத்தை தங்கள் சாதனையின் ஒரு பகுதியாக கருணாநிதி ஊர் ஊராக கூறி வருவது, கேலிக்கூத்தின் உச்சக் கட்டம்.

அடுத்து ஒரு ரூபாய் அரிசித் திட்டத்தை எடுத்துக் கொள்வோம். இந்த ஒரு ரூபாய் அரிசித் திட்டம் ஓரளவுக்கு விளிம்பு நிலை மக்களுக்கு பயன் தருகிறது என்பதுஉண்மைதான். ஆனால், விளிம்பு நிலை மக்களுக்காக மட்டும் பொது விநியோகத் திட்டம் செயல்படுவதில்லையே… ஏறக்குறைய ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் தானே இந்தத் திட்டம் பொருந்தும்.

தமிழ்நாட்டில் 1 கோடியே 89 லட்சத்து 93 ஆயிரத்து 206 ரேஷன் கார்டுகள் இருக்கின்றன.இதில் ஒரு ரூபாய் அரிசிக்கு தகுதியான கார்டுகள் மட்டும் 1 கோடியே 78 லட்சம். இந்த குடும்ப அட்டைகளுக்கு வழங்கப் படும் ஒரு ரூபாய் அரிசியை 10 சதவிகிதத்திற்கு மேல் பயன்படுத்தப் படுவதில்லை. மீதம் உள்ள 90 சதவிகிதத்தில், கேரளாவுக்கும்
ஆந்திராவுக்கும் பெரும் பகுதி அரிசி கடத்தப் படுகிறது. கேரளாவில், தமிழ்நாட்டில்உபயோகிக்கத் தயங்கும், கொட்டையான அரிசியை பிடித்தமான உணவாக உண்பார்கள். ஒரு ரூபாய் அரிசியை ஐந்து ரூபாய்க்கு விற்றாலும் ஐந்து மடங்கு லாபம் இல்லையா ? இது போல
அன்றாடம் அரிசிக் கடத்தல் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. அரசுக் கணக்குப் படியே, 2006-2007ல் மட்டும் பறிமுதல் செய்யப் பட்ட கடத்தல் அரிசி 1,18,343 க்விண்டால்கள். கடந்த ஐந்தாண்டுகளுக்கும் கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள். இது கருணாநிதியின் காவல்துறை பிடித்த அரிசியின் தொகை. பிடிக்காமல் வெற்றிகரமாக கடத்தப்
பட்ட அரிசியின் அளவு, சொல்ல முடியாத அளவுக்கு உள்ளது.

மேலும், சமீப காலங்களில், அரிசி மாவு அரைத்து ரெடி மேடாக விற்கும் கடைகள்பெருகியிருப்பதை பார்த்திருப்பீர்கள். ஒரு கிலோ மாவு 20 ரூபாய். 20 ரூபாய்க்கு மாவு தருபவர் பாசுமதி அரிசியிலா மாவு தயாரிப்பார். எல்லாம் இந்த ஒருரூபாய் அரிசி தான்.
மூன்று மடங்கு விலை கொடுத்து, ஒரு கிலோ மூன்று ரூபாய்க்கு வாங்கினாலும், ஒரு கிலோ மாவை 20 ரூபாய்க்கு விற்றால் எத்தனை கொள்ளை லாபம் பாருங்கள் ? இந்த அரிசிக்கான மானியத்தில் பெரும் பகுதி, மத்திய அரசால் வழங்கப் படுகிறது. இப்போது புரிகிறதா ஒரு
ரூபாய் அரிசியின் மகிமை ?

108 ஆம்புலன்ஸ் சேவை. இந்த ஆம்புலன்ஸ் சேவை என்னவோ பார்ப்பதற்கு பயன் தருவது போல தோன்றினாலும், இதன் பிறப்பே சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

இந்த 108 ஆம்புலன்ஸ் சேவையை செயல்படுத்துவதற்காக, ஒப்பந்தம் செய்து ஆணை வழங்கப்பட்ட நிறுவனம், கருணாநிதி போல, கவனமாக திருடத் தெரியாமல் திருடி மாட்டிக் கொண்ட சத்யம் நிறுவன அதிபர் ராமலிங்க ராஜு வோடு. இந்த நிறுவனத்துக்கு இதற்கான
ஆணை வழங்கப்பட்டதிலேயே பெரும் முறைகேடு நடந்திருப்பதாக, அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. சத்யம் நிறுவனத்தின் முறைகேடுகள் வெளியே வராமல் இருந்திருக்குமானால்,மேலும் பல திட்டங்களை சத்யம் நிறுவனத்தோடு செய்து கொள்ள கருணாநிதி தயாராக இருந்தார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கலைஞர் வீட்டு வசதித் திட்டம். இந்தத் திட்டத்தின் கீழ், குடிசைகளாக இருக்கும்வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றித் தரும் திட்டம் இது. இந்த நேரத்தில் கலைஞர் பாராட்டு விழா ஒன்றில், குஞ்சாமணி பேசும் போது, கொடுக்குற தெய்வம் கூரையைப் பிச்சுகிட்டு கொடுக்கும் என்ற வாக்கைக் கூட கலைஞர் பொய்யாக்கி விட்டார். ஏனென்றால், கலைஞர் ஆட்சியில் கூரையே இல்லாமல் எல்லாமே கான்க்ரீட் வீடுகளாம்.

குடிசைகளை மாற்றி கான்கிரீட் வீடுகளாக்குகிறோம் என்பதே ஒரு மோசடித் திட்டம். நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக சென்னை மாநகரின் சேரிப் பகுதிகள் என்று அழைக்கப் படும் பகுதிகளில் குடியிருந்த மக்களை, சென்னையை அழகுப் படுத்துகிறோம் என்று, அகற்றி, சென்னையிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் கண்ணகி நகர் என்ற இடத்தில் வீடு கட்டித் தருவதற்கு பெயர் கலைஞர் வீட்டு வசதித் திட்டமா ? சென்னை நகரின் மாநகராட்சிப் பள்ளிகளில் படித்துக கொண்டிருந்த அந்தக் குழந்தைகள் வேரோடு பிடுங்கப்பட்டு, கண்ணகி நகரில் சென்று தூர எறியப் படுவது வசதியா ?

சரி.. இதிலாவது காசு பார்க்காமல் இருப்பார்களா என்று பார்த்தால், இதிலும் காசுதான். “கலைஞருக்கு நன்றி….. கலைஞருக்கு நன்றி” என்று வீட்டு வசதித் திட்டத்தைப் பற்றி எப்எம் விளம்பரம் கேட்டிருப்பீர்கள். இந்த விளம்பரம் தொடர்பாக என்ன நடந்திருக்கிறது என்று பார்ப்போம்.

இத்திட்டத்திற்காக செய்யப் பட்ட விளம்பரத்திற்கான மொத்த தொகை, ஒரு கோடியே, 60 லட்சத்து, 71 ஆயிரத்து 827 ரூபாய். சரி. இத்திட்டத்திற்கு எதற்காக முதலில் விளம்பரம் ? உங்கள் குடிசை வீட்டை கான்கிரீட் வீடாக மாற்றித் தருகிறோம், விண்ணப்பம் தாருங்கள் என்று அறிவிப்பு அந்தப் பகுதியில் வெளியிட்டால், அத்தனை பேரும் விண்ணப்பத்தோடு நிற்க மாட்டார்களா ? இதற்கு எதற்காக விளம்பரம்…. அதுவும்,மக்கள் பணம் ஒன்றரை கோடியில் ? மேலும் இந்த விளம்பரங்கள் அனைத்தும் 2010-2011 ஆண்டில் மட்டும வழங்கப் பட்டுள்ளன. இந்த விளம்பரங்கள் தேர்தலை மனதில் வைத்து வெளியிடப்பட்டிருக்காதா என்ன ? யோசித்துப் பாருங்கள். நமது வரிப்பணம், திமுக பிரச்சாரத்திற்கு எப்படி பயன்பட்டிருக்கிறது என்று ?

இந்த விளம்பரங்கள் வழங்கியதிலும் நேர்மை இல்லை. எப்எம் ரேடியோவில் வழங்கப் பட்ட விளம்பரங்களில் அதிகபட்ச தொகையான 9 லட்ச ரூபாயை பெற்றிருப்பது கேடி சகோதரர்களின் சூரியன் எப்எம்.

நாளிதழ் விளம்பரங்களில், தினத்தந்தி, இந்து, மாலைமலர் தவிர்த்து சொல்லிக் கொள்கிறார் போல, ஒரு நாளிதழும் இல்லை. சேம்பிளுக்கு சில நாளிதழ் பெயர்கள்..குஞ்சாமணியின் விடுதலை, மணிச்சுடர், மதுரை மணி, எதிரொலி, தினச்சுடர், பிற்பகல், தினசரி, தினத்தூது, தினமுரசு போன்றவை.

விடுதலை ஏடையெல்லாம், குஞ்சாமணியே படிக்க மாட்டார். அப்புறம் எதற்காக அதற்கு விளம்பரம் ? தமிழ் நாளிதழ்களில் ஓரளவுக்கு நல்ல சர்குலேஷன் வைத்திருக்கும் தினமணியின் பெயர் இல்லை. கருணாநிதியின் கைக்கூலியாகவே மாறிப்போய் விட்ட, என்.ராமின் இந்த பத்திரிக்கையில் விளம்பரம் வந்திருக்கிறது. டெக்கான் க்ரோனிக்கிள், இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு விளம்பரமே தரப்படவில்லை என்பது, கருணாநிதிக்கு ஜால்ரா போடாதவர்களுக்குத் தரும் எச்சரிக்கையே.

இப்படிப் பட்ட பின்னணியில் தான், கருணாநிதி அரசின் இந்த சாதனைகளை பார்க்க வேண்டும். இப்போது அடுத்ததாக மிக்சி, க்ரைண்டர், வாஷிங் மிஷின், ப்ரிட்ஜ், 35 கிலோ இலவச அரிசி என்ற இவர்களின் அறிவிப்பு மொத்த கஜானாவையும் காலி செய்யவோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது……. 

தமிழனுக்கு இந்தி தேவையில்லையா? - கருணாநிதியின் துரோகம்!


ஆண்டாண்டு காலமாக திராவிட முன்னேற்ற கழகம் இந்தியை எதிர்த்து தமிழர்களின் அடிப்படை உரிமையை வேட்டையாடுவது பலரும் அறிந்த செய்தி. இந்தி எதிர்ப்புக்குக் கருணாநிதி விளக்கம் கூறும்போது, "நாங்கள் இந்தியை எதிர்க்கவில்லை; இந்தி ஆதிக்கத்தையே எதிர்க்கிறோம்" என்கிறார். இது, "நெருப்பு சுடும்; அதனால் தமிழகம் முழுவதும் தீப்பெட்டியைத் தடை செய்யவேண்டும்" என்பது போல் இருக்கிறது.
கருணாநிதி இந்தியை ஏன் எதிர்க்கிறார், பிறகு ஏன் குழப்புகிறார் என்பது புரியாத புதிராக இருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் கபில்சிபல் "அனைத்து மாநிலங்களிலும் இந்தி மொழி பாடமாக்க வேண்டும்" என்று யோசனை தெரிவித்தார். உடனே தமிழக கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு, "தமிழகத்தில் இந்தியை அனுமதிக்க முடியாது" என்று பதில் அறிக்கை விட்டார். இந்த அறிக்கையின் உள் நோக்கம் கருணாநிதியை மகிழ்விக்கவேண்டும் என்பதைத் தவிர வேறு என்ன இருக்கமுடியும்?.
தமிழர்கள் ஒரு தேசிய மொழியைக் கற்பதில் தவறு என்ன? ஒரு படித்த கல்வி அமைச்சரே தனது தலைவர் திருப்திக்காக இந்தியை எதிர்ப்பது வேலியே பயிரை மேய்வது போல இருக்கிறது. ஒரு அமைச்சர் ஒரு அறிக்கை விடுவதற்கு முன்பு அதன் சாதக பாதகங்களை யோசிக்கவேண்டும். இன்று பிற மாநிலங்களில் இந்திமொழி உள்ளது; அவர்கள் எதில் குறைந்துவிட்டார்கள்? இந்தியாவிலுள்ள பிற மாநிலங்களுக்கு நாம் சென்று அங்குள்ள ரிக்ஸா ஓட்டியிடம் ஆங்கிலம் பேசினால் அவனுக்கு என்ன புரியும்? நமக்கு தமிழையும், ஆங்கிலத்தையும் விட்டால் வேறு என்ன தெரியும்?.
நமது பக்கத்து மாநிலமான கேரளாவைச் சேர்ந்தவர்கள், செல்வம் கொழிக்கும் வளைகுடா பகுதிகளில் உயர்மட்ட வேலைகளிலிருந்து கீழ்மட்டம் வரை கோலோச்சும்போது, தமிழர்கள் பெரும்பான்மையோரும் அப்பாவிகளாக, கீழ்மட்டத்திலேயே தலையெடுக்க முடியாமல் நசிந்து போவதற்குக்மொழி மேலாண்மையும் ஒரு காரணம் என்பது வளைகுடாக்களில் பயணிக்கும் தமிழக அரசியல்வாதிகளில் எவருக்குமே இதுவரை புரியவில்லையா?
வெளிநாடுகளில் மட்டுமின்றி தமிழகத்திலும்கூட சில வேளைகளில் இப்பரிதாப தமிழன் மொழி புரியாமல் தன்னைத் தானே கேவலப்படுத்திக் கொள்கிறான். சான்றுக்குச் சில:
ஒரு வருட காலத்துக்கு முன்பு டிவி யில் ஒரு தமிழ் திரைபட நகைச்சுவை காட்சியைப் பார்த்து அதிர்ந்து போனேன். அந்தக் காட்சியில் ஒரு இந்தி வாசகம் பயன்படுத்தப்பட்டு இருந்தது. அந்த வாசகத்தைத் தமிழில் மொழி பெயர்த்தால் மிக பயங்கரமான அச்சில் பதிக்கமுடியாத ஆபாச வார்த்தையாக இருந்தது. அப்போ இந்தத் தவறு எப்படி நடந்தது? தமிழ் சினிமாக்களின் தணிக்கை அதிகாரிகளுக்குக் கூட இந்தி தெரியவில்லை என்பதுதானே? அவர்களுக்கு இந்தி தெரிந்து இருந்தால் அந்த வாசகம் என்ன, காட்சியையே நீக்கி இருப்பார்கள்.
இந்தக் கொடுமை பாடல்களையும் விட்டுவைக்கவில்லை. சமீபத்திய தமிழ் பாடல் ஒன்றில் "படுவா" என்ற இந்தி சொல் பயன்படுத்தப் பட்டுள்ளது  இதற்கு ஆங்கிலத்தில் PIMP (பிம்ப்) என்றும் தமிழில் "கூட்டிக் கொடுப்பவன்" என்றும் சொல்லலாம்! எவ்வளவு அசிங்கம். திரைப்படத்தின் மொழி தமிழ், பயன்படுத்தப்பட்ட சொற்கள், இந்தி மொழியிலுள்ள தரம்கெட்ட ஆபாச சொற்கள். ரசிப்பதும் சிரிப்பதும் தமிழர்கள்! ஆனால் அர்த்தம் மட்டும் தெரியாது! இத்தகைய படங்களின் பெயர்கள் தமிழில் இருந்தால் அரசு மானியம் வேறு! என்ன பரிதாபம்!!
மக்கள் விழிப்புணர்வு பெறவில்லை, அரசும் திருந்தவில்லை! நான் மட்டும் என்னசெய்வேன்?.  மகா கவி அல்லாமா இக்பால் அவர்களின் அற்புத வரிகளில் ஒன்று உள்ளது, "நீங்கள் எந்த ஒன்றுக்கும் ஆசை படுவதற்கு முன்னால் அதற்கு உங்களை நீங்களே தயார்படுத்திகொள்ளுங்கள்". எவ்வளவு அருமையான சிந்தனை!
அரசியல்வாதிகள் பதவிக்கு ஆசைபடுகிறார்களே தவிர அதற்கு அவர்கள் தகுதியானவர்களாக இல்லை என்பதே உண்மை! உதாரணம் மத்திய அமைச்சர் அழகிரி! ஆங்கிலமும் தெரியாது, இந்தியும் தெரியாது! நாடாளுமன்றத்தில் பேசவும் பயப்படுகிறார். டெல்லி செய்தியாளர்களுக்குப் பேட்டி கொடுக்கவும் பயப்படுகிறார். பதவியும் அதிகாரமும் இருந்து என்ன செய்ய? இதற்கு ஒரே தீர்வு, இந்தி மொழியைப் பள்ளியில் கட்டாயப் பாடமாக கொண்டு வரவேண்டும் என்பதுதான். அது அரசியல் கட்சிகளால்தான் முடியும்.
அரசியல் கட்சிகள் மக்களின் நலனுக்காகவே தவிர, மக்களின் சுயமரியாதையையும், அடிப்படை உரிமையையும் பிடுங்குவதாக இருக்கக்கூடாது என்பதை அரசியல்வாதிகள் உணர வேண்டும். இந்தத் தலைமுறை தொடங்கி, இந்தி கற்க ஆரம்பித்தால் எதிர்காலத்தில் தமிழர்கள் தமிழகம் தாண்டி பிழைப்பார்கள்! நமது வாழ்வாதாரமும் சிறக்கும் என்பதில் ஐயம் இல்லை என்பது என்னுடைய தொலை நோக்கு சிந்தனை. சம்பந்தப்பட்டவர்கள் உணர்வார்களா!