Tuesday, July 12, 2011

கேரட் ரைஸ்


ஸ்கூல் ஆரம்பிச்சாச்சு.. ஒவ்வொரு நாளும் புதுசு புதுசா ஏதாவது வெரைட்டியா செஞ்சு கொடுத்தாதான் குழந்தைகளும் குஷியா சாப்பிடுவாங்க. ஆனா வேலைக்கு போகும் பெண்கள் குழந்தைகளுக்கென ஸ்பெஷலா செய்யாம தங்களுக்கு செய்யும் சமையலயே பேக் செய்து அனுப்பிவிடுவார்கள். அப்படி அனுப்பும் தாய்மார்களுக்காகவே உங்கள் நேரத்தை மிச்சப்படுத்த இதோ ஒரு சிம்பிள் டிபன் பாக்ஸ் ஐட்டம்!

தேவையான பொருட்கள்:

சாதம் - 2 கப்
கேரட் - 2 (பெரியது)
பூண்டு - 4 பல்
பச்சைமிளகாய் - 3
எண்ணை - 1 டீ ஸ்பூன்

செய்முறை:

* கேரட்டை நீளவாக்கில் மெல்லிசாக நறுக்கிக்கொள்ளவும். அல்லது பெரியதாய் துறுவிக்கொள்ளவும்.

* வாணலி நன்கு காய்ந்த பின் அதில் ஒரு டீ ஸ்பூன்(ஒரே ஒரு ஸ்பூன் மட்டும்) எண்ணை ஊற்றி பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் மற்றும் பூண்டு போட்டு கொஞ்சம் உப்பு சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.

* பின் கேரட்டை சேர்த்து நல்ல தீயில் இரண்டு கிளறு மட்டும் கிளறி, அதில் சாதத்தை சேர்த்து மீண்டும் ஒரு கிளறு மட்டும் கிளறி இறக்கினால் போதும். கேரட் நன்கு வதங்க தேவையில்லை.

* விருப்பப்பட்டால் பொரித்த முந்திரி, நிலக்கடலை, மல்லித்தழை தூவலாம்.

பின்குறிப்பு: கேரட் ரைஸ் செய்வது ரொம்ப ரொம்ப சுலபம். மிஞ்சிப்போனால் 5 நிமிடம்தான் தேவைப்படும். அதற்குள்ளேயே சுவையான, சத்தான கலர்ஃபுல் சாதம் ரெடி. ஆனால் செய்யும் போது கவனிக்க வேண்டியவை:- அடுப்பை சிம்மில் வைத்து செய்யக்கூடாது. வாணலி நன்கு காய்ந்த பின் பயன்படுத்த வேண்டும். பூண்டு சேர்க்கும் போதே கேரட்டுக்கு தேவையான உப்பை சேர்க்க வேண்டும். எண்ணை ஜாஸ்தி சேர்க்க கூடாது. பூண்டு வதங்க தேவையான அளவு இருந்தால் போதும். கடுகு, கறிவேப்பில்லை எல்லாம் தேவையேயில்லை. பூண்டு, பச்சைமிளகாய் மட்டுமே போதுமானது. கேரட்டில் வைட்டமின் 'ஏ' நிறைய இருப்பதால் குழந்தைகளுக்கு ரொம்பவும் நல்லது.