Thursday, August 11, 2011

பனீர் பட்டர் மசாலா

தேவையான பொருட்கள் :

பனீர் - அரை கிலோ
தக்காளி - அரை கிலோ
பெரிய வெங்காயம் - அரை கிலோ
பூண்டு - 15 பல்
இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு
குடை மிளகாய் - 2
கொத்தமல்லி தழை - 2 கொத்து
வெண்ணெய் - 100 கிராம்
தனி மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் - ஒரு மேசைக்கரண்டி + ஒரு தேக்கரண்டி
சீரகத் தூள் - ஒன்றரை தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
பட்டை - 2 துண்டு
கிராம்பு - 4
எண்ணெய் - 2 கப்

செய்முறை :

பெரிய வெங்காயத்தை தோல் உரித்து துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை கழுவி விட்டு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டை தோல் உரித்து எடுத்துக் கொள்ளவும். இஞ்சியை தோல் சீவி துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். குடை மிளகாயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.


முதலில் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பனீரை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ளவும்.


மற்றொரு வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தை போட்டு 2 நிமிடம் வதக்கி எடுத்துக் கொள்ளவும். மேலும் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி தக்காளியை போட்டு 2 நிமிடம் வதக்கி எடுத்துக் கொள்ளவும். ஆறியதும் வெங்காயம், தக்காளி இரண்டையும் தனித்தனியாக மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு இரண்டையும் மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.


ஒரு பாத்திரத்தில் வெண்ணெயை போட்டு உருக்கி அதில் பட்டை, கிராம்பு தாளிக்கவும்.


பிறகு இஞ்சி, பூண்டு, விழுது போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். அதனுடன் வெங்காய விழுதை ஊற்றி பச்சை வாசனை போகும் வரை 2 நிமிடம் வதக்கவும்.


பின்னர் தக்காளி விழுதை ஊற்றி 3 நிமிடம் கிளறி விட்டு வேக விடவும்.


அதில் சீரகத் தூள், கொத்தமல்லி தூள் போட்டு கிளறவும். அதனுடன் மிளகாய் தூள் போட்டு நன்கு கிளறி விட்டு 2 நிமிடம் கழித்து, வதக்கிய குடை மிளகாய், உப்பு, மஞ்சள் தூள் போட்டு நன்கு கிளறவும்.


பிறகு பொரித்து வைத்துள்ள பனீர் துண்டங்களை போட்டு ஒரு நிமிடம் கிளறிவிட்டு வேகவிடவும்.


அத்துடன் ஒரு கப் தண்ணீர் ஊற்றி ஒரு கொதி வந்ததும் எடுத்து குக்கரில் ஊற்றி கொதிக்க வைக்கவும்.


கொதித்ததும் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் மேலே ஊற்றி ஒரு தேக்கரண்டி வெல்லத் தூள் போட்டு கிளறவும். பிறகு கொத்தமல்லி தழை மற்றும் ஒரு தேக்கரண்டி கொத்தமல்லித் தூள் போட்டு மூடி விடவும்.


இரண்டு விசில் வரும் வரை வேகவைத்து பிறகு இறக்கவும். சூடாக பரிமாறவும். நாண், சப்பாத்தி, பரோட்டா போன்றவற்றிற்கு பொருத்தமான பக்க உணவு இது

தயிர் ராகி சேமியா

தேவையான பொருட்கள் :

கேழ்வரகு   சேமியா : 250  கிராம்
எண்ணெய்                  : தளிக்க தேவையான அளவு
கடுகு                         ​   : தேவையான அளவு
உளுத்தம்பருப்பு       : தேவையான அளவு
தயிர்                         ​   : 150 மில்லி
பச்சை மிளகாய்       : காரத்திற்கு ஏற்ப
தேங்காய்                   : அரை முடி
முந்திரி                      : 10 நம்பர்
கொத்த மல்லி         : இரண்டு இணுக்கு
உப்பு                         ​  : தேவையான அளவு

செய்முறை :

கேழ்வரகு   சேமியாவை நீர் விட்டு அவித்து கொள்ளவும் , அவிததை வடிகட்டி எடுத்து கொள்ளவும் ,வாணலில் எண்ணெய் விட்டு கடுகு , உளுத்தம்பருப்பு தாளித்து சேமியாவில் இடவும்.
தேங்காய் , பச்சை மிளகாய்  , முந்திரி பருப்பு சிறிது தயிர் விட்டு மிக்சியில் அரைக்கவும் , அரைத்ததை சேமியாவுடன் சேர்த்து மிதமுள்ள தயிர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து , கொத்த மல்லி கார்னிஷ் செய்தால் சுவையான தயிர் ராகி சேமியா ரெடி .

சின்ன வெங்காய சட்னி

தேவையான பொருட்கள் :

சின்ன வெங்காயம்  -அரை கிலோ
நெய்                          ​   -100 கிராம்
காஞ்ச மிளகாய்       - காரத்திற்கு ஏற்ப
கடுகு
உளுத்தம் பருப்பு
கருவேப்பில்லை    - தேவையான அளவு
புளி                          ​   - 150  கிராம்
உப்பு                         ​  - தேவையான அளவு

செய்முறை :
                 வாணலில் நெய்விட்டு  கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பில்லை, காஞ்ச மிளகாய் , தாளித்து வறுக்கவும் , அதனோடு சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும் , நன்கு வதங்கியவுடன் மிக்சியில் போட்டு அரைக்கவும் அதனோடு புளி கரைச்சலை சேர்த்து அரைக்கவும் தேவையான அளவு உப்பு சேர்த்து பரிமாறவும் , சுவையான சின்ன வெங்காய சட்னி தயார் .

வெண் பொங்கல் பிரசாதம் .

தேவையான பொருட்கள் :

அரிசி                        : 400 கிராம்
பயத்தம் பருப்பு     :100 கிராம்
மிளகு                      : 25 கிராம்
சீரகம்                       : 10 கிராம்
கொஞ்சம் இஞ்சி
முந்திரி பருப்பு     :100 கிராம்
நெய்                        : 100 கிராம்
உப்பு                        : தேவையான அளவு
கருவேப்பிலை    : ஒரு கொத்து
செய்முறை :

அரிசி பயத்தம் பருப்பு ஒரு பாத்திரத்தில் களைந்து , ஒரு கோப்பையில் அளந்து குக்கரில் இடவும் , இதே அளவில் முன்று படங்கு தண்ணீர் சேர்த்து உப்பிட்டு நான்கு விசில் வரை வேகவிடவும் .

ஒரு வாணலில் நெய் விட்டு கருவேப்பிலை முந்திரி மிளகு சீரகம் வறுக்கவும் , வருத்த பின் வேறு பாத்திரத்தில் மாற்றி இஞ்சி சேர்த்து வைக்கவும் , அதனை வெந்

டயட் பேட்டீஸ்

தேவையான பொருள்கள்:
பொடியாக நறுக்கிய முட்டைகோஸ் - 1 கப்,
நறுக்கிய குடைமிளகாய் - 1 கப்,
பட்டாணி - 1 கப்,
பொடியாக நறுக்கிய கேரட்- 1/2 கப்,
கோதுமை பிரட் - 6 ஸ்லைஸ்,
நறுக்கிய பச்சை மிளகாய் - 2 டீஸ்பூன்,
கொத்துமல்லி - 1கப்,
உப்பு, ஆலிவ் ஆயில் - தேவைக்கேற்ப,
பிளாக்ஸ் சீட்ஸ் (flax seeds) (ராகி நிறத்தில் அரிசி போல இருக்கும்) இலேசாக வறுத்துப் பொடித்தது - 1 கப்.
செய்முறை:
வாணலியில் ஆலிவ் எண்ணெய் விட்டு, பச்சை மிளகாய், நறுக்கிய காய்களைச் சேர்க்கவும். நன்கு வதங்கியவுடன் உப்பு சேர்த்து, கொத்துமல்லி தழை தூவி இறக்கவும். வெதுவெதுப்பான நீரில் பிரட் ஸ்லைஸ்களை நனைத்து, ஒட்டப்பிழிந்து காய்கறிக் கலவை-யுடன் சேர்க்கவும். எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். இந்தக் காய்கறிக் கலவையை எலுமிச்சை அளவு எடுத்து விருப்பமான வடிவங்களில் (தட்டை / உருண்டை) செய்து கொள்ளவும். பொடித்து வைத்துள்ள flax seedsல் புரட்டி, நான்ஸ்டிக் தவாவில் ஃப்ரை செய்யவும். தேவைப்பட்டால் சிறிது ஆலிவ் ஆயிலை விடவும். கெட்சப் அல்லது மல்லி சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
ஆலிவ் ஆயில் ‘ஜீரோ கொலஸ்ட்ரால்’ தன்மை கொண்டது. ஃபிளாக் விதைகள் கெட்ட கொலஸ்ட்ராலைக் கரைப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

பாதாம் பற்றி ஒரு ஆய்வு .

பாதாம் ஒரு உயர்தர சூப்பர் உணவு. அனைவருக்கும் பிடித்தது. சத்து நிறைந்தது. பாதாம் நமது தேசத்தில் பஞ்சாபிலும், காஷ்மீரிலும் விளைகின்றது.
மிகச் சிறந்த பாதாம் பருப்புகள் அமெரிக்காவில் கலிஃபோர்னியா மாநிலத்தில் விளைகின்றன. அங்கு பாதாம் பயிரிடுபவர்கள் இணைந்து “கலிஃபோர்னியா பாதாம் போர்டு” என்ற அமைப்பை ஏற்படுத்திக் கொண்டு, உலகெங்கும் பாதாமை விற்பனை செய்கின்றன.
பாதாம் உடலுக்கு வலிமை, வீரியம் இவற்றை தருகின்றது. பாதாமில் இரண்டு வகை உண்டு. ஒன்று இனிப்பு பாதாம் – இதன் பூக்கள் மென்மையாக இருக்கும்.
இரண்டாவது வகை கசப்பு பாதாம் – இதன் இலைகள் சிவப்பு கலரில் இருக்கும். இனிப்பு பாதாமிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் சருமத்திற்கு மிகவும் நல்லது. உடலை மசாஜ் செய்ய பெரும்பாலும் இனிப்பு பாதாம் எண்ணெய்யே பயன்படுத்தப்படுகின்றனது.
பாதாமில் உள்ள சத்துக்கள்
பாதாமில் உள்ள புரதச்சத்து நல்ல தரமுள்ளது. 25 கிராம் பாதாமில் 6 கிராம் புரதம் உள்ளது.
பாதாமில் உள்ள நார்ச்சத்து – 25 கிராமில் 3 கிராம். இந்த நார்ச்சத்து 20 சதவிகிதம் கரையும் நார்ச்சத்து. 80 சதவிகிதம் கரையாத நார்ச்சத்து. இந்தக் கலவை உடலின் ஜீரணமண்டலத்திற்கு மிகவும் நல்லது. கொலஸ்ட்ரால் லெவலை குறைக்கின்றது. பாதாமில் உள்ள நார்ச்சத்து, கொழுப்பு சத்தை உடல் ஏற்றுக் கொள்வதை தவிர்க்கின்றது. இதனால் பாதாம் ஒரு குறைந்த கலோரி உணவு என்று சொல்லலாம். புரதமும், நார்ச்சத்தும் செறிந்து இருப்பதால் பாதாம் சிறிய அளவில் எடுத்துக் கொண்டாலும் பசியை தணிக்கின்றது.
பாதாமில் உள்ள கொழுப்புச்சத்து வகையை சேர்ந்தது. மூஃபா கொலஸ்ட்ராலை குறைக்க வல்லது. தவிர பாதாமில் ஒமேகா – 6 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை இதயத்திற்கு நல்லது. பாதாமில் பூரித கொழுப்பு குறைவு.
பாதாமில் எலும்பு வளர்ச்சிக்கு தேவையான கால்சியமும், பாஸ்பரஸ§ம் உள்ளன. மக்னீசியம், மேங்கனீஸ் மற்றும் விட்டமின் பி – 6 பாதாமில் உள்ளன. இதில் கால்சியமும், பாஸ்பரஸ§ம் கார்போஹைட்ரேட்டின் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகின்றன. வைட்டமின் பி – 6 புரதத்தின் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகின்றது. இதனால் இதயத்திற்கு கெடுதலான ஹேமோசைடிசின் அளவு கட்டுப்படுத்தப்படுகின்றது. பாதாமில் வைட்டமின் இ கூட செறிந்திருக்கின்றது. உடலுக்கு தினசரி 15 மில்லி கிராம் விட்டமின் இ தேவை.
ஓட்ஸ், சோயா பூண்டு, பாதாமும் இதயத்தின் நண்பன். பாதாம் உடல் எடையை ஏற்றாது. இதை பலர் நம்புவதில்லை. பாதாம் போன்ற கொட்டைகள் உடல் எடையை அதிகரிக்கின்றன என்பது பலருடைய கருத்து. இந்த கருத்து சரியல்ல. பாதாம் பருப்பை குறைவாக எடுத்துக் கொண்டாலே பசி அடங்கி விடும். 25 கிராம் பாதாம் 164 கலோரிகளை அளிக்கின்றது.
பாதாமின் பயன்கள்
பாதாமை தோலுரித்த பிறகே உண்பது நல்லது. பாதாமின் தோல் உணவுக்குழாய்யில் எரிச்சலை உண்டாக்கலாம். தவிர பாதாம் பருப்புகள் வாயில்  நன்றாக மென்று விழுங்க வேண்டும். அப்பொழுது தான் எளிதில் ஜீரணமாகும். ஸ்டார்ச் இல்லாததால் பாதாம் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது.
பாதாமில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் அதன் எடையில் பாதி அளவு இருக்கும். எடுக்கப்பட்ட எண்ணெய் வண்ணமில்லாமலும் இருக்கும். இல்லை மஞ்சள் நிறத்தில் இருக்கும். பாதாம் எண்ணெய், தாதுப்பொருட்கள், வைட்டமின்கள் மற்றும் புரதம் செறிந்தது. எல்லாவித சருமத்திற்கும் நல்லது.  உடல் உலர்ந்து போதல், அரிப்பு, அழற்சி இவற்றை பாதாம் எண்ணெய் தடவுவதால் நீக்கலாம். பாதாம் எண்ணெய்யை உபயோகிப்பதால் சருமம் மிருதுவாகின்றது. புத்துணர்ச்சி பெறுகின்றது. இனிப்பு பாதாமில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் சோப்புகள், அழகு சாதனங்கள் இவற்றின் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றது. சோரியாசிஸ், எக்சிமா போன்ற சரும வியாதிகளுக்கு பாதாம் எண்ணெய் ஏற்றது. தீப்புண்களை குணப்படுத்தவும் பயன்படுகின்றது.
பாதாம் பால் தோலுரித்த பாதாமுடன் சர்க்கரை அல்லது தேன் கலந்த கலவை. பாலுடன் சேர்த்து பருக ஒரு சிறந்த பானம். ஆரோக்கியத்திற்கு நல்லது. பொடித்த பாதாம் கேக்குகள், ரொட்டி தயாரிப்பில் உதவுகின்றது. பாதாம் பால் வயிற்றுக்கு, சிறுநீரக பாதைகளுக்கு நுரையீரலுக்கு நல்லது. பாதாம் பால் வயிற்றெரிச்சலை போக்கும். ஆயுர்வேத, யுனானி சிகிச்சைகளில் பாதாம் ஒரு முக்கியமான டானிக். சோகை, மனக்கலைப்பு, ஆண்மைக்குறைபாடுகள், மலச்சிக்கல், சுவாச கோளாறுகள் இவற்றைப் போக்கும் டானிக்காக பாதாம் பயன்படுகின்றது. பாதாம் பாலில் கொழுப்பு குறைவு. அதனால் பசுவின் பாலுக்கு பதிலாக பாதாம் பாலை உபயோகிக்கலாம்.
ஆய்வுகளின் படி பாதாமில் உள்ள 9 பெனாலிக் வேதிப் பொருட்களில் 8 ஆன்டி – ஆக்ஸிடென்ட் குணங்களை உடையவை. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பாதாமை உண்பதால் அதிகரிக்கும். புற்றுநோய் வருவதும் தவிர்க்கப்படுகின்றது. தவிர பாதாம் அலர்ஜிகளை உண்டாக்காது. உணவுப் பொருளில் பாதாம் சேர்ப்பதால் அவற்றின் சுவை மற்றும் சத்துக்கள் அதிகரிக்கப்படுகின்றன.

மீன் குழம்பு

தேவையான பொருட்கள்:
வசதிக்கேற்ப  மீன் – கால் கிலோ
மிளகாய்த் தூள் – 4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
நாட்டுத் தக்காளி – 100 கிராம் (பொடியாக வெட்டவும்)
சின்ன வெங்காயம் – 100 கிராம் (பொடியாக வெட்டவும்)
பூண்டு – 10 பல் (பொடியாக வெட்டவும்)
புளி – 50 கிராம்
கடுகு, வெந்தயம், சீரகம் – தலா அரை டீஸ்பூன்
எண்ணெய் – 100 கிராம்
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லி – தேவையான அளவு
பச்சை மிளகாய் – 3, நீளமாக வெட்டவும்


செய்முறை:

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த பிறகு கடுகு, வெந்தயம், சீரகம் போட்டு தாளிக்கவும். பிறகு பச்சை மிளகாய், வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து நன்றாக வதக்கி மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் சேர்த்து உப்பு போட்டு வதக்கி சுருண்டு வந்த பிறகு புளியை கரைத்து ஊற்றி, நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பிறகு மீனைப் போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். தீயை குறைக்கக் கூடாது. பெரிய தீயில் கொதிக்கவிடவும். அப்பொழுதுதான் மீனில் உப்பு-காரம் ஏறும். குழம்பு கொதிக்கும் பொழுது கொத்தமல்லி, கறிவேப்பிலை போட்டு குழம்பு சுண்டி வந்த பிறகு இறக்கவும். இந்த குழம்பு படுகாரமாக இருக்கும். கவுச்சி நாற்றம் இருக்காது.

குறிப்பு: இந்த குழம்புக்கு மூடியை நடுவில் திறக்கலாம். ஏன் என்றால் மிளகாய்த்தூள் எண்ணெயில் வதக்குவதால் பச்சைவாடை வராது. மீன், புளி கரைசலையும் ஒன்றாகத்தான் போட வேண்டும்.