Thursday, March 21, 2013



தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு ஆன்லைனில் இணைக்கப்பட்டுள்ளன. முதுகலை பட்டப்படிப்புகள்,பொறியியல், மருத்துவம், உயர் தொழில்நுட்ப கல்வித்தகுதிகளை பதிவு செய்ய ஆன்லைன் பதிவு முறை 2001 ல் கொண்டுவரப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பதிவு செய்துள்ள அனைத்து கல்வித்தகுதிகளையும் கொண்ட பதிவுதாரர்களை இணைக்கும் புதிய ஆன் லைன் சாப்ட்வேர் "சுசி லினக்ஸ்” என்ற பெயரைக்கொண்ட இப்புதிய சாப்ட்வேரை எல்காட் நிறுவனம் உருவாக்கி கொடுத்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்றுதான் கல்வித் தகுதியைப் பதிவு செய்ய முடியும் என்ற நிலை இருந்து வந்த நிலையில், தற்போது அனைத்துப் பணிகளையும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் செய்து கொள்ள முடியும். ஏற்கெனவே வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள், இந்த இணைய தளத்தில் தங்களது பதிவு எண்ணை உள்ளிட்டு தங்களது கல்வி விவரங்களை சரிபார்த்துக் கொள்ள முடியும்.

இன்று நாம் புதியதாக ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி என்று பார்ப்போம். இதற்கு குடும்ப அட்டை, சாதி சான்றிதழ், 10th (or) 12th மதிப்பெண் அட்டை கண்டிப்பாக கையில் வைத்திருத்தல் வேண்டும். முதலில் இணையதள முகவரி www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று click here for new user ID registration என்று இருக்கும் ( உதாரணத்திற்கு மேலே உள்ள படத்தை பார்க்கவும்) அதை கிளிக் செய்தால் ஒரு விண்டோ ஓபன் ஆகும் அதில் I agree என்று சொடுக்கி அடுத்து வரும் பக்கத்தில்
பதிவு செய்யும் விண்ணப்பதாரரின் பெயர், ஈமெயில் முகவரி, user id என்ற இடத்தில் புதியதாக ஒரு ID கொடுக்கவும், பின்பு அப்பா பெயர், பிறந்த தேதி,குடும்ப அட்டை எண்ணையும் Image Code என்ற இடத்தில் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் codeஐ கொடுத்து Save செய்தால் உங்களுகென்று ஒரு ID Create ஆகி விடும். அடுத்து வரும் பக்கத்தில்

உங்களது Personal detail, Contact detail, Qualification detail, Technical detailஆகியவற்றை பூர்த்தி செய்து Save செய்தால் உங்களது Register Number Createஆகிவிடும்.

குறிப்பு 1 : Qualification detail பூர்த்தி செய்தவுடன் add என்று பட்டன் இருக்கும் அதை கிளிக் செய்தால் ஒரு சின்ன விண்டோ ஓபன் ஆகும் அதில் கிளிக் செய்து Save கொடுக்கவும். இதே போன்று Technical Detailம் செய்ய வேண்டும்.

குறிப்பு 2 : மேலே சொன்ன அனைத்தும் முடிவடைந்தவுடன் Home பகுதிக்கு சென்று பார்த்தால் Print ID Card என்று இருக்கும் அதை கிளிக் செய்து பிரிண்ட் எடுத்து கொள்ளலாம்.

குறிப்பு 3 : ஏதேனும் தவறாக செய்திருந்தால் Home பகுதியில் Modify Contactஇருக்கும் அதில் சென்று மாற்றி கொள்ளலாம்.

குறிப்பு 4 : Update Profileல் சென்று Renewal செய்து கொள்ளலாம்.

Renewal செய்வதற்கான குறிப்பு :
உதாரணத்திற்கு Register Number இப்படித்தான் இருக்கும்.

Register Number : ARD2012M00007502

வேலைவாய்ப்பு அலுலகத்தின் குறியீட்டு எண்: ARD - என்பது ( வேலைவாய்ப்பு அலுவலகம், அரியலூர் )
பதிவு செய்த ஆண்டு : 2012
ஆண் / பெண் : M
பதிவு எண் : 7502

பதிவு எண் என்பது 8 இலக்க எண்ணாக இருத்தல் வேண்டும், அப்படி இல்லாமல்4 இலக்க எண்ணாக இருந்தால் முன்னதாக 4 பூஜ்ஜியங்களை சேர்த்துக்கொள்ளவும்.

User ID : ARD2012M00007502
Password : dd / mm / yyyy

கடவு சொல்லில் உங்களது பிறந்த தேதியை கொடுக்கவும்.
உங்களது ID CARD இப்படிதான் இருக்கும்..
அவ்வளவு தான் நண்பர்களே.. இனி கால விரையமுமின்றி வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

Monday, March 11, 2013

தலைவன் ஆசிரியர்!

தலைவன் ஆசிரியர்!

"நம்ம அரசாங்கம் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு நிறைவான ஊதியம், ஒரு மாதம் வரலைன்னாலும் சம்பளம், மழை பெய்தால் விடுமுறை, சம்பளத்துடன் கூடிய பயிற்சி, பெண் ஆசிரியர்களுக்குப் பேறுகால விடுமுறை ஆறு மாதம்... இவ்வளவும் கொடுக்குது. அது போக, மாணவர்களுக்கு நாலு முறை சீருடை, பாடப் புத்தகங்கள், எழுதுபொருட்கள், காலணினு படிப்பதற்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செஞ்சு கொடுக்குது. இவ்வளவு சலுகை, வசதிகளுக்குப் பிறகும் கிராமப்புற மாணவர்களுக்குத் தரமான கல்வி கிடைக்கலைன்னா, தப்பு அரசாங்கம் மேல இல்லை. நம்ம மேலதான்!''- அமைதியாக, அதே சமயம் அழுத்தமாகப் பேசத் துவங்குகிறார் கருப்பையன். தன் 37-வது வயதில் தேசிய நல்லாசிரியர் விருதுபெற்ற கருப்பையன், 'சாட்டை’ பட தயாளனைத் தூக்கிச் சாப்பிடும் சாதனைகளைச் சத்தம் இல்லாமல் செய்த ஆசிரியர்!

புதுக்கோட்டையை அடுத்த நெடுவாசல் வடக்குப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணிபுரியும் கருப்பையன், டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது முதல் சமூக சேவைக்கான பல விருதுகளைப் பெற்றுள்ளார். சமூக சேவை..? கருப்பையன் மாற்றியிருப்பது ஒரு பள்ளியை மட்டுமல்ல... ஒரு கிராமத்தை, ஒரு சமூகத்தை!

ஒரு தனிமனிதன் நினைத்தால், இவ்வளவு மாற்றங்கள் சாத்தியமா என்று அதிசயிக்கவைக்கிறது கருப்பையனின் கதை.

''நான் சின்னச் சின்னதாக் கூலி வேலை செஞ்சுட்டேதான் படிச்சேன். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் எடுத்த 462 மதிப்பெண்கள்தான் என் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் தன்னம்பிக்கையைக் கொடுத்தது. 1988-ல அரசுப் பள்ளி ஆசிரியர் ஆனேன். ஏழு வருஷம் உதவி ஆசிரியர் பணி. அப்ப பள்ளிக்கூட அமைப்பில் நிறைய மாற்றங்கள் கொண்டுவரணும்னு நினைப்பேன். ஆனா, சுத்தி இருக்கிறவங்களிடம் இருந்து சரியான ஒத்துழைப்பு இல்லை. நாம சொல்றதை மத்தவங்க கேட்கணும்னா, அதுக்குத் தலைமை ஆசிரியர் ஆவதுதான் ஒரே வழினு காத்திருந்தேன். 14 வருஷங்கள் கழிச்சு தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கிடைச்சது. அப்போ பயிற்சிக்காக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நெடுவாசல் வடக்குப் பள்ளிக்கு வந்தேன். அந்த சுத்துவட்டாரத்தில் இருந்த வடக்கிகாடு, குயவர் தெருக் கிராமங்கள் கிட்டத்தட்ட 50 வருஷங்கள் பின்தங்கி இருந்தன. அங்கே ஒரு சமூகத்தைச் சேர்ந்த மக்கள் பகல்ல கூலி வேலைக்குப் போயிட்டு, ராத்திரியில் வேட்டைக் குப் போவாங்க. 50 வயசு ஆண்கள், ரொம்பச் சின்ன வயசுப் பெண்களைத் திருமணம் செஞ்சுக்குவாங்க. குயவர் தெருவில் சராசரியா ஒருத்தருக்கு நாலு மனைவிகள் இருப்பாங்க. நெருங்கிய உறவினர்களுக்குள்ளேயே திருமணம் செஞ்சுக்கிறதால, பிறக்கும் குழந்தைகள் மந்தத்தன்மையுடன், உடல்நலக் குறைவுடன் இருக்கும்.அங்கே இருந்த ஒரே ஒரு தொடக்கப் பள்ளியும் இடிந்து விழும் நிலையில் இருந்தது. அந்தக் கிராமங்களின் நிலைமையையே மாத்தணும்னு முடிவு பண்ணேன்.

நெடுவாசல் தொடக்கப் பள்ளிக்கு பணிமாற்றம் கேட்டேன். கிடைக்கலை. மாவட்ட ஆட்சியரிடம், 'ஒரு அரசாங்கத் தொடக்கப் பள்ளி எப்படி இருக்கணும்னு அரசாங்க விதிகள் சொல்லுதோ, அப்படி அந்தப் பள்ளியை மாத்துறேன். இல்லைன்னா, என் மேல் துறைரீதியா நடவடிக்கை எடுங்க’னு சொல்லி பணிமாற்றம் கேட்டேன். என் உறுதியைப் பார்த்த ஆட்சியர், என்னைப் பணிமாற்றம் செய்தார்.

நெடுவாசல் வடக்குத் தொடக்கப் பள்ளிக்குத் தலைமை ஆசிரியராக முதல் நாள் பொறுப்பேத்துக்க வர்றேன். என் அறையில் தலைமை ஆசிரியரின் நாற்காலி இல்லை. 'எங்கே?’னு கேட்டேன். 'மூணு மணிக்கு வரும்’னு சொன்னாங்க. சரியா மூணு மணிக்குக் கொண்டுவரப்பட்ட நாற்காலியில் எண்ணெய் வடியுது. மஞ்சள் தூள், ரோஜா இதழ்கள் ஒட்டியிருக்கு. விவரம் கேட்டா, அந்த ஊர்ல இறந்தவங்களை மயானத்துக்குக் கொண்டுபோற வரைக்கும் சாத்திவைக்க அந்த நாற்காலியைத்தான் பயன்படுத்துவாங்களாம். சினிமாவில் காட்டப்படும் காட்சிகளைவிட மிக மோசமா இருந்தது நிலைமை!

மாற்றத்தைச் சமூகத்தின் பங்களிப்பு இல்லாமல் செய்ய முடியாது. அதனால், பள்ளிக்கூடத்தின் நிலைமையை மாற்ற நான் மட்டும் ஆசைப்பட்டாப் போதாதே. என் தொழில், கற்பித்தல். அதுக்கு முதலீடு, மாணவர்கள். முதலாளி, பெற்றோர்கள். அதனால மக்கள் குடியிருக்கிற இடங்கள்ல  கூட்டம் போட்டேன். கூட்டத்தில் சுற்றுப்புறச் சுகாதாரம்பற்றிப் பேசினேன். பொது இடங்களில், பள்ளியைச் சுற்றி, நடைபாதைகளில் அசுத்தம் செய்யக் கூடாதுனு சொன்னேன். முழு சுகாதாரம் உள்ள கிராமங்களுக்கு அரசாங்கம் மூணு லட்ச ரூபாய் பரிசு தரும் திட்டத்தைப் பத்திச் சொன்னேன். அதை நம்ம கிராமம் ஜெயிக்கணும்னு சொன்னேன். பத்து இளைஞர்களை என் துணைக்கு அழைச்சுக்கிட்டேன். அதிகாலை நாலு மணிக்கு தட்டு, கம்பு, டார்ச்லைட் எல்லாம் எடுத்துக்கிட்டுக் கிளம்பிடுவோம். வீதிகளில் வெளிச்சம் அடிச்சு நடந்து சத்தம் போட்டுக்கிட்டே போவோம். பதினஞ்சு நாள் அப்படி ரோந்து போனதில், அசுத்தம் பண்றது குறைஞ்சது. ஆனா, நிரந்தரத் தீர்வு கழிப்பறை வசதிதானே. கழிப்பறை வசதிக்காக தமிழ்நாடு அரசு, வீடு ஒன்றுக்குக் கொடுக்கும் மானியத்தொகை 2,000 ரூபாயை வெச்சு 36 வீடுகளுக்குக் கழிப்பிட வசதி செய்துகொடுத்தேன். முழு சுகாதாரத்துக்கான மூன்று லட்ச ரூபாயை ஜெயிச்சது நெடுவாசல். அந்தப் பணத்தில் பள்ளிக்குத் தேவையான பொருட்கள், ஒரு சின்னப் பாலம், சாலை வசதிகளைச் செய்தோம்.

அப்புறம் அந்தச் சமூக மக்கள் என்னை முழுசா நம்பினாங்க. கிராம சபாக் கூட்டங்கள் மூலமா, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, வீட்டு வசதி, குளம் தூர்வாருதல்னு அரசாங்கத்தின் திட்டங் களைக் கிராமத்தில் செயல்படுத் தினோம். 'திரும்பும் திசை எங்கும் கணினியே’ பாடம் எடுக்க, எங்கள் பள்ளியில் கணினி வசதி இல்லை. கல்விக் கொடையாளர்கள் நிதி, அரசு நிதி எனக் கணினிகள், எல்.சி.டி. பிரின்டர்கள், ஸ்கேனர், இன்டர்நெட்னு எல்லா வசதிகளை யும் ஏற்படுத்தினோம். இன்னைக்கு என் மாணவர்கள் 10 பேர் பிளாக் கரா இருக்காங்க. அன்னைக்கு என்ன படிச்சாலும், உடனே அதை அப்லோட் பண்ணிருவாங்க.

தலைமைக் குணம் என்பது சொல்லிக் கொடுப்பதால் மட்டுமே வந்துவிடாது. அனுபவபூர்வமா அதை ஒவ்வொருவரும் உணரவைக்கணும். பசங்களை மைக்கில் பேசவைப்பேன். அது மேடை பயத்தைப் போக்கும். புவி வெப்பம் அடைவதைத் தடுக்க 12,010 மரக்கன்றுகள் நட்டோம். ஒவ்வொரு மரக்கன்றுக் கும் ஒரு மாணவன் பொறுப்பு. நட்டு, நீர் பாய்ச்சி கண்ணுங்கருத்துமாப் பார்த்துக்கிட்டாங்க. ஒரு இலை உதிர்ந்தால்கூட என்ன ஆச்சுனு பார்ப்பான். அறிவியல் ஆர்வம், உற்று நோக்கும் திறன் வளர்ந்தது. மரம் வெட்டுதல் கூடாதுனு பாடமா மட்டுமே சொல்லிக்கொடுத்தா, அதன் அர்த்தமே அவனுக்குப் புரிஞ்சிருக்காது. ஆனா, ஒரு மரத்தை வளர்க்கிறவன் எப்பவும் ஒரு மரத்தை வெட்ட மாட்டான். ஆக்கினவனுக்கு அழிக்க மனம் வராது.

மாணவர்களுக்கு மருத்துவ முகாம் நடத்தியபோது, பலருக்கு ஹீமோகுளோபின் அளவு குறைவா இருந்தது தெரியவந்தது.  நவதானியம் கலந்த பாலை மாணவர்களுக்குக் கொடுத்தேன். அதன் பிறகு செய்த மருத்துவப் பரிசோதனையில் அவர்களுடைய ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து இருந்தது. பெற்றோர்களும் புரிந்துகொண்டு வீட்டிலேயே பிள்ளைகளுக்கு நவதானியங்கள் கொடுக்கத் துவங்கினார்கள். மாணவனோ, பெற்றோரோ எதையும் சொல்லிட்டே இருக்காமல், செஞ்சு காமிச்சா உடனே புரிஞ்சுக்குவாங்க. 2010 ஆண்டு விழாவில், எனக்கு அந்தச் சமூக மக்கள் நாகஸ்வரம், மேளம் வாசிச்சுட்டு வந்து, 100 தட்டு, சைக்கிள், ஃபேன், பால், சமையல் பாத்திரங்கள் எல்லாம் அடுக்கி 'கல்விச் சீர்’ கொடுத்தாங்க. நெகிழ்ந்துட்டேன்!

இங்கே படிப்பு வராத மாணவன்னு யாருமே இல்லை. ஒரு ஆசிரியருக்கு விவரம் தெரியாம இருந்தால், அவருடைய மாணவர்களுக்கும் எதுவும் தெரியாது. கற்பிக்கும் முறை மூலமா எந்த மாணவனையும் வல்லவனா, நல்லவனா மாத்தலாம். அதைத்தான் நான் பண்றேன்.

முன்னாடி மாதா, பிதா, குரு, தெய்வம்னு இருந்தது. ஆனா, இப்ப மாதா, பிதா, கூகுள், தெய்வம்கிற அளவுக்கு டெக்னாலஜி வளர்ந்திருச்சு. அதனால், ஆசிரியர்கள் தங்களுக்குத் தெரிந்ததை மட்டும் சொல்லிக்கொடுக்காமல், நவீன மாற்றங்களையும் மாணவர்களுக்குச் சொல்லிக்கொடுக்கணும். அதுக்கு அரசாங்கம் எல்லா வசதிகளும் தந்திருக்கு. அதை மாணவர்களுக்கு வாங்கித் தரும் பொறுப்பு மட்டுமே நம்முடையதுனு ஒவ்வோர் ஆசிரியரும் உணர்ந்தாலே, அடுத்த தலைமுறை கம்பீரமாக நிமிரும்!''

- க.அபிநயா
படங்கள்: செ.சிவபாலன்

(ஆனந்த விகடன் இதழில் இருந்து.)

Sunday, March 10, 2013

யாராவது ஒரு நாள் முழுவதும் கடலை பார்த்தபடியே இருந்திருக்கிறார்களா என்ன ?

திரை பார்த்தல்

ஒரு நாளைக்கு சராசரியாக எட்டு முதல் பத்து மணி நேரம் கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்திருக்கிறேன். உலகில் வேறு எந்த பொருளையும் இவ்வளவு நேரம் நான் பார்த்து கொண்டிருந்ததேயில்லை. திரையை பார்த்து கொண்டும் படித்தும் கொண்டு இருப்பது அலுப்பதேயில்லை. என்ன வசீகரமது?

யாராவது ஒரு நாள் முழுவதும் கடலை பார்த்தபடியே இருந்திருக்கிறார்களா என்ன ? அல்லது ஒரு மலையை எட்டு மணி நேரம் இடைவிடாமல் பார்த்து கொண்டேயிருக்க முடிகிறதா, கொட்டும் மழையை கூட பத்து நிமிசங்களுக்கு மேல் ஆர்வமாக யாரும் பார்ப்பதேயில்லை. உலகின் பேரழகான அதிசயங்கள், பூக்களின் பள்ளத்தாக்குகள், பசுமைவெளிகள் கூட ஐந்து நிமிசத்தில் அலுத்து போய்விடுகிறது. குழந்தைகளை கூட இன்று எவரும் இப்படி உற்று பார்த்து கொண்டேயிருந்ததேயில்லை. பின் எப்படி கணிணி மட்டும் இப்படி ஈர்க்கிறது.

ஒரு செல்போன் விளம்பரம் ஒன்றில் காதில் போனை வைத்தபடியே நாளெல்லாம் பேசிப்பேசி தலை ஒருச்சாய்ந்து போன மனிதனை காட்டுவார்கள். அவன் எங்கே போனாலும் தலையை சாய்த்துக் கொண்டே பேசுவான். கணிணி முன் நாள் எல்லாம் இருப்பவர்கள் கிட்டதட்ட அப்படித் தானிருக்கிறோம்.

சில வேளைகளில் இந்த கணிணித் திரை ஒரு மாபெரும் கடற்கரை என்று தோன்றும். யார் யாரோ எதற்காகவே கடந்து போகிறார்கள். அமர்ந்திருக்கிறார்கள். பேசிக் கொள்கிறார்கள். ரகசியமாக திட்டமிடுகிறார்கள். சண்டையிடுகிறார்கள். குற்றம் புரிகிறார்கள். தியானம் செய்கிறார்கள். அன்பை பகிர்ந்து கொள்கிறார்கள். உடற்பயிற்சி செய்கிறார்கள். அத்தனையும் ஒரே இடத்தில் சாத்தியமாகிறது.

சில வேளைகளில் இந்தத் திரை ஆசைகளின் ம்யூசியம் ஒன்றிற்குள் நுழைந்துவிட்டதை போல இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் தனித்துவமான ஆசைகள். கனவுகள், ரகசியங்கள், அதை அவரவர் அறைகளில் பகிர்ந்து கொள்கிறார்கள். ஒளித்து வைத்து கண்டுபிடிக்க சொல்கிறார்கள். உலகின் ஆசைகள் ஒட்டுமொத்தமாக கணிணி வழியாகவே ஒருங்கிணைக்கபடுகின்றன. காட்சிபடுத்தபடுகின்றன.

சில நேரம் கணிணியின் திரை அழகான பெண்ணை பின்தொடர்வதை போல நம்மை மீறிய ஈர்ப்பில் அழைத்துச் சென்று கொண்டேயிருக்கிறது. பின்னால் போவதன் மயக்கமே நம்மை கூட்டிப்போகிறது.

அரிதான வேளைகளில் அறியாத அடர்ந்த கானகம் ஒன்றினுள் செல்வதை போல பயம், வசீகரம் குழப்பம் திரும்பி போக முடியாதோ என்ற உள்ளுணர்வு, அதை தாண்டி காணும் வியப்பு, அறியாத மனிதர்கள், மிருகங்கள், பறவைகள், என்று வேறு உலகம் திறந்து கொள்கிறது.

கொலம்பஸ் நாடுகளை தேடி கடலில் அலைந்து திரிந்த பயணத்தை விடவும் கம்ப்யூட்டர் முன் அமர்ந்தபடியே உலகை தேடும் பயணம் பெரியது தானோ.

ஆனாலும் திரையை பார்த்து கொண்டிருப்பது புறஉலகை விட்டு நம்மை துண்டிக்கிறது. தனிமைப்படுத்துகிறது. உதடுகளை இறுக்கிபூட்டிவிடுகிறது. தனக்கு தானே பேசிக் கொள்ளும் மனிதனை போலாக்கி வைத்திருக்கிறது.

ஏன் கணிணி திரை மட்டும் இவ்வளவு வசீகரமாக இருக்கிறது. சினிமா தியேட்டரில் அடுத்தடுத்து இரண்டு காட்சிகளுக்கு மேல் பார்க்க முடிந்ததில்லை. காதலிக்கும் பெண்ணின் முகத்தை கூட ஒருவன் இவ்வளவு ஆசையாக அருகாமையில் நெருக்கமாக பார்த்து கொண்டேயிருப்பானா என்று சந்தேகமாகவே இருக்கிறது.

திரை பார்த்தல் என்ற இந்த கணிணி செயல்பாடு ஒரு தொற்றுபோய்போல உடனே பரவிவிடுகிறது. மீள்வது எளிதானதேயில்லை.

திரை மெல்ல நம் உடலின் செயல்பாட்டினை ஒடுக்கத் துவங்குகிறது. உடலை விட மனதே நம்மை இயக்குகிறது என்று நம்ப வைக்கிறது. ஒரே நாற்காலி எதிரே கணிணியின் திரை. அது பேசுகிறது. பாடுகிறது. மௌனமாகிறது. பேசவைக்கிறது. கோபபட வைக்கிறது. காதலிக்க செய்கிறது. திறமையை வெளிப்பட செய்கிறது. பசி மறந்து தாகம் மறந்து இடையிடையே அழைக்கும் தொலைபேசி குரல்களை மட்டுமே அனுமதித்து அது நம்மை முற்றாக கவ்விக் கொண்டிருக்கிறது. யோசிக்கையில் உலகில் வேறு எந்த பழக்கமும் இவ்வளவு தீவிரமாக மனிதனை பற்றிக் கொண்டதில்லை.

சிறுவயதில் விளையாட்டுவீரர்கள் பந்தோடு நடந்து போவதையும், பந்தை அருகாமையில் வைத்து கொண்டு உறங்குவதையும் பார்த்திருக்கிறேன். அப்போது வேடிக்கையாக இருக்கும் அவர்கள் பந்தோடு பேசுவார்கள். பந்தை கோவித்து கொள்வார்கள். அந்த மனநிலையை விட முற்றிய மனநிலை கணிணி திரை உருவாக்குகிறது.

கம்ப்யூட்டர் முன்னால் அமர்ந்து அழுபவர்களை கண்டிருக்கிறேன். லேப்டாப்பிற்கு பிறந்தநாள் கொண்டாடும் இளைஞர்கள் இருக்கிறார்கள். வயதை மறந்து கணிணி அனைவரையும் கட்டிப் போட்டு வைத்திருக்கிறது. ஒரு மாபெரும் தியான மண்டபத்தில் அமர்ந்திருப்பதை போல யாவரும் அவரவர் கணிணி முன்பாக அமர்ந்திருக்கிறார்கள். எதையோ தேடிக் கொண்டும் பகிர்ந்து கொண்டுமிருக்கிறார்கள். அல்லது மாபெரும் சந்தை கூடம் ஒன்றினுள் நுழைந்துவிட்டதை போன்றுமிருக்கிறது.

நம் காலத்தின் மாபெரும் ஒற்றை செயல் கம்ப்யூட்டர் முன் அமர்ந்திருப்பது தானோ.

புத்தகங்கள் இப்படி வசீகரமானதில்லை. அது ஒவ்வொருவரையும் ஒருவிதமாகவே அணுகுகிறது. நெருக்கம் கொள்கிறது. இசை வசீகரமானது தான் ஆனால் அதன் முன்னே யாவரும் ஒன்று போல ரசனை கொள்வதில்லை. வேறு எந்த கலைகள் விஞ்ஞான உபகரணத்தை விட கணிணியின் திரை வசீகரமாக இருக்கிறது. இறுக்கமாக பிடித்து வைத்துக் கொள்கிறது.

தினமும் கம்ப்யூட்டரில் நான் என்ன பார்க்கிறேன் என்ன செய்கிறேன் என்று ஒரு குறிப்பேட்டினை எழுதலாம் என்று முயற்சித்தேன். ஒரு மாத காலத்தில் அது ஒரு மாபெரும் நாவல் அளவு வளர்ந்துவிட்டது. பயமாக இருந்தது. சட்டென சில நாட்கள் கணிணி பக்கமே போக கூடாது என்று அதை அணைத்தே வைத்திருந்தேன். பழையபடி பேனா காகிதங்கள், நோட்டுகள் என்று திரும்பினேன். ஆனால் ஏதோ உடல்நலமற்று போய் நோயாளியான ஒருவன் இவ்வளவு தான் தன்னால் முடியும் என்று உணர்ந்ததை போல மனது மிகவும் சோர்வு கொண்டதோடு என்றோ கைவிட்ட பழக்கத்தை மறுபடி செய்து பார்ப்பதை போலவும் உணர செய்தது.

சினிமாவில் எழுவதால் இன்றும் பேடு பேப்பர் பேனா என்ற பழக்கமிருக்கிறது. இல்லாவிட்டால் அது என்னைவிட்டு பேனாவில் எழுதுவது முழுமையாக போயிருக்கும். ஆனால் பேனாவில் எழுதும் போது ஏதோ சிறுவயது செயலை செய்வது போலதான் தோன்றுகிறது. எடிட் செய்யவும் கதை சொல்வதன் பல்வேறு சாத்தியங்களை உருவாக்கி பார்க்கவும் முடிவதில்லை.

கம்ப்யூட்டர் கேம்ஸ் எனும் மாய விளையாட்டை நாள் எல்லாம் விளையாடிக் கொண்டிருப்பவர்களை அறிவேன். அவர்கள் திரையை வென்றுவிட தனது அத்தனை சாத்தியங்களையும் பயன்படுத்துகிறார்கள். தோற்றுபோகையில் வருத்தம் கொள்கிறார்கள். வெற்றி காண்கையில் கொண்டாடுகிறார்கள். வெளிஉலகின் பிரம்மாண்டம். வசீகரம், பிரச்சனைகள், சந்தோஷங்கள் என எதுவும் இன்று முக்கியமாகயில்லை.. நமது அடையாளங்கள் இல்லாமல் நாம் உலவவும் அறிந்து கொள்ளவும் கணிணி மட்டுமே அனுமதிப்பது தான் இதன் காரணமா?

கணிணி திரை உருவாக்கும் முக்கிய பிரச்சனையாக உட்கார்ந்தே இருப்பது என்ற பழக்கத்தையே சொல்வேன். அது கணிணி திரை இல்லாவிட்டாலும் நம் கால்களை கட்டிபோட்டுவிடும் அபாயத்தை உருவாக்க கூடியது. வெளியில் நடப்பதற்கோ, ஒடுவதற்கோ. உலகை சுற்றி அலைவதற்கோ நமது கால்கள் தயங்குகின்றன. எங்கே பயணம் செய்தாலும் அது ஒய்வை நோக்கியதாகவே இருக்கிறது. அடுத்த வீதியில் உள்ள ஒன்றை பற்றி அறிந்து கொள்வதற்கு கூட உடல் விரும்புவதில்லை. கூகிள் தேவைப்படுகிறது. உலகை நாம் சுருக்கி கொண்டே வந்து வெறும் தகவல்களாக மாற்றிக் கொண்டிருக்கிறோமா? அல்லது காட்சி பிம்பங்களாக மட்டுமே உலகம் போதுமானதாக இருக்கிறதா?

ஆரம்ப காலத்தில் கணிணியை அது ஒரு ஜன்னல் அது நம் வீட்டிற்குள் இருக்கிறது. விரும்பும் போது திறந்து வேறு உலகை பார்த்து கொள்கிறோம் என்று தான் பலரும் நினைத்தார்கள் இன்று அந்த மனநிலை அப்படியே மாறியிருக்கிறது.

இன்று கணிணி தான் வீடு. உலகம். அதிலிருந்து வெளியே போக சிறிய கதவு இருக்கிறது. அக்கதவு எப்போதாவது திறந்து கொள்ளும்போது உடன்வாழும் மனிதர்களையும் சொந்த தேவைகளையும் பார்த்து கொள்கிறோம்

கணிணி பலரது வீடுகளிலும் அணைக்கபடுவதேயில்லை. அது பகலிரவாக ஒடிக்கொண்டேயிருக்கிறது. நமது உறக்கமும், உடலின் தேவைகளும் மட்டுமே கணிணியை விட்டு நம்மை துண்டித்திருக்கிறது. அதற்கும் மாற்று உருவாகினால் இருப்பின் ஆதாரங்கள் சிதறடிக்கபட கூடும். அதுதான் பயமாக இருக்கிறது.

நன்றி :எழுத்தாளர் இராமகிருஷ்ணன்

ஆயகலைகள் 64

உலகில் தீவிரவாதம் அதிகரிக்க யார் காரணம் ?

உலகில் தீவிரவாதம் அதிகரிக்க யார் காரணம் ?

இன்றய கால கடத்தில் ஒவொறு நாடும் தங்களது நாட்டின் பாதுகாப்பு மற்றும் மின் தேவைக்காக யுரோனியத்தை செறிவூட்டும் நடவடிக்கையில் இறங்கி உள்ளன. இதில் எந்த நாட்டையும் நாம் குறை கூற முடியாது. அப்படி குறை கூறுவதாக இருந்தால் இந்தியாவும் அமெரிக்க எதிர்ப்பையும் மீறி அனு சோதனை நடதியது. அமெரிக்காவும் அமெரிக்கவின் அல்லக்கை நாடுகலும் பொருளாதார தடை வித்திதது. 

அனு உலை வேண்டுமா வேண்டாமா என்பதில் நமக்கு இருவேறு கருத்துகள் இருந்தாலும் நாம் இந்தியா அனு சோதனை நடத்தியதை தவறு என்று சொல்ல முடியாது. அது நமது நாட்டின் பாதுகாப்பு பிரச்சினை என்பதால் நாம் அதை ஆதரித்துதான் ஆகவேண்டும். நமது நாட்டை சுற்றி இருக்கும் சீனா பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு நமது பலத்தை காட்டி அவர்களுக்கு ஒரு அச்சைதை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகதான் அனு சோதனை நடத்டினோம் என்பதை மறுக்க முடியாது. நம் மீது பொருளாதர தடை வித்தித அமெரிக்க மற்றும் அதன் அல்லக்கை நாடுகலும் அனு ஆயுததை தயாரித்து வைத்துக்கொண்டும் யுரோனியத்தை செறிவூட்டும் பனியில் ஈடுபடுக்கொண்டே தான் நம் மீது பொருளாதார தடை விதித்தன.

இப்பொழுது ஈரான் யுரோனியத்தை செறிவூட்டுவதை அமேரிக்கா எதிர்கின்றது. ஈரான் அனு ஆயுத சோதனை நடத்துவது அந்த நாட்டின் உரிமை அதை சோதனை நடத்த கூடாதென்று சொல்ல அமெரிகாவுக்கு என்ன உரிமை இருகின்றது. ஈரான் அனு சோதனை நடதியது அனு ஆயுதம் தயாரிப்பதற்காக அல்ல மின்சாரம் தயாரிக்கதான் என்று தன்னிலை விளக்கம் அளித்துள்ளது. அந்த நாடு மின்சாரம் தயாரிதால் என்ன அனு ஆயுதம் தயாரித்தால் என்ன அது அந்த நாட்டின் உரிமை. அனு ஆயுதத்தை குவித்து வைத்திருக்கும் அமேரிக்கா அனுவை செரிவூட்டுவதை கண்டிக்க என்ன அருகதை இருக்கின்றது. ஈரான் அனுவை செரிவூட்டுகின்றதென்றால் அதன் அண்டை நாடான இஸ்ரேல் அனு ஆயுதம் வைத்துள்ளது

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் பிரச்சினை இருந்து வருவது உலகரிந்த விசயம் அப்படி இருக்கும் பொழுது தனது எதிரி நாடு பலமான ஆயுதம் வைத்திருக்கும் பொழுது ஈரானும் தனுது ரானுவத்தை பலபடுத்த வேண்டியது இன்றியமையாதது. அப்படி இருக்கும் பொழுது அமெரிக்கா எப்படி ஒரு நாட்டை அனு ஆயுதம் தயாரிக்க கூடாது என்று கூறிக்கொண்டு மற்றொரு நாட்டை அனு ஆயுதம் தயாரிக்க அனுமதிப்பது எந்த விதத்தில் நியாயமாக இருக்க முடியும்.

இப்படிதான் ஈராக்கும் பயங்கரமான ஆயுதம் வைத்திருகின்றது என்று கூறி அதன் மீது போர் தொடுத்தது. ஈராக் அயுதம் வைத்திருப்பது பெரிய குற்றமா அப்படி பார்த்தால் உலகில் உள்ள ஆயுதத்தில் எழுபது சதவிகிதம் வைத்திருக்கும் அமெரிக்கவுக்கு என்ன தண்டனை கொடுப்பது. சரி ஈராக் ஆயுதம் வைத்தைருந்தது என்ற காரனத்தை கூறித்தானே போர் தொடுத்தது. அப்படி என்ன ஆயுதத்தை ஈராக்கில் கண்டு பிடித்தது. லட்ச்சக் கனக்கான மக்களை கொன்று குவித்ததை தவிர அங்கு என்ன ஆயுத்ததை கண்டு பிடித்தது. எத்தைனை மக்கள் கை கால்களை இழந்து ஊனமானார்கள் இதற்கு அமெரிக்கா என்ன பதில் சொல்லப் போகின்றது. இபொழுத்து என்னவென்றால் ஈரான் அனு ஆயுதம் வைத்திப்பதாக கூறிக்கொண்டு அந்த நாட்டின் அருகாமையில் தனது அனு ஆயுத போர்கப்பலை நிறுத்தியுள்ளது.

ஈரான் மீது போர்தொடுத்தால் அதனால் பாதிக்க போவது அப்பாவி மக்கள்தான். இப்படி ஒரு நாட்டின் மீது அனியாயமாக போர் தொடுத்தால் அதனால் பாதிக்கபட்ட மக்கள் சொந்த பந்தங்களை இழந்த மக்கள் தங்களின் எதிரிப்பை காட்ட ஆயுதத்தை தான் கையிலெடுப்பார்கள். பலம் வாய்ந்த அமெரிக்காவை நேரடியாயக தாகமுடியாதென்பதால் பொது இடத்தில் குண்டு வைக்கதான் செய்வார்கள் போரால் பாதிக்க பட்ட மக்களின் உனர்வுகளை புரிந்து கொள்ள வேண்டுமென்றால் போரின் பாதிப்பை அனுபவித்தால் தான் புரிந்து கொள்ள முடியும். அது தான் ஈராக்கில் நடந்து கொண்டு இருக்கின்றது. தீவிரவாதிகள் தானாக முலைப்பதிலை. ஒரு நாட்டின் மீதோ அல்லது ஒரு இனத்தின் மீதோ அனியாயமாக தாக்குதல் நடத்துவதன் மூலம் தீவிரவாதத்தை விதைக்கின்றனர். (அதற்காக ஆயுதத்தை கையிலெடுத்து அப்பாவி மக்களை கொல்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இங்கு நான் சொல்ல வருவது அமெரிக்கா போன்ற நாடுகள் விதைத்த திவிரவாதம் என்னும் உயிர் கொல்லி இன்று நம் கலுத்திற்கு மேல் கத்தியாக தொங்கிகொண்டு இருக்கின்றது.)

தீவிரவாதத்தை உருவாக்குவதில் அமெரிகாவிற்குதான் முதல் இடம். இந்த லட்ச்சனதில் தீவிரவாததை ஒடுக்குவத்துதான் அமெரிக்க அரசின் குறிக்கோளாம் ஒபாமா வாய் கூசாம் கூறிக்கொண்டு இருக்கின்றார். இங்கு இன்னொரு விசயத்தை கவனிக்க வேண்டி இருக்கின்றது. இந்தியாவும் பாகிஸ்தானும் அனு ஆயுத சோதனை நடத்தும் பொழுது அமெரிக்கா இப்படி போர் தொடுக்கவில்லை.ஆனால் ஈரான் மீது மட்டும் போர் தொடுக்க வரிந்து கட்டிக்கொண்டு தயாராவது அனு ஆயுதம் தயாரிப்பதை எதிர்பதற்க்காக அல்ல. அந்த நாட்டின் என்னை வளத்தை கைபற்ற தான் என்பது தெளிவாக தெரிகின்றது. இந்தியா இறக்குமதி செய்யும் பெட்ரோலில் அருபது சதவிகிதம் ஈரானில் இருந்துதான் இறக்குமதி செய்கின்றது. அமெரிக்கா ஈரான் மீது போர் தொடுக்குமேயானால் இந்தியாவை பெட்ரோல் தட்டுபாடு ஏற்படும் அதானால் நமது மக்கள் நேரடியாகவே பாதிக்க படுவார்கள். இப்படி அனியாயம் செய்யும் இந்த அமெரிக்க புனைக்கு மனி கட்டுபவர் யார்?

இந்த நேரத்தில் நாம் மற்றொரு விசையத்தையும் உற்று நோக்க வேண்டி உள்ளது. ஈரான் அணு சோதனை நடத்திய இந்த நேரத்தில் அனைத்து நாடுகளின் பார்வையும் ஈரான் பக்கம் திரும்பி உள்ளது என்பதை அனைவருக்கும் தெரியும் அது ஈரானுக்கும் தெரியாமல் இல்லை. இந்த சூழலில் இருக்கும் எந்த ஒரு நாடும் மற்ற நாட்டை பகைத்து கொள்ள விரும்பாது. அப்படி இருக்கு பொழுது ஈரான் எப்படி இஸ்ரேல் தூதரக அதிகாரிகள் மேல் இந்தியாவிலும் தாய்லாந்திலும் தாக்குதல் நடத்துவார்கள். இந்தியா அரசு ஈரான் மீது போர்தொடுக்க ஆதரவு தரமாட்டார்கள் என்பதை அறிந்த அமேரிக்கா மற்றும் இஸ்ரேல் உளவுத்துறையின் வேலைதான் இந்த இஸ்ரேல் அதிகாரிகள் மேல் தாக்குதலுக்கு காரணமாக இருக்க வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது.

ஆனால் வழக்கம் போல இந்திய ஊடகங்கள் "இஸ்ரேல் தூதரக அதிகாரிகள் மேல் ஈரான் தீவிர வாதிகள் தாக்குதல்" என்று செய்தி வெளியிடுகின்றன. உலக அலவில் இன்று நடத்த படும் பெரும்பாலான தாக்குதலுக்கு பின்னால் இப்படிப்பட்ட உளவுத்துறையின் பங்கு இல்லாமல் இல்லை, ஆனால் ஒவொரு சம்பவத்திற்கும் ஏதாவது ஒரு அப்பாவி மேல் வழக்கை போட்டு அவர்களின் வாழ்கையை வீணாக்கும் நடவடிக் கைகளில் அனைத்து நாட்டு காவல் துறை ஈடுபடுவதையும் மறுக்க முடியாது. இப்பொழுது சொல்லுங்க யார் திவிரவாதி அப்பாவி மக்களை அனியாயமாக கொன்று குவிக்கும் அமெரிக்காவா அல்லது இழந்த உரிமயை மீட்க்க போராடும் அப்பாவி மக்களா?


நன்றி:இனி ஒரு விதி செய்வோம்

உடல் எடையைப் பராமரிக்க உதவும் தக்காளி..!


தக்காளியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும் என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

தக்காளியில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. அதனை தொடர்ந்து சாப்பிடுவது இதயத்துக்கு நல்லது. உடலில் கொழுப்பு சேராமல் பாதுகாக்க உதவும் என்பதெல்லாம் ஏற்கெனவே அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

தற்போது தக்காளியை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் எடை அதிகரிக்காமல் ஒரே அளவில் பராமரிக்க முடியும் என்று பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பசியைத் துண்டும் ஹார்மோன்களின் செயல்பாடுகளை தக்காளி கட்டுப்படுத்துகிறது. இதனால் அதிக அளவு சாப்பிடுவது தடுக்கப்பட்டு உடல் எடை அதிகரிக்காமல் கட்டுக்குள் இருக்கிறது.

சராசரி எடை கொண்ட 18 வயது முதல் 35 வயதுக்குள்பட்ட பெண்கள் இதற்கான ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களில் ஒரு பிரிவினருக்கு சான்ட்விச்களுடன் தக்காளி வழங்கப்பட்டது. மற்றொரு பிரிவினருக்கு சான்டவிச்சுடன் கேரட் வழங்கப்பட்டது. இதில் தக்காளி சாப்பிட்டு வந்தவர்கள் குறைவாகவே உணவு சாப்பிட்டனர்.

இது குறித்து ஆய்வாளர் டாக்டர் ஜூலி லவ்குரோவ் கூறுகையில், “இது சிறிய அளவில் நடத்தப்பட்ட ஆய்வுதான் என்றாலும் முடிவு திருப்திகரமானதாக உள்ளது. தக்காளி சாப்பிடுவது பசி உணர்வைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறது என்பது முதல்கட்டமாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து ஆய்வு நடத்தவுள்ளோம்’ என்றார்.
நன்றி:இனி ஒரு விதி செய்வோம்

பெப்சி, கோககோலா-அப்படி என்ன நச்சு பொருள் கலந்துள்ளது?

பெப்சி, கோககோலா-அப்படி என்ன நச்சு பொருள் கலந்துள்ளது? 

பெப்சி, கோககோலா உள்ளிட்ட பானங்களில் நச்சுப்படிவங்கள் உள்ளன என்ற குற்றச்சாட்டு பரவலாக ஆரம்பம் முதல் இருந்து வருகிறது. இன்றைய நுகர்வுக் கலாசாரத்தில் இந்தக் குளிர்பானங்கள் சமூக அந்தஸ்த்தின் குறியீடாகவும் மாற்றியமைக்கப்பட்டு புதிய கலாசாரமயமாக்கத்துக்கும் வித்திட்டுள்ளது.

ஆனால் இந்தப் பானங்களால் ஏற்படக் கூடிய விளைவுகளை சுட்டிக்காட்டும் போது பலரும் ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டனர்.
பெப்சி, கோககோலா மட்டுமல்ல தம்ஸ் ஆப், செவன் அப், மிரிண்டா, ·பேண்டா, லிம்கா என இந்தப் பானங்களின் வரிசை மிகவும் நீளமானது.

இந்த நீண்ட வரிசையைப் போலவே இவற்றால் ஏற்படக்கூடிய தீங்குகளும் நீளமானது. ஆனால் இந்தப் பாதிப்புகள் நமக்குத் தெரிவதில்லை. அந்தளவிற்கு இவை மீதான தாக்கம் ஆர்வம் திட்டமிட்டு பரப்பப்பட்டுள்ளது. குறிப்பாக தொடர்பூடகங்கள் இந்தப் பானங்களின் நுகர்வுக் கலாசாரமயமாக்கலின் முதன்மையான இடம் வகிக்கின்றது.

செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட இரசாயன அமிலங்களே இம்மென்பானங்களில் புதுத்துணர்வு தரும் சுவையூட்டிகளாக சேர்க்கப்படுகின்றன. இனிப்புச் சுவையை நிலைப்படுத்துவதிலும் இந்த அமிலங்கள் பயன்படுகின்றன.

பொதுவாக மென்பானங்களில் சிட்ரிக் அமிலம் பாஸ்பரிக் அமிலம் சில சமயங்களில் மாலிக் அல்லது தாத்தாளிக் அமிலங்கள்கூட சேர்க்கப்படுகின்றன. இந்த செயற்கை அமிலங்கள் எல்லாமே உடலைப் பாதிக்கக்கூடிய தன்மை வாய்ந்தவை.

இந்த அமிலங்கள் பற்களில் பாதுகாப்புப் பூச்சான எனாமலை அரிக்கக்கூடிய தன்மையைக் கொண்டிருக்கின்றன. மென்பானங்கள் குடித்து ஒரு மணிநேரம் வரை இந்த அரிப்பு நீடிக்கலாம். (குடித்தவுடன் பற்கள் கூசுகின்ற சங்கதி இதுதான்) மெனபானங்களின் மூலம் உடலில் சேரும் பாஸ்பரிக் அமிலம் கடைசியில் சிறுநீருடன் வெளியேறும் போது தனியாக வெளியேறுவதில்லை.

எலும்புகளிலும் பற்களிலும் இருக்கும் கால்சியத்தையும் பெயர்த்துத் தன்னுடன் சேர்த்துக் கொண்டு போய்விடுகிறது. கால்சியம் போதாத நிலையில் எலும்புகள் பலம்குன்றி கடைசியில் முறியும் நிலைக்கு போய்விடுகின்றன.

மென்பானங்கள் எல்லாவற்றிலுமே சர்க்கரை சேர்க்கப்படுகின்றன. உதாரணத்துக்கு 325 மில்லிலிட்டர் பெப்சியில் ஐந்தரை தேக்கரண்டி சர்க்கரை சேர்க்கப்படுகிறது. உலக சுகாதார நிறுவனம் (WHO) நாள் ஒன்றுக்கு ஒருவர் உட்கொள்ள வேண்டிய சர்க்கரையில் அளவு 8 தொடங்கி 11 தேக்கரண்டி அளவு என நிர்ணயம் செய்து வைத்திருக்கிறது.

ஒரு நாளில் நாம் அருந்தும் பால், தேநீர் மூலம் நமது உடலில் சேரும் சர்க்கரையின் அளவுடன் மென்பானங்களோடு சேர்ந்து வரும் சர்க்கரையின் அளவையும் கணக்கிட்டால் நிர்ணயித்த அளவைவிட நாம் சாப்பிடும் சர்க்கரையின் அளவு பன்மடங்கு அதிகம் என்பது தெரியவரும்.

சர்க்கரை அதிக அளவு உடலில் சேருவதை, சர்க்கரை தானே என்று இனிப்பான செய்தியாக எடுத்துக் கொள்ள முடியாது. ஊட்டச்சத்து ஆய்வாளரான விஞ்ஞானி மேஜான் யாட்கின் சர்க்கரையை 'வெள்ளை நச்சு'' என்று வர்ணித்து இருக்கிறார்.

சர்க்கரையானது பற்களில் பாக்டீரியா கிருமிகள் பெருக வாய்ப்பு அளிப்பதுடன் இதயநோய், தோல்வியாதி போன்றவற்றையும் ஏற்படுத்தும் என நிரூபிக்கப்பட்டுள்ளது.

இயற்கைச் சர்க்கரையின் சேதாரம் இவ்வளவு என்றால் சிலவகை பானங்களில் சேர்க்கப்படும் செயற்கை சர்க்கரைகளும் தம்பங்குக்கு தொல்லைகளைத் தருகின்றன.

குறைந்த கலோரியைக் கொண்ட டயட் (diet) குளிர்பானங்களில் செயற்கை இனிப்பான அஸ்பாடேம் (Aspaetame) எசல்பேம் (aceslfame) சாக்ரின் (Saccharine) போன்றவை பயன்படுத்தப்படுகின்றன.

மிகப் பரவலாக பயன்படுத்தப்படும் அஸ்பாடேம் சர்க்கரையைவிட 200 மடங்கு அதிகான இனிப்பைக் கொண்டதாகும். இவை தலைவலி, ஞாபகமறதி, வயிற்றுபோக்கு, பார்வை மங்கல், குருடு போன்றவற்றை ஏற்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வாஷிங்டன் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜான் ஒன்லி மிருகங்களின் மீது நடத்திய ஆய்வுகளில் இருந்து அஸ்பாடேம் மூளைப் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புகளை கொண்டிருப்பதாகக் குறிப்பிடுகிறார்.

காபி, தேநீர் போன்றவற்றில் கா·பின் cafein எனும் வேதிப்பொருள் இருப்பது பலரும் அறிந்த ஒன்று. ஆனால் கோககோலா பானத்தின் சுவையை அதிகரிப்பதற்காக கா·பின் பயன்படுத்துவது அதிகம். இது வெளியில் தெரியாத விஷயம். கா·பின் மத்திய நரம்புகளை மிகையாகத் தூண்டிவிடுகிறது. அதிகமான கா·பின் தூக்கமின்மை எரிச்சல், இதயத்துடிப்பு அதிகரிப்பு போன்றவற்றுக்கு வழிகோலிவிடுகிறது.

மென்பானங்களில் சேர்க்கப்பட்டிருக்கும் நிறமூட்டிகள் எவை என்பது பற்றி பாட்டில்களில் குறிப்பிடப்படுவதில்லை. ஆனால் பெரும்பாலான சாயங்கள் புற்றுநோய்க்கு காரணமாய் உள்ளன என்பதே உண்மை. தார்ட்ராசின் எனப்படும் ஆரஞ்சு நிற சாயம் தோலில் அரிப்பு எரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்துவதோடு புற்றுநோய்க்கும் காரணமாகத் திகழ்வதாகக் கருதி இச்சாயத்துக்கு நார்வேயில் தடை செய்யப்பட்டிருக்கிறது.

கார்மேசின் (carmoisine) எனப்படும் சிவப்பு வர்ணம் உணவை நஞ்சடையச் செய்வதுடன் புற்றுநோயையும் ஏற்படுத்தலாம் என்று அமெரிக்காவிலும் கனடாவிலும் தடை செய்யப்பட்டிருக்கிறது.

சிங்கப்பூர் தனது பத்து ஆண்டு சுகாதார இயக்கத்தின் ஓர் அங்கமாக கோககோலா, பெப்சி போன்றவற்றுடன் சர்க்கரை அதிகம் கொண்ட பல குளிர்பானங்களை 1972ல் இருந்து கல்வி நிறுவனங்களில் விற்பதற்கு தடை செய்திருக்கிறது.

சமீபத்தில்கூட பிரான்சில் கோககோலா குடித்த பலருக்கு காய்ச்சல், வாந்தி, தலைவலி ஏற்பட்டதால் பிரான்ஸ் தனது நாட்டில் கோககோலவின் விற்பனைக்கு தடை விதித்துள்ளது.

ஆக இந்திய அளவில் கோலா, பெப்சி போன்ற பானங்களுக்கு தடை விதிக்க எடுக்கும் முயற்சி ஒன்றும் புதுமை அல்ல. இவ்வளவு ஆபத்துகளையும் தன்னில் கரைத்துக் கொண்டு வரும் மென்பானங்களை இவ்வளவுநாள் அனுமதித்திருப்பது மோசமானது.

இந்த மென்பானங்கள் மீது தடைவிதித்தல் என்பதை பகிரங்கவிவாதப் பொருளாக்க வேண்டும். இவற்றால் விளையும் கேடுகள் பற்றி அறிவுபூர்வமான விழிப்புணர்வு வெகுசன மட்டத்தில் உருவாக்கப்பட வேண்டும்.

மேலும் உள்ளூர் வளங்களைக் கொண்டு தயாரிக்கும் உள்ளூர் மென்பானங்களில் உற்பத்தியை பெருக்க கொள்கை ரீதியான முடிவுக்கு அரசு முன்வர வேண்டும்.


நன்றி:இனி ஒரு விதி செய்வோம்

Saturday, March 9, 2013

உண்ணாவிரத மாணவர்கள்


கோரிக்கை நிறைவேறும் வரை போராடுவோம் - உண்ணாவிரத மாணவர்கள் .
09 03 2013


தமிழ் ஈழ மக்கள் விடுதலைக்காக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். இந்திய அரசு குழப்பமற்ற ஒரு தெளிவான தீர்மானத்தை ஐ.நா.வில் முன்மொழிய வேண்டும். சர்வதேச விசாரணைக் குழுவில் ஆசிய நாடுகள் இடம்பெறக் கூடாது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி திலிபன், பிரிட்டோ, தமிழ்மாறன் உள்ளிட்ட மாணவர்கள் லயோலா கல்லூரி அருகில் நேற்றைய தினம் நுங்கம்பாக்கம் பகுதியில் அவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்தனர். உண்ணாவிரதம் இருந்தனர்.

பிற கல்லூரி மாணவர்கள், அவர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்து வந்த நிலையில், நேற்று மாலை காவல்துறை இலங்கை துதரகம் அருகைமையில் உண்ணாவிரதம் நடப்பதால் அசம்பாவிதங்கள் ஏற்படும் என்ற அச்சத்தில் அங்கு தொடர்ந்து நடத்த அனுமதி மறுத்த நிலையில் தங்களது போராட்டத்தை கோயம்பேட்டுக்கு மாற்றினர்.


இரண்டாவது நாளான இன்று உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்கள் பேசுகையில் எமது கேரிக்கை நிறைவேற்றும் வரை தாம் போரடபோவதகவும் அப்படி போராடும் பச்சத்தில் தாம் இறந்தால் தங்களது உடலை மாணவர்கள் கையில் எடுத்து கோரிக்கை நிறைவேறும் வரை போரடவேண்டும் என்று கூறியுள்ளனர் .

இவ் ஆர்பட்டதிற்கு பழ நெடுமாறன் ,ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மேலும் பல சமுக ஆவலர்கள் , மாணவர்கள் , உணர்வாளர்கள் , வணிகர் சங்க நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்து கொண்டு உள்ளனர்.
லயாலோ கல்லூரி மாணவர்கள் நடத்தும்
பட்டினி போராட்டம் அரசியலுக்காகவோ ,
பணத்திற்காகவோ இல்லை .. அவர்களிடம் இருக்கும்
தமிழின உணர்வில்
கொஞ்சமாவது வேண்டாமா நமக்கு ..
அவர்களுக்கு இணையத்தின் மூலமாவது உங்கள்
ஆதரவை அளியுங்கள் .. எகிப்தில், துனுசியாவில்
இனையதின் மூலமாக ஒரு மாற்றதை ஏற்படுத்தும்
போது நம்மால் ஏற்படுத்த முடியாதா..?
இன்னும் தூங்கினால் நம் மீனவர்கள் செத்துக்
கொண்டும் , ஈழ தமிழர்கள்
சித்ரவதைகளை அனுபவித்துகொண்டும் தான்
இருப்பார்கள் .. 

Friday, March 8, 2013

வீரமங்கை வேலு நாச்சியார்

உலக மகளிர் தினம் நல்வாழ்த்துகள்...!

வீரமங்கை வேலு நாச்சியார்

வீரமங்கை வேலு நாச்சியார் அதிகாலையில் ஆதவனுக்கு முன் எழுந்து விடுவார். மறவர் படைக்கு கொடுக்கிற போர்ப் பயிற்சிகளைப் பார்வையிடுவார். தான் ஏற்படுத்திய உடையாள் படை என்ற பெண்களின் படைக்குப் போர்ப் பயிற்சி அளிப்பார். அவர்கள் வளரியை எப்படி லாவகமாக வீசுவது என்பது பற்றியும் விளக்கமாக விவரிப்பார். அச்சீமையில் உள்ள புரட்சியாளர்களுக்கு ஓலை அனுப்புவார். நேரில் வந்து பேசுகிற கிளர்ச்சி தலைவர்களுடன் பகைவர் படையின் பலம் பலவீனம் குறித்து கேட்டு அறிந்துகொள்வார். விடுதலையை விரும்பிய வீரர்கள், உறவுகளை இழந்தவர்கள் அனைவரும் வேலு நாச்சியாரின் பக்கம் வந்து சேர்ந்தனர். விடுதலைப் படைகளின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் அதிகமாக வளர்ந்தது.

வேலு நாச்சியார் வெள்ளையர்களை வீழ்ந்த 30000 வீர நங்கையர்களாகிய பெண்கள் படையைத் திரட்டி அதனை இரு அணிகளாக வகுத்து ஒன்று வீரப்படை, மற்றொன்று சோரப்படை என்று பெயர் சூட்டி, அப்படைகளில் ஒரு அணிக்குத் தாமே தலைமை தாங்கி ஆங்கிலப் பரங்கியர் படைகளோடு ஆவேசத்தோடு போர்புரிந்தார்.

வேலு நாச்சியார் தலைமையில் பெண்கள் படை அரண்மனைக்குள் நுழைந்து தளபதி பான்ஜோர் படையைச் சந்திக்க முடிவு செய்தனர். விஜயதசமி, நவராத்திரியை முன்னிட்டு சிவகங்கை அரண்மனையில் உள்ள இராஜ ராஜேஸ்வரியை வணங்க முன்வாயில் திறந்து விடப்பட்டது. வேலு நாச்சியாரும் அவரது பெண்கள் படையும் மாறுவேடத்தில் பொது மக்களோடு கலந்து கோவிலுக்குள் புகுந்தனர். திட்டமிட்டபடி தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குயிலி என்ற பெண் தம் உடம்பெல்லாம் நெய்யூற்றி தீ வைத்தபடி வெள்ளையரின் ஆயுதக் கிடங்கில் குதித்தாள். குயிலியோடு கும்பினியரின் அனைத்து ஆயுதங்களும் எரிந்து சாம்பலாயின. விடுதலைப் படையை எதிர்கொள்ள இயலாமல் வெள்ளையர் படை விழி பிதுங்கியது. இதற்கிடையில் பான்ஜோரை வேலு நாச்சியார் நேர்கொண்டார். அவனது துப்பாக்கிக் குண்டிலிருந்து தப்பத் தூணில் மறைத்து வேலு நாச்சியார் வித்தை காட்டினார். குண்டுகள் தீர்ந்ததும் பான்ஜோரும் வாள் ஏந்தினாள். இதற்காகவே காத்திருந்தது போல் வேலு நாச்சியார் ஒரு சில விநாடிகளில் பான்ஜோரை மண்டியிடச் செய்தார். தனது கணவனைக் கொன்றவரைத் தோற்கடித்தபின் அவரின் உயிரை பறிக்க விரும்பவில்லை. இந்தச் சாகசங்களை அவர் செய்தபோது வயது ஐம்பது. இவ்வளவு வீரமிக்க பெண் முற்காலத்தில் பிறந்ததும் இல்லை ...இனி பிறக்க போவதும் இல்லை ...

மாதர் குல மணிவிளக்குகளே உங்கள் பொற்பாதங்கள் பணிகிறேன்.அனைத்து மகளிருக்கும் உலக மகளிர்தின நல்வாழ்த்துகள்



thanks to iyappan gp
புகைப்படம்: உலக மகளிர் தினம் நல்வாழ்த்துகள்...!  வீரமங்கை வேலு நாச்சியார்  வீரமங்கை வேலு நாச்சியார் அதிகாலையில் ஆதவனுக்கு முன் எழுந்து விடுவார். மறவர் படைக்கு கொடுக்கிற போர்ப் பயிற்சிகளைப் பார்வையிடுவார். தான் ஏற்படுத்திய உடையாள் படை என்ற பெண்களின் படைக்குப் போர்ப் பயிற்சி அளிப்பார். அவர்கள் வளரியை எப்படி லாவகமாக வீசுவது என்பது பற்றியும் விளக்கமாக விவரிப்பார். அச்சீமையில் உள்ள புரட்சியாளர்களுக்கு ஓலை அனுப்புவார். நேரில் வந்து பேசுகிற கிளர்ச்சி தலைவர்களுடன் பகைவர் படையின் பலம் பலவீனம் குறித்து கேட்டு அறிந்துகொள்வார். விடுதலையை விரும்பிய வீரர்கள், உறவுகளை இழந்தவர்கள் அனைவரும் வேலு நாச்சியாரின் பக்கம் வந்து சேர்ந்தனர். விடுதலைப் படைகளின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் அதிகமாக வளர்ந்தது.  வேலு நாச்சியார் வெள்ளையர்களை வீழ்ந்த 30000 வீர நங்கையர்களாகிய பெண்கள் படையைத் திரட்டி அதனை இரு அணிகளாக வகுத்து ஒன்று வீரப்படை, மற்றொன்று சோரப்படை என்று பெயர் சூட்டி, அப்படைகளில் ஒரு அணிக்குத் தாமே தலைமை தாங்கி ஆங்கிலப் பரங்கியர் படைகளோடு ஆவேசத்தோடு போர்புரிந்தார்.  வேலு நாச்சியார் தலைமையில் பெண்கள் படை அரண்மனைக்குள் நுழைந்து தளபதி பான்ஜோர் படையைச் சந்திக்க முடிவு செய்தனர். விஜயதசமி, நவராத்திரியை முன்னிட்டு சிவகங்கை அரண்மனையில் உள்ள இராஜ ராஜேஸ்வரியை வணங்க முன்வாயில் திறந்து விடப்பட்டது. வேலு நாச்சியாரும் அவரது பெண்கள் படையும் மாறுவேடத்தில் பொது மக்களோடு கலந்து கோவிலுக்குள் புகுந்தனர். திட்டமிட்டபடி தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குயிலி என்ற பெண் தம் உடம்பெல்லாம் நெய்யூற்றி தீ வைத்தபடி வெள்ளையரின் ஆயுதக் கிடங்கில் குதித்தாள். குயிலியோடு கும்பினியரின் அனைத்து ஆயுதங்களும் எரிந்து சாம்பலாயின. விடுதலைப் படையை எதிர்கொள்ள இயலாமல் வெள்ளையர் படை விழி பிதுங்கியது. இதற்கிடையில் பான்ஜோரை வேலு நாச்சியார் நேர்கொண்டார். அவனது துப்பாக்கிக் குண்டிலிருந்து தப்பத் தூணில் மறைத்து வேலு நாச்சியார் வித்தை காட்டினார். குண்டுகள் தீர்ந்ததும் பான்ஜோரும் வாள் ஏந்தினாள். இதற்காகவே காத்திருந்தது போல் வேலு நாச்சியார் ஒரு சில விநாடிகளில் பான்ஜோரை மண்டியிடச் செய்தார். தனது கணவனைக் கொன்றவரைத் தோற்கடித்தபின் அவரின் உயிரை பறிக்க விரும்பவில்லை. இந்தச் சாகசங்களை அவர் செய்தபோது வயது ஐம்பது. இவ்வளவு வீரமிக்க பெண் முற்காலத்தில் பிறந்ததும் இல்லை ...இனி பிறக்க போவதும் இல்லை ...   மாதர் குல மணிவிளக்குகளே உங்கள் பொற்பாதங்கள் பணிகிறேன்.அனைத்து மகளிருக்கும் உலக மகளிர்தின நல்வாழ்த்துகள்

எண்ணத்தில் நீ வெறும் மலடெ

இனிப்பாக இருந்தது என் ஜாதியை எனக்குள் எண்ணிப் பார்த்துப் பெருமைப் படும்போது !

இறுமாப்பாய் இருந்தது என் ஜாதிப் பெருமையை என் தந்தையோடு பகிர்ந்து கொள்ளும்போது !

இதமாக இருந்தது என் ஜாதிக்காரர்கள் எங்கள் ஊரில் இவ்வளவு நெருக்கமாக என் உறவாய் இருப்பதைப் பார்க்கும்போது !

இன்னும் கொஞ்சம் கர்வமாய்க் கூட இருந்தது இந்த மாநிலத்தின் மக்கள் தொகையில் என் ஜாதிக்காரர்கள் இத்தனை சதவிகிதம் இருப்பதாய்ச் சொல்லும் புள்ளி விவரங்களைத் தெரிந்து கொண்ட போது !

சகோதரனுக்கு விபத்தொன்று நடந்த பின்னே வேண்டிய இரத்தம் எவனோ இன்னொரு ஜாதிக்காரன் தந்த பிறகுதான் எனக்குள் முகிழ்த்தது அட மானிடா! எண்ணத்தில் நீ வெறும் மலடென்று !

- Divya Dharshini
புகைப்படம்: இனிப்பாக இருந்தது என் ஜாதியை எனக்குள் எண்ணிப் பார்த்துப் பெருமைப் படும்போது !  இறுமாப்பாய் இருந்தது என் ஜாதிப் பெருமையை என் தந்தையோடு பகிர்ந்து கொள்ளும்போது !  இதமாக இருந்தது என் ஜாதிக்காரர்கள் எங்கள் ஊரில் இவ்வளவு நெருக்கமாக என் உறவாய் இருப்பதைப் பார்க்கும்போது !  இன்னும் கொஞ்சம் கர்வமாய்க் கூட இருந்தது இந்த மாநிலத்தின் மக்கள் தொகையில் என் ஜாதிக்காரர்கள் இத்தனை சதவிகிதம் இருப்பதாய்ச் சொல்லும் புள்ளி விவரங்களைத் தெரிந்து கொண்ட போது !  சகோதரனுக்கு விபத்தொன்று நடந்த பின்னே வேண்டிய இரத்தம் எவனோ இன்னொரு ஜாதிக்காரன் தந்த பிறகுதான் எனக்குள் முகிழ்த்தது அட மானிடா! எண்ணத்தில் நீ வெறும் மலடென்று !  - Divya Dharshini

திருமணம் என்பது ஆண்களின் வாழ்வில் ஒரு நிகழ்வு, ஆனால் ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் அது மாற்றம்....

எல்லா பெற்றோருக்கும் தங்கள் பெண்ணை ஒரு நல்ல இடத்தில் கட்டி கொடுக்க வேண்டும் என்ற கனவு நியாயமான ஒன்று தான்.. அவள் பெற்றோரும் அப்படித் தான்... மாப்பிள்ளைப் பார்க்க தொடங்கினர் , படித்த மாப்பிளை , நல்ல வேலையில் கை நிறைய சம்பாதிக்கும் ஒருவன், நல்ல குடும்பம், இருவருக்கும் இருவரையும் பிடித்தும் போனது, உடனே நிச்சயம் செய்துவிட்டனர் , தினமும் அழை பேசியில் இருவரும் தங்களைப் பற்றி பேச தொடங்கினர், இருவருக்கும் ஏற தாழ ஒரே மனப்பான்மை தான், இருவருக்கும் பொருந்தி போனது, திருமண நாள் நெருங்க நெருங்க வீட்டில் ஒரே பதட்டம், வேலைகள் தலைக்கு மேல் கிடந்தது, இருவர் வீட்டிலும் வேலைகள் துரிதமாக நடந்தேறியது.. நாளை திருமணம், அவள் லேசாக அவள் வீட்டை சுற்றிப் பார்த்தாள், தினமும் அவருடன் பேசியதில் தான் இந்த வீட்டை விட்டு செல்ல போகிறோம் என்று தெரியவில்லை, ஆனால் அன்று ஏதோ ஒன்றை இழக்க போகிறோம் என்று அவள் மனம் பரிதவித்தது. தாயையும், தந்தையையும் பார்த்தாள் எல்லோரும் வேலையில் இருந்தனர், அவள் வீட்டை ஒரு முறை சுற்றி வந்தாள், விரித்த கண்களோடு வீட்டை பார்த்தாள், கண்கள் சுருங்கிய பின்னர் ஓரத்தில் நீர் துளி சொட்டியது.. தங்கையின் புது துணி பரவசத்தில் அக்கா என்று ஓடி வந்தாள்.. அவளை பார்த்ததும் என்ன ஆச்சு அக்கா என்றாள், பூ வாங்கினால் கூட சமமாய் வெட்ட சொல்லி சண்டை போடும் அக்கா , இனி நான் யாருடன் சண்டை போடுவேன், இந்த சின்ன சின்ன மகிழ்ச்சிகளை விட்டுக் கொடுத்து விட்டு நான் செல்ல போகிறேனே என்று எண்ணினாள், , அடுப்படியில் பால் கொதித்து கொண்டிருந்தது , ஓடி சென்று அடுப்பை அனைத்து அம்மா பால் வெச்சிட்டு எங்க போனே என்று திட்டினால், அவளை பெற்றவள், அவளை வளர்த்தவள் என்றாலும் , அம்மா வை அடிக்கடி திட்டி விடுவதும், பின் கட்டி அணைப்பதும் இனி கிடைக்குமா?

அப்பா யாருடனோ தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார், அவர் பக்கத்தில் சென்று அமர்ந்தாள், பேசிக் கொண்டே அப்பா இவளைப் பார்த்தார், அம்மா வை கொஞ்சம் கூப்பிடுமா என்று சொல்லி விட்டு மறுபடியும் பேச தொடங்கினர், இவள் எச்சிலையும் சோகத்தையும் தொண்டையில் விழுங்கி விட்டு எழுந்து அம்மா வை அழைத்து விட்டு, வீட்டின் வெளியில் உள்ள மாடிப்படியில் உட்கார்ந்தாள், எங்கிருந்தோ, அடியே உள்ள போ, கருத்துர போற நாளைக்கு கல்யாணத்த வெச்சிக்கிட்டு இங்க வந்து உட்காரா பாரு என்று எப்பொழுதும் எதையாவது சொல்லி கொண்டிருக்கும் பாட்டி, எரிச்சலுடன் பாட்டியிடம் எப்பொழுதும் பேசும் அவள் அன்று பாட்டி சொன்னதை கேட்காமல் பாட்டியை முறைத்துப் பார்த்தாள், முகம் அப்படியே அழுவது போல மாறியது, பாட்டி உடனே என்னடி என்ன ஆச்சு என்று பதட்டத்துடன் கேட்டாள், அழுகை அருவிப் போல் பொங்கியது உள்ளே ஓடி சென்று விரக்தியுடன் அம்மா அப்பா என்று கத்தினால் எல்லோரும் ஏதோ என்று பயந்துக்கொண்டு ஓடி வந்தனர், உடனே, அம்மா நான் போகமாட்டேன், இங்கேயே இருந்துடுறேன் , உங்களை விட்டு நான் எப்படி செல்வேன், அங்க எப்டி இருக்குமோ, எனக்கு பயமா இருக்கு, நான் போகலை என்று மெல்லிதாய் அழுதாள், உடனே அப்பாவின் மனம் அழுதது, அம்மா சமாதனம் சொன்னாள், அப்பாவுடன் அவ்வளவு நெருக்கம் இல்லாமல் இருந்தாலும் அப்பாவிற்கும் பெண்ணிற்கும் உள்ள அந்த பாசம் வார்த்தையில் வருணிக்க முடியாதது , தங்கை குலுங்கி குலுங்கி அழுதாள், அக்கா அழாதே கா மாமா உன்ன நல்லா பார்த்துபாறு கா என்று வெகுளி பேச்சில் சமாதானம் செய்தாள், அன்றிரவு அவளுக்கு பிடித்த அத்தனையும் சமைத்தாள் அம்மா, ஆனால் அவள் புண்ப்பட்டு போயிருந்தாள்... நாளை திருமணம்... போகும் இடம் சொர்கமோ, இல்லையோ என்றெல்லாம் தெரியாது .. ஆனால் அவள் வாழ்ந்த ஒரு சொர்கத்தை விட்டு மட்டும் அவள் செல்ல போகிறாள். திருமணம் என்பது ஆண்களின் வாழ்வில் ஒரு நிகழ்வு, ஆனால் ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் அது மாற்றம்.... அவள் வாழ்ந்த வீட்டிலிருந்து அவளை வேரோடு பிடிங்கு எடுத்து மற்றொரு இடத்தில் நட்டு வைக்கும் விழா தான் திருமணம் , துளிர்ந்த பெண்களும் உள்ளனர், பட்டுப்போன பெண்களும் உள்ளனர் ....


(மகளிர் அனைவருக்கும் இனிய மகளிர்தின வாழ்த்துக்கள்....)



by: Harini Nagaraj
 - Nithya Srinivasan Mohan Thiya

Thursday, February 28, 2013

தமிழன் சாதித்த கட்டிடக்கலை.!!!


தமிழன் சாதித்த கட்டிடக்கலை.!!!

தமிழ்ச்சித்தர்களின் என்றுமழியாக் கட்டிடக்கலை..!

தமிழ்ச்சித்தர்களின் கட்டடக்கலைக்கே பெருமை தேடித்தரும் கலைக் கருவூலமாகவும், இராச ராச சோழ மன்னனின் ஒப்பற்ற ஆட்சியின் நினைவுச் சின்னமாகவும் இன்றளவும் இக்கோயில் விளங்கி வருகிறது.

#தஞ்சைப் பெருங்கோவில்

பழந்தமிழர்களின் கட்டடக்கலை நிபுணத்துவத்தை உலகுக்குப் பறை சாற்றி, ஆயிரமாயிரம் வருடங்களுக்கு பராமரிப்பின்றியே நிலைக்கக்கூடிய கோவில்.

சித்தபெருமான் கருவூரார் அவர்களால் வடிவமைக்கப்பட்டு, நெறிப்படுத்தப்பட மன்னன் இராச இராச சோழனால் கட்டப்பட்ட மாபெருங் கோவில்.

காணொளி (video doumentary by BBC)
http://video.google.com/videoplay?docid=-5096103596865842301
watch the full video.

or @ youTUbe
http://www.youtube.com/watch?v=SnANjdReAlY

200 தாஜ்மகால்களுக்கு ஈடான நில, கலை, கட்டட நிபுணத்துவம் கொண்ட கோவில். இருந்தும் இது உலக அதிசயங்களில் இடம்பெறாதது கேள்விக்குரியது.
தமிழன் சாதித்த கட்டிடக்கலை.!!!

தமிழ்ச்சித்தர்களின் என்றுமழியாக் கட்டிடக்கலை..!

தமிழ்ச்சித்தர்களின் கட்டடக்கலைக்கே பெருமை தேடித்தரும் கலைக் கருவூலமாகவும், இராச ராச சோழ மன்னனின் ஒப்பற்ற ஆட்சியின் நினைவுச் சின்னமாகவும் இன்றளவும் இக்கோயில் விளங்கி வருகிறது.

#தஞ்சைப் பெருங்கோவில்

பழந்தமிழர்களின் கட்டடக்கலை நிபுணத்துவத்தை உலகுக்குப் பறை சாற்றி, ஆயிரமாயிரம் வருடங்களுக்கு பராமரிப்பின்றியே நிலைக்கக்கூடிய கோவில்.

சித்தபெருமான் கருவூரார் அவர்களால் வடிவமைக்கப்பட்டு, நெறிப்படுத்தப்பட மன்னன் இராச இராச சோழனால் கட்டப்பட்ட மாபெருங் கோவில்.

காணொளி (video doumentary by BBC)
http://video.google.com/videoplay?docid=-5096103596865842301
watch the full video.

or @ youTUbe
http://www.youtube.com/watch?v=SnANjdReAlY

200 தாஜ்மகால்களுக்கு ஈடான நில, கலை, கட்டட நிபுணத்துவம் கொண்ட கோவில். இருந்தும் இது உலக அதிசயங்களில் இடம்பெறாதது கேள்விக்குரியது.

Friday, August 3, 2012

Radio Hello 89.5 FM ( UAE ) இப்பொழுது எண் வலைப்பக்கத்தில்


அனைத்து அன்பின் உறவுகளுக்கும் வணக்கம் நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் அனைவரையும் இன்று ஒரு தகவலின் பதிவில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி . சரி நண்பர்களே இப்பொழுது நாம் விசயத்திற்கு வருவோம் . முதலில் அமீரகத்தில் இப்பொழுது நிகழ்ந்திருக்கும் சில புதுமையானத் தகவல்களை பற்றி நாம் அறிந்துகொள்ளலாம் .

அமீரகத்தில் என்னதான் வெயிலின் கொடுமை அதிகம் இருந்தாலும் இந்த Radio Hello 89.5 FM DUBAI வானொலி அதுதாங்க ரேடியோ வருகையினால் இப்பொழுது ஒவ்வொருவரின் களைப்பிலும் ஒரு புத்துணர்ச்சியை ஏற்ப்படுத்தி இருக்கிறது என்றால் பார்த்துகொள்ளுங்கள் .

சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் கொளுத்தும் வெயிலிலும் அமீரகத்தில் ஒரு அடைமழை இந்த Radio Hello 89.5 FM ( UAE ) வானொலி என்பது உண்மை ,. இதுவரை அறியாதவர்கள் இப்பொழுதேக் கேட்டு மகிழுங்கள் 





 இப்பொழுது எண் வலைப்பக்கத்தில் 



http://www.facebook.com/radio895fm?sk=wall

https://www.facebook.com/rj.suresh.7?ref=ts

http://scrawls.wordpress.com/tag/hello-fm/  
   reva wordpress
  
https://www.facebook.com/rj.natraj?ref=ts                         



நண்றி.பனித்துளி சங்கர் & மர திரைப்படம்,ரேடியோ ஹலோ
                            

Tuesday, March 13, 2012

மது உடலுக்குக் கேடு !

மது உடலுக்குக் கேடு !
இது உடலின் எந்தப் பாகத்தை வேண்டுமானாலும் பாதிக்கலாம். ஆனாலும் மது மிகவும் அதிகமாக பாதிப்பது ஈரலை. ஏனெறால் மது நமது ஈரலில் தான் சமிபாடு அடைகிறது.
நாம் அளவுக்கு அதிகமாக மது அருந்தும் போது அது ஈரலில் பலவித மாற்றங்களை ஏற்படுத்தி நமக்கு நோய்களை ஏற்படுத்தும்.இது பற்றி இந்த இடுகையிலே முன்பு பதிவிட்டிருந்தேன்.
இந்த இடுகையிலே சற்று விரிவாக மதுவினால் ஈரல் பாதிக்கப் படும் போது என்னென்ன அறிகுறிகள் ஏற்படும் என்பது பற்றி கூறலாம் என்று நினைக்கிறேன்.
முக்கியமாக அறிந்து கொள்ள வேண்டியது இந்த ஈரல் பாதிப்பு எந்த அறிகுறிகளும் இல்லாமலேயே ஏற்படலாம். சில பேரில் ஈரல் முற்று முழுதாக செயல் இழக்கும் வரை மதுவினால் ஏற்படும் பாதிப்பு தெரியாமலேயே ஏற்படலாம்.இதனால் தொடர்ச்சியாக அதிகமாக மது அருந்துபவர்களில் சடுதியாக மரணங்கள்
ஏற்படலாம்.
நீங்கள் மது அருந்துபவர்கள் என்றால் உங்களில் கீழே உள்ள ஏதாவது அறிகுறிகள் உள்ளதா என்பதை அவதானித்துக் கொள்ளுங்கள்…
வயிற்று வலி
உமிழ் நீர் குறைந்து உலர்ந்த வாய்
அதிகமான தாகம்
தொடர்ச்சியான காய்ச்சல்
உடல் பலவீனம்
வயிற்று வீக்கம்
கண் மஞ்சள் நிறமடைதல்
பசி குறைதல்
வாந்தி வருகின்ற உணர்வு
உடல் நிறை திடீரென அதிகரித்தல்
கருப்பு நிறத்தில் மலம் கழித்தல்
ரத்த வாந்தி எடுத்தல்
ஆண்களில் மார்பு பெரிதாகுதல்
சிந்திக்கும் ஆற்றல் குறைதல்
உள்ளங்கையில் சிவப்பு நிறமாக காணப்படுதல்
மது அருந்துபவர்களே இதில் ஏதாவது அறிகுறி உங்களுக்கு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை நாடுங்கள்.அதற்கு முன்பு மது அருந்துவதை விட்டு விடுங்கள்.

உலகில் மதுவால் அழிவுள்ள மனிதர்கள் குடும்பங்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காது. நன்றாக வாழ வேண்டும் மதிப்பு மிக்கவர்களாக வாழ வேண்டும் என்ற எண்ணமுடையவர்கள் கண்டிப்பாக மதுவைத் தொடக் கூடாது. ]

உடல் ரீதியாக மனரீதியாக ஒழுக்க ரீதியாக மனிதனிடம் பாதிப்புகளை ஏற்படுத்தி அவனது வாழ்க்கையை அவனது குடும்பத்தினரின் வாழ்க்கையைச் சீரழித்து, சின்னாபின்னமாக்கக் கூடிய மற்றொருத் தீய பழக்கம் மதுக் குடிப்பழக்கம்.

மது இயற்கையில் உண்டாகிற ஒரு திரவமன்று. அது பதார்த்தங்கள் கெடுவதால் உண்டாவதாகும். கோதுமை சோளம் ஒட்ஸ் பார்லி அரிசி திரட்சை போன்றவற்றைலிருந்து இது தயாரிக்கப்படுகிறது. திராட்சை ரசத்தைப் புளிக்க வைக்கும் ஈஸ்ட் சத்தானது பழத்திலும் தானியங்களிலுமுள்ள மாவையும் சர்க்கரையையும் மதுவாக மாற்றி விடுகிறது.

சண்டை சச்சரவுகள் களவு கொலை கற்பழிப்பு போன்ற எல்லாவிதமான கீழ்த்தன்மைச் செயல்களும் குற்றங்களும் மதுவின் தூண்டுதலாலேயே நடைபெறுகின்றன.
நீதிமன்றங்களில் மிகக் கடுமையான தண்டனை அடைந்தவர்களில் பெரும்பாலானோர் இந்த மதுவினால் கீழ்த்தன்மைக்கு உள்ளானவர்களே. யுத்தம் பஞ்சம் கொள்ளைநோய் ஆகிய இம்மூன்றும் கொண்டுவந்த அழிவை விட மதுபானம் அதிகக்கேடு விளைவிக்கக் கூடியது என்று கூறுவார்கள்.
 

நாராயணன் கிருஷ்ணன்

உலகின் தலைசிறந்த 10 பேரில் மதுரை இளைஞர் : 1.20 கோடி பேருக்கு உணவு தந்ததற்கு கவுரவம்:


ஆதரவற்ற, மனநலம் பாதித்தவர்களுக்கு 2002 முதல் இதுவரை தினமும் மூன்று வேளை உணவு அளித்து வரும் மதுரை டோக் நகரைச் சேர்ந்த நாராயணன் கிருஷ்ணனை(29), உலகின் தலைசிறந்த 10 “ரியல் ஹீரோக்களில்’ ஒருவராக சி.என்.என்., வெப்சைட் தேர்வு செய்துள்ளது.

நட்சத்திர ஓட்டலில் வேலை பார்த்த, விருதுகள் வென்ற செப் சமையல் கலைஞரான இவர், 2002ல் சுவிட்சர்லாந்து ஓட்டல் நிறுவனத்தில் வேலை கிடைத்தவுடன் அங்கு செல்வதற்காக மதுரை ரயில்வே ஸ்டேஷன் வந்தார். அங்கே முதியவர் ஒருவர் உணவுக்கு போராடும் அவலத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வெளிநாட்டு வேலையை துறந்து மதுரையிலேயே தங்கி, வீட்டில் சமைத்து, இது போன்ற மனிதர்களை தேடிச் சென்று உணவு கொடுக்க ஆரம்பித்தார். இதுவரை 1.20 கோடி பேருக்கு தினமும் காலை, மதியம், இரவு என உணவு வழங்கி வருகிறார். இதற்காக “அக்ஷயா டிரஸ்ட்’ என்ற அமைப்பையும் “ஸ்பான்சர்கள்’ உதவியுடன் நடத்தி வருகிறார். மதுரையை சுற்றி கண்ணில் படும் இதுபோன்ற மனிதர்களை தேடிப்பிடித்து உணவு தருகிறார். இதற்காக தனது வாழ்கையை முழுமையாக அர்ப்பணித்துள்ள இவர், சி.என்.என். வெப்சைட்டால், உலகின் தலை சிறந்த 10 ரியல் ஹீரோக்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஏழை எளிய மக்களை தேடிசென்று உணவு கொடுப்பதென்பது அரிய மகத்தான பணி .. கோவில் உண்டியலில் பணத்தை கொட்டுபவர்கள இவரின் கைகளின் குடுங்கள் உங்களுக்கு கடவுள் குடுப்பதை விட இது பெரிய புண்ணியம் ..வளரட்டும் இவரின் சேவை.. வாழ்த்துக்கள் ...!!!
 

கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துக்செல்லவிருக்கிறேன்,

நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துக்செல்லவிருக்கிறேன், 

இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர்.இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது.இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது,ஆம் இது தான் " நாவலன் தீவு " என்று அழைக்கப்பட்ட " குமரிக்கண்டம். கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது,ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம் !!. இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க, இலங்கை,மற்றும் இன்றுள்ள சில சிறு, சிறு தீவுகளை இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்டமான இடம் தான் " குமரிக்கண்டம் ".ஏழுதெங்க நாடு,ஏழுமதுரை நாடு,ஏழுமுன்பலை நாடு,ஏழுபின்பலை நாடு,ஏழுகுன்ற நாடு,ஏழுகுனக்கரை நாடு,ஏழுகுரும்பனை நாடு என இங்கு நாற்பது ஒன்பது நாடுகள் இருந்துள்ளது !! பறுளி, குமரி என்ற இரண்டு ஆறுகள் ஓடியுள்ளது !!.குமரிக்கொடு,மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளது !!. தென்மதுரை,கபாடபுரம்,முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன.உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான். நக்கீரர் " இறையனார் அகப்பொருள் " என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள " தென் மதுரையில் " கி.மு 4440இல் 4449புலவர்கள்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39மன்னர்களும் இணைந்து, " பரிபாடல், முதுநாரை,முடுகுருக்கு,கலரியவிரை, பேரதிகாரம் " ஆகிய நூல்களை இயற்றப்பட்டது .இதில் அனைத்துமே அழிந்து விட்டது .இரண்டாம் தமிழ்ச் சங்கம் " கபாடபுரம் " நகரத்தில் கி.மு 3700இல் 3700புலவர்கள்களுடன் " அகத்தியம்,தொல்காப்பியம்,பூதபுராணம்,மாபுராணம் " ஆகிய நூல்களை இயற்றப்பட்டது . இதில் " தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது.மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய " மதுரையில் " கி.மு 1850 இல் 449 புலவர்கள்களுடன் " அகநானூறு, புறநானூறு,நாலடியார், திருக்குறள் " ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது.இவ்வளவு பழமையான தமிழனின் வரலாற்றை பெருமையுடன் உலகிற்கு தெரியப்படுத்த வேண்டிய இந்திய அரசு எந்த அக்கறையும் காட்டாமல் இருப்பது வேதனையான விஷயம் !!!!..இந்திய அரசு வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை நாமே இந்த உலகிற்கு பரப்புவோம் ,இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருட உலகின் முதல் இனம் ,நம் தமிழ் இனம் என்று பெருமையுடன் கூறுவோம்.வரலாற்று தேடல் தொடரும்.... 

எந்த மொழியிலும் இல்லாத?

தமிழக கோயில் சிற்பங்களில் உள்ள நுணுக்கமான வேலைப்பாடுகலாகட்டும் , தூண்களில் ஒரு நூல் இழை கூட கோணல் இல்லாமல் கட்டபட்ட 1000 கால் மண்டபங்கலாகட்டும் , இன்னும் ஆதித் தமிழர்கள் செய்த அற்புதமான விசயங்களை பற்றி வியப்புடன் பேசும் நாம் ,இதைப்பற்றிய தேடலை மேற்கொண்டோமா ?அப்படி நான் தேடும் போது எனக்கு கிடைத்த ஒரு அறிய விசயத்தை உங்களுக்கு பகிர்கிறேன்..

1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை கால்
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு --> ≈ 6,0393476E-9 --> ≈ nano = 0.000000001
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்.

My God எந்த மொழியிலும் இல்லாத Decimal Calculation !!!!!!!
இவ்வளவு கணிதம் அந்த காலத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளது !!!!!!!! இந்த எண்களை வைத்து எத்தனை துல்லியமான வேலைகள் நடந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள் ,கணினியையும், கால்குலேடரையும் தொழில் நுட்ப வளர்ச்சி என்று இன்றைய தலை முறை கூறிக்கொண்டு இருக்கும் போது ,அதை விட ஆயிரம் மடங்கு மேலாக அந்த காலத்திலேயே நாம் சாதித்து விட்டோம் ! தமிழர்களின் சாதனையை பற்றிய தேடல் தொடரும்.......
 

இசைத் தூண்கள்

உலக அதிசயப்படியலில் இடம்பெறாத தமிழர்களின் கட்டிடக்கலை மற்றும் பொறியியல் அதிசயமான " இசைத் தூண்கள் " !!.

இந்த இசைத்தூண்களானது ஒரு நீளமான பாறையை வெட்டி எடுத்து, அதிலிருந்து ஏழு தனித்தனி சிறிய தூண்களாக வடித்துள்ளனர், இந்த ஒவ்வொரு சிறிய தூண்களை தட்டினால் " சப்தஸ்வரங்கலான " " ச,ரி,க,ம,ப,த,நி " என்ற தனித்தனி ராகங்களை அது இசைக்கின்றது ! . சில பெரிய தூண்களை சுற்றி இடம் பெற்றுள்ள சிறிய தூண்களில் ஐம்பத்தி மூன்று தனித்தனி ராகங்களை இசைக்கின்றது !! .இதில் பெரிய தூணில் கர்நாட சங்கீதமும்., அதை சுற்றியுள்ள சிறிய தூண்களில் " மிருதங்கம்,கடம்,சலங்கை,வீணை,மணி " போன்ற இசைக்கருவிகளின், இசையை தருகின்றது !! அப்படி என்றால் ஒவ்வொரு கல்லையும் ஒவ்வொரு பதத்திற்கு இழைத்திருந்தால் தான் இப்படி இது வேறு வேறு ஒலிகளில் இசைக்கும் ! இதை தட்டுவதால் நம் விரல்களுக்கு எந்த வலியும் ஏற்படுவதில்லை,உண்மையான இசை ஞானம் உள்ளவர்கள் இதை தட்டினால் இசைக்கருவியில் இருந்து வரும் இசையை விட மிக துல்லியமாக இது இசைக்கின்றது !.சரி இது எதற்காக பயன்பட்டது ? அந்தக்காலத்தில் இருந்த இசைக்கலைஞ்சர்கள் இதை கோயில் விழாக்களின் போது, ஒரு இசைக்கருவியை கூட பயன்படுத்தாமல், இந்த தூண்களை வைத்தே இசைத்துள்ளனர் ! .இது போன்றவை உலகில் எந்த இடத்திலும் இல்லை என்பது நமக்கு இன்னும் சிறப்பை சேர்க்கின்றது !.இந்த இசைத்தூண்களை "மிடறு" என்று அழைத்தார்கள். இது எப்படி வேலை செய்கின்றது ? ஒவ்வொரு தூண்களில் இருந்து வரும் சப்தமும், ஒவ்வெரு விதமான " அலைகற்றையை " உருவாக்குகின்றது !.எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் இது எப்படி சாத்தியமானது ? இந்திரா காந்தி அணுஆராய்ச்சி விஞ்ஞானி ( கல்பாக்கம் ) திரு."அனிஷ் குமார் " என்பவரும் அவருடன் பணிபுரியும் சிலரும் இதில் ஒளிந்துள்ள " இயற்பியல்" அதிசயத்தை முதன்முதலாக தூண் வாரியாக ஆராய்ந்தனர், தூண்களின் வடிவமைப்பு மற்றும் இந்த தூண்களில் இருந்து எழும் ஒலியை பதிவுசெய்து அளவிடுவது. "In situ metallography " (used to find out in-service degradation of critical components of process plants operating under high temperature/ high pressure/corrosive atmosphere) ( ஒரு பொருளின் நுண்ணிய வடிவமைப்பு மற்றும் நுண்ணிய ஓசையை அளக்கும் முறை ) என்ற புதிய தொழில் நுட்பத்தைக்கொண்டு ஆராய்ந்ததில் இந்த தூண்களானது " தன்மைக்கேற்ப மாறும் ஒரு நிலையான அதிசய திடப்பொருள் " என தெரிய வந்தது !!. " spectral analysis "என்ற ஆராய்ச்சிப்படி இந்த தூண்களில் வரும் இசையானது " தன்மைக்கேற்ப இசைந்து கொடுக்கும் அலைக்கற்றயினால் " சப்தம் உருவாவதாக தெரிவிக்கின்றது !.சப்தம் உருவாவதே ஒரு அதிசயாமான விஷயம் என்பது ஒரு புறம் இருக்க, இது எப்படி ஒரு விரலால் தட்டினாலே இசை எழுகின்றது ? .நினைவில் கொள்ளுங்கள் நாம் சுத்தியலை கொண்டு அடிக்கப்போவதில்லை, இதற்கு தேவை வெறும் ஒரே ஒரு விரல் ! .இசை என்பது காற்றை உள்வாங்கி ஒலியாய் வெளிப்படும் ஒரு முறை ,ஆனால் இந்த தூண்களுக்குள் காற்று உள்ளே நுழைந்து இசையை உருவாக்குவதற்கென ஒரு சிறு துவாரதைக்கூட உருவாக்கவில்லை ! இதைப்பற்றின ஆராய்ச்சிக்கு இந்த " இசைத்தூண்கள் " ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் வெறும் ஆச்சர்யத்தை மட்டுமே பதிலாய் தந்து கொண்டிருக்கின்றது ! அடுத்த ஜென்மம் என்ற ஒன்று இருக்கின்றதா என தெரியவில்லை ! அப்படியே இருந்தாலும் மனிதர்களாக பிறப்போமா என தெரியவில்லை ? அதுவும் குறிப்பாக இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த தமிழ்நாட்டில் பிறப்போமா என்பது தெரியாதது ! ஆகையால் தாமதப்படுத்தாமல் இதுபோன்ற இடங்களுக்கு சென்று நம் முன்னோர் செய்த அதிசயங்களை கண்டு களியுங்கள் , இது போன்ற நம் பெருமைகளை உலகறிய செய்யுங்கள் இப்படிப்பட்டவர்கள் வழியில் வந்த நாம் புதிதாக எதுவும் உருவாகவில்லை என்றாலும் அவர்கள் தந்த மொழியையும்,கலாச்சாரத்தயுமாவது கட்டிக்காப்போம் !தேடல் தொடரும்... 

காவிரிப்பூம்பட்டினம்

" காவிரிப்பூம்பட்டினம் " - கடலுக்கடியில் கண்மூடிக்கிடக்கும் நம் வரலாற்றைத் தேடி ஒரு பயணம் ! .

கலை,இலக்கியம்,வீரம்,கொடை,பண்பாடு,நாகரீகம், போன்ற பலவற்றை இந்த உலகிற்கே கற்றுத்தந்த நம் தமிழ் இனம், இன்று தன் வரலாற்றையே மறந்து மேல் நாட்டு மோகத்தில் தான் கடந்து வந்த பாதைகளை திரும்பிப் பார்க்காமல் சென்று கொண்டிருப்பது வேதனைக்குரிய விடயம் ! . ஆனால் வரலாறு என்பது ஒரு வட்டம் தான், ஒரு காலத்தில் இந்த உலகையேஆண்ட நாம்,இன்று உலகிற்கு அடிமையாய் இருக்கிறோம், மீண்டும் இந்த கால சக்கரம் சுழன்று நம் பெருமைகளை இந்த உலகம் பேசும் நாள் வெகு தொலைவில் இல்லை என்ற நம்பிக்கையுடன், நம் சோழ துறைமுக தலை நகருக்கு உங்களை அழைத்துச் செல்கிறேன்.நம் முன்னோர்களின் வரலாற்றை தெரிந்து கொள்ள கடலோடு பயணிப்போம் வாருங்கள் ! !.

தமிழகத்தில் 99% பெயர்கள் காரணப் பெயரால் அமைந்தவை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அந்த வகையில் வந்த பெயர் தான் இந்த "காவிரிப்பூம்பட்டினம்".பல ஊர்களின் மக்களை வாழவைத்தது போக மீதமுள்ள தண்ணீரை கூட கடலுக்கு தந்து விடும் காவிரி ஆறு கடலில் சங்கமிக்கும் இடத்தின் அருகில் அமைந்தது தான் இந்த அழகிய நகரம் ! !. காவிரியின் வடக்கு கரையோரம் அமைந்த இந்த நகரின் அழகை கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட "சிலப்பதிகார" நூல் விவரிக்கிறது .
இந்த மூழ்கிய இந்த நகருடன் சேர்த்து இந்தியாவின் சில பகுதிகள்,இலங்கை,பர்மா,மாலத்தீவு,வியட்நாம்,கம்போடிய,இந்தோனேசியா,வங்காள தேசம்,சிங்கப்பூர்,மலேசியா,தாய்லாந்து போன்ற பகுதிகளையும் நம் சோழ மன்னன் ஆண்டு வந்தான் ! ! !. இந்த துறைமுகத்தில் சுமார் 10,000 போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டிருந்தது ! !.

இந்த நகரம் அழகான இரண்டு முக்கிய பிரதான ஊர்களை கொண்டிருந்தது. ஒன்று கடலோரம் இருந்த "மருவுர்பாக்கம்" மற்றொன்று இதன் மேற்க்கே அமைந்த "பட்டினப்பாக்கம்" .இந்த இரண்டு ஊர்களையும் பிரித்த ஒன்று இதன் குறுக்கே அமைந்த ஆக்கிய தேட்டங்கள், இந்த தோட்டத்து மர நிழலில் தான் தினமும் அங்காடிகள் நிறைந்த சந்தை நடைபெற்றது ! . இது இன்று உள்ள 24 மணி நேர அங்காடிகளை போன்று பகல், இரவு, முழுவதும் செயல்பட்டுள்ளது ! ! அப்படி என்றால் எவ்வளவு பெரிய முன்னேறிய நகராம இருந்திருக்கும் என்று சற்று எண்ணிப்பாருங்கள் ! !. பகல் அங்காடியின் பெயர் "நாளங்காடி" , இரவில் நடப்பது "அல்லங்காடி" ! !.

மருவுர்பாக்கம் :
ஏற்கனவே கூறி இருந்ததை போல கடற்க்கரை ஓரம் அமைந்த இந்த ஊரில் மாட மாளிகைகள் நிறைந்து காணப்பட்டது ! .இந்த இடத்தில் கடல் வழி வியாபாரிகள், வெளிநாட்டவர், என பலர் வாழ்ந்துள்ளனர் ! . இந்த ஊரை சுற்றி மீனவர்கள்,தறி நெய்பவர்கள்,பட்டு வியாபாரிகள்,மீன்,கறி வியாபாரிகள்,பானை,தானியங்கள்.நகை,வைர வியாபாரிகள் நிறைந்து காணப்பட்டனர் ! .

பட்டினப்பாக்கம் :
இங்கு அரச குடும்பம், அரசுத் துறை உயர் அதிகாரிகள்,பணக்கார வியாபாரிகள், விவசாயிகள்,மருத்துவர்,ஜோதிடர்,ராணுவம்,அரண்மனை நடனக் கலைஞர்கள் போன்றவர்கள் இருந்தனர் ! !
இங்கு ஐந்து மன்றங்கள் இருந்துள்ளது
(௧) வெள்ளிடை மன்றம் (௨) எலாஞ்சி மன்றம் (௩) நெடுங்கல் மன்றம் (௪) பூதச்சதுக்கம் மட்டும் (௫) பாவை மன்றம்

இந்த ஊரில் இருந்த தோட்டங்கள்
(௧) இளவந்திச்சோலை (௨) உய்யணம் (௩) சன்பதிவனம் (௪) உறவனம் மற்றும் (௫) காவிரிவனம் போன்ற தோட்டங்கள் இந்த ஊரை மேலும் அழகுப்படுத்தியது ! !.

பட்டினப்பாலை என்ற சங்க நூல், இந்த நகரின் அழகை பல இடங்களில் விவரிக்கின்றது.அடுக்கு மாடிகளை அப்போதே கொண்ட இந்த நகரில், ஏணிகள் மற்றும் மரப் படிகளால் மேல் மாடிக்கு சென்றுள்ளனர் ! ! . நகரின் எல்லா இடங்களிலும், பல வடிவங்களில் சோழர் கொடிகள் பரந்த வண்ணம் இருந்துள்ளது ! !.

இந்த உலகில் எதுவுமே நிரந்தரம் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் "சுனாமி" வடிவில் வந்தது இந்த நகருக்கு அழிவு .சுமார் 1500 வருடங்களுக்கு முன் ஏற்பட்ட ஒரு மிகப்பெரிய ஆழிப்பேரலையால், இந்த நகரை உரு தெரியாமல் அழித்துவிட்டு சென்றது .

"மணிமேகலை" நூலில் ஒரு இடத்தின் அழிவை இப்படி விவரிக்கின்றது.அதாவது " வருடா வருடம் தவறாமல் " இந்திர விழா " கொண்டாடும் சோழ மன்னன் ,அந்த ஆண்டு கொண்டாடதால் கடவுளின் கோபத்துக்கு ஆளாகி அவனின் நகரை அழித்ததாகக் கூறுகின்றது .

இங்கு கிடைக்கப்பெற்ற சில தொன்மையான பொருட்களை கொண்டு இந்த ஊரில் " சிலப்பதிகார அருங்காட்சியகம் " ஒன்று தொடங்கப்பட்டு, நம் பண்டைய தமிழர்களின் கலாசாரத்தை இன்னமும் பிரதிபலித்துக் கொண்டுள்ளது ! . இங்கு ஆராய்சிகள் மேற்கொள்ளப்பட்டால் இன்னுமும் வெளிவராத நம் பெருமைகள், வெளி வர வாய்ப்புள்ளது ! ! . தமிழர்கள் அனைவரும் இந்த அருங்காட்சியகத்திற்கு சென்று நம் வரலாற்றை காண வேண்டும்.அதே போன்று நமக்கு பின் வருபவர்களுக்கும் நம் வரலாற்றை கற்பிப்பது ஒவ்வொரு தமிழனின் கடமை .தேடல் தொடரும்...!!
 

உலக ஜனநாயகத்திற்கே அடித்தளம் அமைத்தவர்கள் தமிழர்கள் !

உலக ஜனநாயகத்திற்கே அடித்தளம் அமைத்தவர்கள் தமிழர்கள் !

ஜனநாயகம் என்ற ஆலமரம் இன்று உலகம் முழுவதும் விழுதுகள் பரப்பி செழிப்புடன் வளர்ந்ததற்கு காரணமான ஆணிவேரை 1100 வருடங்களுக்கு மேலாக அமைதியுடன் தாங்கிக்கொண்டுள்ள ஒரு அற்புதமான இடம் " உத்திரமேரூர் " !. சிறு வயதில் நாம் பள்ளியில் படித்த நியாபகம் வரலாம், ஆனால் நாம் அதை அப்போதே மறந்திருப்போம் ! தெரியாதவர்களுக்காக இந்த தகவல் ,இன்று இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக திகழ்வதற்கும், மற்றும் பிற நாட்டு மக்கள் தங்களை ஆளப்போகிரவர்களை தாமே தேர்ந்தெடுக்கும் முறையை 1100 வருடங்களுக்கு முன்னர் நாம் பின்பற்றிய " குடவோலை " முறை தான் காரணம் என்றால் உங்களால் நம்பமுடியுமா ? தமக்கு பிடித்த நிர்வாகிகளை தாமே தேர்ந்தெடுக்கும் முறையை உலகிற்கே முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் நாம் ! . கி.பி 950 சோழர்கள் இந்த பகுதியை ஆண்ட போது "பராந்தக சோழன்" தான் இந்த முறையை கொண்டு வந்தார் என்று இந்த கோயில் கல்வெட்டு தெளிவு படுத்துகின்றது .தமிழகத்தின் சிறப்பு வாய்ந்த இடங்களில் இந்த இடத்திற்கு தான் உண்மையில் முதல் இடம் வழங்கி இருக்க வேண்டும்.சோழ கல்வெட்டுகளை ஆராய்ந்தமுன்னாள் தமிழ்நாடு தொல் பொருள் ஆராய்ச்சிமன்ற தலைவர் , திரு .டாக்டர்.நாகஸ்வாமி எழுதிய புத்தகத்தை வாங்கிப்படித்தால் இந்த கல்வெட்டுகளில் உள்ள அனைத்து விசயங்களும் உங்களுக்கு தெரிய வரும். இந்த கல்வெட்டுகளை ஆராய்ந்தால் " யார் தேர்தலில் நிற்க முடியும் ?, யார் நிற்க முடியாது ?,அவர்களுக்கு என்ன தகுதி இருக்க வேண்டும் ? ,தேர்தல் எவ்வாறு நடை பெற வேண்டும் ?தேர்ந்தேட்டுகப்பட்டவர்கள் எவ்வாறு செயல் பட வேண்டும் ? என்ற தகவலை தருகின்றது. இதில் இருக்கும் சட்ட திட்டங்கள் இன்று நடை முறையில் இருந்தால் ஒருவர் கூட யோக்கியன் என்ற போர்வையில் தேர்தலில் நிற்க முடியாது..அவ்வளவு நிபந்தனைகள் உள்ளன !கோயில் மண்டபத்தில் உள்ள கல்வெட்டுகளில் " நிர்வாகம்,நீதி,விவசாயம்,போக்குவரத்து," போன்ற இன்னும் பல தகவல்களை தருகின்றது . ஒரு ஆச்சர்யமான செய்தி என்ன தெரியுமா இன்று அன்னா அசாரே போராடிக்கொண்டிருக்கும் " தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவன் சரியாக செயல்படவில்லை என்றால் அவரை திரும்பப்பெறும் சட்டம் ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே நாம் கொண்டுவந்து விட்டோம் " !!!. பல்லவ மன்னன் " நந்திவர்மனால்" இந்த இடம் கி.பி 750 வருடம் உருவாக்கப்பட்டது.. இந்த இடத்திற்கு இன்னொரு சிறப்பு தமிழகத்தில் எந்த இடத்திலும் இது போன்ற ஒரே இடம் அனைத்து மன்னர்களாலும் ஆளப்படவில்லை. இந்த இடத்தை " சோழர்கள், பாண்டியர்கள்,பல்லவர்கள்,சம்புவர்யர்கள்,விஜய நகர அரசர்கள்,நாயக்கர்கள் என இதன் பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது. இந்த இடத்திற்கு " ராஜேந்திர சோழனும் " , " கிருஷ்ணா தேவராயரும் " வந்துள்ளனர் ! இன்னொரு முக்கியமான தகவல் இந்த தொகுதியை ஒவ்வொரு சட்ட மன்ற தேர்தலிலும் இப்போதுள்ள அரசியல் கட்சிகள் இந்த தொகுதியின் நிலவரத்தை தான் முதலில் ஆவலுடன் பார்பார்கள் , ஏனெனில் இந்த தொகுதியை யார் கைப்பற்றினார்களோ அவர்கள் தான் இன்று வரை ஆட்சி அமைத்துள்ளனர் !!!. இந்த கூற்று 1952 ல் காங்கிரஸ் தமிழகத்தை ஆட்சி செய்ததிலிருந்து தொடங்கி ,இன்று ஆட்சி செய்து கொண்டிருக்கு " அம்மா " வரை இந்த பட்டியல் நீள்கிறது !!.இப்படிப்பட்ட உலகின் சிறப்பு வாய்ந்த இடத்தை எத்தனை தமிழர்கள் நேரில் சென்று பார்த்திருப்பீர்கள் ?..தேடல் தொடரும்...