Monday, March 12, 2012

எடை குறைய எதை செய்யக்கூடாது ?

எடை குறைய எதை செய்யக்கூடாது ?


உடல் பருமன் என்பது இன்றைக்கு அதிகம் பேசப்படக்கூடிய விசயமாக உள்ளது. எடை குறைப்பு விளம்பரங்கள் ஒரு பக்கம் காசை கறக்க போட்டி போட்டுக்கொண்டிருக்கையில் தாங்களாகவே எடையை குறைக்கிறேன் பேர்வழி என்று சிக்கலில் மாட்டிக்கொள்கின்றனர் பலர். உடல் எடையை குறைக்க என்ன செய்யலாம் என்பதை விட எதை செய்யக்கூடாது என்று கூறியுள்ளனர் உணவியல் வல்லுநர்கள்.

காலை உணவுக்கு கட் கூடாது

எடை குறைப்பு முயற்சிக்கு முதலில் செய்வது உணவை தவிர்ப்பது. அதுவும் பெரும்பாலோனோர் காலை உணவை கட் செய்துவிட்டு அலுவலகம் செல்கின்றனர். இது தவறான பழக்கம் என்கின்றனர் உணவியலாளர்கள்.

இரவில் உண்ட உணவு ஜீரணமாகி உடலானது சக்தியை எதிர்நோக்கி காத்திருக்கும் போது அதற்கு தேவையான ஆகாரத்தை அளிக்க வேண்டும். அப்பொழுதுதான் உடல் ஆரோக்கியமாக திகழும். எனவே காலை நேரத்தில் அதிக அளவில் உணவுகளை உண்ணாமல் ஜூஸ், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை உண்ணலாம். இதனால் சரிவிகித சக்தி கிடைக்கும்.

மாவுச்சத்து உணவுகள்

உடல் எடைக்கு மாவுச்சத்துள்ள உணவுகள்தான் எதிரி என்று நினைத்துக் கொண்டு அனைத்துவகையான கார்போஹைட்ரேட் உணவுகளையும் தவிர்த்து விடுவர். இது தவறானது என்கின்றனர் வல்லுநர்கள். ஏனெனில் கார்போ ஹைடிரேட்தான் நமது இயக்கத்திற்கு தேவையான சக்தியைத் தருகிறது. அதேசமயம் உடலுக்கு தீங்கு விளைக்கு விளைக்கும் சோடா, குளிர்பானங்கள் போன்றவைகளை தவிர்க்கலாம். அதேசமயம் புருக்கோலி, உருளைக்கிழங்கு, உள்ளிட்ட காய்கறிகள், மேலும் பழங்களில் உள்ள கார்போ ஹைட்ரேட் பொருட்களை சேர்த்துக்கொள்ளவேண்டும். மேலும் ஐஸ் கிரீம் உள்ளிட்டவைகளை உட்கொண்டால் உடல் எடைக் கூடும் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள்.

ஜங்க் ஃபுட், நொறுக்குத்தீனி

உடல் எடையை குறைப்பதற்காக மாலை 6 மணிக்கு மேல் உணவைத் தவிர்ப்பவர்கள் பலர் உண்டு. அதேசமயம் தொலைக்காட்சி பார்க்கும் சாக்கிலோ, திரைப்படம் பார்க்கும் போதோ கிலோ கணக்கில் சிப்ஸ், பர்க்கர், உள்ளிட்ட ஜங்க் ஃபுட்களை உள்ளே தள்ளுவார்கள். இதுவும் உடல் நலத்திற்கு தீங்கானது என்கின்றனர் ஆய்வாளர்கள். சாதமாக உட்கொள்ள முடியாதவர்கள் காய்கறி சாலட்ஸ், பழங்கள் போன்றவைகளை உட்கொள்ளலாம் இது உடல் எடையை குறைக்கும்.

சரிவிகித கலோரி

அதிக கலோரி தரும் உணவுகளை தவிர்க்கிறேன் பேர்வலி என்று எதையாவது உண்ணக்கூடாது. பாதாம் பருப்பு, மூன்று ஆப்பிள் பழங்களை உண்ணும் போது கிடைக்கும் கலோரி சீஸ்பர்கரும், கோக் குடிப்பதன் மூலமும் ஏற்படும். எனவே எந்த விகிதத்தில் கலோரி உணவுகளை உட்கொள்கிறோம் என்பது முக்கியம் என்கின்றனர் உணவியலாளர்கள்.

எடைக் குறைப்பு சாதனங்கள்

உடல் எடையை குறைப்பதற்காக விற்பனை செய்யப்படும் சாதனங்கள், மாத்திரைகள் போன்றவைகளைப் பயன்படுத்தினால் உடல் எடை குறையும் என்பது அனைவரின் நம்பிக்கை. இந்த பொருட்கள் உடல் எடைக்குறைப்பிற்கு உதவி புரியுமே தவிர முழுவதுமாக அவற்றை மட்டுமே நம்பக்கூடாது என்கின்றனர் உணவியலாளர்கள். நமது உடலை கட்டுப்பாட்டிற்குள் வைக்க நாம் சரிவிகித சத்துள்ள உணவுகளை உட்கொண்டு உடல் எடையை குறைக்கலாம் என்பதே அவர்களின் அறிவுரை.

பீட்ரூட்டின் மருத்துவப் பயன்கள்

பீட்ரூட்டின் மருத்துவப் பயன்கள்

பீட்ரூட் பலருக்குப் பிடிக்காது, சிலருக்கு மட்டு...மே பிடிக்கும். குழந்தைகளில் பலருக்குப் பிடிக்கும். இது பலருக்கும் சுவை சம்பந்தப்பட்ட ஒன்றாகவே தெரிகிறது. ஆனால் இதற்கென்று பிரத்யேக மருத்துவப் பயன்கள் உண்டு.

1. பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வர அல்சர் குணமாகும்.

2. பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர சிறுநீரகங்களும் பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும்.

3. பீட்ரூட் சாறுடன் படிகாரத்தை பொடியாக்கி சேர்த்து கலந்து உடலில் எரிச்சல், அரிப்பு உள்ள இடங்களின் மேல் தடவ எரிச்சல் அரிப்பு மாறும்.

4. தீப்பட்ட இடத்தில் பீட்ரூட் சாறைத் தடவினால் தீப்புண் கொப்புளமாகாமல் விரைவில் ஆறும்.

5. பீட்ரூட் கஷாயம் மூலநோயை குணப்படுத்தும்.

6. பீட்ரூட் கூட்டு மலச்சிக்கலை நீக்கும். இரத்த சோகையை குணப்படுத்தும்.

7. பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமானத்தைக் கூட்டும்.

8. பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டுவர இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்.

9. பீட்ரூட்டை வேக வைத்த நீரில் வினிகரைக் கலந்து சொறி, பொடுகு, ஆறாத புண்கள் மேல் தடவி வர அனைத்தும் குணமாகும்.

மண்ணின் வில்லன்

மரங்களை வெட்டுங்கள்!!

சமீபத்தில் ஒரு forward mail ல் வந்த விஷயம் உங்கள் பார்வைக்கு.....

உலகமே ஒட்டு மொத்தமாக வெப்பமயமாதல் (குளோபல் வார்மிங்) பற்றி பயந்து கொண்டு இருக்கும், இன்றைய காலகட்டத்தில் 'மரங்களை நடுங்கள்' என்ற ஒரே கோஷம் தான் எங்கும் கேட்கிறது, இந்த நேரத்தில் 'மரங்களை வெட்டுங்கள்' என்று கூறுவது முரண்பாடாக தோன்றுகிறது அப்படிதானே. ஆனால் இங்கே நான் சொல்வதை முழுவதும் கவனித்தால் நீங்களும்' ஆமாம் கண்டிப்பாக வெட்ட வேண்டும் ' என்று சொல்வீர்கள். அப்படி அந்த மரத்தை வெட்டினால் தான் நம் மண்ணின் மாண்பை காப்பாற்ற முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள் நமக்கு கொடுக்கும் ஒரே எச்சரிக்கை.

மண்ணின் வில்லன் 
அமெரிக்க தாவரவியல் பூங்கா , 'வளர்க்க கூடாத நச்சு மரங்கள்' என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது தான் நான் குறிப்பிட போகிற விஷ மரம். தமிழ் நாட்டின் ரோட்டின் ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் எனப்படும் 'காட்டு கருவேல மரம்' தான் அது. (பேராண்மை படத்தில் கூட ஜெயம்ரவி மாணவிகளுடன் சேர்ந்து காட்டுக்குள் இருக்கும் மரத்தை
வெட்டிகொண்டே விளக்கம் சொல்வாரே ! )
நம் மண்ணின் தன்மையை கெடுப்பதற்காக வெளி நாட்டினர் இந்த மரத்தின் விதையை இங்கு தூவியதாக ஒரு கருத்தும், கிராம மக்களுக்கு அடுப்பு எரிக்க விறகு வேண்டும் என்பதற்காக ஒரு அரசியல்வாதி (நல்ல எண்ணம்தான், இதன் நச்சு தன்மை பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம்) வெளிநாட்டில் இருந்து தருவித்ததாகவும் இரு விதமான கருத்துகள் உலவுகின்றன. உண்மை எதுவென்று 'யாம் அறியேன் பராபரமே' 
ஆனால் எப்படி வந்தது என்பது அல்ல...., இப்போதைய பிரச்சனை....!?, இம்மரத்தால் என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது என்று பார்பதுதான் அவசியம். முதலில் இந்த மரத்தின் தன்மைகளை பார்க்கலாம்.

இதன் கொடூரமான குணங்கள்
இவை எந்த வித வறட்சியிலும் நன்கு வளரக்கூடியது . மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை கவலை படாது.பூமியின் அடி ஆழம் வரை கூட தன் வேர்களை அனுப்பி நீரை உறிஞ்சி, தன் இலைகளை வாடவிடாமல் பார்த்து கொள்கிறது. இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது...!
இதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லை, ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி தழுவி செல்லும் காற்றில் இருக்கும் ஈரபதத்தையும் இம்மரம் உறிஞ்சிவிடுகிறது. இப்படி காற்றின் ஈரபதத்தையும், நிலத்தடி நீரையும் இழந்து அந்த பகுதியே வறட்சியின் பிடியில் தாண்டவமாடும்.
தென் தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே முக்கிய காரணம் என்பது அதிர்ச்சியான ஒன்றுதான். ஆனால் இதை அறியாமல் அந்த மக்கள், இன்னும் புதிதாக மரங்களை வளர்த்து பராமரிக்கிறார்கள் என்று என்னும் போது அறியாமையை குறித்து வருந்த வேண்டி இருக்கிறது.

உடம்பு முழுதும் விஷம்
இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது. முக்கியமான விஷயம் ஒன்றும் உள்ளது, ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை அதுதான். இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால் அவை மலடாகிவிடும், அதாவது சினைபிடிக்காமலேயே போய்விடும், ஒருவேளை மீறி கன்று ஈன்றாலுமே அது ஊனத்துடன்தான் பிறக்கும்....?!!
ஒருபுறம் இதன் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றிவிடுகிறது மற்றொரு புறம் இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ முடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில் வேறு எந்த செடியும் வளராது, தவிர மரத்தில் எந்த பறவை இனங்களும் கூடுகட்டுவதும் இல்லை. காரணம் என்னவென்றால் இந்த வேலிகாத்தான் மரங்கள், உயிரிவளி (Oxygen) மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது, ஆனால் கரிமிலவாயுவை மிக அதிக அளவில் உற்பத்தி செய்து வெளியிடுவதால் சுற்றுப்புற காற்று மண்டலமே நச்சுதன்மையாக மாறிவிடுகிறது .

அறியாமை
நமக்கு தெரியாமலேயே இப்படிப்பட்ட மரங்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறோம் என்பது வருத்தத்துக்கு உரியதுதான்.

கேரளாவின் விழிப்புணர்வு
நமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர்.....!! அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஒரு இடத்தில் கூட காண முடியாது. ஆனால் நம் தமிழ்நாட்டில் விறகிற்காக இந்த மரத்தை வளர்த்து வருகின்றனர்....??!

என்ன முரண்பாடு...?? என்ன அறியாமை..??
ஆராய்ச்சியாளர்களும், இந்த மரங்கள் இருக்கும் இடங்களில் வாழும் மனிதர்களின் மனதையும் இந்த மரம் மாற்றி வன்முறை எண்ணத்தை கொடுக்கும் என்று கண்டு பிடித்து உள்ளனர்.

நல்ல மரம் ஆரோக்கியம்
வேப்பமரம் வளர்ப்பது எவ்வளவு நல்லது என்பதை யாவரும் அறிவோம், மற்றும் ஆலமரமும் , அரசமரமும் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் நாம். இருந்தும் இந்த முள் மரத்தை பற்றி சரியாக விழிப்புணர்ச்சி நம்மிடம் இல்லையே என்பதே என் ஆதங்கம். சுற்றுபுறத்தில் புல், பூண்டை கூட வளரவிடாமல் தடுக்கும் இந்த முள் மரத்தை பூண்டோடு அழிக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் . சமூக ஆர்வலர்கள் இந்த மரத்தை பற்றிய பிரசாரங்களை செயல் படுத்தலாம், செய்வார்களா?
இந்த மரங்களை நீங்கள் சிறிய செடியாக இருந்தால் கூட புடுங்கி எறியுங்கள் ! அது வளரும் வரை காத்திருக்க வேண்டாம்.நம் அடுத்த தலை முறை குழந்தைகளுக்கும் தெரியப்படுத்துங்கள் 
இந்த பதிவை படிப்பவர்களும் முடிந்தவரை இந்த செய்தியை மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.



மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம்....

எப்படி அந்நியர்களை நாட்டை விட்டே விரட்டினோமோ ! அதே போல் நம் நீர் வளத்தை சுரண்டும் இந்த அந்நியனையும் விரட்டுவோம் ! ! 
வெட்டுவதோடு மட்டும் நில்லாமல்..நம் பாரம்பரிய பூ அரச மரம், புங்கை மரம் , வேப்பம் மரம் போன்ற வற்றை அந்த இடத்திலேயே நட்டு பராமரிப்போம் 

இதை வெட்டுவதோடு நிறுத்திவிடாமல், வேரோடு புடுங்கி எறியுங்கள்..உங்கள் ஊர் பள்ளி ஆசிரியரை சந்தித்து இதை பற்றிய விழிப்புணர்வை மாணவர்களிடம் உருவாக சொல்லுங்கள்.
இந்த மரத்தை வெட்டி வீழ்த்துவோம்.....! நம் மண்ணின் மாண்பை காப்போம்..!! PLS SHARE !!


"தமிழன் இல்லாத நாடில்லை: தமிழனுக்கு என்று ஒரு நாடில்லை.."

தமிழ் தேசியத்தின் தாரக மந்திரத்தை இந்த சந் தர்ப்பத்தில் நினைவுகூர்தல் பொருத்தம் என்று, கணியன் நம்புகிறது. தமிழனுக்கு என்று நாடு கிடைப்பது, மற்றவர்களோடு போராடிப் பெறுவது, கல்வி நிலையில் தமிழுக்கு ஓர் உன்னதம் கிடைப்பது, ஆட்சியில் அமர்ந்துள்ள தமிழனைப் பொருத்தது. ஆட்சியில் அமர்ந்துள்ள தமிழன் மனது வைத்தால், தமிழ் உன்னதத்தை அடையும் ."


நா.கோவிந்தசாமி என்ற முன்னோடி
உலகில் ஆங்கிலத்துக்கு அடுத்தபடியாக தமிழ்மொழியில் தான் அதிக அளவில் இணையத் தளங்கள். மனம் குதூகலிக்கிறது. இணையத்தில் முதலில் தமிழை வலம் வரச் செய்த பெருமை யாருக்குரியது தெரியுமா? தமிழை இணையத்தில் உதிக்க வைத்த பெருமை, சிங்கப்பூருக்குரியது. தமிழர்கள் வாழும் பல நாடுகளுக்குக் கிடைக்காத பெருமை சிங்கப்பூருக்குக் கிடைக்கக் காரணமாயிருந்தவரை இணைய உலகில் வலம் வரும் எவரும் மறந்துவிட முடியாது. அவர்- அமரர். நா.கோவிந்தசாமி! 1995ம் ஆண்டு அக்டோபர் திங்களில் சிங்கப்பூர் அதிபர் மேன்மை மிகு. ஓங் டாங் சாங் துவக்கி வைத்த Journey: Words, Home and Nation - Anthology of Singapore Poetry (1984-1995) என்கிற நான்கு தேசிய மொழிக் கவிதைகளுக்கான வலையகத்தில்தான் முதன் முதலில் தமிழ் இணையத்தில் அடி எடுத்து வைத்தது. இந்த வலையகத்திற்கான தமிழ்ப் பகுதியை உருவாக்குவதில் பெரும்பங்காற்றியவர் அமரர் நா.கோவிந்தசாமி.நன்யான் தொழில் நுட்பக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர். தொடர்ந்து 1995 ஆம் ஆண்டு சிங்கப்பூர் அரசு அந்த நாட்டைப் பற்றிய பல தகவல்களை இணையத்தில் இடம் பெறச் செய்ய நினைத்தபோது, தமிழிலும் அவற்றை வெளியிட முடிவு செய்தது. அந்தப் பணிகளை இவரிடம் ஒப்படைத்தது. இவரும் அதைத் திறம்படச் செய்து சிங்கப்பூர் அரசின் பாராட்டுக்குரியவரானார். அப்பணியில் பெற்ற அனுபவத்தை, அறிவைத் தொடர்ந்து பல பணிகளைச் செய்து வந்தார். அப்படி இடம்பெற்ற தமிழ்ப் பக்கங்கள்தான் இணையத்தில் இடம்பெற்ற முதல் தமிழ்ப் பக்கங்கள். அதுதான் இந்திய மொழிகளில் இணையத்தில் இடம் பெற்ற முதல் மொழி என்ற பெருமையைத் தமிழ் பெறக் காரணமாக அமைந்தது. 1997ம் ஆண்டு இன்று இணைய மாநாடுகளுக்கு முன்னோடியத் திகழ்ந்த தமிழ்நெட்97 மாநாட்டை பெரும் முயற்சி எடுத்து சிங்கப்பூரில் நடத்தினார்.அந்த மாநாட்டில் பல நாடுகளில் தமிழ் தொடர்பான பணிகளை ஆரவாரமின்றிச் செய்துவந்தவர்களை அடையாளம் கண்டு அவர்களையெல்லாம் அழைத்துப் பங்கேற்கச் செய்தார். ஆங்காங்கே பலபிரிவுகளாக பலரும் செய்து வந்த பணிகளைப் பற்றி ஒருவருக்கொருவர் ஓரிடத்தில் கலந்துரையாடக் காரணமாக இருந்தார். அதன் விளைவாக உலகில் பல பகுதிகளில் பல்வேறு பணிகளுக்குக் கணினி வழித் தமிழைப் பயன்படுத்தி வந்தவர்களிடையே ஒரு ஒருங்கிணைவும், சமூக உணர்வும் ஏற்பட்டன. தமிழ்நெட் '97 மாநாட்டின் தொடர்ச்சியாகக் கணித்தமிழ் தொழில் நுட்பப் பிரச்சினைகள் குறித்து இணையத்தில் அஞ்சல் உரையாடல் தொடங்கப்பட்டு விவாதங்கள் முன்னெடுத்துச் செல்லப்பட்டன. முரசு மென்பொருள் தயாரிப்பாளர் முத்தெழிலன், சுவிட்சர்லாந்திலிருந்து 'மதுரைத் திட்டம்' என்கிற தமிழ் அறிவுக்களஞ்சியத்தைத் தொகுத்த கல்யாணசுந்தரம் உட்பட பலர் இந்த விவாதங்களில் கலந்து கொண்டார்கள்.கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட இந்த மின்னஞ்சல் உரையாடலில் அலசப்பட்ட விஷயங்களைத் தொகுத்து வெளியிட்டால் அது கண் முன் நடந்த வரலாற்றின் பதிவாக இருக்கும். திறமையும் எளிமையும் இணைவதை எப்போதாவதுதான் பார்க்கமுடியும். அப்படியோர் இணைவைப் பெற்றவர் அமரர் நா.கோவிந்தசாமி!மண்வாசம் - தமிழ்வாசம் நிறைந்த அவரது பண்புகளைப் பழகிய யாவரும் உணர்ந்திருக்கலாம். தமிழ் விசைப் பலகை (Key Board) உருவாக்கத்திலும், இணையத்தில் தமிழுக்குப் பெருமை கிடைத்ததிலும் அவருக்கு மிக முக்கியப் பங்குண்டு என்பதை எவரும் மறுத்துரைக்க இயலாது. அதற்காக அவர் இரவுபகல் பாராது கடினமாக உழைத்ததை இணைய நண்பர்கள் மிக அறிவார்கள். அந்த உழைப்பிலும், உயர்விலும் பண்புகளை இழக்காமல் தொடர்ந்து, நட்பை அகலப்படுத்திக் கொண்டு அவர் பலரிடம் பகிர்ந்து கொண்டதை அவரோடு அணுக்கமாய் இருந்தவர்கள் இன்றும் நினைவுகூர்கிறார்கள். தனது கண்டு பிடிப்பை, உழைப்பைப், பெயர் புகழுக்கு முன்னிறுத்தாமல் தமிழுலகத்திற்குக் கொடுத்துவிட்டு அடுத்தடுத்த கட்டங்களுக்கு பயணிப்பதிலேயே குறியாக இருந்தவர் அமரர் கோவிந்தசாமி. தமிழ்நெட் 97ன் வளர்ச்சிதான் சென்னையில் நடைபெற்ற 'தமிழ் இணையம் 99' என்ற இணைய மாநாடு.அந்த மாநாட்டில் சிங்கப்பூரின் பிரதிநிதியாகப் பங்கேற்றுப் பல அரிய கருத்துகளை வழங்கினார் நா.கோவிந்தசாமி. கணியன் என்ற எழுத்துருவைத்தான் முதன் முதலில் அமரர் 'நாகோ' அறிமுகப்படுத்தினார். அதே பெயரில் "கணியன்" என்ற இணைய இதழையும் இணையத்தில் உலவ விட்டு அதன் மூலம் இணைய நண்பர்களை ஈர்த்தார். நன்யான் தொழில் நுட்பப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய இவர் தனது பெரும் நேரத்தைக் கணிப்பொறி, இணையம், .தமிழ் இலக்கியம் என்றுழைத்துப் பல பெருமைகளைத் தமிழுக்குத் தேடித் தந்தார். 1965லிருந்து சிறுகதைகள் எழுதிய இவர், 1977ல் இலக்கியவட்டம் என்ற அமைப்பை ஏற்படுத்தி மிகச் சிறந்த கதைகள் எவை என்ற அலசல் ஆய்வின் மூலம் சேகரித்த கதைகளை 1981ல் அதைத் தொகுப்பாக வெளியிட்டார். அவரின் உள்ளொளி என்ற சிறுகதைத் தொகுப்பும் வேள்வி என்ற நாவலும் அவர் தமிழ் இலக்கியத்துக்கு விட்டுச் சென்ற அழியாச் சொத்துக்களாகும். கவிதைகளில் நாட்டம் கொண்ட இவர் கவிதைகளும் எழுதுவதில் வல்லவராக இருந்தார். இன்றைக்கு ஒருங்குறி எழுத்து குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறோம்; ஆனால் அன்றைக்கே அது குறித்து சிந்தித்தவர் கோவிந்தசாமி. சென்னையில் நடைபெற்ற இணைய மாநாட்டில் அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களிடம் ஒருங்குறி முறையை வலியுறுத்தினார். 16பிட் யுனிகோடு முறையை எப்படிப் பயன்படுத்தினால் நன்மைபயக்கும் என்ற ஆய்வில் ஈடுபட்டிருந்தார். ஒரு தகவலைத் தமிழில் பதிவு செய்ய விதவிதமான விசைப் பலகைகள் (Key Board). குறிப்பிட்ட மென்பொருளில் (Software) சிறிது காலம் பழகிய நண்பர் புதிய விசைப் பலகையில் தடவிக் கொண்டிருப்பது பரிதாபமான காட்சி. 'அ' என நினைத்து அடித்தால் 'ய' வரும்.( இந்தப் பரிதாபம் ஆங்கில மொழிக்கு இருக்கிறதா? எட்டு நுணுக்குகள் (8 Bits) கணனி முறையில் 256 முகவரிகள் (Points) உள்ளன. இவற்றில் ஒவ்வொரு point - லும் இன்னின்ன எழுத்து என்று முடிவு செய்து இருக்கிறார்கள். அதைத்தான் உலகம் முழுவதும் பயன்படுத்துகிறார்கள்.எனவே, ஆங்கில மொழிக்கு இல்லை இப்பிரச்சினை. நாம் பலவிதக் குறிய்யிடுகளையும் எழுத்துருக்களையும் வைத்துக் கொண்டு திணறிக் கொண்டிருக்கிறோம். தமிழிலேயே மின் அஞ்சல் அனுப்ப முடியும். ஆனால் எப்படிப் படிப்பது? உலகத் தமிழர்கள் உலகத் தமிழிணையப் பல்கலைக் கழக பக்கங்களைத் தமிழில் படிக்க வேண்டுமானால் அதற்கு ஒரு எழுத்துருவை இறக்கிப் படிக்க வேண்டும்!) இதற்கு ஒருங்குறி முறைதான் தீர்வாக அமையும் என்று எண்ணி அது குறித்து ச்஢ந்தனையிலிருந்தார் நாகோ. அவர் கவனம் அதிலிருந்த நேரத்தில் காலம் அவரை நம்மிடமிருந்து பிரித்துச் சென்றுவிட்டது. 1999ம் ஆண்டு மே 26ம் தேதி தமது 52வது அகவையில் மறைந்தார். அது இணைய உலகிற்கு பெரும் இழப்பு ஏழாம் தமிழிணைய மாநாடு சிங்கப்பூரில் கூடும் இந்த நேரத்தில் முதல் மாநாடு சிங்கப்பூரில் நடைபெறவும், தமிழ் இணையத்தில் இடம் பெற சிங்கப்பூரைக் களனாகக் கொண்டு பணியாற்றவும் செய்த தமிழறிஞர் நா.கோவிந்தசாமியை நினைவு கூர்வது இணையத் தமிழர்கள் அனைவருடைய கடமை.


பதிப்பு  உதவி : ஆல்பர்ட், அமெரிக்கா, 

Sunday, September 25, 2011

அம்மா !!!




அம்மா என்று அன்போடு அழைத்தால் இப்போதெல்லாம் பெண்கள் கோப்படுகிறார்கள். ”எனக்கென்ன அம்புட்டு வயசா ஆயிடுச்சு?” என்று மூக்குநுனி மின்ன இதழ்கள் ஒட்டியொட்டிப்பிரிய நெற்றி நெறிய கேட்கிறார்கள். அம்மா என்பதற்குப் பொருள் ஒன்றே ஒன்றுதானா? எத்தனை ஆயிரம்? அவற்றுள் சிலவற்றை மட்டும் நான் இங்கே குறிப்பிடுகிறேன் பாருங்கள்

அம்மா – தங்கை
அம்மா – மகள்
அம்மா – பேத்தி
அம்மா – வேலைக்காரி
அம்மா – தாய்
அம்மா – எஜமானி
அம்மா – நண்பரின் தாய்
அம்மா – கருணையோடு பிச்சையிடுபவள்
அம்மா – காதலி (மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா)
அம்மா – நண்பன் (என்னம்மா கண்ணு சௌக்யமா?)
அம்மா – பாரதியின் செல்லம் (கண்ணம்மா)
அம்மா – அன்னை தெரசா (மத்த எல்லாரையும்விட இந்த அம்மாவைத்தான் எனக்கு ரொம்பப் பிடிக்கும்)
அம்மா – தமிழ் (தமிழன்னை)
அம்மா – தெய்வம்
அம்மா – மருத்துவர் (டாக்டரம்மா என்னைக் கொஞ்சம் திரும்பிப்பாரம்மா)
அம்மா – துன்பம் அகன்ற நிம்மதி (அம்மாடி இப்பதான் நிம்மதியா இருக்கு)
அம்மா – வலியின் வேதனையில் தன்னைமறந்து சொல்லும் சொல்
அம்மா – கலைஞரின் எதிர் இருக்கை
அம்மா – மணமான பெண்ணை அழைக்கும் மரியாதைச் சொல்
அம்மா – பெண்கள்
அம்மா – தாய்க்குலம்

இவ்வளவையும் விட்டுவிட்டு (இன்னும் இருக்கு) ஒரே ஒரு பொருளை மட்டும் எடுத்துக்கொள்வது என்ன ஞாயம்? தமிழன்னை வயதானவளா? என்றென்னும் இளமையானவளல்லவா? அன்னைதெரசா என்று அழைத்தது வயதின் காரணமாகவா? கொஞ்சம் யோசிங்கம்மா!

எல்லாம் சரிதான், ஆனால் எனக்குப் பிடித்த ஒன்று எதுவென்றால், எந்தப் பெண் தன்னை எப்படி அழைக்க விரும்புகிறாளோ அப்படியே அழைப்பதுதான் சரி.
பெண்களைச் சந்தோசப்படுத்தாவிட்டால் எவருக்கும் சொர்க்கம் என்பது இங்கும் இல்லை அங்கும் இல்லை எங்கும் இல்லை!

தமிழில் பெயரிடுங்கள்



 தாய்மொழியை ஒதுக்கி வைத்து பிறநாட்டாரின் தழுவல்மொழிப் பெயரிட்டுக் கொள நினைத்தல்

தாய்ப்பாலை வேண்டாது நாய்ப்பால் உண்ணச்
சம்மதிக்கும் தன்மையது போன்றதாகும்.
வாய்மணக்கும் தமிழில் பெய ரிடுவதாலே
வாய்வெந்து போய்விடுமா ? இட்டால் என்ன ?
குன்றனென்றும் காடனென்றும் மருத னென்றும்
குமணனென்றும் பெயரிடலாம் ஆண் கட்கெல்லாம்
அன்னலென்றும் அன்றிலென்றும் அல்லி யென்றும்
அருவியென்றும் பெயரிடலாம் பெண் டிற்கெல்லாம்
மின்னெனவே பெண்ணுருவம் மின்னு மாயின்
மின்னி யென்றும் பெயரிடலாம் தமிழரெல்லாம்
என்றுமுள செந்தமிழில் பெயரி டாமல்
இரவல் மொழிப் பெயரிடுதல் அடிமைத் தனம்.
 - உவமைக் கவிஞர் சுரதா

சமையலறையை, சந்தோஷமான இடமாக மாற்ற...!


சமையலறை என்றாலே நமக்கெல்லாம் நினைவுக்கு வருவது... அழுக்கடைந்த சுவரும்... ஆங்காங்கே பாத்திரங்களும்... அப்படிப்பட்ட சமையலறையை, சந்தோஷமான இடமாக மாற்ற... சில டிப்ஸ் இதோ...

சுத்தமான சுவர் அவசியம். புகை, சமையல் துகள்கள் என்று அனைத்தும் சேர்ந்து அடுக்களை சுவர் மேலும் அழுக்காகிறது. இதைப் பார்க்க அருவருப்பாக இருக்கும். அடிக்கடி சுவரை சுத்தப்படுத்தினால் சமையல் செய்யும் உணவுகளுக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் பாதுகாப்பு. சுத்தமான சுவர் இருப்பது அழகுக்கு மட்டுமல்ல... ஆரோக்கியத்துக்கும் மிகவும் நல்லது தானே. மேலும் உங்களுக்கு பிடித்தமான நிறத்தில் பெயிண்ட் அடித்துக் கொள்ளவும். குறிப்பாக இளநிறத்தில் பெயிண்ட் அடித்துக் கொண்டால் சின்ன அறையும் பெரியதாகத் தெரியும்.

அடுத்து நல்ல அடுப்பு...! அடுப்பு வாங்கும்போது விலை குறைவாக இருக்கிறது என்று வாங்காமல்... விலை அதிகமாக இருந்தாலும், நவீன தொழில்நுட்பத்தில் வசதி நிறைந்த அடுப்புகளை வாங்கவும். அடுப்பு நன்றாக இருந்தால், சமையல் செய்யும் சூழலில் ஆர்வம் அதிகமாகும். 

சமையலறைக்கு முகம் போல அடுப்பு இருப்பதால் அது அழகாக இருந்தால்... சமையலறையே மிகவும் அழகாக இருக்கும். தரமான அடுப்பாக இருக்கும் பட்சத்தில் 50 சதவீதம் நேரமும், 50 சதவீதம் எரிசக்தியும் மிச்சமாகும். மேலும் 80 சதவீதம் புகையில்லா சுற்றுச்சூழலும் உருவாகும்.

பல நேரங்களில் சமையலுக்குத் தேவையான பொருட்கள் முழுவதும் தீர்த்த பின்னரே... அதை நாம் கவனிப்போம். இதனால் அடிக்கடி பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும். இதற்கு சமையலறையில் நோட்டு மற்றும் பேனா வைத்து, அவ்வப்போது குறிப்பெடுத்துக் கொண்டால் அந்தப் பொருட்களை வாங்கி தயார் நிலையில் வைத்துக் கொள்ளலாம்.

வேலைக்கு செல்லும் பெண்கள், வேகமாக... சுவையாக... சத்தான உணவாக தயாரிக்க வேண்டும். சமையலறையில் ஒரு மணி நேரத்தில் எல்லா வேலைகளையும் முடிக்க முடியாது. அதனால் ஓரளவு விவரம் தெரிந்த குழந்தைகளை உங்களுக்கு உதவியாக வைத்துக் கொள்ளலாம். இதனால் குழந்தைகள் வேலையில் ஈடுபடும். குழந்தைகளுக்குள் சண்டை போடும் வாய்ப்பும் குறையும்.

அப்படி சமையல் வேலைகளை சொல்லும்போது சிறுமிகளுக்கு மட்டுமே சமையல் வேலைகள் என்று கொடுக்காமல் இருவருக்குமே அனைத்து வேலைகளையும் கொடுக்கலாம்.

இப்படி கொடுக்கப்படும் வேலைகளை குழந்தைகள் செய்ய யோசித்தால், உடனே உங்களுடைய கணவரை அழைத்து அந்த வேலைகளை செய்யச் சொல்லலாம். அப்படி அவர் செய்யும்போது, "அப்பாவே செய்யும்போது, நாமும் செய்தால் என்ன?" என்ற நினைப்பு, அவைகளுக்கு தோன்றும். சமையல் மட்டுமின்றி தோட்ட வேலை மற்றும் வீட்டு வேலைகளிலும் குழந்தைகளை ஈடுபடுத்தலாம். சமையலில் பருப்பை வேக வைக்கும்போது, அதிக நேரம் வேகிற காய்கறிகளை குக்கரில் வைத்து வேக வைக்கலாம். இட்லி வேக வைக்கும்போது, முட்டையையும் சேர்த்து வெக வைத்தால் எரிசக்தி, நேரம் எல்லாமே மிச்சமாகும்.