Sunday, March 10, 2013

உடல் எடையைப் பராமரிக்க உதவும் தக்காளி..!


தக்காளியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும் என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

தக்காளியில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. அதனை தொடர்ந்து சாப்பிடுவது இதயத்துக்கு நல்லது. உடலில் கொழுப்பு சேராமல் பாதுகாக்க உதவும் என்பதெல்லாம் ஏற்கெனவே அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

தற்போது தக்காளியை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் எடை அதிகரிக்காமல் ஒரே அளவில் பராமரிக்க முடியும் என்று பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பசியைத் துண்டும் ஹார்மோன்களின் செயல்பாடுகளை தக்காளி கட்டுப்படுத்துகிறது. இதனால் அதிக அளவு சாப்பிடுவது தடுக்கப்பட்டு உடல் எடை அதிகரிக்காமல் கட்டுக்குள் இருக்கிறது.

சராசரி எடை கொண்ட 18 வயது முதல் 35 வயதுக்குள்பட்ட பெண்கள் இதற்கான ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களில் ஒரு பிரிவினருக்கு சான்ட்விச்களுடன் தக்காளி வழங்கப்பட்டது. மற்றொரு பிரிவினருக்கு சான்டவிச்சுடன் கேரட் வழங்கப்பட்டது. இதில் தக்காளி சாப்பிட்டு வந்தவர்கள் குறைவாகவே உணவு சாப்பிட்டனர்.

இது குறித்து ஆய்வாளர் டாக்டர் ஜூலி லவ்குரோவ் கூறுகையில், “இது சிறிய அளவில் நடத்தப்பட்ட ஆய்வுதான் என்றாலும் முடிவு திருப்திகரமானதாக உள்ளது. தக்காளி சாப்பிடுவது பசி உணர்வைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறது என்பது முதல்கட்டமாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து ஆய்வு நடத்தவுள்ளோம்’ என்றார்.
நன்றி:இனி ஒரு விதி செய்வோம்

பெப்சி, கோககோலா-அப்படி என்ன நச்சு பொருள் கலந்துள்ளது?

பெப்சி, கோககோலா-அப்படி என்ன நச்சு பொருள் கலந்துள்ளது? 

பெப்சி, கோககோலா உள்ளிட்ட பானங்களில் நச்சுப்படிவங்கள் உள்ளன என்ற குற்றச்சாட்டு பரவலாக ஆரம்பம் முதல் இருந்து வருகிறது. இன்றைய நுகர்வுக் கலாசாரத்தில் இந்தக் குளிர்பானங்கள் சமூக அந்தஸ்த்தின் குறியீடாகவும் மாற்றியமைக்கப்பட்டு புதிய கலாசாரமயமாக்கத்துக்கும் வித்திட்டுள்ளது.

ஆனால் இந்தப் பானங்களால் ஏற்படக் கூடிய விளைவுகளை சுட்டிக்காட்டும் போது பலரும் ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டனர்.
பெப்சி, கோககோலா மட்டுமல்ல தம்ஸ் ஆப், செவன் அப், மிரிண்டா, ·பேண்டா, லிம்கா என இந்தப் பானங்களின் வரிசை மிகவும் நீளமானது.

இந்த நீண்ட வரிசையைப் போலவே இவற்றால் ஏற்படக்கூடிய தீங்குகளும் நீளமானது. ஆனால் இந்தப் பாதிப்புகள் நமக்குத் தெரிவதில்லை. அந்தளவிற்கு இவை மீதான தாக்கம் ஆர்வம் திட்டமிட்டு பரப்பப்பட்டுள்ளது. குறிப்பாக தொடர்பூடகங்கள் இந்தப் பானங்களின் நுகர்வுக் கலாசாரமயமாக்கலின் முதன்மையான இடம் வகிக்கின்றது.

செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட இரசாயன அமிலங்களே இம்மென்பானங்களில் புதுத்துணர்வு தரும் சுவையூட்டிகளாக சேர்க்கப்படுகின்றன. இனிப்புச் சுவையை நிலைப்படுத்துவதிலும் இந்த அமிலங்கள் பயன்படுகின்றன.

பொதுவாக மென்பானங்களில் சிட்ரிக் அமிலம் பாஸ்பரிக் அமிலம் சில சமயங்களில் மாலிக் அல்லது தாத்தாளிக் அமிலங்கள்கூட சேர்க்கப்படுகின்றன. இந்த செயற்கை அமிலங்கள் எல்லாமே உடலைப் பாதிக்கக்கூடிய தன்மை வாய்ந்தவை.

இந்த அமிலங்கள் பற்களில் பாதுகாப்புப் பூச்சான எனாமலை அரிக்கக்கூடிய தன்மையைக் கொண்டிருக்கின்றன. மென்பானங்கள் குடித்து ஒரு மணிநேரம் வரை இந்த அரிப்பு நீடிக்கலாம். (குடித்தவுடன் பற்கள் கூசுகின்ற சங்கதி இதுதான்) மெனபானங்களின் மூலம் உடலில் சேரும் பாஸ்பரிக் அமிலம் கடைசியில் சிறுநீருடன் வெளியேறும் போது தனியாக வெளியேறுவதில்லை.

எலும்புகளிலும் பற்களிலும் இருக்கும் கால்சியத்தையும் பெயர்த்துத் தன்னுடன் சேர்த்துக் கொண்டு போய்விடுகிறது. கால்சியம் போதாத நிலையில் எலும்புகள் பலம்குன்றி கடைசியில் முறியும் நிலைக்கு போய்விடுகின்றன.

மென்பானங்கள் எல்லாவற்றிலுமே சர்க்கரை சேர்க்கப்படுகின்றன. உதாரணத்துக்கு 325 மில்லிலிட்டர் பெப்சியில் ஐந்தரை தேக்கரண்டி சர்க்கரை சேர்க்கப்படுகிறது. உலக சுகாதார நிறுவனம் (WHO) நாள் ஒன்றுக்கு ஒருவர் உட்கொள்ள வேண்டிய சர்க்கரையில் அளவு 8 தொடங்கி 11 தேக்கரண்டி அளவு என நிர்ணயம் செய்து வைத்திருக்கிறது.

ஒரு நாளில் நாம் அருந்தும் பால், தேநீர் மூலம் நமது உடலில் சேரும் சர்க்கரையின் அளவுடன் மென்பானங்களோடு சேர்ந்து வரும் சர்க்கரையின் அளவையும் கணக்கிட்டால் நிர்ணயித்த அளவைவிட நாம் சாப்பிடும் சர்க்கரையின் அளவு பன்மடங்கு அதிகம் என்பது தெரியவரும்.

சர்க்கரை அதிக அளவு உடலில் சேருவதை, சர்க்கரை தானே என்று இனிப்பான செய்தியாக எடுத்துக் கொள்ள முடியாது. ஊட்டச்சத்து ஆய்வாளரான விஞ்ஞானி மேஜான் யாட்கின் சர்க்கரையை 'வெள்ளை நச்சு'' என்று வர்ணித்து இருக்கிறார்.

சர்க்கரையானது பற்களில் பாக்டீரியா கிருமிகள் பெருக வாய்ப்பு அளிப்பதுடன் இதயநோய், தோல்வியாதி போன்றவற்றையும் ஏற்படுத்தும் என நிரூபிக்கப்பட்டுள்ளது.

இயற்கைச் சர்க்கரையின் சேதாரம் இவ்வளவு என்றால் சிலவகை பானங்களில் சேர்க்கப்படும் செயற்கை சர்க்கரைகளும் தம்பங்குக்கு தொல்லைகளைத் தருகின்றன.

குறைந்த கலோரியைக் கொண்ட டயட் (diet) குளிர்பானங்களில் செயற்கை இனிப்பான அஸ்பாடேம் (Aspaetame) எசல்பேம் (aceslfame) சாக்ரின் (Saccharine) போன்றவை பயன்படுத்தப்படுகின்றன.

மிகப் பரவலாக பயன்படுத்தப்படும் அஸ்பாடேம் சர்க்கரையைவிட 200 மடங்கு அதிகான இனிப்பைக் கொண்டதாகும். இவை தலைவலி, ஞாபகமறதி, வயிற்றுபோக்கு, பார்வை மங்கல், குருடு போன்றவற்றை ஏற்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வாஷிங்டன் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜான் ஒன்லி மிருகங்களின் மீது நடத்திய ஆய்வுகளில் இருந்து அஸ்பாடேம் மூளைப் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புகளை கொண்டிருப்பதாகக் குறிப்பிடுகிறார்.

காபி, தேநீர் போன்றவற்றில் கா·பின் cafein எனும் வேதிப்பொருள் இருப்பது பலரும் அறிந்த ஒன்று. ஆனால் கோககோலா பானத்தின் சுவையை அதிகரிப்பதற்காக கா·பின் பயன்படுத்துவது அதிகம். இது வெளியில் தெரியாத விஷயம். கா·பின் மத்திய நரம்புகளை மிகையாகத் தூண்டிவிடுகிறது. அதிகமான கா·பின் தூக்கமின்மை எரிச்சல், இதயத்துடிப்பு அதிகரிப்பு போன்றவற்றுக்கு வழிகோலிவிடுகிறது.

மென்பானங்களில் சேர்க்கப்பட்டிருக்கும் நிறமூட்டிகள் எவை என்பது பற்றி பாட்டில்களில் குறிப்பிடப்படுவதில்லை. ஆனால் பெரும்பாலான சாயங்கள் புற்றுநோய்க்கு காரணமாய் உள்ளன என்பதே உண்மை. தார்ட்ராசின் எனப்படும் ஆரஞ்சு நிற சாயம் தோலில் அரிப்பு எரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்துவதோடு புற்றுநோய்க்கும் காரணமாகத் திகழ்வதாகக் கருதி இச்சாயத்துக்கு நார்வேயில் தடை செய்யப்பட்டிருக்கிறது.

கார்மேசின் (carmoisine) எனப்படும் சிவப்பு வர்ணம் உணவை நஞ்சடையச் செய்வதுடன் புற்றுநோயையும் ஏற்படுத்தலாம் என்று அமெரிக்காவிலும் கனடாவிலும் தடை செய்யப்பட்டிருக்கிறது.

சிங்கப்பூர் தனது பத்து ஆண்டு சுகாதார இயக்கத்தின் ஓர் அங்கமாக கோககோலா, பெப்சி போன்றவற்றுடன் சர்க்கரை அதிகம் கொண்ட பல குளிர்பானங்களை 1972ல் இருந்து கல்வி நிறுவனங்களில் விற்பதற்கு தடை செய்திருக்கிறது.

சமீபத்தில்கூட பிரான்சில் கோககோலா குடித்த பலருக்கு காய்ச்சல், வாந்தி, தலைவலி ஏற்பட்டதால் பிரான்ஸ் தனது நாட்டில் கோககோலவின் விற்பனைக்கு தடை விதித்துள்ளது.

ஆக இந்திய அளவில் கோலா, பெப்சி போன்ற பானங்களுக்கு தடை விதிக்க எடுக்கும் முயற்சி ஒன்றும் புதுமை அல்ல. இவ்வளவு ஆபத்துகளையும் தன்னில் கரைத்துக் கொண்டு வரும் மென்பானங்களை இவ்வளவுநாள் அனுமதித்திருப்பது மோசமானது.

இந்த மென்பானங்கள் மீது தடைவிதித்தல் என்பதை பகிரங்கவிவாதப் பொருளாக்க வேண்டும். இவற்றால் விளையும் கேடுகள் பற்றி அறிவுபூர்வமான விழிப்புணர்வு வெகுசன மட்டத்தில் உருவாக்கப்பட வேண்டும்.

மேலும் உள்ளூர் வளங்களைக் கொண்டு தயாரிக்கும் உள்ளூர் மென்பானங்களில் உற்பத்தியை பெருக்க கொள்கை ரீதியான முடிவுக்கு அரசு முன்வர வேண்டும்.


நன்றி:இனி ஒரு விதி செய்வோம்

Saturday, March 9, 2013

உண்ணாவிரத மாணவர்கள்


கோரிக்கை நிறைவேறும் வரை போராடுவோம் - உண்ணாவிரத மாணவர்கள் .
09 03 2013


தமிழ் ஈழ மக்கள் விடுதலைக்காக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். இந்திய அரசு குழப்பமற்ற ஒரு தெளிவான தீர்மானத்தை ஐ.நா.வில் முன்மொழிய வேண்டும். சர்வதேச விசாரணைக் குழுவில் ஆசிய நாடுகள் இடம்பெறக் கூடாது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி திலிபன், பிரிட்டோ, தமிழ்மாறன் உள்ளிட்ட மாணவர்கள் லயோலா கல்லூரி அருகில் நேற்றைய தினம் நுங்கம்பாக்கம் பகுதியில் அவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்தனர். உண்ணாவிரதம் இருந்தனர்.

பிற கல்லூரி மாணவர்கள், அவர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்து வந்த நிலையில், நேற்று மாலை காவல்துறை இலங்கை துதரகம் அருகைமையில் உண்ணாவிரதம் நடப்பதால் அசம்பாவிதங்கள் ஏற்படும் என்ற அச்சத்தில் அங்கு தொடர்ந்து நடத்த அனுமதி மறுத்த நிலையில் தங்களது போராட்டத்தை கோயம்பேட்டுக்கு மாற்றினர்.


இரண்டாவது நாளான இன்று உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்கள் பேசுகையில் எமது கேரிக்கை நிறைவேற்றும் வரை தாம் போரடபோவதகவும் அப்படி போராடும் பச்சத்தில் தாம் இறந்தால் தங்களது உடலை மாணவர்கள் கையில் எடுத்து கோரிக்கை நிறைவேறும் வரை போரடவேண்டும் என்று கூறியுள்ளனர் .

இவ் ஆர்பட்டதிற்கு பழ நெடுமாறன் ,ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மேலும் பல சமுக ஆவலர்கள் , மாணவர்கள் , உணர்வாளர்கள் , வணிகர் சங்க நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்து கொண்டு உள்ளனர்.
லயாலோ கல்லூரி மாணவர்கள் நடத்தும்
பட்டினி போராட்டம் அரசியலுக்காகவோ ,
பணத்திற்காகவோ இல்லை .. அவர்களிடம் இருக்கும்
தமிழின உணர்வில்
கொஞ்சமாவது வேண்டாமா நமக்கு ..
அவர்களுக்கு இணையத்தின் மூலமாவது உங்கள்
ஆதரவை அளியுங்கள் .. எகிப்தில், துனுசியாவில்
இனையதின் மூலமாக ஒரு மாற்றதை ஏற்படுத்தும்
போது நம்மால் ஏற்படுத்த முடியாதா..?
இன்னும் தூங்கினால் நம் மீனவர்கள் செத்துக்
கொண்டும் , ஈழ தமிழர்கள்
சித்ரவதைகளை அனுபவித்துகொண்டும் தான்
இருப்பார்கள் .. 

Friday, March 8, 2013

வீரமங்கை வேலு நாச்சியார்

உலக மகளிர் தினம் நல்வாழ்த்துகள்...!

வீரமங்கை வேலு நாச்சியார்

வீரமங்கை வேலு நாச்சியார் அதிகாலையில் ஆதவனுக்கு முன் எழுந்து விடுவார். மறவர் படைக்கு கொடுக்கிற போர்ப் பயிற்சிகளைப் பார்வையிடுவார். தான் ஏற்படுத்திய உடையாள் படை என்ற பெண்களின் படைக்குப் போர்ப் பயிற்சி அளிப்பார். அவர்கள் வளரியை எப்படி லாவகமாக வீசுவது என்பது பற்றியும் விளக்கமாக விவரிப்பார். அச்சீமையில் உள்ள புரட்சியாளர்களுக்கு ஓலை அனுப்புவார். நேரில் வந்து பேசுகிற கிளர்ச்சி தலைவர்களுடன் பகைவர் படையின் பலம் பலவீனம் குறித்து கேட்டு அறிந்துகொள்வார். விடுதலையை விரும்பிய வீரர்கள், உறவுகளை இழந்தவர்கள் அனைவரும் வேலு நாச்சியாரின் பக்கம் வந்து சேர்ந்தனர். விடுதலைப் படைகளின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் அதிகமாக வளர்ந்தது.

வேலு நாச்சியார் வெள்ளையர்களை வீழ்ந்த 30000 வீர நங்கையர்களாகிய பெண்கள் படையைத் திரட்டி அதனை இரு அணிகளாக வகுத்து ஒன்று வீரப்படை, மற்றொன்று சோரப்படை என்று பெயர் சூட்டி, அப்படைகளில் ஒரு அணிக்குத் தாமே தலைமை தாங்கி ஆங்கிலப் பரங்கியர் படைகளோடு ஆவேசத்தோடு போர்புரிந்தார்.

வேலு நாச்சியார் தலைமையில் பெண்கள் படை அரண்மனைக்குள் நுழைந்து தளபதி பான்ஜோர் படையைச் சந்திக்க முடிவு செய்தனர். விஜயதசமி, நவராத்திரியை முன்னிட்டு சிவகங்கை அரண்மனையில் உள்ள இராஜ ராஜேஸ்வரியை வணங்க முன்வாயில் திறந்து விடப்பட்டது. வேலு நாச்சியாரும் அவரது பெண்கள் படையும் மாறுவேடத்தில் பொது மக்களோடு கலந்து கோவிலுக்குள் புகுந்தனர். திட்டமிட்டபடி தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குயிலி என்ற பெண் தம் உடம்பெல்லாம் நெய்யூற்றி தீ வைத்தபடி வெள்ளையரின் ஆயுதக் கிடங்கில் குதித்தாள். குயிலியோடு கும்பினியரின் அனைத்து ஆயுதங்களும் எரிந்து சாம்பலாயின. விடுதலைப் படையை எதிர்கொள்ள இயலாமல் வெள்ளையர் படை விழி பிதுங்கியது. இதற்கிடையில் பான்ஜோரை வேலு நாச்சியார் நேர்கொண்டார். அவனது துப்பாக்கிக் குண்டிலிருந்து தப்பத் தூணில் மறைத்து வேலு நாச்சியார் வித்தை காட்டினார். குண்டுகள் தீர்ந்ததும் பான்ஜோரும் வாள் ஏந்தினாள். இதற்காகவே காத்திருந்தது போல் வேலு நாச்சியார் ஒரு சில விநாடிகளில் பான்ஜோரை மண்டியிடச் செய்தார். தனது கணவனைக் கொன்றவரைத் தோற்கடித்தபின் அவரின் உயிரை பறிக்க விரும்பவில்லை. இந்தச் சாகசங்களை அவர் செய்தபோது வயது ஐம்பது. இவ்வளவு வீரமிக்க பெண் முற்காலத்தில் பிறந்ததும் இல்லை ...இனி பிறக்க போவதும் இல்லை ...

மாதர் குல மணிவிளக்குகளே உங்கள் பொற்பாதங்கள் பணிகிறேன்.அனைத்து மகளிருக்கும் உலக மகளிர்தின நல்வாழ்த்துகள்



thanks to iyappan gp
புகைப்படம்: உலக மகளிர் தினம் நல்வாழ்த்துகள்...!  வீரமங்கை வேலு நாச்சியார்  வீரமங்கை வேலு நாச்சியார் அதிகாலையில் ஆதவனுக்கு முன் எழுந்து விடுவார். மறவர் படைக்கு கொடுக்கிற போர்ப் பயிற்சிகளைப் பார்வையிடுவார். தான் ஏற்படுத்திய உடையாள் படை என்ற பெண்களின் படைக்குப் போர்ப் பயிற்சி அளிப்பார். அவர்கள் வளரியை எப்படி லாவகமாக வீசுவது என்பது பற்றியும் விளக்கமாக விவரிப்பார். அச்சீமையில் உள்ள புரட்சியாளர்களுக்கு ஓலை அனுப்புவார். நேரில் வந்து பேசுகிற கிளர்ச்சி தலைவர்களுடன் பகைவர் படையின் பலம் பலவீனம் குறித்து கேட்டு அறிந்துகொள்வார். விடுதலையை விரும்பிய வீரர்கள், உறவுகளை இழந்தவர்கள் அனைவரும் வேலு நாச்சியாரின் பக்கம் வந்து சேர்ந்தனர். விடுதலைப் படைகளின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் அதிகமாக வளர்ந்தது.  வேலு நாச்சியார் வெள்ளையர்களை வீழ்ந்த 30000 வீர நங்கையர்களாகிய பெண்கள் படையைத் திரட்டி அதனை இரு அணிகளாக வகுத்து ஒன்று வீரப்படை, மற்றொன்று சோரப்படை என்று பெயர் சூட்டி, அப்படைகளில் ஒரு அணிக்குத் தாமே தலைமை தாங்கி ஆங்கிலப் பரங்கியர் படைகளோடு ஆவேசத்தோடு போர்புரிந்தார்.  வேலு நாச்சியார் தலைமையில் பெண்கள் படை அரண்மனைக்குள் நுழைந்து தளபதி பான்ஜோர் படையைச் சந்திக்க முடிவு செய்தனர். விஜயதசமி, நவராத்திரியை முன்னிட்டு சிவகங்கை அரண்மனையில் உள்ள இராஜ ராஜேஸ்வரியை வணங்க முன்வாயில் திறந்து விடப்பட்டது. வேலு நாச்சியாரும் அவரது பெண்கள் படையும் மாறுவேடத்தில் பொது மக்களோடு கலந்து கோவிலுக்குள் புகுந்தனர். திட்டமிட்டபடி தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குயிலி என்ற பெண் தம் உடம்பெல்லாம் நெய்யூற்றி தீ வைத்தபடி வெள்ளையரின் ஆயுதக் கிடங்கில் குதித்தாள். குயிலியோடு கும்பினியரின் அனைத்து ஆயுதங்களும் எரிந்து சாம்பலாயின. விடுதலைப் படையை எதிர்கொள்ள இயலாமல் வெள்ளையர் படை விழி பிதுங்கியது. இதற்கிடையில் பான்ஜோரை வேலு நாச்சியார் நேர்கொண்டார். அவனது துப்பாக்கிக் குண்டிலிருந்து தப்பத் தூணில் மறைத்து வேலு நாச்சியார் வித்தை காட்டினார். குண்டுகள் தீர்ந்ததும் பான்ஜோரும் வாள் ஏந்தினாள். இதற்காகவே காத்திருந்தது போல் வேலு நாச்சியார் ஒரு சில விநாடிகளில் பான்ஜோரை மண்டியிடச் செய்தார். தனது கணவனைக் கொன்றவரைத் தோற்கடித்தபின் அவரின் உயிரை பறிக்க விரும்பவில்லை. இந்தச் சாகசங்களை அவர் செய்தபோது வயது ஐம்பது. இவ்வளவு வீரமிக்க பெண் முற்காலத்தில் பிறந்ததும் இல்லை ...இனி பிறக்க போவதும் இல்லை ...   மாதர் குல மணிவிளக்குகளே உங்கள் பொற்பாதங்கள் பணிகிறேன்.அனைத்து மகளிருக்கும் உலக மகளிர்தின நல்வாழ்த்துகள்

எண்ணத்தில் நீ வெறும் மலடெ

இனிப்பாக இருந்தது என் ஜாதியை எனக்குள் எண்ணிப் பார்த்துப் பெருமைப் படும்போது !

இறுமாப்பாய் இருந்தது என் ஜாதிப் பெருமையை என் தந்தையோடு பகிர்ந்து கொள்ளும்போது !

இதமாக இருந்தது என் ஜாதிக்காரர்கள் எங்கள் ஊரில் இவ்வளவு நெருக்கமாக என் உறவாய் இருப்பதைப் பார்க்கும்போது !

இன்னும் கொஞ்சம் கர்வமாய்க் கூட இருந்தது இந்த மாநிலத்தின் மக்கள் தொகையில் என் ஜாதிக்காரர்கள் இத்தனை சதவிகிதம் இருப்பதாய்ச் சொல்லும் புள்ளி விவரங்களைத் தெரிந்து கொண்ட போது !

சகோதரனுக்கு விபத்தொன்று நடந்த பின்னே வேண்டிய இரத்தம் எவனோ இன்னொரு ஜாதிக்காரன் தந்த பிறகுதான் எனக்குள் முகிழ்த்தது அட மானிடா! எண்ணத்தில் நீ வெறும் மலடென்று !

- Divya Dharshini
புகைப்படம்: இனிப்பாக இருந்தது என் ஜாதியை எனக்குள் எண்ணிப் பார்த்துப் பெருமைப் படும்போது !  இறுமாப்பாய் இருந்தது என் ஜாதிப் பெருமையை என் தந்தையோடு பகிர்ந்து கொள்ளும்போது !  இதமாக இருந்தது என் ஜாதிக்காரர்கள் எங்கள் ஊரில் இவ்வளவு நெருக்கமாக என் உறவாய் இருப்பதைப் பார்க்கும்போது !  இன்னும் கொஞ்சம் கர்வமாய்க் கூட இருந்தது இந்த மாநிலத்தின் மக்கள் தொகையில் என் ஜாதிக்காரர்கள் இத்தனை சதவிகிதம் இருப்பதாய்ச் சொல்லும் புள்ளி விவரங்களைத் தெரிந்து கொண்ட போது !  சகோதரனுக்கு விபத்தொன்று நடந்த பின்னே வேண்டிய இரத்தம் எவனோ இன்னொரு ஜாதிக்காரன் தந்த பிறகுதான் எனக்குள் முகிழ்த்தது அட மானிடா! எண்ணத்தில் நீ வெறும் மலடென்று !  - Divya Dharshini

திருமணம் என்பது ஆண்களின் வாழ்வில் ஒரு நிகழ்வு, ஆனால் ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் அது மாற்றம்....

எல்லா பெற்றோருக்கும் தங்கள் பெண்ணை ஒரு நல்ல இடத்தில் கட்டி கொடுக்க வேண்டும் என்ற கனவு நியாயமான ஒன்று தான்.. அவள் பெற்றோரும் அப்படித் தான்... மாப்பிள்ளைப் பார்க்க தொடங்கினர் , படித்த மாப்பிளை , நல்ல வேலையில் கை நிறைய சம்பாதிக்கும் ஒருவன், நல்ல குடும்பம், இருவருக்கும் இருவரையும் பிடித்தும் போனது, உடனே நிச்சயம் செய்துவிட்டனர் , தினமும் அழை பேசியில் இருவரும் தங்களைப் பற்றி பேச தொடங்கினர், இருவருக்கும் ஏற தாழ ஒரே மனப்பான்மை தான், இருவருக்கும் பொருந்தி போனது, திருமண நாள் நெருங்க நெருங்க வீட்டில் ஒரே பதட்டம், வேலைகள் தலைக்கு மேல் கிடந்தது, இருவர் வீட்டிலும் வேலைகள் துரிதமாக நடந்தேறியது.. நாளை திருமணம், அவள் லேசாக அவள் வீட்டை சுற்றிப் பார்த்தாள், தினமும் அவருடன் பேசியதில் தான் இந்த வீட்டை விட்டு செல்ல போகிறோம் என்று தெரியவில்லை, ஆனால் அன்று ஏதோ ஒன்றை இழக்க போகிறோம் என்று அவள் மனம் பரிதவித்தது. தாயையும், தந்தையையும் பார்த்தாள் எல்லோரும் வேலையில் இருந்தனர், அவள் வீட்டை ஒரு முறை சுற்றி வந்தாள், விரித்த கண்களோடு வீட்டை பார்த்தாள், கண்கள் சுருங்கிய பின்னர் ஓரத்தில் நீர் துளி சொட்டியது.. தங்கையின் புது துணி பரவசத்தில் அக்கா என்று ஓடி வந்தாள்.. அவளை பார்த்ததும் என்ன ஆச்சு அக்கா என்றாள், பூ வாங்கினால் கூட சமமாய் வெட்ட சொல்லி சண்டை போடும் அக்கா , இனி நான் யாருடன் சண்டை போடுவேன், இந்த சின்ன சின்ன மகிழ்ச்சிகளை விட்டுக் கொடுத்து விட்டு நான் செல்ல போகிறேனே என்று எண்ணினாள், , அடுப்படியில் பால் கொதித்து கொண்டிருந்தது , ஓடி சென்று அடுப்பை அனைத்து அம்மா பால் வெச்சிட்டு எங்க போனே என்று திட்டினால், அவளை பெற்றவள், அவளை வளர்த்தவள் என்றாலும் , அம்மா வை அடிக்கடி திட்டி விடுவதும், பின் கட்டி அணைப்பதும் இனி கிடைக்குமா?

அப்பா யாருடனோ தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார், அவர் பக்கத்தில் சென்று அமர்ந்தாள், பேசிக் கொண்டே அப்பா இவளைப் பார்த்தார், அம்மா வை கொஞ்சம் கூப்பிடுமா என்று சொல்லி விட்டு மறுபடியும் பேச தொடங்கினர், இவள் எச்சிலையும் சோகத்தையும் தொண்டையில் விழுங்கி விட்டு எழுந்து அம்மா வை அழைத்து விட்டு, வீட்டின் வெளியில் உள்ள மாடிப்படியில் உட்கார்ந்தாள், எங்கிருந்தோ, அடியே உள்ள போ, கருத்துர போற நாளைக்கு கல்யாணத்த வெச்சிக்கிட்டு இங்க வந்து உட்காரா பாரு என்று எப்பொழுதும் எதையாவது சொல்லி கொண்டிருக்கும் பாட்டி, எரிச்சலுடன் பாட்டியிடம் எப்பொழுதும் பேசும் அவள் அன்று பாட்டி சொன்னதை கேட்காமல் பாட்டியை முறைத்துப் பார்த்தாள், முகம் அப்படியே அழுவது போல மாறியது, பாட்டி உடனே என்னடி என்ன ஆச்சு என்று பதட்டத்துடன் கேட்டாள், அழுகை அருவிப் போல் பொங்கியது உள்ளே ஓடி சென்று விரக்தியுடன் அம்மா அப்பா என்று கத்தினால் எல்லோரும் ஏதோ என்று பயந்துக்கொண்டு ஓடி வந்தனர், உடனே, அம்மா நான் போகமாட்டேன், இங்கேயே இருந்துடுறேன் , உங்களை விட்டு நான் எப்படி செல்வேன், அங்க எப்டி இருக்குமோ, எனக்கு பயமா இருக்கு, நான் போகலை என்று மெல்லிதாய் அழுதாள், உடனே அப்பாவின் மனம் அழுதது, அம்மா சமாதனம் சொன்னாள், அப்பாவுடன் அவ்வளவு நெருக்கம் இல்லாமல் இருந்தாலும் அப்பாவிற்கும் பெண்ணிற்கும் உள்ள அந்த பாசம் வார்த்தையில் வருணிக்க முடியாதது , தங்கை குலுங்கி குலுங்கி அழுதாள், அக்கா அழாதே கா மாமா உன்ன நல்லா பார்த்துபாறு கா என்று வெகுளி பேச்சில் சமாதானம் செய்தாள், அன்றிரவு அவளுக்கு பிடித்த அத்தனையும் சமைத்தாள் அம்மா, ஆனால் அவள் புண்ப்பட்டு போயிருந்தாள்... நாளை திருமணம்... போகும் இடம் சொர்கமோ, இல்லையோ என்றெல்லாம் தெரியாது .. ஆனால் அவள் வாழ்ந்த ஒரு சொர்கத்தை விட்டு மட்டும் அவள் செல்ல போகிறாள். திருமணம் என்பது ஆண்களின் வாழ்வில் ஒரு நிகழ்வு, ஆனால் ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் அது மாற்றம்.... அவள் வாழ்ந்த வீட்டிலிருந்து அவளை வேரோடு பிடிங்கு எடுத்து மற்றொரு இடத்தில் நட்டு வைக்கும் விழா தான் திருமணம் , துளிர்ந்த பெண்களும் உள்ளனர், பட்டுப்போன பெண்களும் உள்ளனர் ....


(மகளிர் அனைவருக்கும் இனிய மகளிர்தின வாழ்த்துக்கள்....)



by: Harini Nagaraj
 - Nithya Srinivasan Mohan Thiya

Thursday, February 28, 2013

தமிழன் சாதித்த கட்டிடக்கலை.!!!


தமிழன் சாதித்த கட்டிடக்கலை.!!!

தமிழ்ச்சித்தர்களின் என்றுமழியாக் கட்டிடக்கலை..!

தமிழ்ச்சித்தர்களின் கட்டடக்கலைக்கே பெருமை தேடித்தரும் கலைக் கருவூலமாகவும், இராச ராச சோழ மன்னனின் ஒப்பற்ற ஆட்சியின் நினைவுச் சின்னமாகவும் இன்றளவும் இக்கோயில் விளங்கி வருகிறது.

#தஞ்சைப் பெருங்கோவில்

பழந்தமிழர்களின் கட்டடக்கலை நிபுணத்துவத்தை உலகுக்குப் பறை சாற்றி, ஆயிரமாயிரம் வருடங்களுக்கு பராமரிப்பின்றியே நிலைக்கக்கூடிய கோவில்.

சித்தபெருமான் கருவூரார் அவர்களால் வடிவமைக்கப்பட்டு, நெறிப்படுத்தப்பட மன்னன் இராச இராச சோழனால் கட்டப்பட்ட மாபெருங் கோவில்.

காணொளி (video doumentary by BBC)
http://video.google.com/videoplay?docid=-5096103596865842301
watch the full video.

or @ youTUbe
http://www.youtube.com/watch?v=SnANjdReAlY

200 தாஜ்மகால்களுக்கு ஈடான நில, கலை, கட்டட நிபுணத்துவம் கொண்ட கோவில். இருந்தும் இது உலக அதிசயங்களில் இடம்பெறாதது கேள்விக்குரியது.
தமிழன் சாதித்த கட்டிடக்கலை.!!!

தமிழ்ச்சித்தர்களின் என்றுமழியாக் கட்டிடக்கலை..!

தமிழ்ச்சித்தர்களின் கட்டடக்கலைக்கே பெருமை தேடித்தரும் கலைக் கருவூலமாகவும், இராச ராச சோழ மன்னனின் ஒப்பற்ற ஆட்சியின் நினைவுச் சின்னமாகவும் இன்றளவும் இக்கோயில் விளங்கி வருகிறது.

#தஞ்சைப் பெருங்கோவில்

பழந்தமிழர்களின் கட்டடக்கலை நிபுணத்துவத்தை உலகுக்குப் பறை சாற்றி, ஆயிரமாயிரம் வருடங்களுக்கு பராமரிப்பின்றியே நிலைக்கக்கூடிய கோவில்.

சித்தபெருமான் கருவூரார் அவர்களால் வடிவமைக்கப்பட்டு, நெறிப்படுத்தப்பட மன்னன் இராச இராச சோழனால் கட்டப்பட்ட மாபெருங் கோவில்.

காணொளி (video doumentary by BBC)
http://video.google.com/videoplay?docid=-5096103596865842301
watch the full video.

or @ youTUbe
http://www.youtube.com/watch?v=SnANjdReAlY

200 தாஜ்மகால்களுக்கு ஈடான நில, கலை, கட்டட நிபுணத்துவம் கொண்ட கோவில். இருந்தும் இது உலக அதிசயங்களில் இடம்பெறாதது கேள்விக்குரியது.