Monday, August 29, 2011

கொலஸ்ட்ரால் ஃப்ரீ உணவுகள்

டயட் பேட்டீஸ்

தேவையான பொருள்கள்:
பொடியாக நறுக்கிய முட்டைகோஸ் - 1 கப்,
நறுக்கிய குடைமிளகாய் - 1 கப்,
பட்டாணி - 1 கப்,
பொடியாக நறுக்கிய கேரட்- 1/2 கப்,
கோதுமை பிரட் - 6 ஸ்லைஸ்,
நறுக்கிய பச்சை மிளகாய் - 2 டீஸ்பூன்,
கொத்துமல்லி - 1கப்,
உப்பு, ஆலிவ் ஆயில் - தேவைக்கேற்ப,
பிளாக்ஸ் சீட்ஸ் (flax seeds) (ராகி நிறத்தில் அரிசி போல இருக்கும்) இலேசாக வறுத்துப் பொடித்தது - 1 கப்.
செய்முறை:
வாணலியில் ஆலிவ் எண்ணெய் விட்டு, பச்சை மிளகாய், நறுக்கிய காய்களைச் சேர்க்கவும். நன்கு வதங்கியவுடன் உப்பு சேர்த்து, கொத்துமல்லி தழை தூவி இறக்கவும். வெதுவெதுப்பான நீரில் பிரட் ஸ்லைஸ்களை நனைத்து, ஒட்டப்பிழிந்து காய்கறிக் கலவை-யுடன் சேர்க்கவும். எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். இந்தக் காய்கறிக் கலவையை எலுமிச்சை அளவு எடுத்து விருப்பமான வடிவங்களில் (தட்டை / உருண்டை) செய்து கொள்ளவும். பொடித்து வைத்துள்ள flax seedsல் புரட்டி, நான்ஸ்டிக் தவாவில் ஃப்ரை செய்யவும். தேவைப்பட்டால் சிறிது ஆலிவ் ஆயிலை விடவும். கெட்சப் அல்லது மல்லி சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
ஆலிவ் ஆயில் ‘ஜீரோ கொலஸ்ட்ரால்’ தன்மை கொண்டது. ஃபிளாக் விதைகள் கெட்ட கொலஸ்ட்ராலைக் கரைப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

சிறுதானியப் பொடி

தேவையான பொருள்கள்:
கோதுமை, உளுத்தம் பருப்பு -
தலா 1/2 கப்,
உளுத்தம் பருப்பு, தினை அரிசி, கம்பு,
கேழ்வரகு, வரகரிசி - தலா 1/4 கப்,
பாசிப் பருப்பு, கடலைப் பருப்பு, புழுங்கல் அரிசி, மிளகு, சீரகம், வெந்தயம்- தலா 2 டீஸ்பூன்,
மஞ்சள், சுக்கு - தலா 1 துண்டு,
கடுகு - 1 ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு
பருப்பு, தானிய வகைகளை வெறும் வாணலி-யில் தனித்தனியே மணம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும். அனைத்தையும் ஒன்றாகக் கலந்து மிஷினில் மாவாக அரைத்து வைத்துக் கொள்ளவும்
.
செய்முறை :
தேவையான அளவு மாவை எடுத்துக் கரைத்து தோசையாகச் சுட்டுச் சாப்பிடலாம். தொட்டுக் கொள்ள எதுவும் தேவையில்லை. மாவில் காரம் இருக்கும்.
அரை கப் தயிர் எடுத்து, அதில் பச்சை மிளகாய், கடுகு, கறிவப்பிலை தாளித்து, 2 டீஸ்பூன் சிறு தானியப் பொடியைப் போட்டுக் கலக்கினால் பச்சடி தயார்.
தேவையெனில், அதில் ஒரு பெரிய வெங்காயம் நறுக்கிப் போடலாம். சப்பாத்தி, ரைஸ் வகைகளுக்குத் தொட்டுக் கொள்ள ஏற்றது.
மாவில் சிறிது நீர் தெளித்து, உப்புப் போட்டு பிசிறி, புட்டாக அவித்து எடுக்கலாம். தேவையெனில் தேங்காய்த் துருவல் தூவி இறக்கலாம்.
மாவைக் கெட்டியாகக் கரைத்து, வெங்காயம் வதக்கிப் போட்டு குழிப்பணியாரமாகச் செய்யலாம்.
சத்துக்கள் நிறைந்தது. கொலஸ்ட்ரால் இல்லாதது.

நியூட்ரிஷியஸ் பேல்

தேவையான பொருள்கள்:
எண்ணெய் சேர்க்காமல் வாணலியில் வறுத்த வேர்க்கடலை, முளைகட்டிய பாசிப் பயறு - தலா 1/4 கப்,
பொடியாக நறுக்கிய தக்காளிப் பழம்- 1/2 கப்,
பழுத்த மாதுளை விதை - 1/4 கப்,
பொடியாக நறுக்கிய ஆப்பிள் - 1 கப்,
மாங்காய் துருவியது - 1/4 கப்,
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 கப்,
கார்ன்ஃப்ளேக்ஸ் - 1/2 கப்,
கரம் மசாலாத் தூள் - 1/2 டீஸ்பூன்,
எலுமிச்சைச் சாறு - 1 டேபிள் ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
பொடியாக நறுக்கிய கொத்துமல்லி - 1/4 கப்,
உருளைக்கிழங்கு வேகவைத்து பொடியாக நறுக்கியது - 1 கப்,
இனிப்புச் சட்னிக்கு தேவையான பொருள்கள்:
மிளகாய்த் தூள் - 1/2 டீஸ்பூன்,
புளி - நெல்லிக்காய் அளவு,
பேரீச்சம் பழம் - விதை நீக்கியது - 6,
உலர்ந்த திராட்சை - 2 டேபிள் ஸ்பூன்,
வெல்லம் - 1 டேபிள் ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு
சட்னி செய்முறை:
புளி, திராட்சை, பேரீச்சம்பழம் இவற்றை ஊறவைத்து நைஸாக அரைத்துக் கொள்ளவும். வெல்லம், உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் வீட்டு சற்றுக் கட்டியாக ஆகும் வரை அடுப்பில் வைத்துக் கொதிக்கவிட்டு இறக்கினால் இனிப்புச் சட்னி தயார்.
பேல் தயார் செய்யும் முறை :
நறுக்கிய ஆப்பிள் துண்டுகளின் மேல் எலுமிச்சைச் சாறு விட்டுக் கலக்கவும். ஆப்பிள் நிறம் மாறாமல் இருக்கும்.
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் வேர்க்கடலை, பயறு, தக்காளிப் பழம், மாதுளை விதை, மாங்காய், உருளைக்கிழங்கு, வெங்காயம், எலுமிச்சம் பழச்சாறு கலந்த ஆப்பிள் துண்டுகள், கார்ன்ஃப்ளேக்ஸ், உப்பு சேர்த்துப் போட்டு மெதுவாகக் குலுக்கி வைக்கவும்.
பரிமாறுவதற்கு முன் பேலை தட்டில் போட்டு, தேவையான அளவு சட்னி விட்டுக் கலக்கவும். கரம் மசாலாப் பொடி தூவி, பச்சைக் கொத்து-மல்லி தூவி பரிமாறவும். எல்லாவித வைட்டமின்களும் அடங்கிய நியூட்ரிஷியஸ் பேல் சுவையிலும் அசத்தும்.

கிரிஸ்பி சான்ட்விச்


தேவையான பொருள்கள்:
சதுர வடிவ ரஸ்க் - 4,
முளைகட்டிய பயிறு - 3 டேபிள் ஸ்பூன்,
காரட் துருவியது - 4 டேபிள் ஸ்பூன்,
வெள்ளரிக்காய், கோஸ் துருவியது -
தலா 2 டீஸ்பூன்,
எலுமிச்சம் பழம் - 1/2 மூடி,
மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
கொத்துமல்லித் தழை பொடியாக அரிந்தது - சிறிதளவு
புதினா - சிறிதளவு
செய்முறை:
பாத்திரத்தில் துருவிய காரட், கோஸ், வெள்ளரிக்காய் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும். முளைகட்டிய பயிறை நன்கு கொதிக்கும் தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவும். அளவாகத் தண்ணீர் ஊற்றவும். பிறகு அதை வடித்துக் காய்களுடன் சேர்த்துக் கலக்கவும். வெள்ளரிக்காயிலிருந்து தண்ணீர் வடியும். அதனால் அதை வடிகட்டியில் போட்டுத் தண்ணீர் வடிந்தபின் சேர்க்கவும். இப்பொழுது இதில் எலுமிச்சம் பழம் பிழிந்து தேவையான உப்பு, மிளகுத்தூள் சேர்த்துக் கலக்கவும். பொடியாக அரிந்த கொத்துமல்லி, புதினா சேர்த்துக் கலக்கவும்.
சதுர வடிவ ரஸ்கின் மீது இந்தக் கலவையை வைத்து மற்றொரு ரஸ்கால் மூடிப் பரிமாறவும். இதில் எண்ணெய், வெண்ணெய் போன்ற கொழுப்பு உணவுப்பொருட்கள் இல்லாததால் இது கொலஸ்ட்ரால் ஃப்ரீ ஸ்நாக். அதே சமயம் சுவையாகவும், நிறைவாகவும் இருக்கும். காலை, மாலை எந்த வேளையும் சாப்பிடலாம். டீன்-ஏஜ்காரர்கள் தாங்களே செய்து சாப்பிடக்கூடிய சுலபமான சுவையான ஸ்நாக் இது!

வெஜிடபிள் தால் புட்டு

தேவையான பொருள்கள்:
பச்சரிசி - 1/2 கப்,
சம்பா கோதுமை ரவை - 1/2 கப்,
ராஜ்மா, கொள்ளு, கடலைப் பருப்பு, பாசிப் பயறு, சோயா, சோளம், கேழ்வரகு, பச்சைப் பட்டாணி - தலா 1/4 கப்,
பொடியாகத் துருவிய காரட், பீன்ஸ், முட்டைக்கோஸ் எல்லாம் கலந்தது - 1/2 கப்,
கீறிய பச்சைமிளகாய் - 4,
மஞ்சள் தூள் - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்,
எலுமிச்சைச் சாறு - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்துச் சூடானதும், கோதுமை ரவையை இலேசாக வறுக்கவும். மற்ற தானியங்களை ஒவ்வொன்றாகத் தனித்தனியே வாசனை வரும்வரை வறுத்து, ஆறியதும் ஒன்றாகப் போட்டு, மிக்ஸியில் பொடித்து சலித்துக் கொள்ளவும். மிஷினிலும் கொடுத்தும் அரைக்கலாம்.

அரைத்த மாவுடன் வறுத்த கோதுமை ரவையைக் கலந்து, உப்பு கரைத்த நீர் தெளித்து பிசிறி வைக்கவும். அரை மணி நேரம் கழித்து, சூடான வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், காய்கறிகளைப் போட்டு, உப்பு, மஞ்சள் தூள், பச்சை மிளகாய் சேர்த்து இலேசாக வதக்கவும். பிறகு பிசிறி வைத்திருக்கும் மாவுடன், வதக்கிய காய்கறிகளைக் கலந்து, இட்லித் தட்டில் வைத்து ஆவியில் வேகவிடவும். புட்டு வெந்து, கொஞ்சம் ஆறியதும் உதிர்த்துவிட்டு,எலுமிச்சைச் சாறு கலந்து பரிமாறவும். ஆவியில் வேகவைக்கப்பட்ட இந்தச் சுவையான புட்டு மிகவும் சத்தானதும் கூட!

பாட்டி வைத்தியம்,

1. நெஞ்சு சளிக்கு தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

*
2. தலைவலிக்கு ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

*

3. தொண்டை கரகரப்புசுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

*

4. தொடர் விக்கல்uக்கு நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

*

5. வாய் நாற்றம் சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.

*
6. உதட்டு வெடிப்புக்கு கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.

*

7. அஜீரணம் ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.

*

8. குடல்புண்க்கு மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.

*

9. வாயு தொல்லைக்கு வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

*
10. வயிற்று வலிக்கு வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

*

11. மலச்சிக்கல் செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.

*

12. சீதபேதிமலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.

*

13. பித்த வெடிப்புக்கு கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

*
14. மூச்சுப்பிடிப்புக்கு சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.

*

15. சரும நோய்க்கு கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

*

16. தேமல் வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.

*

17. மூலம் கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.

*
18. தீப்புண் வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.

*

19. மூக்கடைப்புக்கு ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

*

20. வரட்டு இருமல் எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்

*

21. நரம்பு சுண்டி இழுத்தால் ஊற வைத்து, முளைக்க வைத்ததானிய வகைகளை சாப்பிட்டால் இந்த நோய் வராது. வாரத்தில் 3 தடவைகளாவது சேர்த்துக் கொண்டால் நல்ல பலன் இருக்கும். நரம்பு நாளங்களை சாந்தப்படுத்தும் குணம் தேனுக்கு உடையது.


*

22. பல்லில் புழுக்கள் சிறிது வேப்பங்கொழுந்து எடுத்து, நன்றாக பற்களின் எல்லாப் பகுதியிலும் படும்படி மென்று சாப்பிட வேண்டும்.

*

23. உடல் பருமன் குறைய வெங்காயத்தில் கொழுப்புச் சத்து குறைவு. அதனால் உடல் பருமனைக் குறைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் உணவில் தாராளமாக வெங்காயம் சேர்த்துக் கொள்ளலாம்.

*

24. தேன் உடல் பருமனைக் குறைக்கும்.தேனுடன் குளிர்ந்த தண்ணீரை கலந்து அருந்தினால் உடல் பருமன் குறையும்.


*

25. வெண்மையான பற்களைப் பெற ஒவ்வொரு முறையும் சாப்பிட்ட பின்பு வாயை நன்றாகக் கழுவ வேண்டும். தூங்கப் போகும் முன்பும், தூங்கி எழுந்த பின்பும் பல் தேய்க்க வேண்டும். பல்தேய்த்துக் கழுவும் போது ஈறுகளைத் தேய்த்துத் தடவி கழுவ வேண்டும். இதனால் பற்களும் ஈறுகளும் வலுவடையும்.


*

26. கணைச் சூடு குறைய சூட்டினால் சில குழந்தைகள் உடல் மெலிந்து நெஞ்சுக் கூடு வளர்ச்சி இன்றி மெலிவாகவும் இருப்பார்கள். அவர்களுக்கு தினமும் ஆட்டுப்பாலில் 2 தேக்கரண்டி தேன் கலந்து கொடுத்தால் கணைச் சூடு குறைந்து உடல் தேறிவிடும்.


*

27. வலுவான பற்கள் வேப்பங்குச்சியினால் பல் துலக்கினால் பற்கள் நல்ல ஆரோக்கியமாக இருக்கும்.முருங்கைக்காயை நறுக்கி, பொரியல் செய்து அல்லது சாம்பாரில் போட்டு சாப்பிட்டால் பற்கள் வலுவடையும். தினமும் சாப்பிட்டால் வயோதிகத்திலும் பற்கள் நன்கு உறுதியாக இருக்கும்.


*

28. உடல் சூடு ரோஜா இதழ்கள், கல்கண்டு, தேன் ஆகியவற்றைக் கலந்து தயாரிக்கும் குல்கந்தை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.

*

29. கற்கண்டு சாப்பிடுவதால் இரத்தம் சுத்தமாகும். கண்களில் ஏற்படும் திரை அகன்று, கண்னொளி பெருகும். கண் சிவப்பை மாற்றும். வெண்ணெய்யில் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் பெருக்கும்.

*
30. கக்குவான் இருமல் வெற்றிலைச் சாறுடன், தேன் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு வரும் கக்குவான் இருமல் குணமாகும்.

*

31. உள்நாக்கு வளர்ச்சி உப்பு, தயிர், வெங்காயக் கலவை உள்நாக்கு வளர்ச்சியைத் தடுக்கும்.

*

32. இரத்தசோகை நோய்க்கு தேன் ஏற்ற மருந்து. இதற்குக் காரணம் அதில் இரும்புச்சத்து இருப்பதாகும்.ஆட்டுப் பாலை வடிகட்டி, தேன் கலந்து பருகினால் உடல் வலிமை ஏற்படும். உடலுக்குத் தேவையான இரத்தத்தை ஊறச் செய்யும்.

*

33. உடலில் தேமல் மறைய தொடர்ந்து மருந்து எடுத்துக்கொண்டால் மட்டுமே குணமாகும்.

வெதுவெதுப்பான தண்ணீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.


எலுமிச்சம் பழச் சாற்றை முகத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும்.
ஆடு தீண்டாப் பாளையை, தேங்காய் எண்ணெய்யில் போட்டு, 1 வாரம் வெய்யிலில் வைத்த பிறகு தேமல் இருக்குமிடத்தில் தடவினால் தேமல் மறையும்.


மோரில் முள்ளங்கியை அரைத்து இந்தக் கலவையை முகத்தில் தேய்த்தால் தேமல் மறையும்.


1 துண்டு வசம்புடன் பூவாரம்பட்டை சேர்த்து அரைத்து இரவில் பற்றுப் போட்டு வந்தால் நாளடைவில் தேமல் குணமாகும்.


குறிப்பு: சோப்பு போட்டுக் குளிக்கக் கூடாது.

*

34. மலேரியாவால் தாக்கப்பட்டவடர்கள் தினமும் துளசி இலையை சிறிதளவு காலையில் வெறும் வயிற்றில் மென்று விழுங்கி வந்தால் ஓரிரு நாட்களில் நோய் நீங்கிவிடும்.
மலேரியா போன்ற நோய்கள் பரவக் கொசுக்களே மூல காரணம். துளசியின் வாடை பட்டால் கொசுக்கள் அவ்விடத்திற்கு வராது. கொசு தொல்லையை நீக்க வீட்டில் துளசி செடிகளை வளர்க்கலாம்.


*

35. தீக்காயங்கள் பட்டவுடன் முதலில் தண்ணீரில் கழுவ வேண்டும்.
தீப்பட்ட புண்ணின் மேல் தொடர்ந்து தேன் தடவி வந்தால் புண் குணமாகி விடும். தீக்காயங்களை ஆற்றுவதற்கு தேன் உகந்தது. வலி நீங்கும். தீக்கொப்புளங்கள் ஏற்படாமல் தடுக்கும்.

முட்டைக்கோஸ் இலைகளை சிறுசிறு துண்டுகளாக்கி, முட்டையில் உள்ள வெள்ளைக் கருவுடன் கலந்து தீக்காயங்கள், புண்கள், காயங்கள் மீது தடவினால் விரைவான குணம் கிடைக்கும்.

தீப்புண்களுக்கு முட்டையின் வெள்ளைக் கருவைத் தடவி குணப்படுத்தலாம்.

உபயோகமான இனையதள முகவரிகள்


சுட்டி இங்கே          நீங்கள் சிறந்த பேச்சாளராக வேண்டுமா? உங்கள் உரை வீச்சுகளில் அடிக்கடி பல பெரிய அறிஞர்கள் மற்றும் பெய தலைவர்களின் கூற்றுக்களைக் கோடிட்டுக் காட்ட வேண்டுமா? அப்படியானால் அவற்றுக் கான சிறந்த தளம் இதுதான்.

 60 வகை பொருள்களில், ஏறத்தாழ 4,000 புகழ் பெற்ற மேற்கோள் உரைகள் உள்ளன. சிறந்த பேராசியராக, மாணவர்களிடம் நற்பெயர் பெற விரும்பும் ஆசியர்களுக்கும் இது உகந்த தளம். சுட்டி இங்கே      டிஜிட்டல் கெமரா வாங்கிப் பயன்படுத்தாதவர்கள் மிகவும் குறைவு என்றே கூறலாம். எளிதாக, சிறுவர்கள்கூட இவற்றைக் கையாளத் தொடங்கிவிட்டனர். ஆனால், முழு மையாக அதன் வசதிகளைப் பயன்படுத்துகின்றனரா என்றால் இல்லை என்றே கூற வேண்டும். டிஜிட்டல் கேமராவின் வசதிகள் என்ன? எதனைப் பயன்படுத்தினால் என்ன கிடைக்கும் என்று விலாவாயாகத் தரும் தளம் இது.

அபெர்ச்சர், ஸ்பீட், ரெட் ஐ எனப் பல விஷயங்கள் குறித்து இங்கு தகவல்கள் தரப்படுகின்றன. குழந்தைக்குச் சொல்லிக் கொடுப்பது போன்ற பல டுடோரியல்கள் உள் ளன. சிலேட்டர் றையில் ஒரு கெமரா ஆன்லைனிலேயே தரப்பட்டு எப்படி இயக்குவது என்பது சொல்லிக் கொடுக்கப்படுகிறது. ஆனால், கொஞ்சம் பழைமையானது போல சில விஷயங்கள் இருக்கின்றன. நவீன தொழில் நுட்பம் தான் வேண்டும் என எண்ணுபவர்கள்       சுட்டி இங்கே      என்ற தளத்திற்குச் செல்லலாம்.

 சுட்டி இங்கே            சாப்ட் வேர் மற்றும் வெப் புரோகிராம்களில் அவ்வப்போது ஏற்படும் மாற்றங்கள் குறித்து இந்தத் தளத்தில் தகவல்கள் அப்டேட் செய்யப்படும். மிகவும் பயனுள்ள தகவல்களைத் தருவதுடன், வேடிக்கையாகவும் சில சமயம் செய்தி களைத் தரும்.

சுட்டி இங்கே:     இது பக்கத்து வீட்டுக் காவல்காரன்போல் செயற்படுகிறது. ஏதேனும் மோசமான விளைவு களைத் தருவதற்கென்றே உருவாக்கப்படும் தளங்கள் குறித்த தகவல்களைத் தருகிறது. இதுபோன்ற தளங்களால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து வரும் தகவல்களைத் திரட்டி அவற்றின் அடிப் படையில் மோசமான தளங்கள் மற்றும் புரோகிராம்களின் பட்டியலை அளிக் கிறது

. சுட்டி இங்கே       இணையதள வெப்சைட் குறித்த செய்திகள் மற்றும் ஆய்வுகள் குறித்த தகவல்களைத் தருகி றது. குறிப்பாக, வெப் 2.0 குறித்த அண் மைக்காலத்திய செய்திகள் அதிகம்.

சுட்டி இங்கே:           கூகுள் மெயில் பயன்படுத்துபவர்களுக்கான தகவல் களஞ்சியம். அதிகமான எண்ணிக்கை யில் குறிப்புகள், டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸ் தரப்பட்டுள்ளன.

 சுட்டி இங்கே      இது இயக்கு தளம் தொடர்பான தகவல் களஞ்சியம். இதிலும் பல் வேறு விதமான, அதிகளவு எண்ணிக்கை யிலான குறிப்புகள், மற்றும் ட்ரிக்ஸ் தரப் பட்டுள்ளன.

சுட்டி இங்கே:     உங்கள் சிஸ்டத்தை ட்யூன் செய்து அதன் திறனை அதிகப்படுத்த வேண்டுமா? அதற்கு இதுதான் நீங்கள் செல்ல வேண்டிய தளம். விளையாட்டுகள், பிரவுசர்கள், டிரைவர்கள் என அனைத்தையும் இந்ததளம் மூலம் மேம்படுத்தி உங்கள் கணினியின் இயக்கத்தை புதுப்பிக்கலாம்.

சுட்டி இங்கே     இதனுடைய பெயர் தெரிவிப்பது போல் இது ஐபாட் மற்றும் ஐட்யூன் ஆகியன குறித்த தக வல்களை தரும் தளம். இந்த இரண்டு விடயங்கள் குறித்தும் உங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் இங்கு கிடைக்கும். எப்படிப் பயன்படுத்துவது என்ற டுடோரியல் தகவல்கள் மிகவும் பயனுள்ளன. இந்த இரண்டைப் பொறுத்தவரை இந்தத் தளத்தை ஒரு கடல் எனலாம். இதில், ஐபாட் 2.2 வழி காட்டி இபுக்காக உள்ளது. இதில், 202 பக்க தகவல்கள் ஐபாட் குறித்து உள் ளன


சுட்டி இங்கே:    அமெரிக்க கொலம்பியா பல்கலைக்கழகம் நடத்தும் மெடிக்கல் இணையதளம். சிலர் கேட்கக் கூச்சப்படும் கேள்விகளை, யாரென்று காட்டிக்கொள்ளாமல் இங்கு இடலாம். சரியான முறையான பதில் கிடைக்கும்.

Wednesday, August 24, 2011

DRESSING ROOM ல உஷார் !!!

உஷார் !!! DRESSING ROOM ல கேமரா மறைத்து வைக்கப்பட்டு பெண்கள் படம் பிடிக்க படுகின்றனர்..!
அதை தடுக்க ஒரு அருமையான ஆலோசனை....!!

TRIAL ROOM ல் உங்களோட செல் போன்ல இருந்து யாருக்காவது கால் பண்ணுங்கள், உங்கள் போனில் இருந்து கால் பண்ண முடியவில்லை என்றால் அங்கு கேமரா பொருத்தப்பட்டுள்ளது என்று அர்த்தம்

காரணம் FIBER OPTIC SIGNAL செல் போன் சிக்னலை தடுக்க கூடியது..! அப்படி கால் பண்ண முடியவில்லை என்றால்... உஷார்..!!! நீங்கள் நோட்டமிடபடுகிறீர்கள்....!!!

ஹசாரேவுக்கு ஆதரவாக குரல் கொடுங்கள்....

மாணவர்கள் நினைத்தால் மட்டுமே மாற்றத்தை கொண்டு வர முடியும்...
மாணவர்களே ஒன்று சேருங்கள் ..
ஹசாரேவுக்கு ஆதரவாக குரல் கொடுங்கள்....

லோக்பால் சுதந்திரமாக இயங்கக்கூடிய ஒரு ஆணையம், ஊழல்வாதிகளை புகார் எழுந்த இரண்டே ஆண்டுகளில் தண்டிக்க முடியும். அரசியல் மற்றும் அரசு அதிகாரிகளிடமிருந்த தனித்து இயங்கக்கூடியது.

தவறான முறையில் சேர்த்த சொத்துக்களை மீண்டும் நாட்டின் கஜானாவிற்கே கொண்டு வரக்கூடியது. இதனால் ஜன லோக்பால் சட்டத்தை நிறைவேற்றியே ஆக வேண்டும்.

இந்தியா சுதந்திரம் அடைந்த 65 ஆண்டுக்ள ஆகியும் மக்களின் அடிப்படை தேவைகள் நிறைவேற்ப்பட வில்லை. அரதசியல்வாதிகள் அனைவரும் பணம் சம்பாதிப்பதையே குறிக்கோளாக கொண்டுள்ளனர்.

சிறிய அளவில் ஊழல் செய்பவர் ஜெயிலிலும், கோடிக்கணக் கில் ஊழல் செய்பவர் ஏ.சி. உள்பட சகல வசதி கொண்ட நிலையிலும் உள்ளனர். ஜனநாயக நாட்டில் ஊழல் மலிந்து விட்டது. இதற்கு எதிராக போராட்டம் நடத்துவது தேவையான தாகும். ஊழலுக்கு எதிரான கடுமையான சட்டம் தேவை.
அன்னாஹசாரேவின் போராட்டத்திற்கு அனுமதி அளிக்காதது கண்டனத்துக்குரியதாகும்.

மக்களும் , மாணவர்களும் இரண்டாம் சுதந்திர போராட்டதிற்கு தயார் ஆக வெண்டிய தருண்ம் இது .

ஊழல் செய்யும் போது அவர்களுக்கு சட்டத்தை மீறியதாகத் தோன்றவில்லை.
இப்பொழுது ஹசாரே சட்டத்தை மீறி விட்டதாகப் பேசுகிறார்கள்.
சத்தியமாக நாட்டை ஆள்வது காட்டுமிராண்டிகள் தான்.
அவரை கைது செய்ததன் மூலம் ஊழலுக்கு எதிராக போராட்டங்கள் மேலும் எழுச்சி பெறவேண்டும் .

ஊழலுக்கு எதிராக ஒரு புரட்சி வெடிக்க வேண்டும்......!

தால் சூப்


வெஜிடபிள் சூப், காளான் சூப், தக்காளி சூப் என்று பலவகையான சூப் வகைகளை செஞ்சு சாப்ட்ருப்போம். அந்த வகையில் தால் சூப்பும் மிக சுவையானதொரு சூப். சுவையுடன் இருப்பதோடு ஆரோக்கியத்தையும் தரவல்லது இந்த சூப். சமையல் ராணிகள் இதையும் ட்ரை பண்ணிப்பாருங்க.. சூப்பரா சூப் குடிங்க......

தேவையான பொருள்கள்:

மைசூர் பருப்பு - 1/2 கப்
வெண்ணெய் - 1/2 டீ ஸ்பூன்
வெங்காயம் நறுக்கியது - 1 டீ ஸ்பூன்
பூண்டு - 2 பல்
தக்காளி சிறியது - 2
மல்லித்தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

* முதலில் வெண்ணெயைச் சூடாக்கி அதில் பூண்டு, வெங்காயத்தை வதக்கவும்.

* இரண்டு நிமிடம் கழித்து இத்துடன் பருப்பு, முழுத்தக்காளி உப்பு மூன்றையும் சேர்த்து வேக விடவும்.

* குக்கரில் ஒரு விசில் வந்தவுடன் ஐந்து நிமிடம் குறைந்த தீயில் வைத்து வேக விடவும்.

* பிறகு வெந்த தக்காளியின் மேல் தோலை நீக்கி விட்டு மிக்ஸியில் ஸ்மூத்தாக அரைத்து பருப்புக் கலவையுடன் சேர்த்து மல்லி இலையை தூவிப் பரிமாறவும்!

* காரம் தேவை என்றால் மிளகுத் தூள் சேர்த்துச் சாப்பிடலாம்.

ரசப் பொடி


சுடச்சுட மணக்கும் ரசத்தை உள்ளங்கையில் ஊற்றிக் குடிக்கையிலோ, சாதத்துடன் கலந்து சாப்பிடுகையிலோ கிடைக்கும் சுகானுபவம் அனுபவித்தவர்களுக்குத்தான் புரியும். நம் தென்னிந்தியாவின் பிரசித்திக்குப் பேர் பெற்ற பல காரணங்களில் ரசமும் ஒன்று அல்லவா! ஜுரம் வருவதுபோல இருந்தாலும் சரி, ஜுரம் வந்து மீண்டு எழுகையிலும் சரி, ஜலதோஷம் பிடித்தாலும், தொண்டை கமறினாலும் சுடச்சுட ரசத்தை சேர்த்து பரிமாறி, ரசம் எல்லாவற்றையும் சரியாக்கும் என்ற நம்பிக்கையை நம்முள் வளர்த்து விட்டிருப்பதை தென்னிந்தியர் பலரும் மறுக்க மாட்டார்கள் தானே......

தேவையான பொருட்கள்:

மஞ்சள் - 50 கிராம்
தனியா - 400 கிராம்
மிளகாய் வற்றல் - 250 கிராம்
மிளகு - 50 கிராம்
சீரகம் - 100 கிராம்
துவரம் பருப்பு - 250 கிராம்

செய்முறை:

* இவற்றை வெயிலில் நன்கு காய வைத்து நைசாக அரைத்துப் பொடியாக்கினால் ரசப் பொடி தயார்.

* காற்றுப் புகாத டப்பாக்களில் அடைத்து வைத்து தேவைக்கேற்ப உபயோகிக்கலாம்.