Sunday, May 1, 2011

திருச்சி ஏர்போர்டில் தோலிருக்கச் சுளை விழுங்கும் திருடர்கள்


சென்னை விமான நிலைய கஸ்டம்ஸ் பற்றி செய்தி வெளியானதைப் படித்தேன். நான் துபையில் பணிபுரியும் கண் பரிசோதகர். (ஆப்தால்மிஸ்ட்). துபையிலிருந்து  கடந்த ஒன்றாம் தேதி இரவு பதினொன்றரை மணிக்கு, திருச்சி ஏர்போட்டில் இறங்கினேன்.
எனது லக்கேஜான டிராலி பேக்கின் ஜிப் உடைக்கப்பட்டு இருந்ததால் சந்தேகப்பட்டு  அங்கேயே பெட்டியைத் திறந்து பார்த்தபோது பொருட்கள் நான் வைத்தபடியே இருந்ததால் புகார் எதுவும் கொடுக்காமல் வீட்டுக்கு வந்து விட்டேன்.
வீட்டில் வந்து பொருட்களைப் பிரித்தபோது கண்ணாடி பிரேம் இருந்த அட்டைப்பெட்டியும் அதனுள் பிளாஸ்டில்க் பெட்டியும் இருக்க, பிரேமை மட்டும் திருடி விட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். பூட்டைத் திறக்க முயன்று முடியாமல்  ஜிப்பின் கிளிப்பை உடைத்து பேக்கிலிருந்த விலை உயர்ந்த கண்ணாடி பிரேமை ஏர்போர்டில் லக்கேஜ் ஹேண்டில் செய்யும் ஊழியர்கள் திருடி விட்டனர்.
தோலிருக்கச் சுளை விழுங்கும் திருடர்கள் திருச்சி ஏர்போர்டில் இருப்பதை வாசகர்களுக்குத் தெரிவிப்பதற்காகவே இக்கடிதத்தை உங்கள் தளத்தில் வெளியிடக் கோருகிறேன்.
நாம் பூட்டுப் போட்டு விட்டோமே என நம்பி லக்கேஜை விட்டுவிடாமல் சரியான முறையில் பொதிந்து கட்டி எடுத்துச்செல்வது பாதுகாப்பானது.

No comments: