Sunday, September 25, 2011

அம்மா !!!




அம்மா என்று அன்போடு அழைத்தால் இப்போதெல்லாம் பெண்கள் கோப்படுகிறார்கள். ”எனக்கென்ன அம்புட்டு வயசா ஆயிடுச்சு?” என்று மூக்குநுனி மின்ன இதழ்கள் ஒட்டியொட்டிப்பிரிய நெற்றி நெறிய கேட்கிறார்கள். அம்மா என்பதற்குப் பொருள் ஒன்றே ஒன்றுதானா? எத்தனை ஆயிரம்? அவற்றுள் சிலவற்றை மட்டும் நான் இங்கே குறிப்பிடுகிறேன் பாருங்கள்

அம்மா – தங்கை
அம்மா – மகள்
அம்மா – பேத்தி
அம்மா – வேலைக்காரி
அம்மா – தாய்
அம்மா – எஜமானி
அம்மா – நண்பரின் தாய்
அம்மா – கருணையோடு பிச்சையிடுபவள்
அம்மா – காதலி (மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா)
அம்மா – நண்பன் (என்னம்மா கண்ணு சௌக்யமா?)
அம்மா – பாரதியின் செல்லம் (கண்ணம்மா)
அம்மா – அன்னை தெரசா (மத்த எல்லாரையும்விட இந்த அம்மாவைத்தான் எனக்கு ரொம்பப் பிடிக்கும்)
அம்மா – தமிழ் (தமிழன்னை)
அம்மா – தெய்வம்
அம்மா – மருத்துவர் (டாக்டரம்மா என்னைக் கொஞ்சம் திரும்பிப்பாரம்மா)
அம்மா – துன்பம் அகன்ற நிம்மதி (அம்மாடி இப்பதான் நிம்மதியா இருக்கு)
அம்மா – வலியின் வேதனையில் தன்னைமறந்து சொல்லும் சொல்
அம்மா – கலைஞரின் எதிர் இருக்கை
அம்மா – மணமான பெண்ணை அழைக்கும் மரியாதைச் சொல்
அம்மா – பெண்கள்
அம்மா – தாய்க்குலம்

இவ்வளவையும் விட்டுவிட்டு (இன்னும் இருக்கு) ஒரே ஒரு பொருளை மட்டும் எடுத்துக்கொள்வது என்ன ஞாயம்? தமிழன்னை வயதானவளா? என்றென்னும் இளமையானவளல்லவா? அன்னைதெரசா என்று அழைத்தது வயதின் காரணமாகவா? கொஞ்சம் யோசிங்கம்மா!

எல்லாம் சரிதான், ஆனால் எனக்குப் பிடித்த ஒன்று எதுவென்றால், எந்தப் பெண் தன்னை எப்படி அழைக்க விரும்புகிறாளோ அப்படியே அழைப்பதுதான் சரி.
பெண்களைச் சந்தோசப்படுத்தாவிட்டால் எவருக்கும் சொர்க்கம் என்பது இங்கும் இல்லை அங்கும் இல்லை எங்கும் இல்லை!

தமிழில் பெயரிடுங்கள்



 தாய்மொழியை ஒதுக்கி வைத்து பிறநாட்டாரின் தழுவல்மொழிப் பெயரிட்டுக் கொள நினைத்தல்

தாய்ப்பாலை வேண்டாது நாய்ப்பால் உண்ணச்
சம்மதிக்கும் தன்மையது போன்றதாகும்.
வாய்மணக்கும் தமிழில் பெய ரிடுவதாலே
வாய்வெந்து போய்விடுமா ? இட்டால் என்ன ?
குன்றனென்றும் காடனென்றும் மருத னென்றும்
குமணனென்றும் பெயரிடலாம் ஆண் கட்கெல்லாம்
அன்னலென்றும் அன்றிலென்றும் அல்லி யென்றும்
அருவியென்றும் பெயரிடலாம் பெண் டிற்கெல்லாம்
மின்னெனவே பெண்ணுருவம் மின்னு மாயின்
மின்னி யென்றும் பெயரிடலாம் தமிழரெல்லாம்
என்றுமுள செந்தமிழில் பெயரி டாமல்
இரவல் மொழிப் பெயரிடுதல் அடிமைத் தனம்.
 - உவமைக் கவிஞர் சுரதா

சமையலறையை, சந்தோஷமான இடமாக மாற்ற...!


சமையலறை என்றாலே நமக்கெல்லாம் நினைவுக்கு வருவது... அழுக்கடைந்த சுவரும்... ஆங்காங்கே பாத்திரங்களும்... அப்படிப்பட்ட சமையலறையை, சந்தோஷமான இடமாக மாற்ற... சில டிப்ஸ் இதோ...

சுத்தமான சுவர் அவசியம். புகை, சமையல் துகள்கள் என்று அனைத்தும் சேர்ந்து அடுக்களை சுவர் மேலும் அழுக்காகிறது. இதைப் பார்க்க அருவருப்பாக இருக்கும். அடிக்கடி சுவரை சுத்தப்படுத்தினால் சமையல் செய்யும் உணவுகளுக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் பாதுகாப்பு. சுத்தமான சுவர் இருப்பது அழகுக்கு மட்டுமல்ல... ஆரோக்கியத்துக்கும் மிகவும் நல்லது தானே. மேலும் உங்களுக்கு பிடித்தமான நிறத்தில் பெயிண்ட் அடித்துக் கொள்ளவும். குறிப்பாக இளநிறத்தில் பெயிண்ட் அடித்துக் கொண்டால் சின்ன அறையும் பெரியதாகத் தெரியும்.

அடுத்து நல்ல அடுப்பு...! அடுப்பு வாங்கும்போது விலை குறைவாக இருக்கிறது என்று வாங்காமல்... விலை அதிகமாக இருந்தாலும், நவீன தொழில்நுட்பத்தில் வசதி நிறைந்த அடுப்புகளை வாங்கவும். அடுப்பு நன்றாக இருந்தால், சமையல் செய்யும் சூழலில் ஆர்வம் அதிகமாகும். 

சமையலறைக்கு முகம் போல அடுப்பு இருப்பதால் அது அழகாக இருந்தால்... சமையலறையே மிகவும் அழகாக இருக்கும். தரமான அடுப்பாக இருக்கும் பட்சத்தில் 50 சதவீதம் நேரமும், 50 சதவீதம் எரிசக்தியும் மிச்சமாகும். மேலும் 80 சதவீதம் புகையில்லா சுற்றுச்சூழலும் உருவாகும்.

பல நேரங்களில் சமையலுக்குத் தேவையான பொருட்கள் முழுவதும் தீர்த்த பின்னரே... அதை நாம் கவனிப்போம். இதனால் அடிக்கடி பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும். இதற்கு சமையலறையில் நோட்டு மற்றும் பேனா வைத்து, அவ்வப்போது குறிப்பெடுத்துக் கொண்டால் அந்தப் பொருட்களை வாங்கி தயார் நிலையில் வைத்துக் கொள்ளலாம்.

வேலைக்கு செல்லும் பெண்கள், வேகமாக... சுவையாக... சத்தான உணவாக தயாரிக்க வேண்டும். சமையலறையில் ஒரு மணி நேரத்தில் எல்லா வேலைகளையும் முடிக்க முடியாது. அதனால் ஓரளவு விவரம் தெரிந்த குழந்தைகளை உங்களுக்கு உதவியாக வைத்துக் கொள்ளலாம். இதனால் குழந்தைகள் வேலையில் ஈடுபடும். குழந்தைகளுக்குள் சண்டை போடும் வாய்ப்பும் குறையும்.

அப்படி சமையல் வேலைகளை சொல்லும்போது சிறுமிகளுக்கு மட்டுமே சமையல் வேலைகள் என்று கொடுக்காமல் இருவருக்குமே அனைத்து வேலைகளையும் கொடுக்கலாம்.

இப்படி கொடுக்கப்படும் வேலைகளை குழந்தைகள் செய்ய யோசித்தால், உடனே உங்களுடைய கணவரை அழைத்து அந்த வேலைகளை செய்யச் சொல்லலாம். அப்படி அவர் செய்யும்போது, "அப்பாவே செய்யும்போது, நாமும் செய்தால் என்ன?" என்ற நினைப்பு, அவைகளுக்கு தோன்றும். சமையல் மட்டுமின்றி தோட்ட வேலை மற்றும் வீட்டு வேலைகளிலும் குழந்தைகளை ஈடுபடுத்தலாம். சமையலில் பருப்பை வேக வைக்கும்போது, அதிக நேரம் வேகிற காய்கறிகளை குக்கரில் வைத்து வேக வைக்கலாம். இட்லி வேக வைக்கும்போது, முட்டையையும் சேர்த்து வெக வைத்தால் எரிசக்தி, நேரம் எல்லாமே மிச்சமாகும்.

தெரியுமா உங்களுக்கு?

நீங்கள் பிறந்த ஆண்டின் இறுதி இரண்டு இலக்கங்களை எடுத்துக் கொள்ளுங்கள், உங்கள் வயதை அத்துடன் கூட்டுங்கள் 111 ஆக இருக்கும். உலகிலுள்ள அனைவருக்கும் 111 ஆகத்தான் இருக்கும்,

எதிர்பார்ப்பதை கூகிளால் தேடித்தரமுடியவில்லையா? மாற்று தேடு பொறிகள் சில.


நிச்சயம் கூகிள் உலகின் சிறந்த தேடுபொறி என்பதில் சந்தேகமில்லை. எனினும் சில நேரங்களில் உங்களுக்கு
தேவையானதை கூகிளால் தேடி தரமுடியவில்லையென்றால்? 

கூகிளுடன் போட்டி போடும் குறிப்பிட்ட விடயங்களை மட்டும் தேடித்தரும் ஏனைய பவர்வுல் சர்ச் எஞ்சின்களை முயற்சியுங்கள்.

DuckDuckGo 

முழுதுமையாக அனானியாகவே இணையத்தில் தேடலாம். அத்துடன்  குறிப்பிட்ட புரோகிராமிங்க் நிரலிகள் , இணையத்தளங்களை உடனே தேடித் தரவல்லது. 

இணைப்பு https://duckduckgo.com/?q=&t=i

blekko.com

இணையத் தேடலில் விளம்பரங்களை தடைசெய்து உண்மையான விடயங்களை மட்டும் தரக்கூடியது.

Wolfram Alpha
கணித சிக்கல்களை தீர்ப்பதற்கு உதவுகிறது இந்த தளம்.

எந்த கணிப்பீடாயினும் அதன் விபரங்களை கொடுத்ததும் ஒவ்வொரு படிமுறையாக காட்டுகிறது இந்த தளம்.

இணைப்பு http://www.wolframalpha.com/

Bing
யாஹூ , கூகிளை விரும்பாதவர்கள் உடனே செல்வது இங்குதான் எனினும் கூகிளைப் போலவே இதனது தேடுதல்களும் இருக்கிறதென்பது பொதுவான கருத்து.




'காதல்'-ங்குற ஒரு மேட்டர்ல மாட்டிக்கிட்டு அல்லோல்படும் ஆண்களே...!காதலியிடம் நல்ல பெயர் வாங்க ஐடியா சில...


காதல் இல்லாத மனிதர்களே இல்லை என்று சொல்லலாம். இனிமையாக பேசும் காதலர்கள் ஏனோ பெரும் சண்டை போடுவதிலும் வல்லவர்களாக இருக்கின்றார்கள். இப்படி நீங்களும் உங்கள் காதலியிடம் மாட்டிக் கொண்டிர்களா? அப்படியாயின் இப் பிரச்சனை தீர சில ஐடியாக்கள இங்கே உங்களுக்கு....

1.காலையில் எழுந்தவுடன் ஹாய்.. குட் மார்னிங்' ன்னு ஒரு SMS அனுப்பணும். உன் குரலை கேட்டாத்தான் இன்னைக்கு பொழுதே நல்லபடியா விடியுதுன்னு ஒரு அப்பட்டமான பொய்யை அவிழ்த்து விடணும் (ஒரு ரூபாய் செலவு இருக்குமா. என்னங்க பண்றது? பண்ணித்தான் ஆகணும்.) இதே விஷயத்தை ராத்திரி தூங்குறதுக்கு முன்னாடியும் நீங்க செஞ்சாகணும்..

2. அவங்களைப் பார்க்க போறதுக்கு முன்னாடி உங்க செல் ஃபோனோட ஸ்கிரீன் சேவர்'ல அவங்களோட புகைப்படத்தை கண்டிப்பா வெச்சுக்கணும். (எப்பவும் உன் முகத்தையே பார்த்துகிட்டே இருக்கணும்'ன்னுதான் இந்த மாதிரி வெச்சிருக்கேன்னு சொல்லுங்க. இதுலையே அவங்க க்ளீன் போல்ட்)

3. அவங்க பேரோட முதல் எழுத்தை பைக் கீ- செயின்'ல தொங்க விட்டுக்குங்க. எப்பவும் நீ என் கூடவே இருக்கணும்'ன்னுதான் இந்த மாதிரி செய்யுறேன்னு ஒரு பிட்டை விடுங்க. அப்புறம் பாருங்க...

4. சினிமாவுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா, படத்தை பார்க்கறீங்களோ இல்லையோ கண்டிப்பா ஐந்து நிமிஷத்துக்கு ஒரு வாட்டி அவங்களை திரும்பி திரும்பி பார்க்கணும். எதுக்கு என்னையே பார்க்குறீங்கன்னு கேட்பாங்க. உன்னைப் பார்க்கும் போது இருக்கிற சுவாரஸ்யம் படம் பார்க்கும் போது இல்லைன்னு நீங்க சொல்லணும். (வேற வழி இல்லைங்க. இந்த மாதிரி எல்லாம் நாம டயலாக் விடணும்'ன்னு அவங்க எதிர்பார்ப்பாங்க)

5. அவங்க பேர்ல நிச்சயம் ஏதாவது தமிழ் பாட்டு வந்திருக்கும். அந்த பாட்டை எப்படியாவது தேடி கண்டுபிடிச்சு ரிங்டோனா வெச்சுக்குங்க. அவங்க உங்ககிட்ட சண்டை போடும்போது, உங்க ஃபிரண்டைவிட்டு உங்க நம்பருக்கு கால் பண்ண சொல்லுங்க. அந்த பாட்டு வந்த உடனே அவங்களை பாருங்க. சண்டை எல்லாம் எங்கே போகுதுன்னே தெரியாது.

6. கவிதைங்கிற பேர்ல எதையாவது நீங்க கிரீட்டிங் கார்ட்ல கிறுக்கிக் கொடுத்தே ஆகணும். அந்த கவிதைகள்'ல வானம், கடல், குயில், தேவதை, மயில், போன்ற வார்த்தைகள் கண்டிப்பா இருந்தே ஆகணும்.

7. "நீ ரொம்ப அழகா இருக்கேங்கிற அகில உலக பொய்யை ஒரு நாளைக்கு ஐந்து வாட்டியாவது நீங்க சொல்லியே ஆகணும். (இதுக்கு நீங்க கடவுள்கிட்ட தனியா மன்னிப்பு கேட்டுக்குங்க)

8. ஹோட்டலுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா முதலில் நீங்க ஓடர் பண்ணக்கூடாது. மெனு கார்டை அவங்க கையில கொடுத்து, அவங்களைத்தான் ஆர்டர் பண்ண சொல்லணும். புரியுதா? (பெண்களோட உணர்வுகளுக்கு நீங்க மதிப்பு கொடுக்குறவர்'ன்னு அவங்களுக்கு தெரியணும் இல்லை. அதுக்குத்தான்)

9. அவங்க எப்படித்தான் ட்ரஸ் பண்ணாலும், " இந்த ட்ரஸ்'ல நீ தேவதை மாதிரி இருக்கேன்னு மனசாட்சியை கழட்டி வெச்சிட்டு பொய் சொல்லணும்". (ராத்திரியில நீங்க தூங்கும் போது தேவதைங்க உங்க கண்ணை குத்தும். சமாளியுங்க)

10. ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம். அவங்க தோழிங்ககிட்ட பேசும்போது ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். அவங்க தோழிங்களை நீங்க கண்டுக்காத மாதிரியே இருக்கணும். ஏன்னா பல பிரச்சனைகளோட தொடக்கம் இங்கே இருந்துதான் ஆரம்பிக்குது.

இந்த விஷயங்களை எல்லாம் கடைபிடிச்சு பாருங்க உங்கள் காதலும் பிரகாசமாய் இருக்கும்.

மொபைலுக்கான தரவிறக்க இணையதளங்கள்!


மது கைப்பேசிக்கு தேவையான வால்பேப்பர்கள்,கேம்ஸ்,வீடியோக்கள், மென்பொருட்கள்,ரிங்டோன்கள்,தீம்ஸ் என்று அனைத்தையும் நாம் பைசா செலவில்லாமல் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ள இணைய உலகில் பல தளங்கள் உள்ளன. அதிகபட்சம் நாம் சம்பந்தப்பட்ட தளங்களில் மெம்பராகி விட்டால் (அதுவும் இலவசம் தான் ) போதும். நாம் எப்போது வேண்டுமானாலும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கீழே மொபைலுக்கான சில இலவச தரவிறக்க தளங்களை பட்டியலிட்டுள்ளேன்,அங்கே சென்று உங்களுக்கு தேவையானதை இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

* www.zedge.com
வால்பேப்பர்கள்,கேம்ஸ்,வீடியோக்கள்,ரிங்டோன்கள்,தீம்ஸ் என்று உங்கள் போனுக்கு தேவையான எல்லாவற்றையும் இங்கே தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.அதற்கு நீங்கள் இதில் மெம்பராகி நமது கைப்பேசி மாடலையும் தேர்வு செய்து விட்டு வேலையை ஆரம்பிக்கலாம்.அதிகபட்ச நிறுவனங்களின் பலதரப்பட்ட மாடல் கைப்பேசிகளுக்கு இங்கே எல்லாமும் கிடைக்கிறது.அது மட்டுமல்லாமல் நேரடியாக நமது கைப்பேசியிலேயே தரவிறக்கம் செய்து கொள்ளலாம் அதற்கு உங்கள் கைப்பேசியின் பிரவுசரில் http://m.zedge.netஎன்று டைப் செய்து இணையலாம்.

* www.gallery.mobile9.com
நமது கைப்பேசிக்கு தேவையான வால்பேப்பர்கள்,கேம்ஸ்,வீடியோக்கள், ரிங்டோன்கள்,தீம்ஸ்,மென்பொருட்கள் என எல்லாவற்றையும் இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதில் மெம்பராகவில்லை என்றால் ஒவ்வொரு தரவிறக்கத்துக்கும் குறைந்தது 10 நொடிகள் காத்திருக்க வேண்டியிருக்கும், அதனால் முதலில் மெம்பராகி விடுங்கள்.பின்பு தரவிறக்கம் செய்ய ஆரம்பியுங்கள்.
மேலும் இந்த தளத்தில் உங்களிடம் இருப்பவற்றையும் தரவேற்றம் செய்து மற்றவர்களின் பார்வைக்கு வைக்கலாம்.

* www.getjar.com     
முழுக்க முழுக்க ஜாவா,மற்றும் சிம்பியன் வகையை சார்ந்த போன்களுக்கான கேம்ஸ்,மென்பொருட்கள் ஆகியவற்றை தரவிறக்கம் செய்து கொள்ள உதவும் தளம் இது.
பத்துக்கும் மேற்பட்ட பிரிவுகளில் மென்பொருட்கள் குவிக்கப்பட்டுள்ளன. மெம்பராகாமல் நேரடியாக தரவிறக்கத்தை ஆரம்பிக்கலாம்.கைப்பேசியில் நேரடியாக தரவிறக்கம் செய்ய உங்கள் கைப்பேசியின் பிரவுசரில் http://m.getjar.net என்று டைப் செய்து இணையலாம்.

* http://www.apniapps.com
ஐ-போன்,சிம்பியன்,ஜாவா வகையை சேர்ந்த போன்களுக்கான மென்பொருட்களை இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.தரவிறக்கம் செய்து கொள்வதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட மேன்போருளைப்பற்றிய சிறு குறிப்பும் உள்ளது,அதை படித்து பார்த்து உங்கள் போனுக்கு தேவையானால் மென்பொருளை தேர்ந்தேடுக்கலாம்.

* http://www.mobilemastee.com
வால்பேப்பர்கள்,கேம்ஸ்,வீடியோக்கள்,ரிங்டோன்கள்,தீம்ஸ்,மென்பொருட்கள்,ஸ்க்ரீன் சேவர்ஸ் என எல்லாவற்றையும் இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.மெம்பராக வேண்டும் என்ற அவசியம் இல்லை.

* http://dailymobile.se/
ஐ-போன்,சிம்பியன்,ஜாவா,ஆன்ராய்டு வகையை சேர்ந்த போன்களுக்கு வால்பேப்பர்கள்,கேம்ஸ்,தீம்ஸ்,மென்பொருட்கள் போன்றவற்றை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
முக்கியமாக இதில் முதலில் மெம்பரான பிறகு தான் தரவிறக்கம் செய்ய முடியும்.அதனால் முதலில் மெம்பராகி விடுங்கள்.கூடுதலாக மொபைல் உலகில் வந்திருக்கும் புதிய சம்மாச்சரங்கள் அனைத்தையும் இந்த தளம் உடனுக்குடன் நமக்கு தருகிறது.

* http://www.ipmart-forum.com/
இந்த தளத்தில் Fun, Games and Entertaining என்ற பிரிவில் சென்று நமது எந்த வகை  கைப்பேசிக்கும் தேவையான தரவிறக்கங்களை பெற்றுக்கொள்ள முடியும்.தரவிறக்கத்தை ஆரம்பிக்க முதலில் இதில் மெம்பராக வேண்டும்.புதிய மென்பொருட்களையும்,பழைய மென்பொருட்களின் புதிய அப்டேட் செய்யப்பட்ட மென்பொருட்களும் உடனுக்குடன் தருகிறார்கள்.

* http://www.youpark.com
ஜாவா, சிம்பியன்,விண்டோஸ்,பாம்,பிளாக்பெர்ரி,ஆன்ராய்டு வகை போன்களுக்கு தேவையான மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கொள்ள இந்த தளம் உதவுகிறது.

இலவச,மற்றும் காசு கொடுத்து வாங்கக்கூடிய மென்பொருட்களை பட்டியலிட்டுள்ளார்கள். காசு கொடுத்து வாங்கினால் பத்து சதவீதம் தள்ளுபடி தருகிறார்கள்.மெம்பராக வேண்டும் என்று கட்டாயமில்லை. ஏதாவது இலவச மென்பொருளை தரவிக்கம் செய்ய நினைத்தால் உங்கள் இ-மெயில் முகவரியை கொடுத்து விட்டு தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கைப்பேசி வழியாக http://wab.youpark.com என்ற முகவரியில் நேரடியாக இணையலாம்.