Saturday, July 30, 2011

கடவுள்


ஞானத்தின் வடிவமான குரு ஒருவர் வலம் வந்தார். அவரது திருவோட்டில் ஒருவர் அன்னமிட்டார். அந்தச் அன்னத்தில் ஒரு நாய் வாய் வைத்து உண்டது. நாயின் முதுகில் ஞானி அமர்ந்தார். பாரம் தாங்காமல் நாய் திணறியது. இந்த செய்கையை ஊர் கூடிப் பார்த்தது. வெளியில் சென்றிருந்த சீடன் திரும்பினான். குருவின் செய்கை அவனுக்குத் திகைப்பைத் தந்தது!
“என்ன இது குருவே?” என்றான் அவன்.

“பிரமத்தில் ஒரு பிரம்மம், பிரமத்தை இட்டது.
அதை ஒரு பிரம்மம் உண்டது.

அந்த பிரம்மத்தின் மேல் இந்த பிரம்மம் அமர்ந்திருப்பதை,
இத்தனை பிரம்மங்கள் கூடிப் பார்க்க,

‘என்ன இது?’ என்கிறது ஒரு பிரம்மம்!”

என்று சிரித்தபடி சொன்னார் ஞானி. திருவோடும் பிரம்மம்; அன்னமும் பிரம்மம்; நாயும் பிரம்மம்; பார்த்த மக்களும் பிரம்மம்; கேட்ட சீடனும் பிரம்மம்; தானும் பிரம்மம்; என்ற ஞானியின் பார்வைதான் ஞானத்தின் உச்சம்.

ஸ்ரீராமானுஜரைத் தேடி வந்த ஒருவன், “ஆண்டவனை அடையும் வழி என்ன?”என்றான். “மனிதர்கள் மீது அன்பு வைப்பதுதான் ஒரே வழி” என்றார் அந்த மகான்.

கடவுள் இல்லை’ என்று காலமெல்லாம் வாதித்த அமெரிக்க அறிஞர் இங்கர்சால், ‘கடவுள் இருந்தால் மன்னிக்கட்டும்’ என்று தனது நூலில் எழுதினார்.

உலகம் முழுவதும் கடவுள் இல்லை என்று சொன்னாலும், எனக்குக் கடவுள் என்றும் உண்டு’ என்றார் அண்ணல் காந்தி.

சக மனிதர்களிடம் இறக்கி வைக்க முடியாத இதயத்தின் பாரத்தை, ஒருவன்மேல் நம்பிக்கையோடு நாம் இறக்கி வைப்போம். அந்த நம்பிக்கைக்கு உரியவன் ஆண்டவனே. பாரம் இறங்கினால் சுமை குறையும். சுமை குறைந்தால் மனம் லேசாகும். மனம் லேசானால் வாழ்வின் ருசி வளரும். எல்லா உயிர்களிலும் இறைவனைக் காண்போம். அவற்றின் மீது அன்பு செய்வதே உண்மையான பக்தி வழிபாடு என்று உணர்ந்து கொள்வோம்.


thanks fb  Daclin Rodolph

ஒட்டகம் பால்- சிறுநீரில் இருந்து மருந்து

அரபு நாட்டு பயோ டெக்னாலஜி நிறுவனம் புற்று நோய் மருத்துவம் பற்றி ஆய்வு நடத்தியது. பல்வேறு அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த ஆய்வில் ஈடுபட்டனர்.


அவர்கள் ஒட்டகம் பால் மற்றும் சிறுநீரில் இருந்து ஒரு வகை மருந்தை தயாரித்தனர். எலிக்கு புற்று நோயை ஏற்படுத்தி இந்த மருந்தை அந்த எலிக்கு செலுத்தினார்கள். 6 மாதமாக மருந்து கொடுக்கப்பட்டது. இதில் எலிக்கு புற்று நோய் முற்றிலும் குணமாகிவிட்டது.

எலி உடலில் இருந்த புற்று நோய் செல்கள் அனைத்தும் அகன்று வீரியத்துடன் கூடிய புதிய செல்கள் உருவாகி உள்ளன. இப்போது இந்த எலி மற்ற ஆரோக்கியமான எலிகளை போல துள்ளி குதித்து ஓடுகிறது.

ஒட்டகம் பால்- சிறுநீரில் இருந்து தயாரான இந்த மருந்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பலமாக உருவாக்குகிறது. இது பாதிக்கப்பட்ட புற்று நோய் செல்களை அளித்து விட்டு புதிய செல்களை உருவாக்குகிறது.

இந்த மருந்தால் பக்க விளைவுகள் ஏதும் ஏற்படு வது இல்லை. எனவே மனிதர் களுக்கும் இந்த மருந்தை பயன்படுத்தி புற்று நோயை குணப்படுத்தி விடலாம் என விஞ்ஞானிகள் கூறி இருக்கிறார்கள். அடுத்த கட்டமாக இப்போது மனிதர்களுக்கு இந்த மருந்தை செலுத்தி ஆய்வு செய்ய இருக்கிறார்கள்.

இதிலும் வெற்றி ஏற்பட்டால் மருந்து பயன்பாட்டுக்கு வந்து விடும்.   உலகில் ஒவ்வொரு ஆண்டும் 60 லட்சம் பேர் புற்று நோய்க்கு பலியாகிறார்கள். அரபு நாடுகளில் இதய நோய் மற்றும் தொற்று நோய் அடுத்து புற்று நோயால்தான் அதிக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

விக்கிலீக்ஸ் இரகசியம்



  ""ஏகாதிபத்தியம் தன்னுடைய சதி திட்டங்கள் மூலமே வெற்றி பெறுகிறது. நாட்டை கொள்ளையிட போடும் கூட்டு மற்றும் ஒப்பந்தங்கள்  போன்றவையே அதனுடைய இராஜ தந்திரங்கள். அந்த இராஜதந்திர இரகசியத்தை ஏகாதிபத்திய நாடு அதிகபட்ச முக்கியத்துவத்தை  கொடுத்து பாதுகாக்கும்.''

- லியோன் டிராட்ஸ்கி, 1917 சோவியத் யூனியன்.  

உலக போலீஸ்காரன் என்று அமெரிக்கா அழைக்கப்படுவது வழக்கம். காரணம், உலகளவில் பொருளாதார, யுத்த ஆதிக்கம் செலுத்துவதில் உச்சத்திலுள்ள நாடு. கடந்த ஆண்டுகளில் வியட் நாம், ஈராக், ஆப்கானிஸ்தான்  என பல நாடுகளின் மீது போர் தொடுத்து ஏராளமான  மக்களை கொன்றுள்ளது. அவைகளின் பொருளாதாரத்தையும் வாழ்வாதரங்களையும் இயற்கை வளங்களையும் கைப்பற்றியுள்ளது.   இலத்தீன் அமெரிக்க நாடுகள் ( தென் அமெரிக்க நாடுகள்), மேற்காசிய நாடுகள், கிழக்காசிய நாடுகள், பொதுவுடமை நாடுகள், ஆப்பிரிக்க  நாடுகள் என எந்த நாடும் அதன் ஆதிக்க அரசியலிலிருந்து தப்பியதில்லை. எதிர்த்து கேட்பதற்கு எந்த நாடும் தயாராகவும் இல்லை.  உலக அமைதி, மனித உரிமைகளை பேசும் நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையும் அமெரிக்கா முன் னால் கைக்கட்டிக் கொண்டு நிற்கின்றன. இப்படியெல்லாம் இருந்த அமெரிக்கா இன்று "விக்கிலீக்ஸ் என்ற ஒரு இணையத்தளத்தினால் மூக்குடைக்கப்பட்டு,  கையறுநிலையில் நிற்கிறது. அனைத்து நாடுகளையும் தொடர்புக் கொண்டு விக்கி லீக்ஸை நம்ப வேண்டாம். அதில் உள்ளது எல்லாம்  பொய்' என கதறி வருகிறது. அமெரிக்காவின் பொய் முகத்தை விக்கிலீக்ஸ் அகற்றிவிட்டதாகவே அனைத்துலக ஊடகங் களும் செய்திகளை வெளியிடுகின்றன. இச்சாதனை புரிந்த விக்கிலீக்ஸ் பக்கங்களை புரட்டுவோம்.

விக்கிலீக்ஸ்  (Wikileaks) அல்லது விக்கி கசிவுகள் என்பது இன்று உலகமே பரபரப்பாக பேசப்படும் இணையத்தளம். ஒரு இலாப நோக்கற்ற  இணைய ஊடகம். இதில் விக்கி என்பது யார் வேண்டுமானலும் பங்களிக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் இணையத் தளங்களை குறிக்க  பயன்படுத்தும் வார்த்தை. உதாரணத்திற்கு தகவல் களஞ்சியமான என்சைக்ளோபீடியாவின் விக்கி வடிவம்தான் விக்கிப்பிடியா (wikipedia.com). இதுபோல விக்கிலீக்ஸ் பெயர் அறிவிக்காதவர்களின் பங்களிப்புகளைக் கொண்டிருப்பதுடன், அரசு அல்லது சமய நிறுவனங்களின்  பாதுகாக்கப் பட்ட இரகசிய ஆவணங்களை பொது மக்களின் பார்வைக்கு  கொண்டு வருகின்றது. நிறுவிய  ஓராண்டுகளுக் குள்ளேயே 1.2 மில்லியன் ஆவணங்கள் இந்த இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அவற்றில் மிக முக்கியமாக  ஆப்கானிலும் ஈராக்கிலும் அமெரிக்கப் படை செய்த படுகொலைகளை பகிரங்கப்படுத்தியுள்ளது. இராணுவம் செய்த கொடூரங்களை  ஒளிப்படங்களாக வெளியிட்டது. அமெரிக்க இராணுவ இரகசிய ஆவணங்களை வெளியிட்டு திகிலூட்டியது. இவ்வளவுக்கும் காரணமான விக்கிலீக்ஸ் இணையத்தை இயக்குபவர்கள் சில பேர் கொண்ட குழுதான். அதன் மூளை வர்ணிக்கப்படுபவர் விக்கி லீக்ஸின் ஆசிரியர் ஜூலியன் பவுல் அசாஞ்ச். இணையத்தளத்தை நிறுவியவர். அதன் முதன்மை ஆசிரியராகவும் பேச்சாளராகவும் உள்ளார். இவரின் தன்னலமற்ற மனித  உரிமை ஆர்வம்தான் விக்கிலீக்ஸ் உருவாக காரணம்.

ஜூலியன் பவுல் அசாஞ்ச்  (Julian Paul Assange)  ஓர் ஆஸ்திரேலியர். இந்த துடிப்பான இளைஞருக்கு 41 வயது. திருமணமாகி  விவாகரத்தானவர். தனது 16 வயதிலேயே கனடாவின் புகழ்பெற்ற நோர்டெல் தகவல் தொடர்பு நிறுவனத்தின் ஆஸ்திரேலிய வழங்கியினை  தன் வசப்படுத்தி, அதனுள் புகுந்து அனைத்தையும் படித்த ஹேக்கிங் கில்லாடி.

ஹேக்கிங் என்பது ஒருவரின் வலைதளத்தின் உள்அமைப்புக்குள் திருட்டுத்தனமாக சென்று அவற்றில் வைக்கப்பட்டுள்ள தகவல்களை திருடுவது. மாட்டிக்கொண்டால் சிறைதண்டனை  நிச்சயம். இதில் ஆதாரங்கள் இல்லாமல் ஹேக்கிங் செய்வதில் நிபுணத் துவம் பெற்றவர் ஜூலியன். வலையமைப்பின் பாதுகாப்பு  வலையங்களை உடைத்து உட்புகுந்து கணினிகளுக் கோ, அதிலுள்ள கோப்புகளுக்கோ எந்த சேதத்தினையும் விளைவிக்காமல்,  தகவல்களை திருடுவதில் கரைக்கண்டவர். இது ஒரு பாதுகாப்பான திருட்டுத் தனம். இந்த வழியில் பல  பொது நிறுவனங்கள்,  அரசுத் துறைகள் சார்ந்த வலையமைப்புக்குள் தகவல் களை எடுத்துவந்தார். அப்படி செய்துவந்த வேளையில் இந்த சமூகம் எப்படி ஒரு  போலியான கட்டமைப்புக் குள் இருந்து கொண்டு அப்பாவி மக்களை அலைக் கழிக்கிறது என்பதனைக் புரிந்துக் கொண்டார். ஊடக  போதையில் ஊறிக் கிடக்கும் இச்சமூகத்தினை ஒரு ஊடகப் புரட்சியின் மூலமே தெளிய வைக்க முடியும் என்று நம்பிய ஜூலியன்  அதற்குக் கொடுத்த செயல் வடிவம்தான் "விக்கிலீக்ஸ்'.

அரசின் இரகசியங்களை பகிரங்கமாக மக்களிடம் எடுத்துவைப்பது என  முடிவு செய்து விக்கிலீக்ஸ் தளத்தினை ஆரம்பித்தார் ஜூலியன். இதற்காக wikileaks.org எனற இணையத்தள முகவரி 2006-ஆம் ஆண்டு  அக்டோபர் 4-ஆம் தேதி ஜூலியனின் பெயரில் பதிவு செய்யப்பட்டது. 20 கோப்பு நிரல்களை வழங்கும் வழங்கிகள் பல ஐரோப்பிய  நாடுகளில் ஏற்படுத்தப்பட்டது.

ஏன் ஐரோப்பிய நாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டது என்றால் இந்த நாடுகள் அனைத்தும் தகவல் பரவல்  சட்டப்படி பாதுகாப்பு வழங்கும் நாடுகள். எந்த நாடா வது விக்கிலீக்ஸ் தளத்தை முடக்கினால், வேறொரு நாட்டில் இருந்து தளம்  தடையின்றி செயல்படும் வண்ணம் வடிவமைக்கப்பட்டது. அதேபோல வெளி யிடப்படும் இரகசியத் தகவல்களை எந்த நேரத்திலும் எந்த  நாட்டின் நிர்ப்பந்ததிற்காகவும் நீக்குவதில்லை என்பது விக்கிலீக்ஸ் கொள்கை.  இப்படி சிறப்பாக திட்டமிடப்பட்டு வடிவமைக்கப்பட்டது  விக்கிலீக்ஸ். இது இந்த நூற்றாண்டின் இணைய ஊடகத்தின் மாபெரும் புரட்சி என்றே சொல்லலாம்.

உலகமெங்கும் விக்கிலீக்ஸ் தளத்திற்கான பதிவு செய்யப் பட்ட தன்னார்வ தொண்டர்கள் மட்டும் 1200 பேர். இது 2009-ஆம் ஆண்டு  விக்கிலீக்ஸ் வெளியிட்ட தகவல். இவர் களை வழிநடத்துவது விக்கிலீக்ஸ் ஆலோசனைக் குழு. அதில் ஜூலியன் அசாஞ்ச் (ஆலோசனைக்  குழுவின் தலைவர்), பிலிப் ஆதம்ஸ், சி.ஜே.ஹின்க், பென் லூரி, டேசி  நெம்கியால் கம்ஷிட்சாங், சூவா கியுவங், சிகோ விட்கேர், வாங்  யுக்காய் ஆகியோர் உள்ளனர். மொத்தமே இவ்வளவு பேர்தான் விக்கிலீக்ஸின் பணியாளர்கள். இவர்களின் பணி கோப்புகளை சரிபார்ப்பது, மொழிபெயர்க்க வேண்டியிருந்ததால் மொழி பெயர்ப்பது, அதன் பின்னர் கோப்புகளின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து வெளியிடலாமா, வேண்டாமா என்று பரிந்துரைப்பது. அவ்வாறு  பரிந்துரைக்கப்பட்டவைகளில் இருந்து சிறப்பானவையாக, முக்கியத் தகவல்களாக, தேர்ந்தெடுப்பது ஜூலியனின் வேலை. இவரே  முதன்மை ஆசிரியர். இவர்களின் சீரிய பணியிலிருந்துதான் விக்கிலீக்ஸ் செயல்படுகிறது.
அடுத்ததாக, உங்களுக்கு இங்கு ஒரு சந்தேகம் வரலாம். சாதாரணமாக யாருக்கேனும் ஈமெயில் வழியே மிரட்டல் விடுத் தாலே அவர்கள்  பயன்படுத்திய ஐ.பி (Internet Protocol address - IP address)  முகவரியை கண்டுபித்து ஈமெயில் அனுப்பியவரை பிடித்துவிடுவார்கள். அப்படி இருக்க ஒரு நாட்டின்  இரகசியத்தையே எப்படி விக்கிலீக்ஸிற்கு அனுப்பிவைக் கின்றனர். அவர்கள் மாட்டிகொள்ள மாட்டார்களா என கேள்வி எழுவது  நியாயமானதே. இந்த மாபெரும் பிரச்சினையிலிருந்து தப்பிக்க விக்கிலீக்ஸ் தனது ஆர்வலர்களுக்கு பரிந்துரை செய் திருப்பது பர்ழ். இது ஒரு  இணையத்தொடர்பு வழங்கி. www.torproject.orgஇல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது Tor anonymity network என குறிப்பிடப்படுகிறது. இதன்  இலச்சினையே வெங்காயம்  தான். வெங்காயம்  உரிக்க,  உரிக்க இதழ்கள்தான் கிடைக்குமே ஒழிய, ஒரு கட்டத்திற்கு மேல் ஒன்றுமே இருக்காது. கிட்டத்தட்ட அதே மாதிரி தான் இந்த  டார். திருட்டுதனமாக இதன் மூலம் எதையும் அனுப்பலாம். இதனுள் போனால் நீங்கள் எங்கிருந்து என்ன தகவல்களை அனுப்புகிறீர்கள் என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. இப்படி எல்லா விதத்திலும் தயார்படுத்திக் கொண்டு ஊடக யுத்ததிற்கு தயாரானார்கள் விக்கிலீக்ஸ் குழுவினர். இது நக்கீரன் இதழில் தொடராக வரும் யுத்தத்தை போல. அதில் நீங்கள் நக்கீரன் கோபால் அவர்கள் நடத்திய அ.தி.மு.க. அரசுக்கெதிரான யுத்தத்தையும் அவரின் வீரத்தையும் படிக்கலாம்.

விக்கிலீக்ஸ் 2010 ஏப்ரல் மாதம் 22-ஆம் தேதி சுமார் 30 நிமிடம் ஓடக் கூடிய ஒரு வீடியோவை Collateral  Murder என்ற பெயரில் வெளியிட்டது. அவ்வளவுதான் ஒட்டு மொத்த அமெரிக்காவும் அவமானத்தால் முகத்தினை கவிழ்த்து கொண்டது.  அப்படி என்ன இருந்தது அந்த வீடியோவில்?. எந்தவித விபரீத அறிகுறியும் இல்லாமல், வெறும் முன்னெச்ச ரிக்கைக்காக என்ற  காரணத்தை மட்டுமே வைத்துக் கொண்டு சிட்டுக்குருவிகள் போல் சாதாரண மக்களை, குழந்தைகளை, பொதுமக்கள் குடியிருக்கும்  கட்டிடத்தினை  வேட்டையாடப் படுவது அந்த வீடியோவில் பதிவாகியிருந்தது. அதில் இறந்தவர் களில் புகழ்பெற்ற  ""வாஷிங்டன் போஸ்ட்'' செய்தி நிறுவனத்தின் பத்திரிகையாளர்கள் இருவரும் அடங்குவர். அவர்களின் மரணம் குறித்து பலமுறை  கேள்வியெழுப்பிய போதெல்லாம், தங்களுக்கு எதுவுமே தெரியாது என அதுவரை அமெரிக்கா மறுத்து வந்ததும், அந்த வீடியோ  தாக்குதலில் ஈடுபட்ட அதே  ராக்கெட்டிலிருந்தே எடுக்கப்பட்டிருந்ததும் ஆச்சர்யமான விஷயம்.

அமெரிக்காவின் மனித உரிமை,  சர்வதேசப் போர் விதி முறை சாயங்கள் இணையத்தில் மொத்தமாகக் கரைந்து, இவ்வ ளவு நாள் மறைத்து வைக்கப்பட்ட விகாரமான  இராணுவ முகம் உலகத்தின் கண்களுக்கு காட்சியளித்தது. உலக அளவில் மனித நேய ஆர்வலர் ஜூலியன் பவுல் அசாஞ்ச்-ஐ  கொண்டாடியது. ஏராளமான விருதுகள் வழங்கப்பட்டன. நியூ மீடியா விருது, இங்கி லாந்து மீடியா விருது போன்றவை அவற்றில்  முக்கியமானவை.

2010-ஆம் ஆண்டு  ஜூலை மாதம் 25-ஆம் தேதி விக்கி லீக்ஸ் 1.2 மில்லியன் அமெரிக்க இராணுவ கோப்புகளை கைப் பற்றியது. இவற்றை அலசிபார்த்து ஆயிரம்  கோப்புகளை மட்டும் ஒழுங்குபடுத்தியது. அதனை ஆப்கானிஸ்தான் போர்க் குறிப்புகள் (Afghan War Diary) என்ற  தலைப்பில் வெளியிடப்பட்டது. விக்கிலீக்ஸ் தளத்தில் மட்டுமே வெளியிடாமல் அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ், ஜெர்மனியின் டெர்  ஷெபிகல், பிரான்சின் லி மொன்ட், ஆஸ்திரேலியாவின் தி ஆஸ்திரேலியன், இங்கிலாந்தின் த கார்டியன் போன்ற முக்கியப்  பத்திரிகைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவ்வளவுதான் மறுநாள் உலகமே தடுமாறிப்போனது. விக்கிலீக்ஸ் தளத்தின் ஆரம்ப கால  அதிரடி வெளியீடு திக்குமுக்காட வைத்து விட்டது. அமெரிக்க அரசாங்கத்தின் ""நேர்மையற்ற'' போர் தந்திரங்கள், படுகொலைகள்  அம்பலமானது. அதில் முக்கியமானது சக நேசநாட்டுப்  (Nato)  படையான கனடாவின் படையணியைச் சேர்ந்த நால்வரை அமெரிக்க ராணுவமே  சுட்டுக்கொன்ற தும் இதில் அடக்கம். வட அமெரிக்காவில் அரசியல் உஷ்ணம் அதிகமானது. நீச்சல் தெரியாதவனைத் தண்ணீருக்குள் தள்ளிவிட்ட நிலைமை அமெரிக் காவிற்கு. இதற்கு முன் சரித்திரத்தில் இப்படி மொத்தமாக இவ்வளவு விஷயங்கள் ஒரே நேரத்தில் அரசாங்க  ஆவணங்களாகவே வெளியிடும் அளவுக் கான ஊடகத் தாக்குதலை எந்த நாடும் எதிர் கொண்டதில்லை. ""இது நாட்டின் பாதுகாப்பு மற்றும்  இறையாண்மை மீதான தாக்குதல், இல்லை இல்லை' இவர்கள் யாரென்றே தெரியவில்லை, எப்படி நம்புவது', இல்லை இல்லை அவர்கள் சொல்வதெல்லாம் ஆரம்பத்தில் நடந்தது, பின்னர் நாங்கள் திருந்திவிட்டோம், இல்லை இல்லை 'அந்த கனடா வீரர்களை  நாங்கள் கொல்லவில்லை,'' என அமெரிக்கா உளறிக்கொட்டியது. அப்படி உளறினாலும், விக்கிலீக்ஸ் தளத்தின் ஆணிவேரை நோக்கியத்  தாக்குதலிற்கான தனது சகல முயற்சிகளையும் அன்றே ஆரம்பித்தது அமெரிக்கா. அமெரிக்காவிற்கு இது மானப் பிரச்சினை என்பதால் முழுவேகத்துடன் விக்கிலீக்ஸ் நோக்கிப் பாய்ந்தது.

2010 நவம்பர் மாதம் 28- ஆம் தேதி அமெரிக்காவின் முகமூடி கழற்றப்பட்ட நாள்.  அமெரிக்க தூதரக இரகசியம் (Cablegate) பெயரில் 2,50,000 கோப்புகளை வெளியிட்டது விக்கிலீக்ஸ். அமெரிக்க தூதரகங்களின் ஆவணங்கள் இணைய வரலாற்றில் முதல் முறையாக அம்பலப்படுத்தப்பட்டது. இதனால் அமெரிக்க  வெள்ளைமாளிகையின் அடித்தளமே ஆட்டம் கண்டது. “அமெரிக்காவின் பாதுகாப்புக் கெதிரான அச்சுறுத்தல், உலக நாடுகளில்  ஒற்றுமையின் மீதானத் தாக்குதல்’’ என்றார் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன். ஒவ்வொரு நாட்டுத்  தலைவர்களையும் தொலைபேசியில் அமெரிக்கா அழைத்து "அதெல்லாம் பொய்.. ஏமாத்துறான்..நம்பாதீங்க' என்றெல்லாம் கெஞ்சியது.  வரலாற்றில் முதல் முறையாக  அமெரிக்கா சகநாடுகளிடம் சிரம் தாழ்ந்து, பணிந்து பேச வைத்தார். ஜூலியன். விக்கிலீக்ஸ்  வெளியிட்ட இரகசிய ஆவணங்களைப் படித்த பிறகு, இப்போது, ஒவ்வொரு நாட்டுக்கும் தனது தூதர்களை அனுப்பி, விக்கிலீக்ஸ்’  சொல்வதை தயவு செய்து நம்பிவிடாதீர்கள்’ என்று கோரிக்கை விடுத்துவருகிறது அமெரிக்கா. அப்படி என்ன இருக்கிறது அமெரிக்க  தூதரக இரகசியத்தில். முதலில் நமது நாட்டை மட்டும் பார்ப்போம்.

இந்தியாவை இன்றுவரை சந்தேகத்துக்குரிய நாடாகவே அமெரிக்கா பார்ப்பதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது. இதுவரை டெல்லியில்  உள்ள தூதரகம் மூலம் 3,038 ரகசிய ஆவணங்கள் அமெரிக்காவுடன் பரிமாறப்பட்டுள்ளது. ராகுல் காந்தி, இந்தியாவுக்கான அமெரிக்கத்  தூதர் திமோதி ரோமரிடம் பேசும்போது, வளர்ந்து வரும் தீவிரவாதப் போக்குக் கொண்ட இந்துக் குழுக்களால் இந்தியாவின் பாதுகாப்புக்கு  அதிக அச்சுறுத்தல்கள் உள்ளதென, தெரிவித்ததாக விக்கி லீக்ஸ் இணையத்தளம் தெரிவித்துள்ளது. சிவசேனைக்கு எதிரான ராகுல்  காந்தியின் கடுமையான அணுகுமுறை குறித்தும் இன்னொரு கசிவில் அமெரிக்கத் தூதர் குறிப்பிட்டிருக்கிறார். அதனால், ராகுல் காந்தியின்  கருத்துக்கு  ஆர்எஸ்எஸ், விசுவஹிந்து பரிஷத் மற்றும் பிரதான எதிர்க்கட்சியான பாஜக ஆகியவை  கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இருந்தபோதும் ராகுல் காந்தியின் கருத்துகள் சரியானதே என மதசார்பற்றவர்கள் கூறுகின்றனர்.

அதேபோல ஐ.நா. நிரந்தர உறுப்பினர் பதவியைப் பெற இந்தியா தீவிரமாக இருப்பதால், அது தொடர்பாக ஐ.நா.வில் என்னவிதமான முயற்சிகளை  இந்தியா மேற்கொள்கிறது என்பது குறித்து உளவு பார்க்குமாறு தனது தூதர்களை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன்  கேட்டுக் கொண்டதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.  .

 இந்திய அணு ஆயுத ஒப்பந்தம், ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராக எடுத்து வரும் முயற்சிகள்  உள்ளிட்டவை குறித்து உளவு பார்க்குமாறு அதில் ஹிலாரி அறிவுறுத்தியுள்ளார். இந்த பணியை தனது உளவு அமைப்புகளுக்கும் அவர்  ஒதுக்கியுள்ளார். இந்தியா தவிர பிரேசில், ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளும் ஐ.நா. பாது காப்பு சபை நிரந்தர உறுப்பினர் பதவிக்காக மோதி வருவதால் அவர்களையும் உளவு பார்க்க உத்தரவிட்டுள்ளார் ஹிலாரி.

இதற்காக ஐ.நா. பாதுகாப்பு சபை விரிவாக்கத்தை எதிர்த்து வரும் மெக்சிகோ, இத்தாலி, பாகிஸ்தான், ஆப்பிரிக்க நாடுகள், ஐரோப்பிய  யூனியன், ஐ.நா. பொதுச் செயலகத்தில் உள்ள சிலரையும் தனக்கு கூட்டு சேர்த்து செயல்பட்டுள்ளது அமெரிக்கா. மேலும் அணி சேரா  நாடுகள் கூட்டமைப்பு, ஜி-77 கூட்டமைப்பு, இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு குறித்தும் அது உளவு பார்த்துள்ளது. .

விக்கிலீக்ஸின் இந்த ஆவணங்கள் உலகை பெரும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. தவிர மத்திய கிழக்கிலும் பதற்றமான நிலைமைக்கு வழி  வகுத்திருக்கிறது.

இந்த பின்விளைவுகளை எதிர்ப்பார்த்துதான் "விக்கிலீக்ஸை நம்பாதீர்கள்' என்று அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் ஹிலாரி  கிளிண்டன் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு குடியரசுகள், ஆப்கானிஸ்தான், சீனா மற்றும் இந்தியாவுக்கு  தொடர்ந்து செய்தி அனுப்பி வந்தார். அமெரிக்காவின் இந்த இராஜத்தந்திரம் இனி எடுபடுமா? என்பது சந்தேகம்தான்.

ஒவ்வொரு வெளியீட்டிற்குப் பிறகும் ""இதெல்லாம் எப்படி உங்களுக்கு மட்டும் கிடைக்கிறது'' என ஜூலியனிடம் கேட்கும் போதெல்லாம், ""அது  ராமசாமி கொடுத்தது.... இது கந்தசாமி கொடுத்தது...'' என்பது வழக்கம். ஜூலியனை நன்கு அறிந்தவர்கள் யாரும் அதனை நம்புவதற்குத்  தயாரில்லை. ஜூலியன் தனது ஹேக்கிங் நடவடிக்கைகள் மூலமே இதையெல்லாம் வெளியில் கொண்டுவருகின்றார். அதனிலிருந்து சட்ட  ரீதியாகத் தன்னைப் பாதுகாக்க "விக்கி' எனும் இணைய நெட்ஒர்க் அமைப்பினைக் கேடயமாக்குகிறார். அதே நேரத்தில் ஜூலியன் இரு பெண்கள் விஷயத்தில் மாட்டிக் கொண்டது என்பது என்னவோ  உண்மைதான். இதற்காக இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டு, தற்சமயம் ஜாமீனில் வெளிவந்துள்ளார். தமது பக்கம் நியாயம்  இருப்பதால்தான் பிணையில் வெளிவந்துள்ளதாக தெரிவித்துள்ள ஜூலியன், நீதிக்காக தொடர்ந்து போராடப் போவதாக தெரிவித்தார். ""அமெரிக்க என்னை இன்னும் பின் தொடர்ந்தால் அமெரிக்காவில் திவாலாகும் நிலையில் உள்ள வங்கிகளின் ரகசியங்களை  வெளியிடுவேன். அதேபோல அந்த வங்கிகளின் கணக்கு விவரங்கள் பகிரங்கப்படுத்தப் படும்'' என மிரட்டல் விடுத்தார். எது எப்படியோ இன்று உலகளவில்  பிடல் காஸ்ட்ரோ, குகே சாவேஸ், நோம் சோம்சுக்கி ரஷ்ய-சீன பொதுவுடமை தலைவர்கள்  விக்கிலீக்ஸை ஆதரிக்கிறார்கள்.  சமூக ஆர்வலர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் விக்கிலீக்ஸுக்கு பெரும் ஆதரவை தந்துவருகின்றனர். இந்த பரபரப்பில் ரஷ்யா ஜூலியனுக்கு நோபல் பரிசு  தர வேண்டும் என கூறியுள்ளது. அவரது தாய்நாடான ஆஸ்திரேலியாவே ஜூலியன் எங்கள் மண்ணின் மைந்தன் அவரை நாங்கள் பாதுகாப்போம் என அறிவித்துள்ளது. அதே நேரத்தில் விக்கிலீக்ஸ் சீனாவுக்கு ஆதரவானது எனவும் கருதப்படுகிறது. எது எப்படி இருந்தாலும்  எவ்வித சமரசமுமின்றி பணம் பதவிக்கு ஆசைப்படாமல் நேர்மையான துணிவான ஜூலியன் பவுல் அசாஞ்ச்-ன் சாதனை ஈடு  இணையில்லாத ஒரு மாபெரும் ஊடக சாதனை இந்த நேர்மையான பத்திரிகையாளரின் வெற்றிப் பயணம் தொடரட்டும். மக்கள் விரோத அரசுகளின் இரகசியம் அம்பலமாகட்டும்.

Friday, July 29, 2011

நாஸ்டர்டாமஸ் என்னும் ஐரோப்பிய தீர்க்க தரிசி ! Interesting facts

             


நம் நாட்டு சித்தர் பெருமக்களை ஒப்பிடும்போது , இவை எல்லாம் ஒன்றுமே இல்லை. என்ன பண்ணுவது? அவர் தான் மேலை நாட்டில் பிறந்து விட்டாரே ! அற்புதம் என்று தோன்றும் விஷயங்களை அவர்கள் தான் விளம்பரப் படுத்துவதில் ஜித்தர்களே. அவரை வைத்து எழுதிய புத்தகங்கள் அனைத்தும், மில்லியன் டாலர்களை சம்பாதித்துக் கொடுத்துள்ளன.   சரி, நமது வாசகர்களுக்காக - அவரைப் பற்றி ஒரு சில பதிவுகள் . இந்த தகவல்கள், சில வருடங்களுக்கு முன்பே எனக்கு நண்பர் ஒருவர் அனுப்பியவை. நமது வாசக அன்பர்களிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. நிச்சயமாக சுவாரஸ்யமாக இருக்கும்.   பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நாஸ்டர்டாமஸ் உலகில் கி.பி.3797 வரை என்னவெல்லாம் நடக்கப் போகிறது என்பதைக் கூறியுள்ள அபூர்வ ஜோதிடர். சுமார் 3000 பலன்களை இவர் கூறியுள்ளதும் அவை அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக நடந்து வருவதும் உலகில் உள்ள அனைவரையும் திகைக்க வைக்கிறது. 'நூற்றாண்டுகள்' என்ற இவரது நூல் 942 செய்யுட்களைக் கொண்டது. ஒவ்வொரு செய்யுளிலும் நான்கு வரிகள் உள்ளன. இவைகள் காண்டமாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு காண்டத்திலும் நூறு பாடல்கள் உள்ளன.. 14-12-1503ல் பிறந்த இவர் 2-7-1566ல் மறைந்தார். இவர் வாழ்வு மிக விசித்திரமான ஒன்று. இவர் கூறிய பலன்கள் பெரும்பாலும் அழிவையும் விபத்துக்களையும் கொலைகளையும் சுட்டிக் காட்டுவதால் சிறிது பயத்துடன்தான் இந்த நூலை அணுக வேண்டியிருக்கிறது. ஆனால் ஹிந்து மதம் மிக உயரிய நிலையை இந்த நூற்றாண்டில் அடையப் போகிறது என்பதையும் இவர்தான் கூறியுள்ளார். லண்டனில் ஏற்பட்ட மாபெரும் தீ விபத்து, பிரெஞ்சுப் புரட்சி, ஹிட்லரின் எழுச்சியும் வீழ்ச்சியும், கென்னடியின் கொலை போன்றவற்றை இவரால் எப்படித் துல்லியமாகக் கூற முடிந்தது என்பது ஆச்சரியகரமான விஷயம்தான்!   லத்தீனில் ஆழ்ந்த புலமை பெற்ற நாஸ்டர்டாமஸ் அம்மொழியின் செழுமையான வார்த்தைகளைக் கையாண்டிருப்பதால் அதன் உள் அர்த்தம் புரியாமல் அறிஞர்களும் ஜோதிட ஆர்வலர்களும் இன்று வரை அச்சொற்பொருள்களை அறிய தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நான்கு ஆண்டுகளில் இந்நூலை முடித்து 1555ம் ஆண்டு மே மாதம் ஐந்தாம் தேதி வெளியிட்டார். நூல் அச்சிடப்பட்ட மேஸ்பான்ஹோம் பிரஸ்ஸின் முன்னே வெகு தூரத்திற்கு நீண்ட வரிசையில் மக்கள் நின்று இதை வாங்கி மகிழ்ந்தனர். ஆனால் சங்கேத மொழியில் பலன்களைக் கொண்டுள்ள பாடல்கள் அவர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தின   அவரது மகனுக்கே அவர் ஒரு எச்சரிக்கையை சங்கேத மொழியில் அளித்திருந்தார். ஒரு கடித வடிவில் அது இருந்தது, சீஸர் என்ற பெயருடைய அவரது மகன் 22ம் வயதில் தன் தந்தையின் பெயரைத் தீய வழியில் பயன்படுத்துவார் என்றும் அது அவருக்கு நலம் பயக்காது என்றும் எச்சரித்திருந்தார் நாஸ்டர்டாமஸ்.   இதை அலட்சியப்படுத்திய சீஸர், தந்தையைப் போல் பலன்கள் கூற வேண்டும் என்ற ஆர்வத்தில் விவாரிஸ் என்ற நகர் அழியப் போகிறது என்று ஆரூடம் கூறினார். ஆனால் அரசாங்கப் படைகளின் பாதுகாப்பில் இருந்த அந்த நகரத்திற்கு ஒரு ஆபத்தும் நேரவில்லை. மக்கள் சீஸரைச் சூழ்ந்து கொண்டு எப்போது நமது நகரம் அழியப் போகிறது என்று கேட்கலாயினர். பளீரென்று சீஸர் 'இன்னும் மூன்று நாட்களில்' என்றார். அடுத்த நாள் இரவு அவரே நகருக்குத் தீ வைக்க முயன்ற போது கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டு அரசாங்க வீரர்களால் கொல்லப்பட்டார்.   இதே போல நடந்த இன்னொரு விசித்திரமான சம்பவம் அவர் புகழை வெகுவாகப் பரப்பி விட்டது. புகழ் பெற்ற மருத்துவராகவும் தீர்க்கதரிசியாகவும் அவர் திகழ்ந்ததால் பிரான்ஸிலுள்ள பெரும் தனவந்தர்களும் பிரபுக்களும் அவரை அழைத்துத் தங்கள்குறைகளைப் போக்கிக் கொள்வது வாடிக்கையாக இருந்தது, ஒரு சமயம் லொரெய்ன் என்ற மாகாணத்தில் இருந்த பெயின்ஸ் கோட்டையின் உரிமையாளரான லார்ட் ப்ளோரின்ஸ்வில்லி அவரை அழைத்தார். அவரது தாயாரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்தது. அவரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று பிரபு ப்ளோரின்ஸ்வில்லி கேட்டுக் கொள்ளவே சலான் என்ற தனது நகரிலிருந்து பயணப்பட்டு லொரெய்ன் வந்து தன் சிகிச்சையைத் தொடங்கினார் நாஸ்டர்டாமஸ். சீக்கிரமே அவர் குணமடைந்தார். இதனால் மனம் மகிழ்ந்த பிரபு தன் தாயார் குணமடைந்ததைக் கொண்டாட ஒரு பெரும் விருந்துக்கு ஏற்பாடு செய்தார். விருந்து நடக்கும் நாளன்று காலையில் தோட்டத்தில் நாஸ்டர்டாமஸுடன் அவர் உலாவச் சென்றார். அங்கே ஒரு இடத்தில் இரண்டு குட்டிப் பன்றிகள் இருந்தன. ஒன்றின் நிறம் கறுப்பு. இன்னொன்றின் நிறம் வெள்ளை. அதைச் சுட்டிக் காட்டிய ப்ளோரின்ஸ்வில்லி நாஸ்டர்டாமஸிடம் கிண்டலாக "இந்த இரண்டு பன்றிகளின் எதிர்காலம் பற்றிச் சொல்ல முடியுமா" என்று கேட்டார். நாஸ்டர்டாமஸின் உண்மையான பெருமை அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.   இரண்டு பன்றிகளையும் உற்றுப் பார்த்த நாஸ்டர்டாமஸ் ப்ளோரின்ஸ்வில்லியிடம் "இதோ இந்த கறுப்புப் பன்றி ஒரு ஓநாய்க்கு உணவாகப் போகிறது. இதோ இந்த வெள்ளைப் பன்றி நமக்கு இரவு விருந்தில் உணவாகப் போகிறது" என்றார். ப்ளோரின்ஸ்வில்லி இதைப் பொய்யாக்கி விட வேண்டுமென்று எண்ணம் கொண்டு தனது சமையல்காரரை ரகசியமாக அழைத்து கறுப்புப் பன்றியை விருந்து உணவிற்குக் கொல்லுமாறு கட்டளையிட்டார். இரவு விருந்தில் தனது அருகில் உட்கார்ந்திருந்த நாஸ்டர்டாமஸிடம் "உங்கள் கூற்றுப் பொய்யாகி விட்டது. இதோ நாம் சாப்பிடுவது கறுப்புப் பன்றியைத்தான்" என்றார். நாஸ்டர்டாமஸோ சிரித்தார். "இல்லை, இது நான் சொன்ன வெள்ளைப் பன்றிதான்" என்றார்.   உடனே பிரபு தன் சமையல்காரரை அழைத்தார். சமையல்காரர் நடந்ததை விளக்கினார். "கறுப்புப் பன்றியைக் கொன்ற பின்னர் சில நிமிடம் நான் வெளியே போனேன். அப்போது ஒரு நொண்டி ஓநாய் உள்ளே வந்து அந்த மாமிசத்தை உண்டு விட்டது. வேறு வழியின்றி வெள்ளைப் பன்றியையே சமைத்தேன்" என்றார்.   இந்த விஷயம் வெளியில் பரவவே நாஸ்டர்டாமஸின் புகழ் பெருமளவில் பரவியது. அவரை பய பக்தியுடன் அனைவரும் வணங்கினர்.   இன்னொரு சம்பவம்: ஒரு நாள் மாலையில் அவரைத் தாண்டிச் சென்ற ஒரு இளம் பெண் தனது மாலை வணக்கத்தைத் தெரிவித்து அருகிலுள்ள காட்டில் சுள்ளிகளைப் பொறுக்கப் போவதாகச் சொன்னாள். நாஸ்டர்டாமஸும் அவளிடம் "மாலை வணக்கம் இளம் பெண்ணே" என்று கூறினார். சற்று நேரம் கழிந்து இரவான போது அவள்திரும்பி வந்தாள். அவருக்குத் தனது இரவு வணக்கத்தைத் தெரிவித்தாள்.   நாஸ்டர்டாமஸ், "மாலை வணக்கம் கூறிய போது இளம் கன்னியாகப் போனாய்; இப்போது இளம் மனைவியாக வந்து விட்டாயே" என்று சிரித்துக் கொண்டே கூறினார். அரண்டு திகைத்துப் போன அவள் ஓடியே விட்டாள். தனது காதலனைக் காட்டில் சந்தித்த அவள் கன்னிமை இழந்ததை நாஸ்டர்டாமஸ் போகிற போக்கில் கூறியது அவரது எதையும் உணரும் ஆற்றலை உணர்த்தியது.     இந்து மதம் பற்றி -  நாஸ்டர்டாமஸ் கணிப்பு :   நாஸ்டர்டாமஸ் சிறுவயதில் யூதர்களின் மொழியான ஹீப்ரு மொழியைத் தன் தாத்தாவிடமிருந்து கற்றுக் கொண்டார். லத்தீன், கிரேக்கம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றதோடு கணிதத்திலும் தேர்ச்சி பெற்றார். இத்தோடு ஜோதிடத்தின் மர்மங்களையெல்லாம் ஆழ்ந்து கற்று அதில் நிபுணரானார். தாத்தா இறந்தவுடன் தன் சொந்த ஊருக்குத் திரும்பி பெற்றோருடன் வாழலானார். இயற்கையாகவே செழுமையான குடும்பமாக இருந்ததால் அவர் வாழ்நாளில் ஒரு நாளும் பணத்திற்காகத் துன்பப்பட்டதுமில்லை; செலவழிக்கத் தயங்கியதுமில்லை!   பதினேழாவது வயதில் சட்டம் பயில அவிக்னான் என்ற பெரிய நகருக்கு அவர் சென்றார். அங்கு அவரது புத்தி சாதுரியத்தால் அனைவரையும் விஞ்சி நின்றார். ஆயினும் அவர் பைபிளுக்கு எதிரான கருத்துக்களை துணிச்சலாகச் சொல்லவே அவரது பெற்றோர் அவருக்குத் தண்டனை கிடைத்து விடும் என்று பயந்து அவரை ஊருக்குத் திரும்பி வரச் சொல்லி வற்புறுத்தினர். சொந்த ஊருக்கு வந்த நாஸ்டர்டாமஸ் பின்னர் மாண்ட்பெல்லியர் என்ற நகருக்குச் சென்று தனது 19ம் வயதில் மருத்துவம் பயில ஆரம்பித்தார். 1526ல் பெரிய மருத்துவரானார்.   சலான் என்ற நகரில் அவரது வீட்டில் மேல் மாடியில் ஒரு சிறிய அறை இருந்தது. அதைத் தனது பணிகளுக்கான அறையாகக் கொண்ட அவர் அதில் அடிக்கடி தீவிர தியானத்தை மேற்கொண்டு சமாதி நிலையை அடைந்தார். அவர் அகக்கண்ணில் எதிர்காலம் பற்றிய காட்சிகள் தோன்றலாயின அவர் எதிர்காலத்தில் பயணிக்கும் காலப் பயணியாக மாறித் தனக்குப் புலப்பட்டதை எல்லாம் குறித்துக் கொண்டார். அதன் விளைவுதான் அவரது ‘செஞ்சுரீஸ்' என்ற எதிர்காலக் கணிப்பு நூல்!.   அந்நூலில் சங்கேத பாஷையில் அமைந்த அவரது பாடல்களில் இருந்து சில எடுத்துக்காட்டுகளைப் பார்க்கலாம்.   மூன்றாம் காண்டத்தில் 57வது க்வாட்ரெய்னில் (நான்கு வரிச்செய்யுள்) உள்ள நான்கு வரிகள் இவை:   நாளுக்கு நாள் அவர் புகழ் பெருகவே அவர் வாயிலிருந்து என்ன சொல் உதிரப் போகிறது என்பதை அனைவரும் அறிய ஆவலுற்றனர். அவர் மரணத்திற்குப் பின்னும் கூட அவர் ஆரூடம் பலித்ததுதான் விசித்திரத்திலும் விசித்திரம்! பிரிட்டிஷ் தேசம் ஏழு முறைகள் மாறுதலைச் சந்திக்கும்                   ​                              290 ஆண்டுகளில் ரத்தக் கறை தோயும் ஜெர்மனியில் விடுதலைக்கு ஆதரவிருக்காது துருக்கிய காலிப்கள் மாறியிருக்கும் ரஷியாவைக் காண்பர்   இங்கிலாந்து சந்தித்த ஏழு மாறுதல்கள் 1)1485ல் பெஸ்வொர்த்தில் நடந்த போர். இங்கிலாந்தை ட்யூடர் வம்சம் ஆள ஆரம்பித்தது 2)1533ல் ரோமுடனான தொடர்பை எட்டாம் ஹென்றி முறித்துக் கொண்டார். 3)1553ல் ஹென்றியின் மகள் மேரி ரோமன் கத்தோலிக்க மதத்தை மீண்டும் கொண்டு வந்தார். ப்ராடஸ்டண்டுகள் கொடுமைக்குள்ளாக்கப்பட்டனர் 4)1558 மேரியின் ஒன்றுவிட்ட சகோதரி ப்ராடஸ்டண்டு மஹாராணி ஆனார். 5)1649ல் பிரிட்டிஷ் அரசர் முதலாம் சார்லஸின் தலை பொதுமக்கள் முன்பாக வெட்டப்பட்டது. ஆலிவர் க்ராம்வெல் சர்வாதிகாரியானார். 6)1688ல் முதலாம் சார்லஸின் மகன் இரண்டாம் ஜேம்ஸ் செட்ஜ்மூர் போரைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேற நேர்ந்தது 7)1775ல் பங்கர் ஹில் போரைத் தொடர்ந்து அமெரிக்கா பிரிட்டனுடனான தொடர்பை முறித்துக் கொண்டது. உலகில் வானளாவிய அதிகாரம் கொண்டிருந்த பிரிட்டிஷ் வீழ்ச்சியை நோக்கிச் சரிய ஆரம்பித்தது. அமெரிக்கா உலகின் உன்னத இடத்தை நோக்கி நடை போட ஆரம்பித்தது.   இதே போல ஒவ்வொரு பாடலும் ஒரு எதிர்காலக் காட்சியைக் காட்டுவது வியப்பூட்டுவதாக உள்ளது.   ஹிந்து மதம் பற்றிய நாஸ்டர்டாமஸின் எதிர்காலக் கணிப்பு இரண்டாம் காண்டத்தில் 13வது பாடலாக மலர்கிறது:-   ஆன்மா இல்லாத உடல் இனியும் புனிதமாகக் கருதப்படமாட்டாது இறந்த தினத்தன்று ஆன்மா அடுத்த பிறவியை நோக்கிப் பயணிக்கிறது இறைவனின் நினைப்பு ஆத்மாவை சந்தோஷத்திற்குள்ளாக்கும் ‘இதர மதங்கள் மறுபிறவியை ஏற்பதில்லை. ஹிந்து மதம் ஒன்றே உடல் ஆத்மாவிற்கு ஒரு சட்டை தான்; நலிந்து கிழிந்த சட்டையை உதறுவது போல ஆன்மா பழைய சரீரத்தை உதறி விட்டு அடுத்த சரீரத்தை நோக்கிச் செல்கிறது என்று கூறுகிறது. இறுதி வரியில் வரும் அக்ஷரம் ஓம் என்பதாகும். ஆக மறுபிறப்புக் கொள்கையை வலியுறுத்தும் ஹிந்து மதக் கொள்கை உலகில் ஓங்கி உயரும் என்பதை நாஸ்டர்டாமஸ் இந்தப் பாவில் தெளிவாக விளக்குகிறார்'.   இப்படி ஒரு விளக்கத்தைத் தருபவர் பெங்களூரைச் சேர்ந்த திரு ஜி.எஸ்,ஹிரண்யப்பா. இவர் ஹிந்து டெஸ்டினி இன் நாஸ்டர்டாமஸ் என்ற நூலில் ஹிந்து மதம் பற்றி நாஸ்டர்டாமஸ் பல பாடல்களில் பூடகமாகக் கூறியுள்ளதைத் தகுந்த ஆதாரங்களுடன் விளக்குகிறார்.     நாஸ்டர்டாமஸின் பாடல்களை விளக்கி உலகின் அனைத்து மொழிகளிலும் ஆயிரக்கணக்கான நூல்கள் இதுவரை வெளிவந்துள்ளது குறிப்பிடத்தகுந்த ஒரு செய்தியாகும்!   என்றுமுள்ள அக்ஷரத்தைக் கண்டவுடன்.   மரணத்திற்குப் பின் அவர் வாழ்வில் நிகழப்போவதைப் பற்றி கூறிய ஆரூடம் பலித்தது தான் ஆச்சரியத்திலும் ஆச்சரியமான விஷயம்!   "என் கல்லறையைத் தோண்டி என் பிணத்தை எடுக்க முயல்பவர் உடனே இறந்து போவார்" என்று தன் கல்லறை மீது பொறிக்குமாறு அவர் இறக்கு முன்னர் வேண்டிக் கொண்டார்.   1566ம் ஆண்டு அவர் இறந்தபின்னர் அவரது கல்லறையில் இதே வாசகம் பொறிக்கப்பட்டது. வருடங்கள் உருண்டோடின. அவரது கல்லறை வாசகங்களைப் பார்த்துச் சிரித்த மூன்று பேர் கல்லறையைத் தோண்டி அவர் எலும்புக்கூட்டை எடுத்தனர். பிரெஞ்சு புரட்சியின் உச்சகட்ட நேரம் அது! மிகவும் புகழ் பெற்ற ஜோதிடரான அவரது மண்டை ஓட்டில் ஒயினை ஊற்றிக் குடித்தால் எதிர்காலம் கூறும் பிரபல ஜோதிடர் ஆகலாம் என்று நம்பி அந்த மூன்று பேரும் கல்லறையைத் தோண்டியிருந்தனர். அதில் ஒருவன் மண்டையோட்டை எடுத்து பையில் இருந்த ஒயினை எடுத்து அதில் ஊற்றிக் குடித்து விட்டு ஒரு அடி எடுத்து வைத்தான். அப்போது எங்கிருந்தோ வந்த ஒரு துப்பாக்கிக் குண்டு அவனைத் துளைத்து அவன் உயிரைக் குடித்தது. புரட்சிக்காரன் ஒருவனின் குண்டுதான் அவனை இறக்க வைத்திருந்தது.   மற்ற இரண்டு பேரும் திரும்பி எலும்புக்கூட்டைப் பார்த்த போது எலும்புக்கூட்டின் மார்பில் ஒரு தாமிரத் தகடு கட்டப்பட்டிருப்பதைப் பார்த்தனர். அதில் மே 1793 என்று எழுதப்பட்டிருந்தது. சரியாக அதே 1793ம் ஆண்டு மே மாதம் தான் அந்த எலும்புக்கூட்டை அவர்கள் தோண்டி எடுத்திருந்தனர். இதனால் பயந்து போன அவர்கள் ஓடத் தொடங்கினர்.   தன் கல்லறையை எந்த வருடம் எந்த மாதம் தோண்டி தன் எலும்புக்கூட்டை எடுக்கப் போகிறார்கள் என்பதைக் கூட அவர் துல்லியமாகக் கணித்துச் "சொல்லியிருந்தது" உலகினர் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது!   இந்தியத் தலைவர்கள் பற்றிய அவரது ஆரூடங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன   அவரது ஆறாம் காண்டத்தில் 74ம் பாடலில் அவர் இந்திரா காந்தி கொலை செய்யப்படுவதைக் கணித்துக் கூறியுள்ள வாசகங்கள் நம்மை அயர வைக்கும்!   "மூன்று புறம் கடல் சூழ்ந்த நாட்டில் பெரும் அதிகாரம் கொண்ட பெண்மணி எதிர்கட்சிகள் ஒற்றுமை இன்றி இருப்பதால் அதிகாரத்தை மீண்டும் பெறுவார். தனது சொந்த மெய்காப்பாளர்களாலேயே அவர் 67ம் வயதில் கொல்லப்படுவார். இது நூற்றாண்டு முடிய 16 ஆண்டுகள் இருக்கும்போது நடக்கும்"   எமர்ஜென்ஸியினால் தேர்தலில் தோற்றுப்போன இந்திரா காந்தி எதிர்கட்சிகள் ஒற்றுமை இல்லாமல் தமக்குள் சண்டை போட்டுக் கொண்டதால் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியதையும் 1984ல் அவர் சொந்த மெய்காப்பாளர்களில் ஒருவனால் சுடப்பட்டதும் உலகம் அறிந்த சம்பவம்!   இதே போல ராஜீவ் காந்தி கொலை செய்யப்படுவதை அவர் ஒன்பதாம் காண்டத்தில் 53ம் பாடலில் தெரிவித்துள்ளார். "நேரு குடும்ப மூன்றாம் தலைமுறையினரின் இளைஞர் துருப்புகளை அனுப்பி எரிக்கச் செய்வார். இந்த நிகழ்வுகளிலிருந்து தூர இருக்கும் மனிதனே உண்மையில் சந்தோஷமானவன். மூவர் அவரை இரத்தம் வெளிப்படச் செய்து கொல்வர்"   இதில் விசித்திரம் என்னவென்றால் இந்தப் பாடல் பிரபல கன்னட வாரப் பத்திரிக்கையான 'விக்ரம' என்ற பத்திரிக்கையின் 28-4-1991 தேதியிட்ட இதழில் பிரசுரிக்கப்பட்டிருந்ததுதான்! சரியாக மூன்று வாரங்கள் கழித்து அவர் கொல்லப்பட்டார்! இலங்கைப் போரில் அவர் துருப்புகளை ஈடுபடச் செய்ததையும் பின்னர் மூன்று தற்கொலைப் படையினர் சதி செய்து தமிழகத்தில் அவர் வருகை புரிந்த போது அவரைக் கொன்றதும் வரலாற்று உண்மை!   அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தாக்குதல் பற்றிய அவரது கணிப்பு அமெரிக்கர்கள் உள்ளிட்ட உலக மக்கள் அனைவரையும் திடுக்கிட வைத்தது; திகைக்க வைத்தது!   "கடவுளின் நகரம் மீது இடி இடிக்கும்! இரண்டு சகோதரர்கள் குழப்பத்தில் நாசம் அடைவர்! கோட்டை காக்கப்படும் போது பெரிய தலைவர் இறந்துபோவார். மூன்றாம் உலகப் போர் மூளும்!'   இன்னும் ஒரு பாட்டில், "ஒன்பதாம் மாதம் பதினொன்றாம் நாளில் இரண்டு இரும்புப் பறவைகள் பெரிய சிலைகள் மீது மோதும்" என்று அவர் குறிப்பிடுகிறார். ஆனால் இதை விட துல்லியமாக 10ம் காண்டம் 72ம் பாடலில் அவர் கூறுவது:- "1999ல் ஒன்பதாம் மாதம் வானிலிருந்து ஒரு பெரிய அரக்கன் தோன்றுவான்"!   இந்தச் சம்பவத்தை அவர் சுட்டிக் காட்டும் பாடலாகவே நாஸ்டர்தாமஸை வியந்து போற்றுவோர் கூறுவர்.ஆனால், இதைப் பற்றி பெரிய contraversy இன்னும் நிலவுகிறது.    நாஸ்டர்டாமஸின் பாக்களுக்கான அர்த்தத்தைக் கண்டுபிடிக்க முயன்றோர் ஏராளம்; இன்னும் முயன்று வருவோரும் ஏராளம். அவரது பாக்களுக்கு விளக்கம் கூறி ஆயிரக்கணக்கான நூல்கள் வந்து விட்டன. இந்த எல்லா நூல்களிலும் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் ஒரு கருத்து இந்தியா மிகப் பெரும் வல்லரசாகும் என்பதுதான்! குவைத் நாட்டின்மீது சதாம் ஹூஸைன் ஆக்கிரமிப்பு நடத்தியபோதும் சரி, சமீபத்தில் நியூயார்க் கட்டிடங்கள் மீது ஓஸாமா -பின்- லேடன் தாக்குதல் நடத்தியபோதும் சரி, உலகமக்கள் பரபரப்பாகப் பேசியது ஒருவரைப் பற்றித்தான்.அவர்தான் நாஸ்டர்டாமஸ்.    அவர் சொன்ன நிகழ்ச்சி நடந்தாகிவிட்டது.அவர் சொன்னபடியே மீண்டும் ஒரு உலக மகாயுத்தம் மூண்டுவிடுமா ?இதுதான் உலக மக்களின் திகிலுடன் கூடிய எதிர்பார்ப்பு. 400 ஆண்டுகளுக்கு முன்பே எவ்வளவு துல்லியமாக்க் கணித்துள்ளார் அந்த மனிதர்.   நம்மூர் செய்தித்தாள்கள் நீல டர்பன் கட்டிய நபர் 'என்ற அடையாளத்துடன் நாஸ்டிரடாமஸ் சொன்ன பாடலை பிரசுரம் செய்தன. எங்கிருந்து வந்தது அவருக்கு இவ்வளவு ஆற்றல், என்னென்ன சொல்லியிருக்கிறார், அவர்,இனி எதிர்காலத்தில் என்னென்ன நிகழப்போகிறது   இந்தியா- பாக் இடையே போர் வருமா?   ஒரு உலக மகாயுத்தத்தை இந்த 2 நாடுகளும் தான் ஆரம்பித்து வைக்க போகின்றன என்ற அதிர்ச்சி தகவல்களை அவர் எப்போதோ சொல்லி விட்டு போயிருக்கிறார்.   2006ம் ஆண்டிலிருந்தே இந்தியா பல சோதனைகளை சந்திக்க தொடங்கும் பட்சத்தில் ஒரு உச்சகட்ட காட்சியாக 2011 அல்லது 2012ல் 3-வது உலக போர் ஏற்படும் என்கிறார்.   இந்த போர் இடைப்பட்ட எந்த ஆண்டில் வேண்டுமானாலும் நிகழலாம்!. மக்களின் அப்போதைய இறை பக்தியை பொறுத்திருக்கிறது என்பதையும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.   இந்தியா-பாகிஸ்தான் என எதிரும் புதிருமான இந்த போரில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, சவூதி அரேபியா, சிரியா, இஸ்ரேல், ஜெர்மனி, பிரான்ஸ், லெபனான், ஈரான், ஆஸ்திரேலியா என உலகின் 21 நாடுகள் முக்கிய களமிறங்கும் என்கிறார் அவர்.   வானத்தில் சனி-ராகு கிரகங்களின் புதிய மாற்றத்தால் இந்தபோர் ஏற்படும். போர் சமயத்தில் அணு ஆயுத வீச்சுகளால் கடல் அலை 100 அடிக்கு எழுந்து ஓயும். சுமார் 100 கோடி பேர் மரணத்தை தழுவினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிறார் நாஸ்டர் டாமஸ்.   இதன் பின்னர் 2026 வாக்கில் உலகின் நம்பர் 1 நாடாக இந்தியாவும், 2-வது நாடாக சீனாவும் விளங்கும் என்று கணித்திருக்கிறார் நாஸ்டர் டாமஸ்.   போரை பொறுத்த வரை இந்தியாவில் பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களும் எல்லை பகுதிகளும் பாதிக்கப்படும் என்பதையும் அவர் சொல்லியிருக்கிறார்.   இந்தியர்கள் 2006க்கு பிறகு தங்கள் வாழ்க்கையில் பல வகையான மாற்றங்களை காண்பார்கள்.   மிகப்பெரிய பொருளாதார சிக்கலில் சிக்கி திணறுவார்கள். இறை பக்தி குறையும். அரசியலில் பற்பல மாற்றங்கள் நிகழும். உண்மை தோல்வியை தழுவும். பொய் வெற்றி பெறும். மக்கள் அலை பாய்ந்து திரிவார்கள்.   இத்தகைய சுமார் 20 ஆண்டு போராட்டத்திற்கு பிறகு இளைய தலைமுறை குழந்தைகளால் மிகப் பெரிய மாற்றம் ஏற்படும். பெற்றோர்கள் மற்றும் வயதானவர்களால் அவர்கள் அறிவை புரிந்து கொள்ள முடியாமல் ஆச்சர்யப்பட்டு போவார்கள்.   இந்தியா மிக நவீனமாகி விடும். பணம் கொழிக்கும். அனைவரது வாழ்க்கையும் மிக நவீன நாகரீகமடையும். மேலை நாடுகளை போன்ற வாழ்க்கை தரத்திற்கு மாறிவிடுவார்கள். உலக அரங்கில் இந்தியா தலை சிறந்து விளங்கும்.   இப்படியெல்லாம் இந்தியா பற்றி ஜாதக பலனை சொல்லியிருக்கும் நாஸ்டர் டாமஸ் மேற்கண்ட 20 ஆண்டு கால போராட்டத்தை ஒவ்வொருவரும் எப்படி சமாளிப்பது என்ற ஆலோசனையையும் வழங்கியிருக்கிறார்.   ஒரு நாட்டில் பாவசெயல்கள் பெருகும் போது அந்த நாட்டின் அதற்குரிய சிக்கலையும், கஷ்டங்களையும் அனுபவிப்பார்கள். எனவே, பாவசெயல் செய்யாது அன்புடன் இருங்கள். அவரவர் வீட்டில் தினமும் இறைவனை நன்றாக பிரார்த்தனை செய்யுங்கள்.   இத்தகைய பிரார்த்தனை செய்யும் போது மட்டும்தான் மனம் தெளிவடையும். நல்ல சிந்தனை பிறக்கும். நெஞ்சு தைரியம் உண்டாகும். நீங்கள் இதை செய்யாவிட்டாலும் இறை சக்தி மிகப்பெரியது. அது செய்ய வைக்கும் என்கிறார் அவர்.   ------------------------------​---------Nostradamus பற்றிய முழு விவரங்களுக்கான இணைய தளம்: ------------------------------​---- நாஸ்டர்டாமஸின் மொத்த புத்தகத்தின் வரிகளையும் பார்ப்பதற்கான இணைய தளம் இங்கே உள்ளது: ------------------------------​------------------- பாடல் எண் 74 - இந்திரா காந்தியைக் குறிப்பது! பாடல் எண் 75 - ராஜிவ் காந்தியைக் குறிப்பது!     கி.பி, 3797ம் ஆண்டு வருவதற்கு இன்னும் 1787 ஆண்டுகள் உள்ளன. அவர் இந்த ஆண்டுகளுக்காகக் கூறியுள்ள பலன்களோ ஆயிரக்கணக்கானவை. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்:   ஆறாம் காண்டம் பாடல் 8: இந்தியாவில் ஒரு பெரும் தலைவர் உருவாவார். அவரைக் கொல்லப் பெரும் சதி நடக்கும். அவரைக் காப்பாற்ற மருத்துவர்களால் முடியாமல் போகும். ஆனால் அதிர்ஷ்டத்தினால் அவர் பிழைப்பார். இதில் குறிப்பிடப்பட்டுள்ள தலைவர் இந்தியத் தலைவர் என்று நாஸ்டர்டாமஸின் விளக்க நூல்கள் குறிப்பிடுகின்றன. மங்கோலியர் ஆயுதங்களை உபயோகித்து சாவின் ரேகைகளைக் காண்பிக்கும் போது உலகப் போர் துவங்கும். இந்தப் போர் சக்தி மிகுந்த இரண்டு நாடுகளின் மீது கொண்டிருக்கும் நட்பால் இந்தியாவிற்கு ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தும்!   ஆறாம் காண்டம்; 27ம் பாடல் :-ஐந்து நதிகள் பாயும் இடத்தில் பயங்கரமான பறக்கும் ஆயுதத்தால் நாசம் ஏற்படும். ஆறு பேர் மட்டுமே தப்பிப்பர். (இது பாகிஸ்தானைக் குறிப்பதாக விளக்கம் அளிக்கப்படுகிறது ).   மூன்றாம் காண்டம்;2ம் பாடல்:-தெய்வீக எழுத்து வானம்.பூமி, செல்வம் அனைத்தையும் தரும். (இது ஓம் என்ற அக்ஷரம் உலகில் ஏற்றம் பெறுவதைக் குறிப்பதாக விளக்கப்படுகிறது)   மேலும் உலக நாடுகள் பற்றி இவர் கூறியுள்ளவை பெரும் வியப்பை ஏற்படுத்துகின்றது.   எட்டாம் காண்டம் 99ம் பாடல் மற்றும் இரண்டாம் காண்டம் 41ம் பாடல்:- போப் ஆண்டவர் ரோமை விட்டு நீங்க நேரிடும். இது குறித்து இங்கிலாந்து புலம்பும். அது வலிமையற்ற நாடாகி விடும்.   ஐரோப்பா தனது மதத்தை இழந்து உலகின் பழமையான மதத்தை ஏற்றுக் கொள்ளும்.   இப்படி நூல் நெடுக இந்தியாவின் ஏற்றத்தை நாஸ்டர்டாமஸ் அள்ளித் தருவது உலகினரின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.   நுண்மையாக எல்லாப் பாடல்களையும் அலசி ஒன்றுடன் ஒன்று இணைத்துப் பார்த்தால் மட்டுமே நாஸ்டர்டாமஸின் பாடல்களுக்குள் புதைந்திருக்கும் எதிர்கால உண்மைகள் புரியும். ஆகவே செஞ்சுரிஸ் நூலை ஒரு நாளில் கற்றுத் தேற முடியாது. இதற்கான வியாக்யான நூல்களை முதலில் படித்து விட்டு மூலத்தைப் படிக்க வேண்டும்.   ஜெர்மானியக் கவிஞரான கதே (1749-1832) இந்த நூலை ஆழ்ந்து படித்து விட்டு வியந்து போனார். அவர் கூறினார்:- "செஞ்சுரிஸ் நூலிலிருந்து எதிர்காலத்தை நன்கு அறியலாம்"   அந்தக் கவிஞரின் கூற்று முக்காலும் உண்மை என்பதை நாஸ்டர்டாமஸின் ஆரூடப் பலன்கள் தொடர்ந்து நிரூபிக்கப்பட்டு வருவதன் மூலம் அறியலாம்.




   http://en.wikipedia.org/wiki/N​ostradamus








கேன் வாட்டர் குடிப்பவரா உசார் !!!

வீடுகளுக்கு வரும் ‘வாட்டர் கேன்’களில் 60 சதவீதம் தண்ணீர் தரமற்றதாக உள்ளது.



இதுபோன்ற தரமற்ற தண்ணீரை குடித்தால், நிமோனியா தொற்று ஏற்பட்டு நுரையீரல் பாதிக்கும் அபாயம் உள்ளதாக டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.



கோடை காலம் தொடங்கி விட்டதால், தண்ணீர் தாகமும் அதிகரிக்கும். தாகம் ஏற்படும்போது கிடைக்கும் தண்ணீரை குடிப்பது, கடைகளில் குளிர்பானம், மோர் என்று இதமாக சாப்பிடும் பழக்கம் பலருக்கு உள்ளது.



சாலை ஓரங்களில் சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்யப்படும் குளிர்பானம், மோர் வாங்கி குடிப்பதால் வெயில் காலங்களில் பலருக்கு தொண்டையில் கரகரப்பு, இருமல், சளி ஏற்பட்டு கஷ்டப்படுகிறார்கள்.



வெயில் காலங்களில் ஏற்படும் இதுபோன்ற தொண்டை பிரச்னைகளை தடுப்பது குறித்து இந்திய பொது சுகாதார சங்கத்தின் தமிழக கிளையின் தலைவரும், முன்னாள் தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை இயக்குனருமான டாக்டர் இளங்கோ கூறியதாவது:



தமிழகம் முழுவதும் குறிப்பாக நகர்ப்புறங்களில் குடிநீருக்காக 20 லிட்டர் கொண்ட ‘வாட்டன் கேன்’களை பயன்படுத்துகிறார்கள். கேன்களில் குடிநீர் வாங்கினால் அது சுகாதாரமாகத்தான் இருக்கும் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.



ஆனால் அது முற்றிலும் தவறு. உதாரணத்துக்கு, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்துதான் வாட்டர் கேன் சப்ளையாகிறது. இதில் ஒரு சில கம்பெனிகளில் தவிர பல கம்பெனிகளில் ஐஎஸ்ஐ முத்திரை குத்திய லேபிள் இருக்குமே தவிர, உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ள தரத்துடன் தண்ணீர் சப்ளை செய்யப்படுவதில்லை.



உண்மையில் 100 சதவீத ‘வாட்டர் கேன்’களில் 60 சதவீதம் தண்ணீர் தரமற்றதாக உள்ளது.

இதுபோன்ற தரமற்ற வாட்டர் கேன் தண்ணீரை தொடர்ந்து குடித்து வருவதால் நமது உடம்பும் குறிப்பிட்ட தண்ணீரை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்துக்கு மாறிவிடும்.



ஆனால் திடீரென கோடை வெயிலில் சுற்றி விட்டு ஏதாவது ஒரு இடத்தில் அல்லது உறவினர், நண்பர்கள் வீடுகளில் போர் மற்றும் கிணற்று தண்ணீரால் தயாரிக்கப்பட்ட குளிர்பானங்கள், மோர், ஐஸ் கிரீம் சாப்பிடும்போது தொண்டையில் அலர்ஜி ஏற்படுகிறது.



இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தொண்டை கரகரப்பு, சளி, காய்ச்சல் போன்ற நோயால் பாதிக்கிறார்கள். இது நிமோனியா தொற்றாக மாறி நுரையீரலையும் பாதிக்கும் அபாயம் உள்ளது.



நுரையீரல் தொற்று காரணமாக ஏற்படும் நிமோனியா எந்த மருந்துக்கும் கட்டுப்படாத கிருமியாக உருவாகி உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.



மேலும் கடந்த சில மாதங்களாக இந்தியாவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இறந்தவர்களில் அதிகமானோர் சுவாச மண்டல தொற்று நோய் காரணமாக இறந்துள்ளது தெரியவந்துள்ளது.



நுரையீரலை பாதிக்கும் நிமோனியாவில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள குளிர் மற்றும் கோடை காலம் என எந்த சீசனிலும் குடிதண்ணீரை காய்ச்சி குடிப்பதை பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.



தொண்டை கரகரப்பு பிரச்னையால் பாதிக்கப்படுபவர்கள் காது, மூக்கு, தொண்டை (இஎன்டி) டாக்டரிடம் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

கவலை

பள்ளிக்கூடத்துக்கு போன பையன்
திரும்பிடுவானா? - இல்லை
பழம் பொறுக்கினான்னு
சுட்டுடுவாங்களா? - அம்மா

எம்புள்ளைய எப்புடியாவது
ஒரு லட்சம் செலவு பண்ணி
எல்‌கே‌ஜி சேத்துடணும் - அப்பா

இருக்கிற பணத்துல இன்னும்
ஒரு வாரத்த ஓட்டணும் - பேச்சுலர்

எப்புடியாவது அந்த பஸ்ஸ்டாண்ட்
பொண்ண நாளைக்கு மடக்கிடனும்- ரோமியோ

இந்த ஆடித்தள்ளுபடில நாலு
புடவை எடுக்கணும் -பெண்கள்

இந்த பெட்ரோல், டீசலுக்கு எல்லாம்
தள்ளுபடி இல்லையா? - ஆண்கள்

இந்த டிகிரி படிச்சதுக்கு பேசாம
_______ மேச்சுருக்கலாம் - பட்டதாரி

எப்புடியாவது இதவிட அதிக
சம்பளத்துக்கு மாறிடனும் - ஐ‌டி பணியாளன்

கடவுளே அடுத்த சி‌டியோ, புதையலோ
வெளிவராம பாத்துக்கோ - மாடர்ன் சாமியார்

அம்மா, தாயே வாழ்க்கைல
திகார் ஜெயில் மட்டும் வேணாம் - அரசியல்வாதி

.
.
.
.
.
.
.
ஆக மொத்ததில் எல்லா மனிதர்களும்
கவலையின்றி இருப்பது
மாதத்தின் 32-ஆவது நாள் மட்டுமே !!!

change of comedy




























thanks fb radiohello&karthi