Thursday, July 28, 2011

வெளிநாட்டு வேலை தரும் நிறுவனம் சரியானதா ? கண்டுபிடிக்க உதவும் மத்திய அரசின் இணையதளம்


 வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி அடிக்கடி பலர் கடனுக்கும் வட்டிக்கும் பணம் வாங்கி இலட்சக்கணக்கில் ஏமாறுவதை செய்திதாள்களில் அடிக்கடி காண்கிறோம். இனி அப்படி ஏமாறாமல் இருக்க இதோ ஒரு இணையதளம். வெளிநாட்டில் வேலை தரும் அந்நிறுவனம் உண்மையா என்பதை இவ்விணையத்தில் சென்று பார்க்கலாம்.


மத்திய அரசின் இணையமான அத்தளம் http://www.poeonline.gov.in ஆகும். இத்தளத்தில் அந்நிறுவனம் உண்மையா என்பதை 3 விதங்களில் கண்டறியலாம். ஏனென்றால் பிரபல நாளிதழ்களை திறந்து பார்த்தால் ஏகப்பட்ட போலி ஏஜெண்டுகள் பெயரில் விளம்பரங்கள் வருவதை பார்க்கலாம்.
எனவே இத்தளத்திற்கு சென்று இடது பக்கம் இருக்கு RA Information ஐ கிளிக் செய்தால் அதில் வரும் துணை மெனுவில் நிறுவனம் அல்லது ஏஜெண்டின் பெயரை கொண்டோ அல்லது அதன் பதிவு எண்ணான RC நம்பரை கொண்டோ அல்லது அதன் தொலைபேசியை கொண்டோ கிளிக் செய்தால் அந்நிறுவனத்தை பற்றிய விபரத்தை தருகிறது. அது நம்பகமானது, ரத்து செய்யப்பட்டதா, மீண்டும் அனுமதி கொடுக்கப்பட்டதா அல்லது அனுமதி காலாவதியானதா என்று விபரம் தருகிறது

உங்கள் மெயிலுக்கே தினமும் ஒரு இலவச மென்பொருளை பற்றி செய்தி அனுப்புவார்கள்


உங்கள் மெயிலுக்கே தினமும் ஒரு இலவச மென்பொருளை பற்றி செய்தி அனுப்புவார்கள்.

இணையத்தில் கட்டண மென்பொருளுக்கு இணையாக வேலை செய்யும் அளவிற்கு இலவச மென்பொருட்கள் இருந்தாலும் அனைவரும் கட்டண மென்பொருளையே விரும்புவார்கள். ஏனென்றால் கட்டண மென்பொருளில் வைரஸ் தாக்கும் அபாயம் இருக்காது மற்றும் நம்முடைய ஈமெயில் கொடுத்து டவுன்லோட் செய்தால் அந்த ஈமெயில்களை பல spam கம்பனிகளுக்கு விற்று விடுவதால் நமக்கு தேவையில்லாத ஈமெயில்கள் வந்து தொந்தரவு செய்யும் அபாயங்கள் இருப்பதோடு கட்டண மென்பொருளில் ஒரே மென்பொருளில் பல வேலைகள் செய்யும் வசதி இருக்கும் ஆனால் பெரும்பாலான இலவச மென்பொருட்களில் இருக்காது ஆகவே அனைவரும் கட்டண மென்பொருட்களை விரும்புகின்றனர்.

அதெல்லாம் சரிப்பா நாங்களே சும்மா பொழுது போக்குக்கு கணினிய உபயோகிக்கிறோம் அதுக்கு நாங்க மென்பொருளை காசு கொடுத்து ஏன் வாங்க வேண்டும் யாராவது அந்த மென்பொருட்களை சுமா கொடுத்தா சொல்லுப்பா நாங்க டவுன்லோட் பண்ணிக்கிறோம் என நீங்கள் கூறினால் உங்களை போன்றவர்களுக்கு ஒரு உபயோகமான தளம் உள்ளது. இந்த தளம் மென்பொருட்களை உங்கள் மெயிலுக்கே அனுப்பி வைப்பார்கள். இது மிகவும் பிரபலமான தளம் நிறைய பேருக்கு தெரிந்திருக்கும் தெரியாதவர்களுக்காக.


  • இந்த தளத்தில் தினமும் ஒரு கட்டண மென்பொருளை இலவசமாக அறிமுக படுத்துவார்கள்.
  • அந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய 24 மணி நேரம் கால அவகாசம் கொடுப்பார்கள் அதற்குள் அந்த மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும்.
  • 24 மணி நேரம் கழித்து டவுன்லோட் செய்தால் அந்த மென்பொருளை இலவசமாக பெற முடியாது காசுகொடுத்து தான் வாங்க வேண்டும் ஆக முந்தி கொள்வதே நல்லது.
  • இந்த தளத்தில் நாம் உறுப்பினர் நம் ஈமெயிலை கொடுத்து பதிந்து விட்டால் அந்த நாளுக்கான இலவச மென்பொருளை பற்றி நமது ஈமெயிலுக்கே அனுப்பி விடுவார்கள் அந்த லிங்கில் சென்று டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
இன்றைய இலவச மென்பொருள் 
  • டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்ததும் கொடுக்கப்படும் ஆக்டிவேசன் கீயை மறக்காமல் காப்பி செய்து மென்பொருளை register செய்து கொண்டால் தான் காலம் முழுவதும் இலவசமாக மென்பொருளை உபயோகிக்க முடியும்.
  • ஆனால் இந்த முறையில் உள்ள ஒரு குறை நாம் மென்பொருளை இன்ஸ்டால் செய்யும் அந்த பதிப்பில் இருந்து புதிய பதிப்பை அப்டேட் செய்ய முடியாது. அப்டேட் செய்ய வேண்டுமென்றால் காசு கொடுத்து ஆகவேண்டும்.

  • இந்த தளத்தில் சைட்பாரில் உள்ள விட்ஜெட்டில் subscribe by Email என்பதை க்ளிக் செய்து வரும் விண்டோவில் உங்கள் ஈமெயிலை கொடுத்து பதிந்து கொண்டால் உங்கள் மெயிலுக்கே தினமும் ஒரு இலவச மென்பொருளை பற்றி செய்தி அனுப்புவார்கள்.
இந்த பயனுள்ள தளத்திற்கு செல்ல - www.giveawayoftheday.com

இதை பற்றி உங்கள் நண்பர்களுக்கும் தெரிவியுங்கள் அவர்களும் பயனடையட்டும்.

Tuesday, July 19, 2011

கம்பு தயிர் வடை

தேவையான பொருட்கள்:

கம்பு மாவு - 300 கிராம்
அரிசி மாவு - 50 கிராம்
தயிர் - 4 கப்
சீரகத் தூள் - 4 டீஸ்பூன்
பெரிய வெங்காயத்துருவல் - 1 கப்
கொத்தமல்லி - 1 கப்
உப்பு - தேவைக்கேற்ப

தாளிக்க:

கடுகு - 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 2
பெருங்காயம் - சிறிதளவு

செய்முறை:

கம்பு மாவுடன் அரிசி மாவைச் சேர்த்து, உப்பு கலந்து மசால் வடை பதத்தில் பிசைந்து கொள்ளவும். இதில் பச்சை மிளகாய், சீரகத்தூளை சேர்த்து, சிறுசிறு வடைகளாகத் தட்டி, இட்லி தட்டில் வேக வைத்து எடுக்கவும். தயிரை சற்று அகலமான பாத்திரத்தில் ஊற்றி, கடுகு, மிளகாய், பெருங்காயம் தாளித்து அதில் கலக்கவும். இதில் அவித்த கம்பு வடைகளை ஒரு மணி நேரம் ஊற விட வேண்டும். பிளேட்களில் பரிமாறும் முன், வெங்காயத்துருவல், கொத்தமல்லித் தழையை தூவி விடவும். கோடை காலத்திற்கேற்ற சத்தான டிபன், உடலுக்கு குளிர்ச்சி தரும். அனைத்து வயதினருக்கும் உகந்தது. கம்பங்கூழ் பிடிக்காத குழந்தைகள் கூட இதை விரும்பிச் சாப்பிடுவார்கள்.

Tuesday, July 12, 2011

கேரட் ரைஸ்


ஸ்கூல் ஆரம்பிச்சாச்சு.. ஒவ்வொரு நாளும் புதுசு புதுசா ஏதாவது வெரைட்டியா செஞ்சு கொடுத்தாதான் குழந்தைகளும் குஷியா சாப்பிடுவாங்க. ஆனா வேலைக்கு போகும் பெண்கள் குழந்தைகளுக்கென ஸ்பெஷலா செய்யாம தங்களுக்கு செய்யும் சமையலயே பேக் செய்து அனுப்பிவிடுவார்கள். அப்படி அனுப்பும் தாய்மார்களுக்காகவே உங்கள் நேரத்தை மிச்சப்படுத்த இதோ ஒரு சிம்பிள் டிபன் பாக்ஸ் ஐட்டம்!

தேவையான பொருட்கள்:

சாதம் - 2 கப்
கேரட் - 2 (பெரியது)
பூண்டு - 4 பல்
பச்சைமிளகாய் - 3
எண்ணை - 1 டீ ஸ்பூன்

செய்முறை:

* கேரட்டை நீளவாக்கில் மெல்லிசாக நறுக்கிக்கொள்ளவும். அல்லது பெரியதாய் துறுவிக்கொள்ளவும்.

* வாணலி நன்கு காய்ந்த பின் அதில் ஒரு டீ ஸ்பூன்(ஒரே ஒரு ஸ்பூன் மட்டும்) எண்ணை ஊற்றி பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் மற்றும் பூண்டு போட்டு கொஞ்சம் உப்பு சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.

* பின் கேரட்டை சேர்த்து நல்ல தீயில் இரண்டு கிளறு மட்டும் கிளறி, அதில் சாதத்தை சேர்த்து மீண்டும் ஒரு கிளறு மட்டும் கிளறி இறக்கினால் போதும். கேரட் நன்கு வதங்க தேவையில்லை.

* விருப்பப்பட்டால் பொரித்த முந்திரி, நிலக்கடலை, மல்லித்தழை தூவலாம்.

பின்குறிப்பு: கேரட் ரைஸ் செய்வது ரொம்ப ரொம்ப சுலபம். மிஞ்சிப்போனால் 5 நிமிடம்தான் தேவைப்படும். அதற்குள்ளேயே சுவையான, சத்தான கலர்ஃபுல் சாதம் ரெடி. ஆனால் செய்யும் போது கவனிக்க வேண்டியவை:- அடுப்பை சிம்மில் வைத்து செய்யக்கூடாது. வாணலி நன்கு காய்ந்த பின் பயன்படுத்த வேண்டும். பூண்டு சேர்க்கும் போதே கேரட்டுக்கு தேவையான உப்பை சேர்க்க வேண்டும். எண்ணை ஜாஸ்தி சேர்க்க கூடாது. பூண்டு வதங்க தேவையான அளவு இருந்தால் போதும். கடுகு, கறிவேப்பில்லை எல்லாம் தேவையேயில்லை. பூண்டு, பச்சைமிளகாய் மட்டுமே போதுமானது. கேரட்டில் வைட்டமின் 'ஏ' நிறைய இருப்பதால் குழந்தைகளுக்கு ரொம்பவும் நல்லது.

Friday, July 1, 2011

India only உடனடியாக இரத்தம் வேண்டுமா?


உடனடியாக இரத்தம் தேவை. தயவு செய்து இந்த குறுந்தகவலை உங்களது நண்பர்களுக்கு அனுப்புங்கள். உங்களால் ஒரு உயிர் பிழைக்கும். இதுபோன்ற SMS நிச்சயம் உங்களுக்கு வாரத்தில் ஒருமுறையாவது வரும். ஆனால், அவற்றில் பல போலிகள், சில உண்மைகள் இருக்கின்றன. போலிகளால் உண்மைகள் மறுக்கப்படுவதாகின்றன. இது குறித்து ஒவ்வொருவர்க்கும் வழிப்புணர்வு தேவை. சரி உங்களுக்கு அறிந்தவர்கள், அறியாதவர்கள் யாருக்கோவது இரத்தம் தேவைப் படுகின்றதா? இனி அவர்களுக்கு உங்களால் உதவ முடியும். ஆம் உங்களுக்கு என்ன இரத்தம் வேண்டும்? அது எங்கு யார் மூலம் உங்களுக்கு கிடைக்கப் பெரும் என்ற ஒட்டு மொத்த தகவல்களையும் ஒருங்கே அளிக்கிறது இரத்த தானம் குறித்த ஒரு இணையத்தளம். அதுமட்டும் இன்றி இரத்தம் குறித்த தகவல்கள், அவற்றின் பிரிவுகள், இரத்தின் தன்மை, இரத்ததினால் பரவும் நோய்கள் போன்ற பல்வேறு தகவல்களையும் தொகுத்து தருகிறது.
நீங்கள் இரத்த அளிப்பவராக இருந்தால் நீங்களும் இதில் இணைத்துக் கொண்டு மற்றவர்களுக்கு உதவாலம்.
இனி இரத்தம் வேண்டுமா கவலை வேண்டாம். www.bloodhelpers.com

Thursday, June 30, 2011

சுவிசர்லாந்து ஒரு கண்ணோட்டம் ...


இது ஒரு ஐரோபிய கண்டத்தை சேர்ந்த மிகச்சிறிய நாடு..

வெறும் 41,285 கிமீ பரப்பளவு கொண்ட தேசம்..இந் நாடு 1291ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் திகதி விடுதலை அடைந்த செய்தி வரலாற்றில் பதியப்பட்டுள்ளது. இன்று வரை சுவிட்சர்லாந்து ஆகஸ்டு 1ம் நாளை தேசிய விடுமுறையாக கொண்டாடுவதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். அதன் மக்கள் தொகை 2009 இல் வெறும் 7,785,600  மட்டுமே.இதன் படி சராசரி மக்கள் அடர்த்தி, ஒரு சதுர கிலோமீட்டருக்கு 240 பேர் (622/சதுர மைல்) என உள்ளது.இருப்பினும், இதன் மலைசார்ந்த தெற்குப் பகுதியின் பெரும்பகுதி, சராசரியை விடக் குறைவான மக்கள் அடத்தியையே கொண்டுள்ளது, மாறாக வடக்குப் பகுதியிலும் இறுதித் தென்பகுதியிலும் ஓரளவு அதிக மக்கள் அடர்த்தி காணப்படுகின்றது, அவை அதிகமான மலைசார்ந்த நிலைப்பகுதியையும், பகுதியளவு காடுகளையும் நிலப்பரப்புகளையும், அதேபோன்று சில பெரிய ஏரிகளையும் கொண்டுள்ளதே இதற்குக் காரணமாகும்


இதை landlocked country என்று அழைக்கிறார்கள். அதாவது எந்த பக்கமுமே கடல் கிடையாது..
இந்த நாடு எந்த உலப்போரிலோ அல்லது வேறு சண்டைகளிலோ கலந்துகொண்டது கிடையாது.. அதாவது சண்டையில் தோக்குற சாதியும் இல்லை, ஜெயிக்கிற சாதியும் இல்லை..


நாடுமுழுவதும் விவசாய நிலங்கள் இருந்தாலும் , யாரும் விவசாயத்தை விரும்பமாட்டார்கள் ...
ரசாயனம், உடல்நலம் மற்றும் மருந்துகள் துறை, அளவிடல் கருவிகள், இசைக் கருவிகள், ரியல் எஸ்டேட், வங்கியியல் மற்றும் காப்பீடு, சுற்றுலா மற்றும் சர்வதேச அமைப்புகள் ஆகியவை சுவிட்சர்லாந்தின் முக்கிய தொழிற்துறைகள் ஆகும்.
இங்கே வேலையின்மை என்பது இங்கே மிகக்குறைவு...

அங்கு 220 வங்கிகள் உள்ளன .கவனீங்க மக்களே 110 கோடி மக்கள் தொகைகொண்டுள்ள நமது நாட்டில் 101 வங்கிகள் மட்டுமே உள்ளன..
எதற்க்காக என்பது உங்களுக்கே புரிந்திக்கும்..

அந்தவங்களில் நமது கருப்பு பணமுதலைகள் போடும் பணத்திற்கு பெரும்பாலும் வட்டியெல்லாம் கிடையாது..பாதுகாப்பு, ரகசியத்தன்மை , எந்த இடத்திலிருந்தும்  எடுத்துகொள்ளும் வசதி இவைகளை மட்டுமே அந்த வங்கிகள் எப்போதும் வழங்குகின்றன .. இதற்க்கு அந்த நாட்டின் சட்ட விதிகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன ..

இவ்வாறு deposit செய்யப்படும் பணங்களை அந்த நாடு பல்வேறு துறைகளில் சுலபமாக முதலீடு செய்கின்றன ..பெரும்பாலும் அந்த நாடு பணத்தேவைக்காக உலக வங்கியை நாடுவதில்லை ...
இதனால் அந்த நாட்டின் பணமதிப்பு, பொருளாதாரம்,வேலைவாய்ப்பு போன்றவைகளில் முன்னேரிகொன்டிருக்கிறது..

இவையெல்லாம் யாருடைய பணமென்று உங்களுக்கு புரிகிறதா?
அத்தனையும் நம் நாட்டிலிருந்து செல்லும் கருப்பு பணம் மட்டுமே ..

இது எப்படி இருக்கிறதென்றால் நாம் கஷ்ட்டப்பட்டு,வேர்வை சிந்தி உழைத்து அவனுக்கு கொடுக்கிறோம்...அவன் சும்மா உக்கார்ந்து கொண்டே வருகிற பணத்தை வைத்துகொண்டு பொருளாதாரத்தை முன்னேற்றுகிறான்...
இதுக்குபேருதான் நோகாம நொங்கு திங்கிறது...

நம்மை முட்டாளாக்க இப்போது இரட்டை வரி விதிப்பு என்ற சட்டத்தை மத்திய அரசு  கொண்டுவந்துள்ளது..

இந்தியாவை  குறைத்து மதிப்பிடவேண்டாம் .. மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட ஜனநாயக நாடு..இப்போது மிகப்பெரிய நிறுவனங்களின் குறிக்கோளே , இந்தியாவில் முதலீடு செய்ய விரும்புகின்றன ..இனிவரும் காலங்களில் இந்தியாவின் துணை இல்லாமல் எதுவும் சாதிக்க முடியாது...

அப்படி இருக்கும்போது இந்த கருப்பு பணத்தை கொண்டு வரவும், இந்தியாவிலிருந்து கருப்பு பணம் செல்லாமலும் தடுக்க நிச்சயமாக முடியும்.. அது நம்நாட்டை ஆள்பவர் கையில் உள்ளது...
அவர்களை தேர்ந்தெடுக்கும் எஜமானரே நீங்கள் தான் ...

மக்களே நீங்க யோசிப்பிங்கன்னு நினைக்கிறேன்...
இதை நாலுபேருக்கு சொன்னால் நான் மகிழ்ச்சி அடைவேன்..
JAI HIND

Friday, June 24, 2011

வான்மீகியின் வரலாறு


வழிப்பறிக் கொள்ளைக்காரனைப் பார்த்து, “நீ ஏன் திருடுகிறாய். இது, பாவம் இல்லையா?” என்றார் நாரதர். ‘என் குடும்பத்தைக் காப்பாற்றவே நான் கொள்ளையடிக்கிறேன்’ என்றான் அவன். ‘உன் பணத்தில் பங்கு பெறுபவர்கள், நீ செய்யும் பாவத்திலும் பங்கேற்பார்களா என்று கேட்டு வா’ என்றார் நாரதர். அவன் முதலில் பெற்றோரிடம் சென்றான். ‘வழிப்பறியில்தான் நம் வாழ்க்கை நடக்கிறது. அடுத்தவர் பொருளைக் கையாடும் எனது பாவத்தில், உங்களுக்குப் பங்கில்லையா?’ என்றான். ‘பாவி மகனே, நீ செய்யும் ஈனத் தொழிலை இதுநாள் வரை நாங்கள் அறியவில்லையே. உனது பாவத்தில் நாங்கள் ஏன் பங்கேற்க வேண்டும்?’ என்று கோபத்தில் கத்தினர்.
வருத்தத்துடன் அவன் மனைவியிடம் சென்று நடந்ததை விளக்கினான். ‘கைப்பிடித்த பெண்ணுக்குக் காலம் முழுவதும் வாழ்வளிப்பது கணவனது கடமை. நீ தவறான வழியில் பொருள் ஈட்டினால், அந்தப் பாவத்தில் நான் எப்படிப் பங்கேற்க முடியும்?’ என்றாள் மனைவி. நாரதரிடம் திரும்பியவன், ‘இனி, நான் என்ன செய்தால் நல்லது?’ என்று வழி கேட்டான். ‘உனது பணத்தைப் பங்கு பிரித்தவர்கள், நீ செய்த பாவத்தில் பங்கேற்க விரும்பவில்லை. அவர்களது அன்பு சுயநலமானது. எனவே, பாவத் தொழிலை விட்டுவிடு. இறைவனை இதயத்தில் நிறுத்தித் தியானத்தில் ஈடுபடு. உன் மனம் மாசுகளிலிருந்து விடுபடும்’ என்றார் நாரதர். அப்படியே செய்தான் திருடன்.
வருடங்கள் வளர்ந்தன. தியானத்தில் இருந்தவனைப் புற்று மூடியது. வானத்திலிருந்து ‘முனிவரே எழுந்திடும்’ என்று அசரீரி கேட்டது. ‘கள்வனாகிய நானா முனிவன்?’ என்றான் அவன். ‘தியானம் உனது மாசகற்றி, முனிவனாக மாற்றிவிட்டது. புற்றிலிருந்து எழுந்து வந்ததால் இனி நீ ‘வான்மீகி’ என்று அழைக்கப்படுவாய்’ என்றது அசரீரி. ராமாயணம் தந்த வான்மீகியின் வரலாறுதான் இது.