Thursday, August 11, 2011

வெள்ளரி மோர் குழம்பு

தேவையான பொருட்கள் :
வெள்ளரி காய்  : அரை கிலோ
 பெரிய வெங்காயம் : முன்று
தக்காளி   : நான்கு
பச்சை மிளகாய் : காரதிற்க்கேற்ப
கருவேப்பிலை : தாளிக்க தேவையான அளவு
கொத்த மல்லி :  கார்னிஷ் செய்ய தேவையான அளவு
எண்ணெய் : தாளிப்பதற்கு ஏற்ப
கடுகு
உளுத்தம் பருப்பு : தேவையான அளவு
தயிர் : 250 மில்லி
தேங்காய் : அரை முடி
சீரகம் : ஒரு தேக்கரண்டி
வெந்தயம் : ஒரு தேக்கரண்டி
பூண்டு : நாலு பல்
மஞ்சள் தூள் : ஒரு தேக்கரண்டி
புளி : நெல்லிக்காய்  அளவு
உப்பு : தேவையான அளவு

செய்முறை :

அரைக்க வேண்டியவை :
மிக்ஸியில் தேங்காய் , சீரகம் , வெந்தயம் , புளி கரைச்சல் , பூண்டு , பச்சை மிளகாய் , மஞ்சள் தூள் இவைகளை அரைத்து எடுத்துகொள்ளவும் .

தாளித்து செய்ய  :
வாணலில் எண்ணெய் விட்டு கடுகு , உளுத்தம் பருப்பு , கருவேப்பிலை , பச்சை மிளகாய் , தாளித்து வெங்காயம் போட்டு வதக்கவும் , தக்காளி சேர்த்து வதக்கவும் , அதனோடு வெள்ளரிக்காய் சேர்த்து வதக்கி நீர் சேர்த்து வேகவிடவும்,நீர் சுண்டி முக்கால் பதம் வெந்தததும் , அரைத்த தேங்காய் கலவையை சேர்த்து ஒரு கொதி வந்ததும் , மோர் சேர்த்து கொதிக்க விடவும் ,  உப்பு ருசிகேற்ப சேர்க்கவும் , ருசி பார்த்து இறக்கி கொத்த மல்லி கார்னிஷ் செய்து பரிமாறவும் சுவையான வெள்ளரி மோர் குழம்பு தயார் .

No comments: