Sunday, June 19, 2011

பாரதம் உருவானது, பலர் வேர்வையால்..............


 நவபாரதம் உருவானது, பலர் வேர்வையால் சுகம்  காணுது,
முதல் ஊழலோ 1948 ல் வி.கே.கிருஷ்ணமேனன் ‘ஜீப்’ ஆனது
மறு ஊழலோ 1957இல் நேரு அமைச்சரவையில் நிதி அமைச்சராகப்
பதவி வகித்த டி.டி.கிருஷ்ணமாச்சாரியால் தனி நிறுவனங்களின்
பங்குகளை ஆயுள் காப்பீட்டுக் கழகத்திடம் ( LIC ) விற்பனை செய்ததில் நடந்தது .
விசாரணை முடிவில் டி.டி.கே. அமைச்சர் பதவியிலிருந்து விலக நேரிட்டது.

இந்திரா காந்தி பிரதமர் பொறுப்பை வகித்த காலத்தில் 1980இல் மராட்டிய மாநில முதல்வராக அப்துல் ரகுமான் அந்துலே காங்கிரஸ் கட்சியின் சார்பில் முதல்வராக பொறுப்பு வகித்தார். ஏ.ஆர். அந்துலே தொடங்கிய ‘இந்திராகாந்தி பிரதிபா பிரதிஷ்டான்’ உட்பட பல அறக்கட்டளைகளுக்கு நிதி கொடுத்தவர்களுக்கு மட்டும் சிமெண்ட் ஒதுக்கீடு செய்து ஊழல் புரிந்தார் என்று புகார் எழுந்தது. அந்துலேவுக்கு எதிராக மும்பை உயர்நீதிமன்றத்தில் திருமதி மிருணாள் கோரே, திருமதி கே.தேசாய், பி.பி.சாமந்த் ஆகியோர் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.லென்டின், ‘அறக்கட்டளைக்கு நன்கொடை’ என்ற பெயரில் கட்டட நிறுவனங்களிடமிருந்து அந்துலே இலஞ்சம் பெற்றார் என்று, 1982ஆம் ஆண்டு ஜனவரி 12இல் தீர்ப்பளித்தார். இதனால், ஏ.ஆர்.அந்துலே முதல்வர் பதவியிலிருந்து வெளியேற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

ராஜீவ்காந்தி பிரதமர் பதவியிலிருந்த போது 1986ஆம் ஆண்டு மார்ச்சு 24இல், சுவீடன் நாட்டின் போபர்ஸ் நிறுவனத்திடமிருந்து 155 மி.மீட்டர் பீரங்கிகளை வாங்கிட ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் பின்னர் 1987ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி சுவீடன் வானொலி, மூலம் “இந்தியாவில் பீரங்கி விற்பனை செய்ய போடப்பட்ட ஒப்பந்தத்திற்காக போஃபர்ஸ் நிறுவனம் கமிஷன் வழங்கி உள்ளது” என்று பரபரப்பான செய்தி வெளியானது. ராஜீவ்காந்தி மீது போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழல் புகார் எழுந்து, நாடாளுமன்றத்தில் காரசாரமான விவாதங்கள் நடைபெற்றன. இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஒட்டாவியோ குவாத்ரோச்சி மூலம் பீரங்கிபேர கமிஷன் தொகை ராஜீவ்காந்தி குடும்பத்துக்கு வழங்கப்பட்டதாக பத்திரிகைகள் ‘உளவு அறிந்து’ செய்தி வெளியிட்டன.
இந்திய மக்களை அதிரவைத்த பீரங்கி பேர ஊழலால் 1989இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ராஜீவ்காந்தி பிரதமர் பதவியை இழக்க நேரிட்டது.
\பி.வி.நரசிம்மராவ் பிரதமர் பொறுப்புக்கு வந்த பின்னர் நடைபெற்ற ஊழல்கள், காங்கிரஸ் கட்சியின் பாரம்பரிய ஊழல் அத்தியாயங்களைத் தொடர்ந்ததற்கு சான்றுகளாகத் திகழ்ந்தன. இலண்டன் ஊறுகாய் தொழிலில் பிரசித்த பெற்ற லக்குபாய் பதக், இந்தியாவில் காகிதக் கூழ் காண்ட்ராக்ட் பெறுவதற்காக நரசிம்மராவுக்கு இலஞ்சம் கொடுத்தார் என்று புகார் கூறப்பட்டது. ஊறுகாய் வியாபாரி தனக்கு காண்ட்ராக்ட் கிடைக்கவில்லை என்பதால் நரசிம்மராவ், மோசடி சாமியார் சந்திராசாமி, அவரது உதவியாளர் அகர்வால் ஆகியோர் மீது மோசடி வழக்கு தொடர்ந்தார்.
நரசிம்மராவ் காலத்தில் இன்னொரு பேர் பெற்ற ஊழல் ‘யூரியா’ ஊழல்; இந்திய அரசின் தேசிய உர நிறுவனம் ( NFL ), துருக்கியில் கார்சன் டானிஸ் மான்லிக் டுரிகாம் சமாயி டிகார்கட் லிமிடெட்(!) என்ற நிறுவனத்திடமிருந்து இரண்டு இலட்சம் டன் யூரியா வாங்கிட 1995, அக்டோபரில் ஒப்பந்தம் போட்டது. ஒப்பந்தம் போடப்பட்ட உடனேயே, தேசிய உர நிறுவனம் சம்பந்தப்பட்ட அமைச்சர் ஒப்புதலுடன், கார்சன் கம்பெனிக்கு உரத்துக்கான முழுத் தொகையைக் கொடுத்து விட்டது. ஆனால், ‘யூரியா’ மட்டும் இறக்குமதி ஆகவில்லை. கார்சன் கம்பெனியின் ஏஜெண்ட், ‘சாய்கிருஷ்ண இம்பெக்ஸ்’ நிறுவனத்தின் பெயரில் ஹைதராபாத் ‘ஏ என் இசர்ட் கிரிண்ட்லேஸ்’ வங்கியில் கணக்கு இருந்தது. அந்தக் கணக்கில் ‘துருக்கி’ நாட்டு கார்சன் கம்பெனி மூலம் கமிஷன் பணம் ஹவலா மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. அதாவது, ‘யூரியா’ இறக்குமதி செய்யாமலேயே இறக்குமதி ஆனதாகக் காட்டி, கமிஷன் தொகை கறக்கப்பட்டது. இந்த யூரியா ஊழலை விசாரித்த சிபிஐ, கார்சன் நிறுவனம் ஒரு ‘உப்புமா’ கம்பெனி என்றும் கண்டு பிடித்தது. இதில் ஆதாயம் அடைந்த பிரதமர் நரசிம்மராவ் உறவினர் பி.சஞ்சீவராவ், மத்திய அமைச்சராக இருந்த ராம் லக்கன் சிங் யாதவ் மகன் பிரகாஷ்சந்திர யாதவ், தேசிய உர நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் சி.கே.இராமகிருஷ்ணன் ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்தியாவையே உலுக்கிய இன்னொரு புகழ் பெற்ற ஊழல், ஹர்சத் மேத்தாவின் பங்கு பத்திர ஊழலும் நரசிம்மராவ் ஆட்சிக் காலத்தில்தான் நிகழ்ந்தது.
இந்தியாவின் ‘ஊழல் புராணத்தை’ கிளறினால் அது நீண்டு கொண்டே போகும்.
அறுபது ஆண்டுகால ஊழல்களை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு, கருணாநிதி குடும்பம் தற்போது நடத்தி உள்ள ஊழல் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. இந்திய அரசாங்கத்திற்கு அறுபது ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தி இருக்கின்ற மத்திய தகவல் தொடர்புத் துறையில் - தி.மு.க.வைச் சார்ந்த ஆ.ராசா காபினேட் அமைச்சர் பொறுப்பை வகிக்கின்றார்.
பண்டித நேரு காலத்தில் இராணுவ அமைச்சர் வி.கே. கிருஷ்ணமேனன் மீது சுமத்தப்பட்ட ‘ஜீப்’ ஊழலில் சம்பந்தப்பட்ட தொகை சில இலட்சங்கள்தான்.
முந்த்ரா ஊழலில் சிக்கிய டி.டி.கிருஷ்ணமாச்சாரி, மீது குற்றம் சாட்டப்பட்டபோது தொகை ஒன்றரை கோடி ரூபாய்.
மராட்டியத்தில் ஏ.ஆர்.அந்துலே சம்பந்தப்பட்ட சிமெண்ட் ஊழலின் தொகை ரூ.26.6 இலட்சம் ஆகும்.
ராஜீவ்காந்தியின் போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழலில் கமிஷனாக கைமாறிய தொகை ரூ.64 கோடி என்று கூறப்பட்டது.
நரசிம்மராவ் காலத்தில் நடந்த யூரியா இறக்குமதி ஊழலில் சம்பந்தப்பட்ட தொகை ரூ. 133 கோடி.
ஹர்சத் மேத்தாவின் பங்கு பத்திர ஊழல் மோசடியில் சம்பந்தப்பட்ட தொகை ரூ.5,500 கோடி; அது போலவே இன்னொரு, பங்கு வர்த்தக மோசடியில் ஈடுபட்ட ‘கேத்தன் பரேக்’ சம்பந்தப்பட்ட தொகை ரூ.6,400 கோடி ஆகும்.
இவை எல்லாவற்றையும் விட கருணாநிதி குடும்பம், இந்தியாவை ஆட்சி செய்யும் அதிகாரம் கிடைக்கப் பெற்றவுடன் நடத்தி உள்ள ஊழலின் மதிப்பு ரூபாய் அறுபது ஆயிரம் (ரூ. 60,000 கோடி) கோடி.
மத்திய அமைச்சரவையில் தகவல் தொடர்புத் துறையைக் கேட்டுப் (மிரட்டி!) பெற்ற தி.மு.க. தலைவர் கருணாநிதியின் குடும்பம் இந்த மெகா ஊழலில் துணிகரமாக ஈடுபட்டுள்ளது. மத்திய மந்திரி ஆ.ராசாவை கைப் பிடிக்குள் வைத்துக் கொண்டு, கோபாலபுரம் கொள்ளைக் கும்பல் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் சுருட்டி உள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு நடைபெற்ற ஊழல்களிலேயே இந்த ‘மெகா’ ஊழல் எப்படி திட்டம் போட்டு கச்சிதமாக, திருடப்பட்டுள்ளது