Thursday, July 28, 2011

கூகுள்+ சா..பெஸ்புக்கா...


கூகுளின் சமூகவலையமைப்பான கூகுள் + அறிமுகப்படுத்தப்பட்டு 3 வாரங்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் சுமார் 20 மில்லியன் பாவனையாளர்களைக் கொண்டுள்ளதாக இணைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இது அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் பல்வேறு விமர்சனங்களுக்கு இது முகங்கொடுத்திருந்தது.
சோதனைத்தொகுப்பாகவும் , மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பாவனையாளர்கள் இணைத்துக்கொள்ளப்படுகின்ற போதிலும் பாவனையாளர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது.
உலகளாவிய ரீதியில் சராசரியாக தினமும் 7.63 இலட்சம் பேர் இதில் இணைந்துவருகின்றனர்.
இதில் அமெரிக்காவில் இருந்து 5.3 மில்லியன் பேரும் இந்தியாவிலிருந்து 2.8 மில்லியன் பேரும் பாவனையாளர்களாக உள்ளனர்.
ஆரம்பத்தில் பேஸ்புக்கைக் கண்டு கூகுள் பயந்த காலம்போய் கூகுள் + ஐக் கண்டு பேஸ்புக் பயப்படும் காலம் விரைவில் வரவுள்ளதாக தற்போதே செய்திகள் வெளியாகத் தொடங்கியுள்ளன.
பேஸ்புக் பாவனையாளர்கள் சுமார் 750 மில்லியன் பேர் உள்ளனர்.
கூகுளின் மற்றைய சேவைகளின் பாவனையாளர்கள் சுமார் 1 பில்லியன் பேர் வரையுள்ளனர்
எதிர்காலத்தில் இவர்களும் கூகுள் + ஐ நோக்கி படையெடுத்தால் பேஸ்புக்கின் நிலை சற்றுக் கேள்விக்குறியே.
எனினும் அவ்வாறு பேஸ்புக்கை முந்துவது இலகுவானதல்ல என்பது ஆய்வாளர்களின் கருத்து.
தற்போதைய வேகத்தில் கூகுள் + இன் வளர்ச்சி தொடர்ந்தால் இன்னும் சில மாதங்களில் இதன் பாவனையாளர்களின் எண்ணிக்கை 100 மில்லியனைத் தொட்டுவிடும் என்பது மட்டும் உறுதி.

பெண்களைத் திருப்திப்படுத்த ஆண்கள் செய்ய வேண்டியவை:


1. இப்ப உள்ளதிலும் பார்க்க பெரிதாக ஒரு வீடு வாங்க வேண்டும்
2. அந்த வீட்டில் வசந்த் அண்ட் கோவில் உள்ள அத்தனை பொருட்களையும் வாங்கி நிரப்ப வேண்டும்.
3. கைநிறையப் பணம் வைத்திருக்க வேண்டும்.
4. வாரந்தோறும் ரங்கநாதன் தெருவிற்கு அழைத்துச் சென்று வேண்டியவற்றை வாங்கிக் கொடுக்க வேண்டும்
5. வாரந்தோறும் திரைப்படங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்
6. வாரந்தோறும் நல்ல உணவகங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
7. அடிக்கடி அவர்கள் அழகாக இருகிறார்கள் அல்லது கவர்ச்சியாக இருக்கிறார்கள் என்று சொல்லவேண்டும்.
8. ஒரு நாள் சொல்ல வேண்டும் இன்று நீ திரிஷாவைப் போலிருக்கிறாய் என்று. இன்னொரு நாள் சொல்ல வேண்டும் இன்று நீ தமனாவைப் போலிருக்கிறாய் என்று சொல்ல வேண்டும். அத்துடன் அடிக்கடி அவர்கள அங்கங்களையும் அவ்வப்போது பிரபலமான நடிகைகளின் அங்கங்களுடன் ஒப்பிட்டுச் சொல்லவேண்டும். உன் சிரிப்பு சுனைனா போலிருக்கிறது. இடை அனுஷ்க்கா போலிருக்கிறது. முக்கிய குறிப்பு நமிதாவை ஒப்பிட வேண்டாம். பிறது உதுகளை எல்லாம் பார்த்துக் கொண்டு திரிகிறியளோ என்று உதை வாங்க வேண்டி வரலாம்.
9. அவர்கள் சேலை உடுக்கும் போது பக்கத்தில் நின்றும் இருந்தும் மடிப்புக்க்களை சரியாக சரி செய்து விடவேண்டும்
10. அவர்களை அவர்களுக்குத் தேவைப்படும் போது நன்றாகத் திருப்திப்படுத்த வேண்டும்.
11. அவர்கள் நச்சரிப்புக்களைத் தாங்கிக் கொள்ள வேண்டும்.
12. அவ்வப்போது அவர்கள் சொல்லும் உடல் வருத்தங்களை அவை போலியாக இருந்தாலும் கரிசனையுடன் கேட்டு அதற்கு பணம் செலவழித்து வைத்தியம் செய்ய வேண்டும்.
13. அவர்களை சிரிக்கவைக்க நல்ல நகைச்சுவைகள் சொல்லவேண்டும்
14. அவர்களின் உறவினர்களுக்கு உதவி செய்ய வேண்டும்
15. உங்களின் உறவினர்கள் பற்றி அவர்கள் சொல்லும் குறைகளை ஆமோதிக்க வேண்டும்.
16. தொலைக்காட்சி(சென்னைத் தமிழில் டிவி) ரிமோட்டை அவர்கள் கைகளிலேயே விட்டு விடவேண்டும்
17. அவர்களுடன் இருந்து தொடர் நாடகங்கள் பார்க்க வேண்டும்
18. அவர்கள்மீது நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்
19. அவர்கள் மணித்தியாலக் கணக்காக தொலைபேசியில் கதைக்க அனுமதிக்க வேண்டும்.
20. பல இடங்களுக்கும் நாடுகளுக்கும் அவர்களை அழைத்துச் செல்ல வேண்டும்.
21. பிள்ளைகளைப் பராமரிக்க வேண்டும்
22. அவர்கள் செய்வதில் எவற்றை கண்டுக்காமல் இருக்க வேண்டும் எவற்றின்மீது கரிசனை காட்ட வேண்டும் என்பவற்றை அறிந்திருக்க வேண்டும்.
23. அவர்களுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும்
24. அவர்கள் மீது அன்பாயிருக்க வேண்டும்.
25 அவர்கள் மீது ஆசையாய் இருக்க வேண்டும்.
26. இப்போது மீண்டும் முதலாவதிற்கு சென்று அங்கிருந்து தொடரவும்.

வெளிநாட்டு வேலை தரும் நிறுவனம் சரியானதா ? கண்டுபிடிக்க உதவும் மத்திய அரசின் இணையதளம்


 வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி அடிக்கடி பலர் கடனுக்கும் வட்டிக்கும் பணம் வாங்கி இலட்சக்கணக்கில் ஏமாறுவதை செய்திதாள்களில் அடிக்கடி காண்கிறோம். இனி அப்படி ஏமாறாமல் இருக்க இதோ ஒரு இணையதளம். வெளிநாட்டில் வேலை தரும் அந்நிறுவனம் உண்மையா என்பதை இவ்விணையத்தில் சென்று பார்க்கலாம்.


மத்திய அரசின் இணையமான அத்தளம் http://www.poeonline.gov.in ஆகும். இத்தளத்தில் அந்நிறுவனம் உண்மையா என்பதை 3 விதங்களில் கண்டறியலாம். ஏனென்றால் பிரபல நாளிதழ்களை திறந்து பார்த்தால் ஏகப்பட்ட போலி ஏஜெண்டுகள் பெயரில் விளம்பரங்கள் வருவதை பார்க்கலாம்.
எனவே இத்தளத்திற்கு சென்று இடது பக்கம் இருக்கு RA Information ஐ கிளிக் செய்தால் அதில் வரும் துணை மெனுவில் நிறுவனம் அல்லது ஏஜெண்டின் பெயரை கொண்டோ அல்லது அதன் பதிவு எண்ணான RC நம்பரை கொண்டோ அல்லது அதன் தொலைபேசியை கொண்டோ கிளிக் செய்தால் அந்நிறுவனத்தை பற்றிய விபரத்தை தருகிறது. அது நம்பகமானது, ரத்து செய்யப்பட்டதா, மீண்டும் அனுமதி கொடுக்கப்பட்டதா அல்லது அனுமதி காலாவதியானதா என்று விபரம் தருகிறது

உங்கள் மெயிலுக்கே தினமும் ஒரு இலவச மென்பொருளை பற்றி செய்தி அனுப்புவார்கள்


உங்கள் மெயிலுக்கே தினமும் ஒரு இலவச மென்பொருளை பற்றி செய்தி அனுப்புவார்கள்.

இணையத்தில் கட்டண மென்பொருளுக்கு இணையாக வேலை செய்யும் அளவிற்கு இலவச மென்பொருட்கள் இருந்தாலும் அனைவரும் கட்டண மென்பொருளையே விரும்புவார்கள். ஏனென்றால் கட்டண மென்பொருளில் வைரஸ் தாக்கும் அபாயம் இருக்காது மற்றும் நம்முடைய ஈமெயில் கொடுத்து டவுன்லோட் செய்தால் அந்த ஈமெயில்களை பல spam கம்பனிகளுக்கு விற்று விடுவதால் நமக்கு தேவையில்லாத ஈமெயில்கள் வந்து தொந்தரவு செய்யும் அபாயங்கள் இருப்பதோடு கட்டண மென்பொருளில் ஒரே மென்பொருளில் பல வேலைகள் செய்யும் வசதி இருக்கும் ஆனால் பெரும்பாலான இலவச மென்பொருட்களில் இருக்காது ஆகவே அனைவரும் கட்டண மென்பொருட்களை விரும்புகின்றனர்.

அதெல்லாம் சரிப்பா நாங்களே சும்மா பொழுது போக்குக்கு கணினிய உபயோகிக்கிறோம் அதுக்கு நாங்க மென்பொருளை காசு கொடுத்து ஏன் வாங்க வேண்டும் யாராவது அந்த மென்பொருட்களை சுமா கொடுத்தா சொல்லுப்பா நாங்க டவுன்லோட் பண்ணிக்கிறோம் என நீங்கள் கூறினால் உங்களை போன்றவர்களுக்கு ஒரு உபயோகமான தளம் உள்ளது. இந்த தளம் மென்பொருட்களை உங்கள் மெயிலுக்கே அனுப்பி வைப்பார்கள். இது மிகவும் பிரபலமான தளம் நிறைய பேருக்கு தெரிந்திருக்கும் தெரியாதவர்களுக்காக.


  • இந்த தளத்தில் தினமும் ஒரு கட்டண மென்பொருளை இலவசமாக அறிமுக படுத்துவார்கள்.
  • அந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய 24 மணி நேரம் கால அவகாசம் கொடுப்பார்கள் அதற்குள் அந்த மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும்.
  • 24 மணி நேரம் கழித்து டவுன்லோட் செய்தால் அந்த மென்பொருளை இலவசமாக பெற முடியாது காசுகொடுத்து தான் வாங்க வேண்டும் ஆக முந்தி கொள்வதே நல்லது.
  • இந்த தளத்தில் நாம் உறுப்பினர் நம் ஈமெயிலை கொடுத்து பதிந்து விட்டால் அந்த நாளுக்கான இலவச மென்பொருளை பற்றி நமது ஈமெயிலுக்கே அனுப்பி விடுவார்கள் அந்த லிங்கில் சென்று டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
இன்றைய இலவச மென்பொருள் 
  • டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்ததும் கொடுக்கப்படும் ஆக்டிவேசன் கீயை மறக்காமல் காப்பி செய்து மென்பொருளை register செய்து கொண்டால் தான் காலம் முழுவதும் இலவசமாக மென்பொருளை உபயோகிக்க முடியும்.
  • ஆனால் இந்த முறையில் உள்ள ஒரு குறை நாம் மென்பொருளை இன்ஸ்டால் செய்யும் அந்த பதிப்பில் இருந்து புதிய பதிப்பை அப்டேட் செய்ய முடியாது. அப்டேட் செய்ய வேண்டுமென்றால் காசு கொடுத்து ஆகவேண்டும்.

  • இந்த தளத்தில் சைட்பாரில் உள்ள விட்ஜெட்டில் subscribe by Email என்பதை க்ளிக் செய்து வரும் விண்டோவில் உங்கள் ஈமெயிலை கொடுத்து பதிந்து கொண்டால் உங்கள் மெயிலுக்கே தினமும் ஒரு இலவச மென்பொருளை பற்றி செய்தி அனுப்புவார்கள்.
இந்த பயனுள்ள தளத்திற்கு செல்ல - www.giveawayoftheday.com

இதை பற்றி உங்கள் நண்பர்களுக்கும் தெரிவியுங்கள் அவர்களும் பயனடையட்டும்.

Tuesday, July 19, 2011

கம்பு தயிர் வடை

தேவையான பொருட்கள்:

கம்பு மாவு - 300 கிராம்
அரிசி மாவு - 50 கிராம்
தயிர் - 4 கப்
சீரகத் தூள் - 4 டீஸ்பூன்
பெரிய வெங்காயத்துருவல் - 1 கப்
கொத்தமல்லி - 1 கப்
உப்பு - தேவைக்கேற்ப

தாளிக்க:

கடுகு - 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 2
பெருங்காயம் - சிறிதளவு

செய்முறை:

கம்பு மாவுடன் அரிசி மாவைச் சேர்த்து, உப்பு கலந்து மசால் வடை பதத்தில் பிசைந்து கொள்ளவும். இதில் பச்சை மிளகாய், சீரகத்தூளை சேர்த்து, சிறுசிறு வடைகளாகத் தட்டி, இட்லி தட்டில் வேக வைத்து எடுக்கவும். தயிரை சற்று அகலமான பாத்திரத்தில் ஊற்றி, கடுகு, மிளகாய், பெருங்காயம் தாளித்து அதில் கலக்கவும். இதில் அவித்த கம்பு வடைகளை ஒரு மணி நேரம் ஊற விட வேண்டும். பிளேட்களில் பரிமாறும் முன், வெங்காயத்துருவல், கொத்தமல்லித் தழையை தூவி விடவும். கோடை காலத்திற்கேற்ற சத்தான டிபன், உடலுக்கு குளிர்ச்சி தரும். அனைத்து வயதினருக்கும் உகந்தது. கம்பங்கூழ் பிடிக்காத குழந்தைகள் கூட இதை விரும்பிச் சாப்பிடுவார்கள்.

Tuesday, July 12, 2011

கேரட் ரைஸ்


ஸ்கூல் ஆரம்பிச்சாச்சு.. ஒவ்வொரு நாளும் புதுசு புதுசா ஏதாவது வெரைட்டியா செஞ்சு கொடுத்தாதான் குழந்தைகளும் குஷியா சாப்பிடுவாங்க. ஆனா வேலைக்கு போகும் பெண்கள் குழந்தைகளுக்கென ஸ்பெஷலா செய்யாம தங்களுக்கு செய்யும் சமையலயே பேக் செய்து அனுப்பிவிடுவார்கள். அப்படி அனுப்பும் தாய்மார்களுக்காகவே உங்கள் நேரத்தை மிச்சப்படுத்த இதோ ஒரு சிம்பிள் டிபன் பாக்ஸ் ஐட்டம்!

தேவையான பொருட்கள்:

சாதம் - 2 கப்
கேரட் - 2 (பெரியது)
பூண்டு - 4 பல்
பச்சைமிளகாய் - 3
எண்ணை - 1 டீ ஸ்பூன்

செய்முறை:

* கேரட்டை நீளவாக்கில் மெல்லிசாக நறுக்கிக்கொள்ளவும். அல்லது பெரியதாய் துறுவிக்கொள்ளவும்.

* வாணலி நன்கு காய்ந்த பின் அதில் ஒரு டீ ஸ்பூன்(ஒரே ஒரு ஸ்பூன் மட்டும்) எண்ணை ஊற்றி பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் மற்றும் பூண்டு போட்டு கொஞ்சம் உப்பு சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.

* பின் கேரட்டை சேர்த்து நல்ல தீயில் இரண்டு கிளறு மட்டும் கிளறி, அதில் சாதத்தை சேர்த்து மீண்டும் ஒரு கிளறு மட்டும் கிளறி இறக்கினால் போதும். கேரட் நன்கு வதங்க தேவையில்லை.

* விருப்பப்பட்டால் பொரித்த முந்திரி, நிலக்கடலை, மல்லித்தழை தூவலாம்.

பின்குறிப்பு: கேரட் ரைஸ் செய்வது ரொம்ப ரொம்ப சுலபம். மிஞ்சிப்போனால் 5 நிமிடம்தான் தேவைப்படும். அதற்குள்ளேயே சுவையான, சத்தான கலர்ஃபுல் சாதம் ரெடி. ஆனால் செய்யும் போது கவனிக்க வேண்டியவை:- அடுப்பை சிம்மில் வைத்து செய்யக்கூடாது. வாணலி நன்கு காய்ந்த பின் பயன்படுத்த வேண்டும். பூண்டு சேர்க்கும் போதே கேரட்டுக்கு தேவையான உப்பை சேர்க்க வேண்டும். எண்ணை ஜாஸ்தி சேர்க்க கூடாது. பூண்டு வதங்க தேவையான அளவு இருந்தால் போதும். கடுகு, கறிவேப்பில்லை எல்லாம் தேவையேயில்லை. பூண்டு, பச்சைமிளகாய் மட்டுமே போதுமானது. கேரட்டில் வைட்டமின் 'ஏ' நிறைய இருப்பதால் குழந்தைகளுக்கு ரொம்பவும் நல்லது.

Friday, July 1, 2011

India only உடனடியாக இரத்தம் வேண்டுமா?


உடனடியாக இரத்தம் தேவை. தயவு செய்து இந்த குறுந்தகவலை உங்களது நண்பர்களுக்கு அனுப்புங்கள். உங்களால் ஒரு உயிர் பிழைக்கும். இதுபோன்ற SMS நிச்சயம் உங்களுக்கு வாரத்தில் ஒருமுறையாவது வரும். ஆனால், அவற்றில் பல போலிகள், சில உண்மைகள் இருக்கின்றன. போலிகளால் உண்மைகள் மறுக்கப்படுவதாகின்றன. இது குறித்து ஒவ்வொருவர்க்கும் வழிப்புணர்வு தேவை. சரி உங்களுக்கு அறிந்தவர்கள், அறியாதவர்கள் யாருக்கோவது இரத்தம் தேவைப் படுகின்றதா? இனி அவர்களுக்கு உங்களால் உதவ முடியும். ஆம் உங்களுக்கு என்ன இரத்தம் வேண்டும்? அது எங்கு யார் மூலம் உங்களுக்கு கிடைக்கப் பெரும் என்ற ஒட்டு மொத்த தகவல்களையும் ஒருங்கே அளிக்கிறது இரத்த தானம் குறித்த ஒரு இணையத்தளம். அதுமட்டும் இன்றி இரத்தம் குறித்த தகவல்கள், அவற்றின் பிரிவுகள், இரத்தின் தன்மை, இரத்ததினால் பரவும் நோய்கள் போன்ற பல்வேறு தகவல்களையும் தொகுத்து தருகிறது.
நீங்கள் இரத்த அளிப்பவராக இருந்தால் நீங்களும் இதில் இணைத்துக் கொண்டு மற்றவர்களுக்கு உதவாலம்.
இனி இரத்தம் வேண்டுமா கவலை வேண்டாம். www.bloodhelpers.com